Translate

Friday, 30 November 2012

யாழ். பல்கலை. மாணவர்கள் மீதான தாக்குதல் விவகாரம்! அமெரிக்கா தூதரகம் அறிக்கை

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து வெள
ியாகியுள்ள தகவல்கள் தொடர்பாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டள்ளதாவது.

விழுவது மட்டுமே அலையின் தொழிலன்று! மீண்டும் எழுவதும் தான்!- கவிஞர் வைரமுத்து"


"விழுவது மட்டுமே அலையின் தொழிலன்று! மீண்டும் எழுவதும் தான்!- கவிஞர் வைரமுத்து"
===================
''உண்மையைச் சொல்லுங்கள்... இலங்கையில் எப்படி இருக்கிறார்கள் தமிழர்கள்?''  இவ்வாறு தமிழக சஞ்சிகையான ஆனந்த விகடனில் வாரந்தோறும் வெளிவரும் "விகடன் மேடை" என்னும் பகுதியில் கவிஞர் வைரமுத்துவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் வருமாறு:
 

இறந்தவர்கள் வீர சொர்க்கத்தில்,  இருப்பவர்கள் கோர நரகத்தில். 

பத்துத் தமிழர்கள் கூடி நின்று பேசினாலும் இராணுவத்திற்குச் செய்தி போகிறது. அடுத்த சில நிமிடங்களில் கூட்டம் அச்சுறுத்திக் கலைக்கப்படுகிறது. 

கையில் வைத்து அழுத்தப்படும் பணமோ, கழுத்தில் வைத்து அழுத்தப்படும் கத்தியோ, சில தமிழர்களை உளவாளிகளாக மாற்றி வைத்திருக்கிறது. 

இரகசியமாக விநியோகிக்கப்படும் போதைப் பொருள் பகிரங்கமாகப் பாதுகாக்கப்படுகிறது. 

பதின்பருவத்துப் பிள்ளைகள் இன்னோர் ஆயுதம் ஏந்திவிடக் கூடாது என்பதற்காகச் சாராயத்திலும் போதைப் பொருளிலும் காயடிக்கப்படுகிறார்கள். 

எது நேரக் கூடாதோ - ஆனால், ஒரு போர்ச் சமூகத்தின் உடன் விளைவாக எது நேருமோ - அது நேர்ந்தேவிட்டது. நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சொல்கிறேன்; கொத்துக் கொத்தாய்ப் பாலியல் தொழில் நடக்கிறது. 

அரசு ஊழியர்கள் தமிழர்களாயிருந்தால் சிங்களப் பகுதிக்கும், சிங்களவர்களாயிருந்தால் தமிழ்ப் பகுதிக்கும் திட்டமிட்டுப் பரிமாறப்படுகிறார்கள். 

இதனால், இனவாத அரசு எதை எதிர்பார்க்கிறதோ, அது நடந்துகொண்டே இருக்கிறது. அதாவது, சிங்கள - தமிழ் இல்லற இனக்கலப்பு தொடங்கித் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 

இது அதிகரிக்கும் பட்சத்தில் இன்னும் சில பத்தாண்டுகளில் நம்மவர்களின் இனமொழி அடையாளம் முதலில் கொஞ்சம் கொஞ்சமாகவும் முடிவில் முற்றிலுமாகவும் அழிக்கப்பட்டு விடும். பிறகு, எவரை எதிர்த்து எவர் போராடுவது? 

இந்தியாவும் ஐ.நா-வும் தமிழர்கள் கொல்லப்படுவதை ஏதோ உடல்தானம் செய்கிறார்கள் போலும் என்று ஒதுங்கிக்கொண்ட பிறகு எங்கே போய் முறையிடுவது? 

இன உணர்வாளர்கள் கதறிக்கொண்டே இருக்கிறார்கள், கரையில் மாரடித்துக் கதறும் அலைகளைப் போல. 

ஆனால் ஒன்று. விழுவது மட்டுமே அலையின் தொழிலன்று, மீண்டும் எழுவதும்தான்.
 
ஆனந்த விகடன்''உண்மையைச் சொல்லுங்கள்... இலங்கையில் எப்படி இருக்கிறார்கள் தமிழர்கள்?'' இவ்வாறு தமிழக சஞ்சிகையான ஆனந்த விகடனில் வாரந்தோறும் வெளிவரும் "விகடன் மேடை" என்னும் பகுதியில் கவிஞர் வைரமுத்துவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் வருமாறு:


இறந்தவர்கள் வீர சொர்க்கத்தில், இருப்பவர்கள் கோர நரகத்தில். 

தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனது மாவீரர் வணக்க நாள் செய்தி !


Posted Image

• நமது தேசத்தின் கூட்டு நினைவுகளில் நீங்கா இடம் பெற்;றுவிட்ட மாவீரர் தந்த வலுவோடும் ஆன்மபலத்தோடும் விடுதலைப்பயணத்தினை அயராது தொடர்ந்து முன்னெடுப்போம்!
• உலக சமூகம் தமிழ் மக்களது அரசியல்பெருவிருப்பினைக் கண்டறிய அனைத்துலக நியமங்களின்படி மக்கள் வாக்கெடுப்பினை நடாத்த வேண்டும்!
இன்றைய தேசியமாவீரர் நாளில் நமது மாவீரர்களை மனதிருத்தி நாம் உலக சமுதாயத்திடம் நீதி கோருகிறாம். நாம் நம்மை சிங்களத்தின் பிடியிலிருந்து விடுவித்து நமக்கெனச் சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசினை அமைத்துக் கொள்ள ஆதரவு தாருங்கள் என்று நியாயத்தின் பேரால் உலக சமுதாயத்திடம் கோருகிறோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர்வி.உருத்திரகுமாரன் அவர்களது மாவீரர் வணக்கநாள் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பு ஒரு போதும் 13 ஐ நிராகரிக்கவில்லை; அரச ஊடகங்கள் பொய்ப்பிரசாரம் - சுமந்திரன்

news
தமிழர்களுக்கு முழுமையான அதிகாரப்பகிர்வை வழங்க அத்திபாரமாக அமையும் 13ஆவது திருத்தச் சட்டத்தை தாம் ஒருபோதும் நிராகரித்ததில்லை என உறுதிபடத் தெரிவித்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

தமது நிலைப்பாட்டைத் தெளிவாக எடுத்துரைத்த பின்னரும் அரச ஊடகங்கள் தொடர்ச்சியாகப் பொய்ப் பிரசாரங்களைச் செய்வது விஷமத்தனமானது என்றும் குறிப்பிட்டது. 

