Translate

Tuesday, 20 March 2012

”அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க முன் வந்திருப்பதில் வரவேற்க ஒன்றுமில்லை”


”அமெரிக்கத்  தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க முன் வந்திருப்பதில் வரவேற்க ஒன்றுமில்லை” 
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி அறிவிப்பு
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்ற பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பில் மகிழ்வதற்கு ஒன்றுமில்லை.

இந்திய நாடாளுமன்ற மக்கள் அவையில் 19.03.2012 அன்று உரையாற்றிய மன்மோகன்சிங் “அமெரிக்கா முன்வைத்துள்ள வரைவுத் தீர்மான அறிக்கை நமக்கு இன்னும் கிடைக்கவில்லை. இருந்த போதிலும் அத்தீர்மானத்தை ஆதரிக்க விரும்புகிறோம்” என்றார்.
நடந்துள்ளப் போர்குற்றங்கள் மீது விசாரணை நடத்த சார்பற்ற சர்வதேச விசாரணைக் குழுவை ஐ.நா. நியமிக்க வேண்டும் என்ற திருத்தத்தோடு அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என பிரதமர் அறிவித்திருந்தால் நாம் வரவேற்றிருக்கலாம். அமெரிக்கத் தீர்மானம் என்ன கோருகிறது?

இன்றைய தேவை அனைத்துலக விசாரணை மட்டுமேயாகும் –நா.க.த.அரசின் பிரதமர் வி.உருத்திரகுமாரன்


இன்றைய தேவை அனைத்துலக விசாரணை மட்டுமேயாகும் –நா...அரசின் பிரதமர் வி.உருத்திரகுமாரன்
uruthira
சிறிலங்காவின் கொலைக்களங்கள்-தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்’ என்ற சனல்-4 தொலைக்காட்சியின்ஆவணப்படம் சுதந்திரமான அனைத்துலக விசாரணைக்கான எமது அறைகூவலை மீண்டும் வலியுறுத்திநிற்கின்றது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

பிறசக்திகளின் நலன்களுக்காக தமிழ் மக்களின் நலன்களை போட்டுடைத்த கூட்டமைப்பு - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்


பிறசக்திகளின் நலன்களுக்காக தமிழ் மக்களின் நலன்களை போட்டுடைத்த கூட்டமைப்பு - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிற சக்திகள் விரும்பும் முடிவுகளை தமிழ் மக்களுக்கு விற்பனை செய்வதனையே தமது பணியாகக் கொண்டுள்ளது.
கடந்த பத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனீவாவில் இடம்பெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடருக்கு செல்வதில்லை என்று தீர்மானித்தமை மற்றும் அந்தப் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளுக்கும் அனுப்பி வைத்த ஆதரவுக் கடிதத்தின் மூலம், சிறீலங்கா அரசினது நிகழ்ச்சி நிரலுடன் கூட்டமைப்பு எவ்வாறு துணை போகின்றது என்பதனை சுட்டிக் காட்டியிருந்தேன்.

Monday, 19 March 2012

இந்தியா ஆதரவளிக்க கூடாது என்ற ஆர்.எஸ்.எஸ். அறிக்கை குறித்து - இந்து இளைஞர் பேரவை தலைவர் சீ.யோகேஸ்வரன் கவலை தெரிவிப்பு:


அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்க கூடாது என பாரதீய ஜனதா கட்சியின் ஆதரவு இந்துமத அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இந்தியா அரசாங்கத்தை வலியுறுத்துவதாக கூறும் செய்தி கேட்டு மிகுந்த கவலை அடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

அத்துடன், கிழக்கு இந்து ஒன்றியத் தலைவரும், இலங்கை இந்து பேரவையின் உபதலைவரும், விஷ்வ ஹிந்து பரிசத்தின் அரசியல் பிரதிநிதியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் அவசரமாக தமது அறிக்கையை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைமைப்பீடத்திற்கு அனுப்பிவைத்துள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படிருப்பதாவது:........... read more

கனடியத் தமிழர்கள் ரொறன்ரோ பொலிசார் ஒண்றிணைந்த செயற்பாடுகள் நாளை ஆரம்பம்!



ரொறன்ரோப் பொலிசார் மற்றும் கனடிய மனிதவுரிமை அமைப்பு இணைந்து நடாத்தும் ரொறன்ரோ வாழ் ஈழத்தமிழர்களி;ன் முக்கியஸ்தர்கள்> ஊடகவியலாளர்களுடனான முக்கிய கூட்டம் நாளை செவ்வாய்கிழமை பிற்பகல் 7 மணிக்கு நடைபெற்றவுள்ளது......... read more

சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பது என்ற முடிவினை ஈ.என்.டி.எல்.எப். வரவேற்கிறது.

அமெரிக்காவினால் முன்மொழியப்பட்ட பிரேரணையை வரவேற்பதில் இந்தியாவுக்கு தயக்கம் இருந்தது உண்மையே, கூடியவரையில் நடுநிலை வகிப்பது என்ற முடிவிலிருந்து விலகி அப்பிரேரணையை இந்தியா ஆதரிப்பது என்ற முடிவை ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.) வரவேற்பதுடன் விடுதலைப் புலிகளால் ஏற்படுத்தப்பட்ட கசப்புணர்வை மறப்பதற்கான அறிகுறியைத் தெரியப்படுத்தியதற்காகவும் வாழ்த்து தெரிவிக்கிறது. யுத்தக்குற்றம் விசாரிக்கப்பட வேண்டும், குறைந்த பட்ச உரிமையான “இந்திய-இலங்கை” ஒப்பந்தத்தினை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை அமெரிக்கா முன்வைத்திருந்தால் இந்தியா எப்போதோ தன் முடிவினை அறிவித்திருக்கும்.

