Translate

Tuesday, 27 November 2012

ராகு-கேது பெயர்ச்சி பொதுப் பலன்கள் (2.12.2012 முதல் 21.6.2014 வரை)


ராகு-கேது பெயர்ச்சி பொதுப் பலன்கள் (2.12.2012 முதல் 21.6.2014 வரை)

ராகு-கேது பெயர்ச்சி பொதுப் பலன்கள் (2.12.2012 முதல் 21.6.2014 வரை)
நிகழும் நந்தன வருடம் கார்த்திகை மாதம் 17ம் நாள் (2.12.2012) ஞாயிற்றுக் கிழமை,கிருஷ்ண பட்சத்து சதுர்த்தி திதிபுனர்பூசம் நட்சத்திரம்சுப்பிரம் நாமயோகம்பவம் நாமகரணம்நேத்திரம்ஜீவனும் நிறைந்த சித்த யோகத்தில்சனிபகவான் ஹோரையில்,பஞ்ச பட்சியில் ஆந்தை அரசாட்சி  செலுத்தும் நேரத்தில் சூரிய உதயம் புக காலை மணி10.51க்கு நாழிகை 12.7க்கு விசாகம் நட்சத்திரம் 3ம் பாதத்தில் சர வீடான துலாம் ராசியில் ராகுபகவானும் கார்த்திகை நட்சத்திரம் முதல் பாதத்தில் சர வீடான மேஷ ராசியில் கேது பகவானும் பெயர்ச்சி அடைகிறார்கள். 


ஒரு மனிதனின் இயல்புத் தன்மையைஇயற்கை குணத்தை அடியோடு மாற்றுவது,ஒருவரை ஆட்டம் காண வைப்பதெல்லாம் சாயா கிரகங்களான  இந்த ராகுவும் கேதுவும்தான். ஒரு மனிதனின் திறமையையும் சக்தியையும் மறைப்பது அல்லது மடை மாற்றம் செய்வதெல்லாம் இந்த சாயா கிரகங்களான ராகுவும் கேதுவும்தான். எந்த கிரகத்தோடு சேர்கின்றார்களோஎந்த கிரகத்தின் நட்சத்திரத்தில் அமர்கிறார்களோஎந்தெந்த கிரகங்களால்  பார்க்கப்படுகிறார்களோ அதற்குத் தகுந்தாற்போல் ஆனால்அதே நேரத்தில் தனக்கென விதிக்கப்பட்ட பலனை தவறாமல் தருவதில் இவர்களுக்கு ஈடு இணை யாரும் இல்லை. 

ராகு அனைத்து வசதிகளையும் கொண்ட அரண்மனை வாழ்க்கையையும் உல்லாசஉற்சாக சுக போகங்களையும் அதிக படிப்பில்லாவிட்டாலும் மேதைகள்கல்வியாளர்களுக்கு உரிய பதவியில் அமர வைப்பதும் கடல் கடந்து அயல்நாடு சென்று பெரும் தனம் சம்பாதிக்க வைப்பதும் படிப்ப றிவை விட பட்டறிவையும் தரக் கூடியவர். ராகு ஆதிக்கமுள்ளவர்கள் ஆட்சியாளர்களாக வந்தால் சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு ஒட்டு மொத்தமாக சமூகத்தை சீர்திருத்தக் கூடிய தலைவராக இருப்பார்கள். 

கேது நீதிநேர்மைநியாயத்திற்கெல்லாம் அதிபதியாக விளங்குகிறார். ஊரே சேர்ந்து ஒரு தவறை செய்தாலும் அதைத் தனித்து நின்று எதிர்க்கக்  கூடிய வல்லமையை தருபவர். தன்னைச் சார்ந்த இனமத கோட்பாடுகளை கடுமையாக பின்பற்ற வைப்பவர். விரதம்,வேள்வி என்றால் ஆகமத்தில்  சொல்லப்பட்டுள்ளபடி அனைத்து விதிகளையும் அனுசரிக்கும் மன உறுதியைத் தருபவர்.   

