நாம் ஐக்கியமாக வெற்றியாக எமது வேலைத் திட்டங்களை புலம்பெயர்வாழ் நாடுகளில் செய்வதற்கு உண்மை, யதார்த்தம் ஆகிய இரண்டு விடயங்களும் முக்கியமானவை. இலங்கைத் தமிழ் மக்கள் பல வெற்றிகளையும் தோல்விகளையும் சாத்வீகம், ஆயுதப் போராட்டம் மூலம் சந்தித்தவர்கள். ஆனால் 2009 மே மாதத்துடன், அதாவது முள்ளிவாய்க்காலுடன் யாவும் ஓர் மந்த நிலைக்கு வந்துள்ளன.
அரசியல் ரீதியாக பல தடவைகள் இலங்கைத் தமிழர்கள் ஆட்சியாளனால் ஏமாற்றப்பட்ட காரணத்தினால் நாங்கள் எமது நண்பர்கள் உறவினர்கள் உட்பட எவரையும் நம்புவதற்கு தயாராகவில்லை என்பதே யதார்த்தம். இதுவே இன்று எமது தடுமாற்றத்திற்குரிய விடயம்.
இதனால் எம்மிடையே எந்தவித கூட்டு முயற்சி என்ற கதைக்கும் இடமில்லை. இந்தப் பலவீனத்தையே இலங்கையின் ஆட்சியாளர்கள் மிக நீண்ட காலமாக தமக்கு சாதகமாக்குகிறார்கள்.
இது மட்டுமல்லாது வேறு பல காரணங்களும் இன்று எமது மந்த நிலைக்கு காரணிகளாகவுள்ளன.
மிக நீண்டகாலமாக எமது அரசியல் தலைமைகள் எந்தவித நீண்ட அரசியல் சிந்தனைகளையும் கொண்டிருக்கவில்லை. இலங்கை ஆட்சியாளர் எவரிடத்திலும் எமக்கு அரசியல் நண்பர்களோ எதிரிகளோ இருந்திருக்கவில்லை.
தெற்கிலுள்ள அரசியல் சார்பற்ற மக்களிடையே நாம் ஒரு பொழுதும் எந்த தொடர்பையும் பேணவில்லை. ஒரு சில வர்த்தகர்கள் தமது சுய தேவையின் அடிப்படையில் சில நட்பை பேணினார்கள். ஆனால் அந்த நட்பு எமது தேசியத்திற்கு எந்தவிதத்திலும் உதவவில்லை.
தெற்கில் உள்ள அரசியல் சார்பற்ற மக்களிடையே நாம் கலாசாரம் சமயம் மனிதாபிமான ரீதியாக தொடர்பை பேணியிருக்க வேண்டும். உலகில் தென் சூடான் உட்பட வெற்றியடைந்த விடுதலை போராட்டங்கள் யாவும் இதையே எமக்கு உணர்ந்துகின்றன.
எம்மிடையே “கொடுத்து வாங்குதல்' விட்டுக் கொடுத்தல் (Give and take policy) என்ற கதைக்கே இடமில்லை.
சரித்திர ரீதியாக நாம் “துரோகிகள்' எனப்படுபவர்கள் வளருவதற்கு வழிவகுத்தோமே அல்லாமல் இப்படி பெயர் சூட்டப்பட்டவர்கள் தமது கருத்தை மாற்றி எம்முடன் இணைந்து எமது வேலைத் திட்டங்களில் ஈடுபட நாம் வழி வகுக்கவில்லை. இதனால் இவர்கள் இலங்கை ஆட்சியாளர்களை காப்பாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றார்கள்.
சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் பின்னர் உலகில் பல விடுதலைப் போராட்டங்கள் வெற்றியீட்டின. ஆனால் எமது விடுதலைப் போராட்டமோ எந்தவித நியாயமான வெற்றிகளும் இல்லாது சோகக் கதைகளுடன் தொடர் கதையானது. சுருக்கமாக கூறுவதானால் நாம் பல அரிய சந்தர்ப்பங்களை தவற விட்டுள்ளோம் என்பதை யாரும் மறுக்க முடியாது.