தமிழர் நிலங்களைப் பறிக்கும் சிறிலங்கா இராணுவம்


அனலை நிதிஸ் ச. குமாரன்
தமிழர் தாயகத்தில் துப்பாக்கிச் சத்தம் ஓய்ந்து மூன்றாண்டுகள் நிறைவடையும் இவ்வேளையில், சிங்கள ஆக்கிரமிப்புப் படைகள் மற்றும் ஒட்டுக்குழுக்களின் அராஜகங்கள் ஓய்ந்தபாடில்லை. முகாம்களுக்குள் முடக்கப்பட வேண்டிய இராணுவத்தினர், மக்கள் செறிந்துவாழும் பிரதேசங்களில் மக்களோடு மக்களாகக் கலந்து பல அட்டூழியங்களைச் செய்து வருகிறது. தட்டிக் கேட்பதற்கு யாரும் இல்லையென்கிற காரணத்தினால் சிறிலங்காவின் அரச படையினரும், அதன் அடிவருடிகளும் தொடர்ந்தும் தமிழர் பகுதிகளில் அடாவடி வேலைகளைச் செய்து வருகிறார்கள்.

கொடுத்த மனித பலி காணாது என்று தனது உடல் நலனுக்காக மீண்டும் மனித பலி எடுக்க துடிக்கும் மஹிந்த


மகிந்த ராஜபக்‌ஷவிற்கு இருக்கும் கண்டத்திற்கு பிராய்ச்சித்தம் செய்வதற்காகவும், ஏற்பட்ட நோய்யை சுகப்படுத்துவதற்கும் ‘மனித பலி” கொடுக்க தயாராகி வருவதாக மிகவும் நம்பகரமான தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.இந்த பலி பூஜை அமைச்சர் மேர்வின் சில்வாவின் மேற்பார்வையில் தயாராகி வருகிறது. அத்துடன், இந்தப் பூஜைக்குத் தேவையான மிகவும் அரிய வகை எண்ணெய்யை எடுத்துவருவதற்கு அமைச்சர் மேர்வின் சில்வா நேற்றிரவு (15) மியன்மார் பயணமானார்........... read more 

தானே” ஆவணப்படம் - இயக்குனர் தங்பர்பச்சான்


“தானே” புயலால் பாதிக்கப்பட்ட கலலூரி மாவட்ட மக்களைப்பற்றி ஆவணப்படம் ஒன்றை எடுத்திருக்கிறார் இயக்குனர் தங்பர்பச்சான். இப்படத்தின் குறுந்தகடுக்கு ரூபாய் 100 விலையை நிர்ணயித்து இருக்கிறார் தங்கர். இதை அனைவரும் வாங்கவேண்டும்.
இதில் கிடைக்கும் மொத்த நிதியையும் விகடன் மூலம் கடலூர் மாவட்ட மக்களுக்கு கொடுக்கபோகிறேன். இப்போது கடலூர் பக்கங்களில் நடந்துகொண்டிருக்கு கொடுமையான விசயம் ஒன்று தெரியுமா?. 

கூடங்குளத்தில் பதட்டம் : கூடங்குளத்தில் 144 தடை உத்தரவு – 200 பேர் கைது கலவரம் வெடிக்கும் அபாயம்.


அமைச்சரவைக் கூட்டத்தில் கூடங்குளம் அணு உலையை திறக்க அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றிய கையோடு, கூடங்குளத்தில் காவல்துறையை முழு அளவில் இறக்கி, அணு உலைகளை திறக்க வேண்டும் என்று தமிழக அரசு தீர்மானம் இயற்றிய பின் காவல் துறையினர் ஆயிரக்கணக்கில்குவிக்கப்பட்டுள்ளனர் .

போரில் கணவனை இழந்த பெண்கள் வாழ்வாதாரத்துக்காக பாலியல் தொழிலில்? _


  • ‘போரில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 85,000 பெண்கள் விதவைகளாகி உள்ளார்கள், 
  • மன்னாரில் மடு பிரதேசத்தில் உள்ள கிராமம் ஒன்று பாலியல் தொழிலுக்கு பிரசித்தி பெற்று விளங்குகின்றது. 



  இலங்கையின் உள்நாட்டு போரில் கணவனை பறிகொடுத்த பெண்கள் வாழ்வாதாரம் எதுவும் இல்லாத நிலையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்கள் என்று பெண்கள் உரிமைகள் அமைப்புக்கள் சுட்டிக் காட்டி உள்ளன.

இலங்கைக்கு இந்தியா ஆதரவளித்தால், கூட்டணியிலிருந்து அதிமு விலகும் ?


தி.மு.க. உயர்நிலை செயல் திட்டகுழு கூட்டம் நாளை நடைபெறுகிறது.  இந்நிலையில் கனிமொழி எம்.பி. தனியார் டி.வி.க்கு அளித்த பேட்டியில்,

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்கவில்லை என்றால் அடுத்து என்ன செய்வது என்பதை தி.மு.க. தலைவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். 