ராகுவால் ஏற்படப்போகும் பலன்கள் 

வியாபாரச் சின்னமான தராசுக் குறியீடுடைய சுக்கிரனின் துலாம் ராசியில் ராகு அமர்வதால் அயல்நாட்டு நிறுவனங்களால் பாரம்பரிய வியாபாரிகள் பாதிப்படைவார்கள். உள்நாட்டுப் பொருட்களின் உற்பத்தியும் விற்பனையும் குறையும். உணவு பதுக்கல் அதிகமாகும். விலைவாசி ஏற்றம் கடுமையாக இருக்கும். 7.6.2013 முதல்11.12.2013 வரை சனியும் ராகுவும் யுத்தம் செய்வதால் விமான விபத்துநில நடுக்கம்,வெள்ளப் பெருக்குவிபத்துகள்,  பூமிக்கு அடியிலிருந்து மீத்தேன்ஈத்தேன்ஆர்கான் போன்ற மந்த வாயுக்கள் வெளிப்பட்டு அதனால் பேரழிவுகள் ஏற்படும். முடி உதிர்வதையும்  நரைப்பதையும் தடுக்க புதிய மருந்து கண்டறியப்படும். முகச் சீரமைப்பு,இதய அறுவை சிகிச்சைபுற்று நோய் சிகிச்சைகள் நவீனமயமாகும். 

மலை  மற்றும் கடலோர நகரங்கள் பாதிப்படையும். தங்கத்தின் விலை ஜூன் 2013லிருந்து குறைவதற்கு வாய்ப்பிருக்கிறது. வளைகுடா நாடுகள் மீது அமெரிக்காவின் பார்வை மீண்டும் திரும்பும். சமூக எதிர் நடவடிக்கை கும்பல்கள் வித்தியாசமாக தாக்குதலை நடத்தும். போதை மருந்துதங்கம் கடத்தல் அதிகரிக்கும். வன்முறையாளர்களை தடுக்க கடும் சட்டம் வரும். நீதிபதிகள் பாதிக்கப்படுவார்கள். ஆளுபவர்கள் ஆட்சியை தக்க வைக்க கடுமையாக போராட வேண்டியிருக்கும். எதிர்த்தவர்கள் ஒன்று சேருவார்கள். மத்தியில் ஆட்சி மாறும். அனைத்துத் துறைகளிலும் பெண்கள் கை ஓங்கும். பெண் சாதனையாளர்கள் அதிகரிப்பார்கள். மணமுறிவு பெற்றவர்கள்விதவைப் பெண்கள்,ஊனமுற்றோர்கலப்பினத்தில் பிறந்தவர்கள் சமுதாயத்தில் சாதித் துக் காட்டுவதுடன் பெரிய பதவியிலும் அமர்வார்கள். 

பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரிக்கும். பெண் குழந்தை பிறப்பு குறையும். பாமர மக்கள் பயனடையும் வகையில் புது சட்ட திட்டங்கள் உருவாகும். ஆடம்பர வாழ்க்கைக்கு மக்கள் அடிமையாவார்கள். உலகப் பொருளாதார நிலை சற்றே உயரும். அயல்நாட்டில் வசிக்கும் இந்தி யர்கள் நம் நாட்டில் அதிக முதலீடு செய்வார்கள். ஐ.டி. நிறுவனங்கள் சரியும். வங்கிகளில் வாராக்கடன் வசூலிக்க சட்டம் கடுமையாகும். அரசு நிறுவ னங்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் பங்குகள் தனியாருக்கு தாரை வார்க்கப்படும். புதிய கனிமகரிம வளங்கள் கண்டுபிடிக்கப்படும். ராணுவத்தில்  புதிய ஏவுகணைகள் சேர்க்கப்படும். காடுகள் சேதமடையும். அயல்நாட்டைப் போலவே இந்தியாவிலும் பல நவீன பெரிய கட்டிடங்கள் உருவாகும். 

கம்ப்யூட்டர்ஆடியோவீடியோ சாதனங்களின் விலை விழும். செங்கல்சிமென்ட்மணல் போன்ற கட்டுமானப் பொருட்களின் விலை உயரும். பாலியல் கொடுமைகளுக்கு எதிராக சில கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்படும். பாலியல் சம்பந்தமான புதிய நோய்கள் உருவாகும். அதற்கான ம ருந்துகளும் கண்டறியப்படும். தென்னைமாவாழை,திராட்சை மற்றும் நெற்பயிர்களை நோய்கள் தாக்கும். அணைக்கட்டுகள் உடையும். ஷேர் மார்க்கெட்தங்கத்தின் விலையில் ஏற்ற-இறக்கம் இருக்கும். வெள்ளி விலை உயரும். தொடர்ந்து பெட்ரோல்டீசல்சமையல் எரிவாயுவின் தட்டுப்பாடு  உண்டாகும். முக்கிய தீவிரவாதிகள் பிடிபடுவார்கள். திரைத்துறை வளர்ச்சி அடையும். ஆனால் பிரபல திரைப்படக் கலைஞர்களுக்கு ஆபத்து உண்டா கும். பருவநிலை மாறி மழை பொழியும். 