அடக்குமுறைகள் வென்றதாக வரலாறில்லை: த.தே.கூ.



அடக்குமுறைகள் வென்றதாக உலகெங்கிலும் வரலாறில்லை. இதனைப் புரிந்துகொண்டு அரசாங்கம் செயற்பட வேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


யாழ். பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதலில் ஈடுபட்ட இராணுவம் மற்றும் பொலிசாரின் செயலைக் கண்டித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் உத்தியோகபூர்வ பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது,

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

முறையிட்டால்தான் நடவடிக்கை; டி.ஐ.ஜி. சொல்கிறார்

news
பல்கலைக்கழக விடுதிக்குள் இராணுத்தினர் அத்துமீறி நுழைந்தது தொடர்பாகவோ அல்லது பொலிஸாரால் மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பிலோ எதுவித முறைப்பாடும் செய்யப்படவில்லை. முறைப்பாடு செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதிப் பொலிஸ்மா அதிபர் (டி.ஐ.ஜி) எரிக் பெரேரா தெரிவித்தார். 

தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலையே : முன்னாள் ஐரோப்பிய எம்.பி. எவன்ஸ்


இலங்கைத்தீவில் உள்ள தமிழ்மக்கள் மீது சிறிலங்கா அரசு மேற்கொள்வது ஒர் இனப்படுகொலையே என பிரித்தானியாவினைச் சேர்ந்த முன்னாள் ஐரோப்பிய பாரளுமன்ற உறுப்பினர் ரொபர்ட் எவன்ஸ் தெரிவித்துள்ளார். பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் பங்குகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பிரித்தானியாவில் ஆரம்பமமாகியுள்ள நாடுகடந்த அரசாங்கத்தின் நான்காவது பாராளுமன்ற அமர்வின் முன்நிகழ்வாக, பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றிருந்த மாநாட்டில கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே இக்கூற்றினை அவர் தெரிவித்துள்ளார்.

இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துதைத் தடுப்பது காட்டுமிராண்டித்தனம்: சுரேஷ்


யாழ் பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதலில் ஈடுபட்ட இராணுவம் மற்றும் பொலிசாரின் செயலைக் கண்டித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் உத்தியோகபூர்வ பேச்சாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையின் முழு விபரம் வருமாறு:

இனவாடை வீசும் சிறிலங்கா கிரிக்கற்றைப் புறக்கணிப்போம் - ஆஸி. எழுத்தாளர்


மனித உரிமைகள் தொடர்பாக அவுஸ்திரேலியா சர்வதேச அரங்கில் ஒரு தோற்றப்பாட்டைக் காட்டுகின்றபோதும்,  பாதுகாப்பில்லாத ஒடுக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பதற்கு பதிலாக அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அல்லது அவர்களின் வேண்டுகோள்களை செவிமடுக்காத ஒரு தலைமையாகவே இருந்துவருகிறது.  


ஆனால் இதற்கு விதிவிலக்காக இந்தப் போக்கை கண்டிக்கும் வகையிலான ஒரு நிகழ்வு.  

ஒரு பகுதி புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்ந்தும் இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றனர் - கருணா


ஒரு பகுதி புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்ந்தும் இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றனர் - கருணா
 புலம்பெயர் தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் தொடர்ந்தும் இலங்கைக்கு எதிராக செயற்பட்டு வருவதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றம்சுமத்தியுள்ளார்.
 
இலங்கை வாழ் தமிழ் மக்களை புலம்பெயர் மக்கள் நேசித்தால் இலங்கைக்கு வந்து அவர்களுக்கு உதவிகளை செய்ய வேண்டும்.  எனினும் அவர்கள் அவ்வாறு செய்வதில்லை என குறிப்பிட்டதுடன் விமானப்படையினர் முல்லைத்தீவு வான் பரப்பில் விமானங்களைச் செலுத்துவதில் எவ்வித பிழையும் கிடையாது.

இராணுவத்தினராலும், பொலிஸாரினாலும் மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு மிரட்டல்; வைத்தியசாலை விடுதியை விட்டு பறந்தனர்


இராணுவத்தினராலும், பொலிஸாரினாலும் மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்களை, புலனாய்வாளர்கள் மிரட்டி வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றியுள்ளதாக “உதயனுக்கு’  தகவல்கள் கிடைத்துள்ளன.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய அமைதியான போராட்டத்தை இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து அடிதடி நடத்திக் கலைத்தனர். இதன்போது மாணவர்கள், மாணவிகள் பலர் இராணுவத்தினரால் கலைத்துக்கலைத்து மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்டனர்.