ஜனாதிபதி கோபிப்பார் ; இந்தியப் பிரதமர் விரும்பமாட்டார் இப்படி நினைப்பது மடத்தனம் - மனோ கணேசன்

ஜனாதிபதி கோபிப்பார், இந்திய பிரதமர் விரும்பமாட்டார் என தமிழர்கள் இனிமேலும் தமது அபிலாசை களையும், துன்பங்களையும் பகி ரங்கமாக எடுத்து கூறத்தயங்கி கொண்டிருக்க முடியாது. அந்த காலம் மலையேறிவிட்டது. இனிமேலும் நாம் தயங்கி கொண்டு இருந்தால் உலகம் எமக்காக காத் திருக்காது. தமிழர்களாகிய நாம் ஆளுமையுடன் செயல்பட வேண்டிய காலம் வந்துவிட்டது. இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரி வித்துள்ளார்.

தமிழகத்தின் ஒருமித்த குரலுக்கு வெற்றி! இலங்கைக்கு எதிரான தீர்மானம் மத்திய அரசு ஆதரவு!


புதுடில்லி, மார்ச்.19- அய்.நா. அவையின் மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா, பிரான்சு, நார்வே ஆகிய நாடுகள் தீர்மானம் கொண்டு வந்துள்ளன. 

மார்ச் 23 போராட்டம் நிறுத்திவைப்பு: நெடுமாறன் அறிவிப்பு

சென்னை: இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கப்போவதாக அறிவித்திருப்பதால், மார்ச் 23-ம் தேதி நடத்தவிருந்த வேலைநிறுத்தப் போராட்டம் நிறுத்திவைக்கப்படுவதாக, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் விளக்கத்தில் தெளிவு இல்லை: அதிமுக அதிருப்தி


புதுடெல்லி: ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கை அரசுக்‍கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பான தீர்மானத்தை ஆதரிப்பது குறித்து பிரதமர் தெளிவாக விளக்கமளிக்கவில்லை என நாடாளுமன்றத்தில் அதிமுக தெரிவித்துள்ளது. 

சந்தியா எக்னலியகொட ஐ.நாவில் உரையாற்றவுள்ளார்? _


  காணாமல் போன ஊடகவியலாளரான பிரகீத் எக்னலியகொடவின் மனைவி சந்தியா ஐ.நா.வின் மனித உரிமைப் பேரவையில் உரையாற்றலாம் என நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

கனடாவில் தீவிரமடையும் இலங்கை அரசின் தமிழர் விரோத செயற்பாடுகள்


கனடாவில் தீவிரமடையும் இலங்கை அரசின் தமிழர் விரோத செயற்பாடுகள்

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையும்  வழமைபோல் கிடப்பில் போட்டுள்ள இலங்கை அரசு, புதிய ஆண்டில் உள்நாட்டு, மட்டும் சர்வதேச மோதலுக்கு தன்னை தயார்செய்து வருவதாக விசயம் அறிந்த அரச வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த ஆண்டின் இறுதியில் இவ்விணையத்தளத்தில், “கனடாவைக் குறிவைக்கும் சிறீலங்கா, கனடாத் தமிழர் வெற்றிகரமாக எதிர்கொள்வார்களா?” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.......... read more

போர்க்குற்​ற விசாரணையில் இருந்து திசை திருப்புகி​றார் பிரதமர் – சீமான் அறிக்கை


ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் அளித்துள்ள பதில், போர்க்குற்ற விசாரணையில் இருந்து திசைதிருப்புவதாகவே உள்ளது.

அமெரிக்காவைச் சீண்டினால் பாண்துண்டுக்கே வழி இருக்காது!


அமெரிக்காவைச் சீண்டினால் நாம் ஒரு பாண் துண்டையாவது சாப்பிட முடியுமா? இப்போது அமெரிக்காவும், அதன் இறக்குமதிப் பொருள்களும் எமக்கு வேண்டாம் என விமல் வீரவன்ஸ கூறு கின்றார்.

அப்படியானால், இதற்கு முன் னர் இந்தியா எமக்கு பருப்பு விநி யோகித்தபோது இந்த வாயாடி அமைச்சர் எங்கே போயிருந்தார் எனக் கடுவெல நகரசபைத் தலைவர் ஜி.எச்.புத்ததாஸ கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அரசாங்கத்தை கவிழ்க்க உதவவேண்டும்

அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார்.நாட்டை பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தோழர் பி.ஏ.காதர் லண்டனில் நிகழந்த ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் நூல் வெளியீட்டில் வழங்கிய உரை


ஈழப் போராட்டம் குறித்த விமர்சனத்திலிருந்து அடுத்த நிலையை நோக்கிய நகர்வின் அடிப்படைகளை முன்வைக்கும் தோழர் காதரின் உரை இன்றைய சிக்கலான சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டம் தனது தொடர்ச்சியை எங்கிருந்து ஆரம்பிப்பது என்ற நீண்ட தேடலுக்கான ஆரம்பப்புள்ளி எனக் கருதப்படும் இந்த உரை மக்கள் பற்றும் சமூக அக்கறையும் உடைய அனைவருக்கும் அவசியமானது.