விளக்கமாக கூறுவதனால் நோயும் நாமே நோய்க்கு வைத்தியரும் நாமே சத்திர சிகிச்சையாளரும் நாமே மருந்தும் நாமே. இப்படியாகவே எமது அரசியல் விடுதலைப் போராட்டம் நகருகிறது. இவ்வளவு நடந்தும் இன்றும் எம்மில் சிலர் தமது தலைமைத்துவத்தை மற்றைய சகாக்களுடனோ அல்லது நம்பிக்கையான நண்பர்களுடனோ பகிர்ந்துகொள்ள தாயாராவில்லை. இப்படியாக பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
நாம் எதைச் செய்ய முடியும்?
முன்பு தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்து வந்த பெரும்பான்மையான புலம்பெயர் வாழ் மக்கள் இன்று பல குழுக்களாக பிரித்துள்ளதனால் இலங்கை ஆட்சியாளரின் வேலைத் திட்டங்களை மிகவும் இலகுவாக்கியுள்ளனர்.
இவற்றில் பலர் பழைய சிந்தனையுடனான புதிய அணுகுறைக்கும் சிலர் பழைய சிந்தனையுடன் மட்டும் வேறு சிலர் ஒட்டு மொத்தமாக புதிய சிந்தனையுடனான புதிய அணுகுறையுடன் உள்ளனர்.
இதில் பழைய சிந்தனையுடனான புதிய அணுகுறையை நாடுவதனால் பல நன்மைகளையும் ஆதரவுகளையும் அடைய முடியும் ஆனால் பழைய சிந்தனையுடன் மட்டுமோ அல்லது புதிய சிந்தனையுடனான புதிய அணுகுறையுடன் இருப்பதனால் எவ்வளவு அபாயங்கள் உள்ளன என்பதை ஒவ்வொருவரும் அனுபவரீதியாக அறிவார்கள்
புதிய சிந்தனையுடனான புதிய அணுகுமுறையை மீண்டும் ஓர் புதிய அத்தியாயத்தின் அடிப்படையிலிருந்து ஆரம்பிப்பது மட்டுமல்லாது இதனால் பல இன்னல்கள் உருவாகின்றனா. இதே போல் பழைய சிந்தனையில் மட்டும் உள்ளோர் அவர்களது சிந்தனையை சர்வதேச ஆதரவை பெறக்கூடிய வகையில் மாற்றிக் கொள்ளாத விடத்து இது என்றும் ஓர் மந்த நிலையிலேயே காணப்படும்.
எமது வரலாற்றை நாம் ஆராயுமிடத்து எமது அரசியல் தவறுகளை இலங்கையின் ஆட்சியாளர்கள் தமக்குச் சாதகமாக பாவிப்பதை நாம் அவதானிக்க முடிகிறது. இதனால் நாம் அடைந்த பின்னடைவுகள் என்பன சொல்லி அடங்காது.
புதிய அரசியல் கட்சிகளையும் புதிய அமைப்புகளையும் ஆரம்பிக்கும் எவரும் எமது சரித்திரத்தையோ இலங்கையின் ஆட்சியாளர்களின் கடந்தகால நடவடிக்கைகளைப் புரிந்தவர்களாகவோ தெரியவில்லை.
புதிய அரசியல் கட்சிகளையும் புதிய அமைப்புகளையும் ஆரம்பிக்கும் எவரும் எமது சரித்திரத்தையோ இலங்கையின் ஆட்சியாளர்களின் கடந்தகால நடவடிக்கைகளைப் புரிந்தவர்களாகவோ தெரியவில்லை.
புலம்பெயர் ஊடகங்களும் அமைப்புகளும்
இலங்கைத் தமிழர்களினால் புலம்பெயர் தேசங்களில் நடத்தப்படும் சில ஆங்கில தமிழ் ஊடகங்கள் உண்மைகளை யதார்த்தங்களை ஏற்க மறுக்கின்றன.
இவர்கள் பல உண்மை விடயங்களை சுயதணிக்கை செய்வது மட்டுமல்லாது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் கூறப்பட்ட விடயங்களை மக்களிடமிருந்து மறைக்கிறார்கள். இந்த ஊடகங்கள் மக்களை ஓர் மாயையில் வாழ வழிவகுப்பது மட்டுமல்லாது அழிவுப் பாதையில் இட்டுச் செல்கின்றன.