படைகளுக்கு பல்கலைக்கழகத்தில் என்ன வேலை ? – மாவை எம்.பி. கேள்வி


யாழ்.பல்கலைக்கழக வளாகத்துக்குள் படையினரை அனுப்பியது யார்? அவர்களுக்கு அங்கு என்ன வேலை? எனக் கேள்வி எழுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா இதற்கு உயர்கல்வி அமைச்சர் உரிய பதிலளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

சிங்கள காடையர்களின் தமிழ் மக்கள் மீதான கோரப்படுகொலைகள் (படங்களை இணைப்பு)

கேணல் ரமேஸ் படுகொலை புதிய ஆதாரம் காட்டுமிராண்டித்தனமாகப் படுகொலை (படம் இணைப்பு )கேணல் ரமேசை அடித்து கொன்ற பின் தீயிட்டு கொளுத்திய சிங்கள காடையர்கள் புதிய ஆதாரம் (படங்கள் )சிங்கள காடையர்களின் தமிழ் மக்கள் மீதான கோரப்படுகொலைகள் (படங்களை இணைப்பு)
நித்திரைய தமிழா கொஞ்சம் நிமிர்ந்து பாரடா !!உன் உறவுகள் கிடக்கும் கோலத்தை பார் !!
யாருக்கு என்ன தீங்கு செய்தார்கள் !! சுகந்திரமாய் வாழ நினைத்தற்கு இன்று
அவர்கள் அனுபவிக்கும் வேதனையை பார்!!
நீயும் தமிழன் தானே !!உனது இனத்தின் மீது உனக்கு இல்லையா பற்று!!
இறப்பதும் இறந்து கிடப்பதும் உனது சொந்தங்களே !! தமிழா ஒருகணம் சிந்தித்து பார் !!
ஈழ மக்களின் உனது உறவுகளின் உடல்கள் கிடக்கும் கோலத்தை பார்!!
பிஞ்சு முதல் முதியோர் வரை அனைவருமே கொன்று அழிக்கபட்ட தேசத்தை பார் !!
உனக்கும் உரிமையுண்டு உணர்வுகள் உனக்கிருப்பின் உனது உறவுகளுக்காக நீயும் போராடு!!
படுக்கையிலும் கொன்றொளித்த சிங்கள பேய்களின் கோரத்தாண்டவத்தை பார் !!
கண்களை முடாமல் ஒரு கணம் உனது குடும்பமென சிந்தித்து பார் தமிழனே !! என் உறவுகளே
குழந்தைகள் இதயம் பலவீனமானவர்கள் பார்வையிட வேண்டாம்…...read more 

பிரித்தானிய வாழ் தமிழர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அவசர அழைப்பு !

இறந்தவர்களின் நினைவுக்குச் செலுத்தப்படும் மரியாதை!
உலகின் பல்வேறு நாடுகளில் வருகை தந்துள்ள தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் மற்றும் பிரித்தானிய அரசியல் பிரதிநிதிகள் என பலரும் பங்கெடுத்துக் கொண்டிருந்தனர்.
http://varudal.com/http://naathamnews.com/?p=7866



- தமிழீழ தாயகத்தில் மட்டுமல்ல புலத்திலும ஈழத்தமிழர்களுக்கான அரசியல் வெளியினை முடக்க சிறிலங்கா அரசு தீவீரம் !
- நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற அமர்வினை முடக்க சிங்கள பேரினவாதம் இடைவிடா முயற்சி !
- ஈழத்தமிழர்கள் ஓர் அரசுக்குரிய இனம் என்பதனை அடையாளப்படுத்த முருதாசன் திடலில் அணிதிரளுமாறு அழைப்பு !

யுத்தக் குற்றம் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணை அவசியம்: கூட்டமைப்பு வலியுறுத்தல்

News Service
அரசாங்கம் பொறுப்புக்கூறும் விடயத்தில் தொடர்ந்தும் தவறிழைத்து வருகின்றது. யுத்தக் குற்றம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளாது, இராணுவ மட்டத்தில் மட்டுமே விசாரணைகள் இடம்பெறுகின்றன. இதனால் சுயாதீன சர்வதேச விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டியது அவசியமாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஐநா தூதுக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளனர். இலங்கை வந்துள்ள ஐநாவின் ஆசிய பிராந்திய அபிவிருத்தி நிறுவனத்தின் தெற்காசிய பிராந்தியங்களுக்கான குழுவின் சிரேஷ்ட உறுப்பினர் ஹிட் ரோக்கி டோன் தலைமையிலான தூதுக்குழுவினரை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தலைமையிலான எம்.பிக்கள் குழுவினர் நேற்று மாலை கொழும்பிலுள்ள ஐநா அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே இவ்வலியுறுத்தலை விடுத்துள்ளனர்.

செந்தமிழனின் பாலை - யமுனா ராஜேந்திரன்


செந்தமிழனின் பாலை - யமுனா ராஜேந்திரன்

ஹாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையான நிக்கோல் கிட்மேன் நடித்த லார்ஸ் வான் டிரையரின் டாக்வில்திரைப்படம் முழுமையானதொரு அரசியல் திரைப்படம். ஸ்டுடியோ செட் ஒன்றினுள் நாடக மேடைச் சட்டக வடிவத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம் அது. செவ்வியல் ஓபரா வடிவத்தை நவீன வாழ்விற்குப் பெயர்த்தால் எப்படி இருக்கும்? நடன அசைவுகளுக்குத் தக்க உச்ச ஸ்தாயியில் பாடல்கள்; சமகால அரசியல் தன்மையுள்ள கச்சிதமான உரையாடல்கள்; நாடக மேடைச் சட்டகம் போன்று திட்டமிட்டபடி கொஞ்சம் விரித்துக் கொண்ட வெளி. இதுதான்டாக்வில் திரைப்படத்தின் கதை நிகழும் களம்.

சம்பூர் என்ற கிராமமே இலங்கையின் வரைபடத்திலிருந்து அழிக்கப்பட்டிருக்கின்றது


சம்பூர் என்ற கிராமமே இலங்கையின் வரைபடத்திலிருந்து அழிக்கப்பட்டிருக்கின்றதுஒரு அரசாங்கம் தான் செய்ய வேண்டிய கடமையைப் புறந்தள்ளிவிட்டுதனது இராணுவ முன்னெடுப்புகளால் உயிருக்கு அஞ்சி நாட்டைவிட்டு வெளியேறி அங்கு அகதிகளாக வாழும் தமிழ் மக்களிடம் உள்நாட்டில் அகதிகளாக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவ வேண்டும் என்று எதிர்பார்ப்பது வெட்கக்கேடான விடயம். 