இலங்கையில் இனக் கலவரம் ஏற்படுமானால் இலங்கை அரசே பொறுப்பேற்கவேண்டும் : அரியநேத்திரன்


இலங்கையில் மீண்டுமொரு இனக்கலவரம் ஏற்படுமாகவிருந்தால் அதற்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவர்களும் அவர் அங்கம்வகிக்கும் அரசாங்கமுமே பொறுப்பேற்கவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

மகிந்தவின் விசுவாசியான சுகி சிவத்தின் நிகழ்ச்சி இரத்துச் செய்யப்பட்டது

மக்களின் எதிர்ப்பால் இரத்துச்செய்யப்பட்ட இந்நிகழ்ச்சி மூலம் சிங்கள அடிவருடிகளான எல்லாத் தமிழருக்கும் ஒரு பாடம் கற்பிக்கப்பட்டிருக்கிறது.  


தமிழகத்து ஆன்மீகச் சொற்பொழிவாளரும் சிங்கள போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்‌ஷவின் நண்பருமான சுகி சிவம் அவுஸ்த்திரேலிய நகரங்களான பிரிஸ்பேன் மற்றும் சிட்னியில் நடத்துவதாகவிருந்த நிக்ழச்சிகள் இரத்துச் செய்யப்பட்டிருப்பதாக இதனை ஒழுங்குசெய்த அமைப்பினர் அவசர மின்னஞ்சல் ஒன்றினை அனுப்பியிருக்கின்றனர்.

இலங்கையின் அரசியல் சாசனத்தை தீயில் எரிப்போம் – மே 17 இயக்கத்தின் கோரிக்கை


இலங்கையின் அரசியல் சாசனத்தை தீயில் எரிப்போம் – மே 17 இயக்கத்தின் கோரிக்கை




சர்வதேசத்திற்கு தமிழரின் கோரிக்கைகளை முதன்மைபடுத்துவோம். இலங்கை ஒரு தோல்வியுற்ற சனநாயக நாடு என்பதை அம்பலப்படுத்துவோம். இலங்கையின் அரசியல் சாசனத்தை தீயில் எரிப்போம் –
சர்வதேச தமிழ்ச் சமூகங்களிற்கு மே 17 இயக்கத்தின் கோரிக்கை.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும்: பிரதமர்


இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும்: பிரதமர்


புதுதில்லி,மார்ச்.19: இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமை கவுன்சிலில் கொண்டுவரப்பட உள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

ஈழத்தமிழர்களுக்காக மெரினாவில் அலையெனத் திரண்ட மக்கள்!video -photo in


ஈழத்தமிழர்களுக்காக மெரினாவில் அலையெனத் திரண்ட மக்கள்!video -photo in

விவகாரம் தமிழகமெங்கும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியுள்ளது. அமெரிக்காவினால் மனித உரிமைச் சபையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்ற குரல் தமிழகத்தின் உள்ள கட்சிகளிடையே பொதுவான நிலைப்பாட்டை எட்ட வைத்துள்ளது.
மறுபுறம் தமிழகமெங்கும் தன்னெழுச்சியாக பல சமூக அரசியல் இயக்கங்கள் அமைப்புக்கள் என போராட்டங்களை நடத்தி வருகின்றன.
தமிழகத்தின் கிராமம் ஒன்றில் இலங்கைக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்கக் கூடாது என்பதனை வலியுறுத்தி வீடுகள் தோறும் கறுப்புக் கொடியினை பறக்க விட்டு தங்களுடைய கவனயீர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

நாமல் ராஜபக்க்ஷவுக்கு இந்திய அரசின் விருது; கொதிப்படையும் தமிழர்கள்..


நாமல் ராஜபக்க்ஷவுக்கு இந்திய அரசின் விருது; கொதிப்படையும் தமிழர்கள்..
இந்தியாவைத் தற்போது ஆட்சி செய்து வரும் அரசு ஈழத் தமிழர்கள் மீது ஏதோவொரு காரணத்துக்காக தனது வெறுப்புத் தன்மையைக் காட்டி வருகின்றது. அந்த வெறுப்பின் உச்சக்கட்டத்தினை நாம் வன்னிப் பெருநிலப்பரப்பில் காணக் கூடியதாக இருந்தது. 

முல்லைத்தீவில் இன்று மாலை மக்கள்மீது கடல் படையினர் கண்மூடிதனமான முறையில் தாக்குதல்


முல்லைத்தீவில் இன்று மாலை மக்கள்மீது கடல் படையினர் கண்மூடிதனமான முறையில் தாக்குதல்
முல்லைத்தீவு மாவட்டம் கருநாட்டுக் கேணிக்கும் கொக்கிளாய்க்கும் இடையில் அமைந்துள்ள சிறுவில் வெட்டை என்னும் இடத்தில் இன்று மாலை 5.30மணியளவில் மாடுமேய்த்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் மீது கடற்படையினர் கிரிக்கெட் மட்டையைக் கொண்டு கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர். இதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிப்பதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

சும்மா இல்ல.. படிச்சுப் பார்க்கணுங்க


சும்மா இல்ல.. படிச்சுப் பார்க்கணுங்க
ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானத்தில் உள்ள விபரங்களை இந்தியா முதலில் நன்கு வாசித்து அறிந்து கொண்டதன் பின்னரே முடிவு எடுக்கப்படும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச குடும்பம் இலங்கையை தனிச் சிங்கள தேசமாக வைத்திருக்கவே விரும்புகிறது – அல்ஜசீராவில் பில் றீஸ்!


ராஜபக்ச குடும்பம் இலங்கையை தனிச் சிங்கள தேசமாக வைத்திருக்கவே விரும்புகிறது – அல்ஜசீராவில் பில் றீஸ்!

