by: நிரோ இயக்குனர்
கடந்து வந்த சுனாமியின் பின் மீள முடியாது என்பது காலத்தாலும் கோலங்களாலும் நினைவுகளில் இருந்து மீண்டு வர முடியாது இருக்கும் போது இந்த வருடம் கொடுத்த சுனாமி எனும் தானா புயல் அனர்த்தம் தமிழ் நாட்டில் கடந்த வியாழன் வெள்ளிக்கிழமைகளில் வந்தமை இந்த உல நாடே அறிந்த வகையில் கடலூர் மாவட்டம் பாதிக்கப்பட்ட விளைவுகள் பல கோடி தாண்டியுள்ளது.
http://www.facebook.com/media/set/?set=a.339352409411239.92428.100000094476225&type=3
இந்தப்பாதிப்புக்களை தமிழகத்தொலைக்காட்சிகள் மற்றும் பிற ஊடகங்கள் பத்தோடு பதின் ஒன்றாக காட்டி இருக்கின்றது. இதில் குறிப்பிடும் படியாக…. தமிழீழத்தை இளந்து அகதிகளாக தஞ்சம் கோரி கடலூர் மாவட்டத்திலும் அகதிகளாக தங்கி உள்ளனர்.
இவர்கள் இன்று வாழ்வாதாரமான குடிசைகள் முற்றிலும் சேதமடைந்து உள்ளதை நேரில் பார்வையிடும் போது மிகுந்த கவலையுடனும், வேதனையுடனும் காணக்கூடியதாக இருந்தது. இவ்வனர்த்தங்களை பதிவு செய்த தொலைக்காட்சி ஊடகங்கள் உலக அரங்கில் ஏன் எமது தமிழீழத்து உறவுகள் தஞ்சம் கோரிய அகதி முகாம்களை கவனத்தில் எடுக்கவில்லை என்ற கேள்விகளை ? பார்வையிடும் உங்களிடம் எமது கவலையை தெருவிக்கின்றோம் என்றனர். உங்களுக்கு எங்கள் அனைவரதும் நன்றிகள் என்று கூறி கண்ணீரால் நன்றி தெருவித்து விடை அளித்தமையானது பெரும் வருத்தத்தை உண்டு பண்ணுகின்றது.
நான் நேரில் பார்வை இட்டு பதிவு செய்யத நிழற்படங்கள் இவை... ” முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் இளம் புயல் பண்ருட்டி வேல் முருகன் அண்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி “
No comments:
Post a Comment