ஆயினும் தங்களது கடின உழைப்பில் ஈட்டிய சொற்ப வருமானத்தில் தங்களது செலவுகளைக் குறைத்துக்கொண்டு எமது மக்களுக்கு அவர்கள் செய்திருக்கின்ற உதவிகள் அளப்பரியவை. 

வேலைக்கு அழைத்துச் சென்று குவைத் விபசார விடுதியில் ஆந்திர பெண்கள் விற்பனை


குவைத் வேலைக்கு அழைத்து செல்லப்பட்ட ஆந்திர இளம்பெண்கள் பேர் அங்குள்ள விபசார விடுதியில் விற்கப்பட்டனர். சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி அருகே உள்ள கொத்தப்பள்ளியைச் சேர்ந்தவர் பார்வதி (18). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கிராமத்தில் கூலிவேலை செய்து வந்தார்.

இலங்கை இராணுவம் மேற்கொண்ட யுத்தக் குற்றங்களை வெளியுறவு அமைச்சர் ஏற்றுக்கொண்டார்: விக்கிலீக்ஸ்

News Service
எதிர்காலத்தில் மனித உரிமை மீறல்கள் மற்றும் அதிகாரப் பரவலாக்கம் போன்ற விடயங்களில் தம்மை தனிப்பட்ட பொறுப்பாளராக எடுத்துக்கொள்ளலாம் என்று இலங்கையின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ரோஹித்த போகல்லாகம தெரிவித்திருந்ததாக விக்கீலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் உதவி இராஜாங்க செயலாளர் ரிச்சர் பௌச்சரிடம் இந்த உறுதிமொழியை போகல்லாகம வழங்கியிருந்தார் என்று அமெரிக்கத் தூதரகத்தின் செய்தி அனுப்பலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய வாழ் தமிழர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அவசர அழைப்பு !

News Service
* தமிழீழ தாயகத்தில் மட்டுமல்ல புலத்திலும ஈழத்தமிழர்களுக்கான அரசியல் வெளியினை முடக்க சிறிலங்கா அரசு தீவீரம் !
* நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற அமர்வினை முடக்க சிங்கள பேரினவாதம் இடைவிடா முயற்சி !
* ஈழத்தமிழர்கள் ஓர் அரசுக்குரிய இனம் என்பதனை அடையாளப்படுத்த முருதாசன் திடலில் அணிதிரளுமாறு அழைப்பு !
பிரித்தானிய மண்ணிலதொடங்கவுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது பாராளுமன்ற அமர்வினை முடக்குவதற்கு தீவீர முயற்சிகளை மேற்கொண்டுள்ள சிறிலங்கா அரசுக்கு பதிலடி கொடுக்க பிரித்தானிய வாழ் தமிழர்களை அணிதிரளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அவசர அழைப்பொன்றினை விடுத்துள்ளது.

ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்

வரும் 2.12.2012 ஞாயிறு, காலை 10.36 மணிக்கு, ராகு விருச்சிகத்தில் இருந்து துலாமிற்கும், கேது ரிஷபத்தில் இருந்து மேஷத்திற்கும் பெயர்ச்சியாகின்றனர். இவர்கள் 21.6.2014 வரை இந்த ராசிகளில் செயல்படுவர்................... read more 

நாடாளுமன்ற தெரிவு குழுவில் TNA பங்கு பெறவேண்டும். இல்லையேல் இனங்களுக்கிடையில் விரிசல் அதிகரிக்கும்!


ஹக்கீம் எச்சரிக்கை!

நாட்டில் நீண்ட காலமாக நிலவி வரும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவு குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தாமதமின்றி பங்குபற்ற முன்வர வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ராஜபக்ஷ குடும்பத்திலிருந்து ஒருவரை பிரதம நீதியரசராக நியமிக்க முடியும் - அசாத் சாலி


ராஜபக்ஷ குடும்பத்திலிருந்து ஒருவரை பிரதம நீதியரசராக நியமிக்க முடியும் - அசாத் சாலி
ராஜபக்ஷ குடும்பத்திலிருந்து ஒருவரை பிரதம நீதியரசராக நியமிக்க முடியும் என கொழும்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், பாராளுமன்ற அதிகாரங்களை அவரது மூத்த சகோதரர் சமால் ராஜபக்ஷவும் கட்டுப்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எம் மன உணர்வுகளை ஆயுதமுனையில் அடக்க முடியாது!

எம் மன உணர்வுகளை ஆயுதமுனையில் அடக்க முடியாது! மாவீரர் தினத்தையோட்டி நேற்று மாலை பல்கலைக்கழத்தில் சுடரேற்றுவதற்கான ஒழுங்குகளை மாணவர்கள் செய்தவேளை அதனை தடுக்கும் முகமாக பெருமளவான இராணுவத்தினர், பொலிசார் மற்றும் இராணுவ புலனாய்வாளர்கள் யாழ். பல்கலைக்கழக சூழலில் மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் நடமாதியதை கண்டித்தும் பல்கலைக்கழக விடுதிகளுக்குள் இராணுவத்தினர் அத்துமீறி நூழைந்ததை கண்டித்தும் இன்று காலை 11 மணியளவில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைகழக வாசலை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஒரு மணித்தியாலங்களாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பூட்டியிருந்த வாசல் கதவினை திறந்து வெளியே வந்து மற்றுமொரு வாசலினால் உள்ளே செல்ல முயன்றவேளை மாணவர்கள் மீது வெளியே காத்திருந்த பொலிசாரும் இராணுவத்தினரும் சேர்ந்து வயர்கள், பொல்லுகள், துப்பாக்கி பிடி என்பனவற்றால் கண்மூடித்தனமாக தாக்குதல் நடாத்தினார்கள். 

சம்பவ இடத்தில் நின்ற ஊடகவியலாளர்கள் மீதும் வீதியால் சென்றவர்கள் மீதும் அவர்கள் தாக்குதல்களை மேற்கொண்டார்கள். 