சிறீலங்காவின் ஜனாதிபதி மஹிந்தராஜபக்சவினதும் அவரது குடும்பத்தினரதும் முழுமையான நோக்கம் இலங்கையினைத் தனிச் சிங்கள தேசிய நாடாகவே வைத்திருக்க விரும்புகின்றனர். பயங்கார நடவடிக்கைகள் தொடர்பிலான பிரித்தானியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் பில் றீஸ் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி காலைவாரிய நமால்: மூக்குடைந்த காங்கிரஸ் !


அரசியல் பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்து இருக்கின்றமை மாத்திரம் ஒருவருக்கு அரசியலில் வெற்றியைத் தராது ! என்று நமால் குறிப்பிட்ட வசனங்கள் ராகுல் காந்தியையும் பிரியங்கா காந்தியையும் மறைமுகமாகச் சாடுவதாக அமைந்துள்ளது. 
நேற்றைய தினம் டெல்லியில் நடைபெற்ற சர்வதேச விழா ஒன்றில், உலகிலேயே தலைசிறந்த இளைஞன் என்ற பட்டம் இலங்கை அதிபர் மகிந்தரின் புதல்வர் நமாலுக்கு வழங்கப்பட்டது. இந்த விழா ஏற்பாட்டாளர்களுக்கு, இந்திய அரசினால் நமாலின் பெயர் முன்மொழியப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளது. விருதுபெறச் சென்ற நமாலுக்கு சோனியா அரசு இசட்(Z) ரகப் பாதுகாப்பு வழங்கி கெளரவித்ததும் யாவரும் அறிந்ததே. ஆனால் அங்கே உரையாற்றிய நமால் ராஜபக்ஷ காங்கிரஸ் காலை வாரிவிட்டுள்ளார். காங்கிரஸ் அரசு சமீபத்தில் அடைந்த தோல்விகளைக் கூட இவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டத் தவறவில்லை. 

Sunday, 18 March 2012

டி.எம்.வி.பி. மாநாட்டில் வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்!


இலங்கையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இனப் பிரச்சினைக்கு தீர்வாக ஏனைய தமிழ் கட்சிகளினால் முன்வைக்கப்பட்டுவரும் வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பை முற்றாக நிராகரிப்பதாக அறிவித்துள்ளது. 

அமைச்சர் வீரவன்ச கூறுவது, தான் நிர்வாணமாக இருந்து கொண்டு ஊரை உடையணியச் சொல்லும் செயல் : ஜே.வி.பியின் மாற்றுக்குழு!


அமெரிக்கர்கள் அமெரிக்க குடியுரிமைகளை வைத்துள்ளனர். அதே போன்று அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியும் 15 ஆண்டுகளுக்கு அமெரிக்காவில் வாழக்கூடிய நிரந்தர வீசாவைப் பெற்றுக் கொண்டுள்ளார். இவ்வாறானதொரு சூழ்நிலையில் சாதாரண மக்களை கூகுல் மற்றும் ஜீமெயில் போன்ற இணையத்தளத்தை பாவிக்க வேண்டாம். கோலா குளிர் பானத்தைக் குடிக்க வேண்டாம் என்று அமைச்சர் வீரவன்ச கூறுவது, தான் நிர்வாணமாக இருந்து கொண்டு ஊரை உடையணிக் கூறுவதைப்போன்ற செயற்பாடாகும் என்று ஜே.வி.பியின் மாற்றுக்குழு குறிப்பிட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இப்போதும் போர்ச் சூழ்நிலையே நிலவுகிறது அவர்களுக்கான விடுதலை இன்னும் கிடைக்கவில்லை என்கிறார் ரணில்


newsயுத்தகாலத்தில் இருந்ததைப் போலவே வடபகுதி மக்கள் இப்போதும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களது முகங்கள் தமக்கான விடுதலை இன்னும் கிடைக்கவில்லை என்பதைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றனர். இவ்வாறு தெரிவித்தார் ஐ.தே.க தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க.

இறுக்கமடைகின்றது ஜெனீவா போர் அரங்கு - இதயச்சந்திரன்

வெளிவந்தது கடுகளவாக இருப்பினும் வராதது கடலளவாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
 இலங்கையின் கொலைக்களத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிட்ட சனல் 4 தொலைக்காட்சி, 'தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள்' என்கிற தலைப்பிட்டு நான்கு புதிய விடயங்களை அம்பலப்படுத்தியுள்ளது.
சர்வதேசமெங்கும் காண்பிக்கப்படும் இந்த ஆவணப்படம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துமென எதிர்பார்க்கலாம்.

சவீந்திர சில்வாவை குறி வைக்கும் வெள்ளைக்காரர்கள்!