இந்தத் திரிபு ஊடகங்கள் நிலத்தில் வாழ்ந்து கொண்டு துணிகரமாக தமது செய்திகளையும் ஆரூடங்கைளயும் வெளியிடுமேயானால் இவர்கள் நிச்சயம் துணிகரத்திற்கும் தலைமைத்துவத்திற்கும் உரிய பரிசுகளை பெறுவதற்கு தகுதியுடையவர்களவார்கள். ஆனால் புலம் பெயர் நாடுகளின் ஜனநாயகத்தின் திரை மறைவிலிருந்து கொண்டு நிலத்தில் வாழும் மக்களை தற்கொலை செய்யவோ அல்லது படுகொலைகளை சந்திக்கும் நிலைமைகளை உருவாக்குவதோ நிச்சயம் பத்திரிகை தர்மம் அல்ல. 2009ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன் போராளிகள் மக்களுடன் வாழ்ந்து கொண்டே போராட்டத்தை நடத்தியது மட்டுமல்லாது தமது உயிர்களையும் அர்ப்பணித்து கொண்டார்கள்.
இப்படியாக சில ஊடகங்களும் அமைப்புகளும் எப்படியாக சில செய்திகளை திரிபுபடுத்தி வெளியிடுகிறார்கள் என்பதற்கு மிக அண்மைக்கால இரு உதாரணங்களை இங்கு தருகிறேன்.
இப்படியாக சில ஊடகங்களும் அமைப்புகளும் எப்படியாக சில செய்திகளை திரிபுபடுத்தி வெளியிடுகிறார்கள் என்பதற்கு மிக அண்மைக்கால இரு உதாரணங்களை இங்கு தருகிறேன்.
மனு யாரிடம் கையளிக்கப்பட்டது?
ஐ.நா. மனித உரிமை சபையின் 19 ஆவது கூட்டத் தொடர் வேளையில் சிலர் ஒரு குழுவாக சென்று ஐ. நா. மனித உரிமை ஆணையாளன் காரியாலயத்தில் கடமையாற்றும் ஓர் உத்தியோகத்தரிடம் தமது மனுவை கையளித்ததை ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் திருமதி நவநீதம்பிள்ளையிடம் மனு கையளிக்கப்பட்டதாக பொய்ச் செய்தி வெளியிட்டு மக்களை ஏமாற்றுவது ஏற்க முடியாத விடயம்.
இது போல் சிலர் ஐ.நா. கட்டிடத்தில் புகைப்படங்களை தமக்கு வேண்டிய கோணங்களில் நின்று எடுத்து தாம் மனித உரிமைச் சபையின் 19 ஆவது கூட்டத் தொடரில் முக்கிய செயற்பாட்டாளர்கள் போல் மக்களுக்கு காண்பிப்பதற்காக ஏமாற்றுச் செய்திகளை வெளியிடுவது ஏற்க முடியாத விடயமாகும்.
இப்படியாக சில அமைப்புகள் நடந்து கொள்வதும் ஊடகங்கள் செய்திகளை திரிபுபடுத்தி வெளியிடுவதும் மக்களுக்கு இவர்கள் இருவரும் செய்யும் துரோகமாகும்.
“சுயநிர்ணயம்' “தேசியம்' ஆகிய சொற்பதங்கள் தமிழ் மக்களின் தனிச் சொத்தாக சிலர் எண்ணுவது மிகத் தவறு. இவை சகல இனங்களுக்கும் உரியவை. ஆகையால் தினம் இச் சொற்பதங்களை தவறான முறையிலும் தேவையற்ற முறையிலும் கூறி மக்களை ஏமாற்ற முயற்சிப்பது பொதுநலம் அல்லா சுயநலமே.
இது போல் சிலர் ஐ.நா. கட்டிடத்தில் புகைப்படங்களை தமக்கு வேண்டிய கோணங்களில் நின்று எடுத்து தாம் மனித உரிமைச் சபையின் 19 ஆவது கூட்டத் தொடரில் முக்கிய செயற்பாட்டாளர்கள் போல் மக்களுக்கு காண்பிப்பதற்காக ஏமாற்றுச் செய்திகளை வெளியிடுவது ஏற்க முடியாத விடயமாகும்.
இப்படியாக சில அமைப்புகள் நடந்து கொள்வதும் ஊடகங்கள் செய்திகளை திரிபுபடுத்தி வெளியிடுவதும் மக்களுக்கு இவர்கள் இருவரும் செய்யும் துரோகமாகும்.