தனிநாடு கோரும் பலஸ்தீனத்திற்கு ஐநா பச்சைக்கொடி! வாக்கெடுப்பில் வெற்றி


தனிநாடு கோரும் பலஸ்தீனத்திற்கு ஐநா பச்சைக்கொடி! வாக்கெடுப்பில் வெற்றிஇஸ்ரேலின் கோரத் தாக்குதலுக்கு உள்ளாகிவரும் பலஸ்தீன இராச்சியத்தை ஐக்கிய நாடுகள் அமைப்பு ஒரு நாடாக அங்கீகரித்துள்ளதென தெரிவிக்கப்படுகிறது. 

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக 139 நாடுகளும், எதிராக ஒன்பது நாடுகளும் வாக்களித்துள்ளன. இந்த வாக்கெடுப்பில் 41 நாடுகள் பங்கேற்கவில்லை. 

Wednesday, 28 November 2012

பிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு கிடைக்கும் அங்கீகாரம்! சீற்றத்தில் இலங்கை அரசு!


பிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு கிடைக்கும் அங்கீகாரம்! சீற்றத்தில் இலங்கை அரசு!

பிரித்தானிய மண்ணில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது பாராளுமன்ற அமர்வு நடைபெற இருப்பதானது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு கிடைத்து வரும் மற்றுமொரு அங்கீகாரமாக பலராலும் கருதப்பட்டு வருவதானது இலங்கை அரசினை  சீற்றங்கொள்ள வைத்துள்ளது.
இந்நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது அமர்வினை சீர்குலைப்பதற்கான மறைமுகமாக முயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியுள்ளது.
நாளை வியாழக்கிழமை (29-11-2012) பாராளுமன்ற அமர்வின் உத்தியோகபூர்வ தொடக்க நிகழ்வான புதிய முகவரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நா.த.அரசாங்கம் அறிவித்துள்ளது.
BRENT TOWN HALL எனும் முகவரிக்கு மாற்றாக 
Zoroastrian Centre, 440 Alexandra Avenue, Rayners Lane, HA2 9TL.
Nearest Tube: Raners Lane
எனும் புதிய முகவரிவரியில் மாலை 6 மணிமுதல் இரவு 10 மணி வரை தொடக்க அமர்வு இடம்பெறவிருக்கின்றது.

விசாரிக்கப்பட்டதாக சிறிதரன் தெரிவித்துள்ளார்.



தமிழோசைக்கு வழங்கிய செவ்வி குறித்து தான் இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரிக்கப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் 4 ஆம் மாடி அலுவலகத்தில் அந்த திணைக்களத்தின் பொலிஸ் அதிகாரிகளால் தான் சுமார் இரு மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக சிறிதரன் எம்பி கூறியுள்ளார்.

மாவீரர் தின துண்டுப் பிரசுரங்களுடன் ஜவர் அக்கரைப்பற்றில் கைது!

Posted Imageஅக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மாவீரர் தினத்திற்கான துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கச் சென்ற ஐந்து பேரை பொலிஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர். ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள், மாவீரர் துண்டுப் பிரசுரங்களை முச்சக்கரவண்டியில் எடுத்துச் செல்வதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, அவர்களை கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தியாவின் உதவிகள் விசாரணை வேண்டும் வைகோ



இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கைக்கு இந்தியா செய்த உதவிகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஆணைக்குழுவொன்றை அமைக்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
வைகோவின் ‘ஈழத்தில் இனக்கொலை – இதயத்தில் ரத்தம்’ என்ற நூல் வெளியீட்டில் கலந்து கொண்டு உரையாற்ரும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்திய இராணுவத்தை அனுப்பியது துரோகமாகும்


தமிழர்களுக்காக போராடிய விடுதலைப் புலிகளைச் சுட்டுக்கொல்ல இந்திய இராணுவத்தை அனுப்பிவைத்தமை துரோகச் செயலாகும் என்று மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் நடந்த விழாவில் ஒன்று கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள அவர்,
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை அரசு விருந்தினராக புதுடெல்லிக்கு வரவழைத்து அவருக்கு பொருளாதார உதவிகளை செய்தார்.

நா.க.தமிழீழ அரசாங்க மாவீரர் நாள் அறிக்கை


நா.க.தமிழீழ அரசாங்க பிரதமர் வி. உருத்திரகுமாரன் விடுத்த மாவீரர் வணக்க நாள் அறிக்கை
தேசிய மாவீரர் நாளில் நமது மாவீரர்களை மனதிருத்தி நாம் உலக சமுதாயத்திடம் நீதி கோருகிறாம். சிங்களத்தின் பிடியிலிருந்து விடுவித்து, சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசினை அமைத்துக் கொள்ள ஆதரவு தாருங்கள் என்று கோருகிறோம் என நா.க.த.அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் மாவீரர் வணக்கநாள் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பல்கலை மாணவர்கள் தாக்குதல் கண்டனப் போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு

பல்கலை மாணவர்கள் தாக்குதல் கண்டனப் போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு
news
பல்கலை மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து எதிர்வரும் 4.12.2012 செவ்வாய்க்கிழமை கண்டனப் போராட்டம் ஒன்றினை நடாத்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது. 

யாழ்.பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதிக்குள் புகுந்து இராணுவத்தினர் அட்டகாசம்


இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதல்கள் மற்றும் அங்கு இடம்பெற்ற அட்டூழியங்கள் தொடருமானால் அது நாட்டுக்கு நல்லதல்ல. யாழ். பல்கலைக்கழகத்துக்குள் புகுந்த இராணுவத்தினர் பெண்களின் விடுதிகளின் கதவுகளை உடைத்து உட்புகுந்து கட்டில்களையும் அடித்து நொருக்கியுள்ளனர். இந்த மோசமான செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று சபையில் தெரிவித்தார்.