கொமன்வெல்த் நாளை முன்னிட்டு நியுயோர்க்கில் உள்ள பிரித்தானிய வதிவிடப் பிரதிநிதியின் பணியகத்தில் கடந்தவாரம் வரவேற்பு நிகழ்வு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.இந்த வரவேற்பு நிகழ்விற்கு, நியுயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
 
சவீந்திர சில்வாவுக்கு அழைப்பு விடுக்கப்படாதமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர விதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்ன, இந்த நிகழ்வில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. தீர்மானம் வெற்றி பெறுமா?: இலங்கைக்கு ஆதரவு 25, எதிர்ப்பு 22


ஐ.நா. தீர்மானம் வெற்றி பெறுமா?: இலங்கைக்கு ஆதரவு 25, எதிர்ப்பு 22


இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே இறுதிகட்ட போர் நடந்தது. அப்போது ராணுவம் போர் விதிமுறைகளை மீறி விடுதலைப்புலிகளையும், அப்பாவி தமிழர்களையும் கொன்று குவித்தது. எனவே இலங்கை போர்க்குற்றம் இழைத்ததாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானம் தாக்கல் செய்துள்ளது. இந்த தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது.ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், நார்வே, பெல்ஜியம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. சீனா, ரஷியா உள்ளிட்ட நட்பு நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக உள்ளன.

தமிழர் நிலங்களைப் பறிக்கும் சிறிலங்கா இராணுவம்


அனலை நிதிஸ் ச. குமாரன்
தமிழர் தாயகத்தில் துப்பாக்கிச் சத்தம் ஓய்ந்து மூன்றாண்டுகள் நிறைவடையும் இவ்வேளையில், சிங்கள ஆக்கிரமிப்புப் படைகள் மற்றும் ஒட்டுக்குழுக்களின் அராஜகங்கள் ஓய்ந்தபாடில்லை. முகாம்களுக்குள் முடக்கப்பட வேண்டிய இராணுவத்தினர், மக்கள் செறிந்துவாழும் பிரதேசங்களில் மக்களோடு மக்களாகக் கலந்து பல அட்டூழியங்களைச் செய்து வருகிறது. தட்டிக் கேட்பதற்கு யாரும் இல்லையென்கிற காரணத்தினால் சிறிலங்காவின் அரச படையினரும், அதன் அடிவருடிகளும் தொடர்ந்தும் தமிழர் பகுதிகளில் அடாவடி வேலைகளைச் செய்து வருகிறார்கள்.

நேற்று லண்டனில் நடைபெற்ற முன்னாள் லண்டன் நகர முதல்வர் Ken Livingstonஉடனான தமிழ்மக்களின் சந்திப்பு.


 ( or you can get from: http://www.youtube.com/tamilnews4u

நேற்று லண்டனில் நடைபெற்ற முன்னாள் லண்டன் நகர முதல்வர் Ken Livingstonஉடனான தமிழ்மக்களின் சந்திப்பு. 

முன்னாள் லண்டன் நகர முதல்வர் Ken Livingston (Labour Party Candidate and the former Mayor of London) உடனான தமிழ் மக்களின் சந்திப்பு நேற்று லண்டன் ஹறோ பகுதியில் அமைந்துள்ள Harrow Civic Centre மண்டபத்தில் நடைபெற்றது.

தொழில்கட்சிக்கான தமிழர் அமைப்பால்  (Tamils for Labour) ஏற்பாடு செய்யப்பட்ட இச்சந்திப்பு நேற்று காலை 11:00 மணிக்கு ஆரம்பமாகி மதியம் 1:30 மணிவரை வரை நடைபெற்றது.

தமிழ்தேசியஇனத்தின் பிரச்சனை பன்னாட்டு அரசியலாக மாறிஉள்ளது – சீமான் (ஒலி இணைப்பு)


பன்னாட்டு அரசியலாக தமிழ்தேசிய இனத்தின் பிரச்சனை மாறிஉள்ளது என்று  நாம்தமிழர் கட்சி தலைமைஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.நேற்று சென்னையில் இடம்பெற்ற மக்கள் ஆய்வகத்தின் ஈழத்தமிழர் வாழ்வியல் பதிவுகள் ஆய்வரங்கதில் ஆய்வு கருத்தில் இந்த கருத்தினை முன்வைத்துள்ளார்.

இலங்கைப் பிரச்சினை குறித்து அறிக்கை விடுத்துள்ளார் டி ராஜேந்தர்.

லட்சிய தி.மு.க. என்ற கட்சியை நடத்தி வரும் டி.ராஜேந்தர், இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் குறித்து விடுத்துள்ள ஒரு அறிக்கை:

"ஐ.நா. மனித உரிமைக்குழு கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்திருக்கிறது. இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களிக்குமா என்று எதிர்பார்த்தால் சாக்குபோக்கு சொல்லி வருகிறது. இந்திய அரசு இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டுமென்று லட்சிய தி.மு.க. சார்பில் வலியுறுத்தி போராடுவோம்.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கக் கோரி திருமா உண்ணாவிரதம்

சென்னை: இலங்கைக்கு எதிரான ஐநாவில் அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கோரி, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

மார்ச் 21-ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளனர். 

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கைக்கு எதிரான தீர்மானம்.. ஆதரிக்கிறது இந்தியா?

டெல்லி: இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு எதிராக ஐநா மனித உரிமைச் சபையில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை சில திருத்தங்களுடன் ஆதரிக்க இந்தியா முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

தமிழக அரசியல் கட்சிகள் ஓரணியில் திரண்டு நின்று தரும் நெருக்கடிகள், அமெரிக்காவே நேரடியாக ஆதரவு கோரி நிற்கும் சூழல், தீர்மானத்தின் நெகிழ்வுத்தன்மை கொண்ட அம்சங்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இலங்கைக்கு எதிரான தீர்மான விஷயத்தில், இந்தியாவின் நிலை கண்டு கொதித்துப் போய், "எட்டுகோடி இந்தியத் தமிழர்கள் முக்கியமா... இனப்படுகொலை செய்த சிங்களர்கள் முக்கியமா? போரை நடத்த துணைநின்ற பாவத்தை இந்திய அரசு எப்படி தீர்க்கப் போகிறது," என்ற கேள்விகளை பாராளுமன்றத்திலேயே தமிழர் கட்சிகள் முன்வைத்தன.