கேதுவால் ஏற்படப் போகும் பலன்கள் 

கேதுபகவான் சுக்கிரனின் ஸ்திர வீடான ரிஷப ராசியை விட்டு விலகி சர வீடான மேஷ ராசியில் அமர்வதால் பூமி விலை உயரும் என்றாலும் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறையும். ரியல் எஸ்டேட் அதிபர்கள் பாதிப்படைவார்கள். நகரங்களை ஒட்டியுள்ள பகுதிகள் வளர்ச்சியடையும். புதிய நகரங்கள் உருவாக்கப்படும். பத்திரப் பதிவுத் துறையில் போலிகளை தடுக்க சட்டம் வரும். சந்தேகத்தால் சகோதரச் சண்டை அதிகரிக்கும். கூட்டுக் குடும் பங்கள் உடையும். மக்கள் மனதில் தன்னம்பிக்கை குறையும். நிம்மதி தேடி மக்கள் புண்ணியத் தலங்களுக்கு அதிகம் செல்வார்கள். ஆன்மிகத் தலைவர்கள் குற்றசாட்டுக்கு ஆளாவார்கள். பழைய கோயில்களில் உள்ள புதையல்கள் வெளிவரும். 

யோகாசனம்மூலிகை மருத்துவம் தழைக்கும். விபத் துகள் அதிகரிக்கும். காலபுருஷனின் முதல் வீட்டில் கேது அமர்வதால் ஒற்றைத் தலைவலிமூளைக்காய்ச்சல் அதிகரிக்கும். விநோதமான முக  அமைப்புள்ள குழந்தைகள் அதிகம் பிறக்கும். பழநிகொடைக்கானல் பகுதிகள் பாதிப்படையும். ஈகோசந்தேகத்தால் கணவன்-மனைவி பிரிவார்கள்.  விவாகரத்து அதிகரிக்கும். பூமி வெடிப்பால் நிலச்சரிவு அதிகரிக்கும். பாகப்பிரிவினைசொத்துத் தகராறு அதிகரிக்கும். 

மாணவர்களுக்கு தேர்வு முறை களில் புதிய திருத்தங்கள் கொண்டு வரப்படும். கல்வி நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு தரம் மேம்படுத்தப்படும். நவீன ரக வாகனங்கள்எலக்ட்ரானிக் சாதனங்களின் உற்பத்தி அதிகரிக்கும். உண்ணா விரதம்,கடையடைப்புவேலை நிறுத்தம் ஆங் காங்கே அதிகரிக்கும். போக்குவரத்து நெரிசலைத் தடுக்க புதிய மேம்பாலங்கள் கட்டப்படும். 

கணித்தவர்: ‘ஜோதிட ரத்னா’  கே.பி.வித்யாதரன்

பரிகாரம் 

அறிவுவிடாமுயற்சி,ஊக்கம்தன்மானம் மற்றும் உணர்ச்சி கிரகமான செவ்வாயின் மேஷ வீட்டில் கேது அமர்வதால் சாதிமதம் தாண்டிநம் தாய் நாடு மற்றும் தாய்மொழியின் வளர்ச்சிக்காக பாடுபடுவோம். கனவுகற்பனைஉணவுஉடை,உல்லாசங்களுக்குரிய கிரகமான சுக்கிரனின் துலாம்  ராசியில் ராகு அமர்வதால் நவீன உடைகளை தவிர்த்து நம் நாட்டில் உற்பத்தியாகும் பாரம்பரிய உடைகளை அணிவதுடன் ரசாயன கலவை மிகுந்த உணவுகளை தவிர்த்து இயற்கையான பாரம்பரிய உணவுகளை உண்போம்.

No comments:

Post a Comment