13ஆவது திருத்தத்தை நீக்க முஸ்லிம் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளாது : ஹக்கீம்

இந்த அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருக்கும் சம்பிக்க ரணவக்க, விமல் வீரவங்ச போன்றோர் கூறிவருவதைப் போல, அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நீக்க வேண்டுமென்பதை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளா தெனவும் அவர்களது நிலைப்பாட்டிற்கு எதிரான அபிப்பிராயத்தைக் கொண்டுள்ள அரசாங்கத்தில் உள்ள கட்சித் தலைவர்கள் சிலர் இதற்கு கைகோர்த்துவருவதாகவும் கட்சியின் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

காலியில், இஸ்லாமிய புத்தாண்டையொட்டி நடத்தப்பட்ட முஹர்ரம் போட்டி நிகழ்வுகளில் வெற்றிபெற்ற அலிப் மத்ரஸா மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அறிவிப்பு

news
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் மற்றும் பல்வேறு தாக்குதல்  சம்பவங்களைக் கண்டிக்கும் முகமாகவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் (03.12.2012 ) திங்கட்கிழமை அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவீரர் தினத்தன்று மாணவர் சுடரேற்ற பல்கலையில் படையினர் வெறியாட்டம் - உதயன் ஆசிரியர் மீதும் படையினர் தாக்குதல்

news
தமிழீழ விடுதலைக்காக வித்தாகிப்போன வீர மறவர்களை நினைவுகூரும் மாவீரர் தினமான இன்று பல்கலைக்கழக மாணவர்கள் ஈகச் சுடரேற்றி மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர். இவ்வேளையில் அதனைத் தடுக்கும் வகையில் படையினர் பல்கலைக்கழக சூழலில் வெறியாட்டம் நடாத்தியுள்ளனர்.
எத்தடை வரினும் எம்மவர் நினைவுகளை அழித்து விட முடியாது என்று மாவீரர் வார ஆரம்பத்திலிருந்தே மிகவும் முனைப்புடன் எழுச்சி நிகழ்வுகளை யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நடாத்தி வந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த தினத்தையொட்டியும், துண்டுப்பிரசுரங்களையும் வெளியிட்டிருந்தனர். இன்று காலையும் பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள மாவீரர் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பொலிஸாரும்,இராணுவத்தினரும் பார்த்திருக்க புலனாய்வாளர்களே வாகனத்தை நொருக்கினர்; சரவணபவன் எம்.பி.ஊடகங்களுக்கு விளக்கம்


தமது உரிமையைக் கேட்டுப் போராடிய பல்கலைக்கழக மாணவர்களை மிருகத்தனமாகத் தாக்கி,அவர்களில் 5பேரை கைது செய்தனர். இராணுவத்தினரும் பொலிஸாரும் பாத்திருக்கவே எனது வாகனம் மீது புலனாய்வாளர் தாக்குதல் நடத்தினர். அமைதியாகப் போராட்டம் நடத்திய மாணவர்ககைக் கைதுசெய்யமுடிந்த இவர்களால் ஏன் வாகனத்தை தாக்கிய விஷமிகளைக் கைதுசெய்யமுடியாது போனது? இதிலிருந்து தெரிகிறது இராணுவத்தினரே திட்டமிட்டு வாகனத்தை தாக்கினர் என்று. இவ்வாறு தெரிவித்தார் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.
பல்லலை மாணவர்கள் மீதான தாக்குதல்,கைது,வாகனம் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் ஊடகங்ககுக்கு விளக்கமளிக்கும் வகையில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் இன்று பிற்பகல் சிவகுரு நாதர் வீதியில் உள்ள உதயன் விருந்தினர் விடுதியில் நடத்தியிருந்தார்.
 
இதில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ் பல்கலைகழக மாணவர்களை காக்க ஐ.நாவினைக் கோரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !


மாவீரர் நாளினை மையமாக கொண்டு யாழ் பல்கலைக்கழக மாணவ சமூகத்தினர் மீது  சிறிலங்கா அரச படைகளினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் தொடர்பில் ஐ.நா உயர் அதிகாரிகள் குழுவொன்று  இலங்கைத்தீவுக்கு அவசரமாக செல்ல வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அவசர கோரிக்கையொன்றினை விடுத்துள்ளது.

தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் நியூ யோர்க் மாவீரர் வணக்க நிகழ்வு உரை

தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் நியூ யோர்க் மாவீரர் வணக்க நிகழ்வு உரை
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=i2PpadokoL4


அமெரக்காவின் நியூ யோக்கில் எழுச்சிபூர்வமாக இடம்பெற்ற மாவீரர் நாளில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் ஆற்றிய உரை :
தமிழீழ தேசத்தின் விடிவுக்காய் களமாடிக் காவியமாகிவி;ட்ட நமது தேசத்தின் வீரப்புதல்வரை மனதிருத்தி நாம் வணங்கும் நாள்.

Tuesday, 27 November 2012

கேணல் பரிதி அவர்களின் வித்துடல் இன்று

 
கேணல் பரிதி அவர்களின் வித்துடல் இன்று (26.11.2012) திங்கட்கிழமை காலை Cimetiere à Pantin 164 av Jean Jaurès 93500 PANTIN என்ற முகவரியில் அமைந்துள்ள லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரின் நினைவுக் கல்லறைகள் அமைந்துள்ள துயிலுமில்லத்தில் அமைக்கப்பட்ட புனித விதைகுழியில் பெருமளவான மக்களின் கண்ணீர் காணிக்கையுடன் விதைக்கப்பட்டது. காலை 10 மணிக்கு கேணல் பரிதி அவர்களின் வித்துடல் அணிவகுப்பு மரியாதையுடன் எடுத்துவரப்பட்டு, மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

ராகு-கேது பெயர்ச்சி பொதுப் பலன்கள் (2.12.2012 முதல் 21.6.2014 வரை)


ராகு-கேது பெயர்ச்சி பொதுப் பலன்கள் (2.12.2012 முதல் 21.6.2014 வரை)