உலகம்இலங்கையில் மீண்டும் கிளர்ச்சி ஏற்படும்: தமிழ்தேசியக் கூட்டமைப்பு

வடக்குப் பகுதியில் வசிக்கும் தமிழ்ப் பெண்களை துணை ராணுவக் குழுக்கள் தங்களது பாலியல் விருப்பங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் செயல்கள் அதிகரித்து வருகின்றன.  பெண்களைப் பலவந்தப்படுத்தி வடக்கில் முகாமிட்டிருக்கும் ராணுவ அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். 



கொழும்பு, மார்ச் 15: போர்க்குற்றங்கள், அதற்குப் பொறுப்பேற்றல் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலும், இலங்கை அரசும் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் சோகமான பழைய நிகழ்வுகள் மீண்டும் நடக்கக்கூடும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பும், அமெரிக்க வெளியுறவுத் துணை அமைச்சர் ராபர்ட் பிளேக்கும் எச்சரித்துள்ளனர்.

ஜெனிவா தீர்மானம்: இந்திய அரசு ஆதரிக்க வலியுறுத்தி 21ந்தேதி விடுதலைச் சிறுத்தைகள் நாடு தழுவிய அளவில் உண்ணாநிலை அறப்போர் - தொல்.திருமாவளவன்




ஜெனிவா தீர்மானம்:
இந்திய அரசு ஆதரிக்க வலியுறுத்தி
21ந்தேதி விடுதலைச் சிறுத்தைகள் நாடு தழுவிய அளவில் 
உண்ணாநிலை அறப்போர்
- தொல்.திருமாவளவன் 
--------------------------------------

ஐ.நா. மன்றத்தின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் சிங்கள இனவெறி அரசுக்கு எதிராக அமெரிக்க வல்லரசு முன்மொழிந்துள்ள வரைவுத் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டுமென தமிழக மக்களும் உலகத் தமிழினமும் ஒட்டுமொத்தமாகக் குரல் எழுப்பி வருகின்றன. 

ஆனாலும், இந்திய அரசு அத்தீர்மானத்தை ஆதரிக்கும் என்பதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை. மக்களவையிலும் மாநிலங்களவையிலும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக ஒருங்கிணைந்து வற்புறுத்தியும்கூட இந்திய அரசின் நிலைப்பாடு தெளிவுபடுத்தப்படவில்லை. மாறாக, அத்தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வாய்ப்பில்லை என்கிற வகையில் வெளியுறவுத்துறை அமைச்சரின் அறிக்கை அமைந்துள்ளது. 

ஈபிடிபி ரகு கழுத்து வெட்டிக் கொலை: புலிகள் கடிதம் அருகிலாம் !


 பல வெள்ளை வான் கடத்தலில் சம்பந்தப்பட்டஈபிடிபி ரகு கழுத்து வெட்டிக் கொலை: புலிகள் கடிதம் அருகிலாம் !
திருகோணமலை, குச்சவெளியின் பெரியகுளம் பகுதியில் ஈ.பி.டி.பி சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. அவரது சடலத்திற்கு அருகில் இருந்து 'எல்.ரீ.ரீ.ஈ.' என எழுதப்பட்ட காகிதத்தையும் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. மூதூரைச் சேர்ந்த ரகு நடன் அல்லது முத்து என மேற்படி நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். காலை வேளையில் மேற்படி ரகு இனந்தெரியாத இரு நபர்களுடன் சென்றதாக ஆரம்பக்கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. பின்னர் இவர் முச்சக்கர வண்டி ஒன்றில் இறந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஈபிடிபி றீகன் � கமல் மோதல்! களைகட்டியது சிறீதர் தியேட்டர் !

ஈபிடிபி றீகன் - கமல் மோதல்! களைகட்டியது சிறீதர் தியேட்டர் !
ஈபிடிபியின் தலைமைப் பணிமனையான யாழ்ப்பாணம் சிறீதர் திரையரங்கில் ஈபிடிபியின் முக்கிஸ்தர்கள் இருவர் ஒருவருடன் ஒருவர் மோதிக் கொண்ட சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.

சனல் 4 காட்டும் கொடூரப் பதிவுகள்! ''வீடியோக்கள் உண்மை... எடுத்தது சிங்கள கமரா!''


உலகத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்பி இருக்கிறது சனல் 4 தொலைக்காட்சி!  நெஞ்சில் ஈரம் உள்ளவர்களைக் கண்ணீர் வடிக்கவும், இரத்தம் சூடானவர்களைக் கொதிக்க வைக்கும் அளவுக்கும் ஈழத்துக் காட்சிகளை அந்தத் தொலைக்காட்சி அம்பலப்படுத்தி உள்ளது.

ஒரு பெண் வேசியாகிறாள். 18 +

ஒரு பெண் வேசியாகிறாள். 18 +


  • இந்தப் பெண்ணின் வாழ்க்கை கணவனை இழந்ததோடு முடிந்துவிட்டதா? 
  • இரவு 9 மணிக்குப்பின் இராணுவத்தினரின் ஆட்சி அவளது வீட்டில் நடக்கும். 
  • அவள் அவ் வீட்டில் தனிமையில் இருப்பவள், இவள் வேசியானதற்கு யார் காரணம்?

