Translate

Saturday, 14 May 2011

காங்கிரசின் தோல்வி தமிழினத்தின் வெற்றி –சீமான்

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் விரோத திமுக-காங்கிரசுக் கூட்டணியை படுதோல்வியடைந்துள்ளது.பணபலம், அதிகார பலம், இவற்றிற்கு பணியமாட்டோம் வாக்கு என்ற ஆயுதத்தால் அவற்றை வீழ்த்துவோம் என்று மெய்ப்பித்த எம் தமிழ்ச் சொந்தங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
 
வரலாறு காணாத வகையில் ஊழல்,வன்முறை,குடும்ப ஆதிக்கம்,அராஜகம்,மணற்கொள்ளை, திரைத்துறையில் ஏகபோகம்,நிர்வாகச் சீர்கேடு, இனத் துரோகம்ஆகியவற்றில் மலைக்கத்தகும் மலையாய் எழுந்து நின்றது காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சி.அந்த மலையை சுக்குசுக்காய் உடைத்து தரை மட்டமாக்கியிருக்கிறார்கள் தமிழர்கள்.

சிறீலங்கா "கிறிக்கற்" அணியை புறக்கணிக்கக் கோரி இன்று லண்டனில் தமிழ் இளையோர் அமைப்பினால் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்!


லண்டன் வந்துள்ள சிறீலங்கா "கிறிக்கற்அணியை புறக்கணிக்கக் கோரியும்தமிழர்களைகொன்றுகுவித்து மனிதமே அஞ்சும் அளவிற்கு இனப்படுகொலையை புரிந்த சிறீலங்கா அரசைதண்டிக்கக் கோரியும் தமிழ் இளையோர் அமைப்பினரால் ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது.

இன்று காலை 10 மணி முதல் லண்டனில் உள்ள Gatting Way ( off Park Road), UB8 1NR எனும் முகவரியில் அமைந்துள்ள Uxbridge Cricket Ground மைதானத்தில் நடைபெற்ற துடுப்பாட்டப்போட்டியில் கலந்துகொண்ட சிறீலங்கா துடுப்பாட்ட அணிக்கு எதிர்ப்பு தெரிவித்தே மைதானத்தின்முன்புறமாக உள்ள பிரதான வீதியில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.