ராகு-கேது பெயர்ச்சி பொதுப் பலன்கள் (2.12.2012 முதல் 21.6.2014 வரை)
நிகழும் நந்தன வருடம் கார்த்திகை மாதம் 17ம் நாள் (2.12.2012) ஞாயிற்றுக் கிழமை,கிருஷ்ண பட்சத்து சதுர்த்தி திதிபுனர்பூசம் நட்சத்திரம்சுப்பிரம் நாமயோகம்பவம் நாமகரணம்நேத்திரம்ஜீவனும் நிறைந்த சித்த யோகத்தில்சனிபகவான் ஹோரையில்,பஞ்ச பட்சியில் ஆந்தை அரசாட்சி  செலுத்தும் நேரத்தில் சூரிய உதயம் புக காலை மணி10.51க்கு நாழிகை 12.7க்கு விசாகம் நட்சத்திரம் 3ம் பாதத்தில் சர வீடான துலாம் ராசியில் ராகுபகவானும் கார்த்திகை நட்சத்திரம் முதல் பாதத்தில் சர வீடான மேஷ ராசியில் கேது பகவானும் பெயர்ச்சி அடைகிறார்கள். 

பா.உ சிறிதரன், திகாம்பரம் ஆகியோர் விசாரணைக்கு அழைப்பு

பா.உ சிறிதரன், திகாம்பரம் ஆகியோர் விசாரணைக்கு அழைப்புதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனை விசாரணைக்கு வருமாறு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர். 

கொழும்பிலுள்ள குற்றத்தடுப்புப் பிரிவு முதலாம் மாடிக்கு சிறிதரன் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் மீண்டும் தீர்மானம்


கொழும்பு: நவ. -28 -​இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக ்ழத் தமிழ் அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா முடிவு செய்திருக்கிறது. ்ழத் தமிழர் பிரச்சனையில் இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை அமெரிக்கா மேற்கொண்டிருக்கிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்காவே கொண்டு வந்தது. 

தீர்வுக்கு நேரடி அழுத்தம் கொடுத்து மஹிந்தவை அமெ. மடக்கவேண்டும்

"இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண அமெரிக்கா அர்ப்பணிப்புடன் செயற்படுமெனில், அது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடுமையான அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும். அரசின் கபடத்தனத்தையும், நழுவல் போக்கையும் நன்கு அறிந்து வைத்துள்ள அமெரிக்கா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை அழைத்துப் பேச்சு நடத்தி, அவர்களைப் பொறுமை காக்கும்படி கூறுவது நியாயமற்றதாகும்'' இவ்வாறு நவசமசமாஜக் கட்சி தெரிவித்தது. 

அரசியல் தீர்வை இனியும் தாமதிக்காது முன்வைக்குமாறு கோரி சாகும்வரை உண்ணாவிரதம்! செல்வம் அடைக்கலநாதன் அறிவிப்பு!!

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை இனியும் தாமதிக்காது வழங்கக்கோரி அடுத்த வருடம் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் தான் குதிக்கப்போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நாடாளுமன்றில் இன்று தெரிவித்தார்.

ஐ.நா. அறிக்கைக்கு சிங்கள அரசு விடுத்துள்ள எதிர்ப்பு


ஐ.நா. அறிக்கைக்கு சிங்கள அரசு விடுத்துள்ள எதிர்ப்பு 
 
இலங்கை இறுதிக்கட்ட போர் குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஐ.நா. குழுவின் அறிக்கை கடந்த 14-ந் தேதி வெளியிடப்பட்டது. அதில், போரில் சிக்கிக் கொண்ட தமிழர்களை காப்பாற்ற ஐ.நா. அதிகாரிகள் தவறிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், இந்த அறிக்கையை இலங்கை அரசு நிராகரித்துள்ளது. இதுகுறித்து இலங்கை வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை போர் பற்றிய ஐ.நா. அறிக்கை அடிப்படையற்றது. எந்த மக்களுடைய பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டார்களோ, அந்த மக்களையே மனித கேடயங்களாக பிடித்து வைத்திருந்த விடுதலைப்புலிகளை ராணுவ ரீதியாக இலங்கை தோற்கடித்தது.

எப்பாடுபட்டாவது ஈழ விடுதலையை வென்றெடுப்போம்: சீமான் சூளுரை


22 மணி நேர மின்வெட்டு - தீப்பந்தம் ஏந்திப் போராட்டம்: சீமான்சென்னை: எப்பாடு பட்டாகினும், இன்னுயிரைத் தந்தாகினும் ஈழத் தமிழினத்தின் விடுதலையை வென்றெடுப்போம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மானுடத்தின் மூத்த இனம், நாகரீகத்திற்கும், தொன்மைக்கும் சான்றாக உலக வரலாற்றில் அங்கீகரிக்கப்பட்ட பெருமைக்குரிய இனமான தமிழினம், காலனி ஆதிக்கத்தினாலும், அயலவர் ஊடுறுவலினாலும் தனது தனித்தன்மையையும், தன்னாட்சியையும் இழந்து அடிமையுற்ற நிலையில், நம்மினம் வாழ்ந்த நிலப்பகுதிகள் அரசியல் ரீதியாக விடுதலைப் பெற்றும் அடிமை வாழ்வாகவே தொடர்ந்த நிலையில் தான், இலங்கையில் மேலாதிக்கம் பெற்ற சிங்கள பெளத்த இனவாத அரசின் கொடூரமான அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாக்கப்பட்டு இரண்டாந்தரக் குடி நிலைக்கு வீழ்த்தப்பட்டது.

கார்த்திகை நாள் வழிபாடுகளில் இராணுவம் தலையிடுவதாக குற்றச்சாட்டு

சீனித்தம்பி யோகேஸ்வரன்
இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் சில பிரதேசங்களில் இந்துக்கள் இம்முறை கார்த்திகை தீபமேற்றல் மற்றும் ஆலய பூசை வழிபாடுகளில் பாதுகாப்பு தரப்பிலிருந்து தலையீடுகளையும் தடைகளையும் எதிர்கொள்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Monday, 26 November 2012

அரசியல் சார்பற்ற சுயாதீன தரப்பிடம் விசாரணைக்கு அனுமதியுங்கள்; பிரதம நீதியரசர்

நாட்டின் அரசியல் வாதிகள் என்னை விசாரணைக்கு உட்படுத்தியமை சட்டத்திற்குப் புறம்பானது என பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.
 
பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிராக 14 குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.

தீர்வின்றேல் சாகும் வரை போராட்டம் : செல்வம் எம்.பி.


தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு விரைவில் உறுதிப்படுத்தப்படாவிட்டால் ஜனவரியில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

பிரிட்டன் பெண் திடீர் மரணம் - முடிக்கு பயன்படுத்திய சாயம் காரணமா?


பிரிட்டன் பெண் திடீர் மரணம் - முடிக்கு பயன்படுத்திய சாயம் காரணமா?

பிரிட்டன் பெண் திடீர் மரணம் - முடிக்கு பயன்படுத்திய சாயம் காரணமா?


தொடர்ச்சியாகதலை முடிக்கு சாயம் பூசி வந்தபிரிட்டன் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

பிரிட்டனின்யார்க்ஷயர் பகுதியைச் சேர்ந்தவர் ஜூலி மெக்கேப் (வயது 38)இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

வன்னி யுத்த அகதிகள் படத்தினை காட்டி தேர்தல் மோசடி செய்து மாட்டிக் கொண்ட குஜராத் காங்கிரஸ்


Posted Image

குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ‘இலங்கை அகதிகள்' படத்தைப் போட்டு பிரச்சாரம் செய்த காங்கிரஸின் மோசடித்தனம்தான் இப்பொழுது சமூக வலைதளங்களின் ஹாட்டாபிக்!

குஜராத் மாநிலத்தில் டிசம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் எப்படியாவது முதல்வர் நரேந்திர மோடியை வீழ்த்திவிட துடித்துக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி. இந்த துடிப்பு கொஞ்சம் ஓவராகிவிட்டது போல! குஜராத் மாநிலத்து குழந்தைகள் போதுமான ஊட்டச்சத்து இல்லாமல் அவமதிப்படுகிறார்கள்.. இந்த விவகாரத்துக்கு தீர்வு காணவில்லை மோடி அரசு என்று சாடி ஒரு படத்தைப் போட்டு பிரச்சாரம் செய்தது!

மாவீரர்தினம் எதற்காக... - இதயச்சந்திரன்

யார் இந்த மாவீரர்கள்?. எதற்காக களமாடினார்கள் ?. உயிர்ப்பூவை உதிர்க்கும் அளவிற்கு மனவலிமையை அவர்களுக்கு கொடுத்த  சக்தி எது?. சிரித்துக் கொண்டே கந்தகக் காற்றில் கலக்கும் வல்லமையைக் கொடுத்தது யார்?.

விடைகாணமுடியாத வினாக்கள் அல்ல இவை . ஒரு ஒடுக்கப்படும் இனம் தனது இருப்பிற்காகப் போராடும்போது இது புரியப்படும்.

மாவீரர் நாளை முன்னிட்டு இராணுவம் குவிப்பு! படையினரின் தடைகளை ஏற்க மாட்டோம்! – ரதன்

மாவீரர் நாளை முன்னிட்டு இராணுவம் குவிப்பு! படையினரின் தடைகளை ஏற்க மாட்டோம்! – ரதன்

'தமிழினத்திற்காகத் தம் இன்னுயிர்களை அர்ப்பணித்தவர்கள் மாவீரர்கள். அவர்களை நினைவுகூருவது ஒவ்வொரு தமிழரினதும் கடமை. கார்த்திகை 27 இல் இதைத் தடுப்பதற்கு வன்னியில் உள்ள இராணுவத்தினருக்கு எந்த அருகதையும் கிடையாது.'

வன்னி அவலத்தை உலகுக்கு வெளிக்காட்டும் புத்தகத் திட்டத்திற்கு நிதி


Posted Image

மே மாதம் 2009 ஆண்டு தமிழருக்கு நடந்த அவலம் நீங்கள் அறிந்ததே. ஆனாலும் 40, 000 அப்பாவிப் பொது மக்களின் உயிரழிக்கப்பட்ட இத்துயரத் தருணங்களின் விபரங்கள் மேற்கு உலகினருக்கு மிகக் குறைவாகவே தெரிய வந்திருக்கின்றன.

ராஜபக்சே மலேசியா வருகை ரத்து! மலேசியத் தமிழ் மக்கள் கொந்தளிப்பின் எதிரொலி!


மலேசியத் தமிழ் மக்களின் பகிரங்கக் கொந்தளிப்பை அடுத்து மலேசியாவுக்கான வருகையை இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே ரத்து செய்தார்.
 
எதிர்வரும் டிசம்பர் 4-ஆம் நாள் தொடங்கி 6-ஆம் நாள் வரை நடைபெறவிருக்கும் அனைத்துலக இஸ்லாமிய பொருளாதார ஆய்வரங்கில் கலந்துக்கொள்ள வரும்படி ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

மட்டக்களப்பில் குடும்ப விவரங்களை திரட்டும் இராணுவம்!

மட்டக்களப்பில் உள்ள  குடும்ப விவரங்களை  இராணுவத்தினர் திரட்டிவருவதனால் மக்கள் அச்சத்தில்  இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டம், மண்முனைப்பற்று பிரதேசத்தில் உள்ள புதுக்குடியிருப்பு கிராமத்தில் இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று  குடும்ப விபரங்களைத் திரட்டுவதுடன், குடும்பத்தில் உள்ள அங்கத்தவர்களையும் புகைப்படம் எடுப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

முதல்வர் ஜெயலலிதா இரும்பு பெண்


முதல்வர் ஜெயலலிதா மக்கள் நலன் காக்கும் இரும்பு பெண் என்று ஐஸ்லாந்து நாடாளுமன்ற குழுத் தலைவர் அஸ்டா ஆக். ஜொஹன்னஸ்டாட்டிர் பாராட்டியுள்ளார்.