ஒரு 20 வயதுடைய பெண் தன்னுடைய கணவனை யுத்தத்தின் போது பறிகொடுத்து விட்டார். அந்த பெண்ணுக்கு 3 வயதில் ஒரு குழந்தையும் இருக்கின்றது. கணவனை இழந்ததும் தனிமைப் படுத்தப்பட்டுவிட்டாள். இவளுக்கு தொழிலும் இல்லை. இன்னொருவனை திருமணம் செய்வதற்கும் சமுகம் இடம் கொடுக்கவில்லை. இவள் வாழ்ககையை எவ்வாறு கொண்டு நடாத்துவது. தன் பிள்ளையை நல்ல நிலைக்கு கொண்டு வருவது. அவள் இன்னொரு திருமணம் செய்ய எத்தணித்தபோது அவளது சமுகம் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை?.



ஒரு பெண் தன் கணவனைத் தவிர வேறு ஓருத்தருடன் பாலியல் ரீதியில் தொடர்பு வைத்திருந்தால் அவளை வேசி என்று சமூகம் சொல்கின்றது. ஆனால் ஒரு ஆண் எத்தனை பேருடன் தொடர்பு வைத்திருந்தாலும் அவனைப்பற்றி எவரும் கணக்கெடுப்பதில்லை.

காட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள்

காட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ்  பெண்கள்!
கணவனை இழந்த பெண் ஒரு நல்ல காரியத்துக்கு செல்ல முடியாது, நல்ல காரியம் நடைபெறும் இடத்திலிருந்து விலக்கி வைத்தல், நல்ல காரியத்துக்கு செல்கின்றபோது அந்த பெண் முன்னால் வந்தால் சகுனம் என்று சொல்வது. இது எல்லாம் எந்த வகையில் நியாயம்?. 

கணவனை இழந்த பெண் ஒரு நல்ல காரியத்துக்கு செல்ல முடியாது, நல்ல காரியம் நடைபெறும் இடத்திலிருந்து விலக்கி வைத்தல், நல்ல காரியத்துக்கு செல்கின்றபோது அந்த பெண் முன்னால் வந்தால் சகுனம் என்று சொல்வது. இது எல்லாம் எந்த வகையில் நியாயம்.இப் பதிவு ஆண்களையோ, பெண்களையோ குற்றம் சொல்வதற்காக அல்ல. என்னால் அறியப்பட்ட  சில சம்பவங்களும் நான் என்னக்குள்ளே கேட்டுக்கொண்ட கேள்விகளுமே.

இன்று பெண்ணடிமை பற்றி பேசப்பட்டாலும். பெண்களுக்கு எதிரான  வன்முறைகளுக்கு எதிராகா பல்வேறுபட்ட அமைப்புக்கள் குரல்கொடுத்து வந்தாலும். இன்று பெண்ணடிமை இன்று இல்லையா என்று கேட்டால். பதில் கேள்விக்குறிதான்.

யாழ்ப்பாணத்தில் ஆண்களின் காம வெறிக்கு இரையாகும் தமிழ் பெண்கள்


  • மட்டக்களப்பிலும் தொடர்ச்சியாக சமூக சீர்கேடுகள் இடம்பெற்று வருகின்றன. 
  • மட்டக்களப்பு மாவட்டத்திலே நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட விதவைகள் இருக்கின்றனர். 
  • 15 வயது சிறுமி தந்தையை இழந்தவர் குடம்பத்தில் 10 பேர் குடும்ப சுமையை குறைக்க வேலைக்கு சென்ற  சிறுமி மூன்று மாத கர்ப்பிணியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
யாழ்ப்பாணத்தில் கலாச்சார சீர்கேடுகள் இடம்பெற்று வருவதாக பரவலாகப் பேசப்பட்டு வரும் இவ்வேளையில் இவ்வாறான கலாசார சீர்கேடுகள் யாழ்ப்பாணத்தில் மாத்திரமல்ல கிழக்கு மாகாணத்திலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தல் பரவலாக நடைபெற்று வருகின்றன. ஆனாலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெறுகின்ற இவ்வாறான செயற்பாடுகள் வெளிவருவதில்லை. இவற்றுக்கு காரணம் கிழக்கிலே இடம்பெறும் இவ்வாறான செயற்பாடுகளை வெளியிடுவதற்கு ஊடகம் இல்லை என்றே சொல்லலாம். யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை இவ்வாறான சமூக சீர்கேடுகளை வெளியிடுவதில் ஊடகங்கள் பாரிய பங்கு வகிக்கின்றன.

மட்டக்களப்பிலும் தொடர்ச்சியாக சமூக சீர்கேடுகள் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான சமூக சீர் கேடுகள் நான்கு சுவருக்குள்ளேயே நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. அவை வெளிச்சத்துக்கு வருவதில்லை. வடக்கு, கிழக்கிலே இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக சொத்துக்கள் உயிர்கள் மாத்திரமல்ல தமிழர்களின் சமூக, கலாச்சாரங்களும் பெண்களின் கற்புகளும் பறிபோகும், விலைபோகும் நிலைக்கு  தள்ளப்பட்டிருக்கின்றனர்.