“சுயநிர்ணயம்' “தேசியம்' ஆகிய சொற்பதங்கள் தமிழ் மக்களின் தனிச் சொத்தாக சிலர் எண்ணுவது மிகத் தவறு. இவை சகல இனங்களுக்கும் உரியவை. ஆகையால் தினம் இச் சொற்பதங்களை தவறான முறையிலும் தேவையற்ற முறையிலும் கூறி மக்களை ஏமாற்ற முயற்சிப்பது பொதுநலம் அல்லா சுயநலமே.
இப்படியாக நாம் தொடர முடியுமா?
பல நாடுகளின் கூட்டான ஒருங்கிணைப்பு தெற்கிலிருந்து உயிரை பணயம் வைத்து மனித உரிமைகளுக்காக செயற்படுவோர் உட்பட பல மனித உரிமை ஆர்வலர்களின் பங்கு சர்வதேச அமைப்புகளுடன் இணைந்த நீண்ட அனுபவம் சரியான அணுகுமுறையை கொண்ட புலம்பெயர்வாழ் தமிழ் அமைப்புகளின் ஒத்தாசையுடன் இலங்கை அரசு பலமுறை சர்வதேச மட்டத்தில் பல தோல்விகளைத் தழுவிக் கொண்டது. உதாரணமாக ஐ.நா. மனித உரிமை சபைக்கான தேர்தலில் தோல்வி ஐரோப்பிய யூனியனால் ஜி.எஸ்.பி. பிளஸ் வாபஸ் பெறப்பட்டமை, ஐ. நா. செயலாளரினால் நியமிக்கப்பட்ட மூவர் ஆலோசனைக் குழு ஜனதிபதி ராஜபக்ஷவின் பிரித்தானியா தோல்வி விஜயம் இலங்கை தூதுவரலாயங்களிலிருந்து கடமையாற்றிய போர்க்குற்றம் சுமத்தப்பட்ட இராணுவ உத்தியோகத்தர்கள் வாபஸ் பெறப்பட்டமை ஐ. நா. மனித உரிமை சபையின் 19 ஆவது கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை போன்று பல விடயங்கள் அடங்கும்.
கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி உலக வல்லரசான அமெரிக்கா பிராந்திய வல்லாரசுக்களான இந்தியா ஐரோப்பிய யூனியன் உட்பட வேறு பல நாடுகளும் இணைந்து நாம் நீதி சமாதானம் சுயகௌரவத்துடன் வாழ்வதற்கான ஓர் அடிக்கல்லை நாட்டியுள்ளனர். இதை சகலராலும் புரிந்து கொள்ள முடியாது. விசேடமாக சகலதையும் தீமையானதாக நினைப்பவர்களுக்கு இந்த அடிக்கல்லின் ஆழத்தை நிச்சயம் அறிய முடியாது.
நாம் ஏற்கனவே பல சந்தர்ப்பங்களை தவறவிட்டதனால் 2 இலட்சம் மக்கள் தமது உயிர்களை அர்ப்பணித்துள்ளதுடன் பல நுற்றுக்கணக்கான மக்கள் தமது வாழ்வு சொத்துக்கள் மரியாதை மானம் போன்றவற்றை அர்ப்பணித்து சொல்லொணாத் துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
தாயகத்தில் நடைபெறும் உண்மைகள்
புலம்பெயர் தேசங்களில் நடத்தப்படும் சில ஆங்கில தமிழ் ஊடகங்கள் தாயகத்தில் நடைபெறும் சில உண்மைகளை ஏற்றுக்கொண்ட பொழுதிலும் அதற்கான தீர்வை முன்வைக்க மறுக்கின்றன.
உதாரணமாக நிலத்தில் தினம் நடைபெறும் சிங்களக் குடியேற்றம் பௌத்த சிங்கள இராணுவ மயப்படுத்தல் ஆகியவற்றுடன் அங்கு நடைபெறும் கொலை கொள்ளை பாலியல் வன்முறைகள் போன்றவற்றை பிரசுரிக்கின்றன. ஆனால் எப்படியாக இவற்றை தடுத்து நிறுத்த முடியும் என்பதற்கு இவர்கள் எதையும் முன்னொழிவதில்லை. ஆனால் விளங்குகிறதோ இல்லையோ சுயநிர்ணய உரிமை தேசியமென புலம்பெயர் தேசங்களிலிருந்து முழங்குகிறார்கள்.
புலம்பெயர் தேசங்களில் சில ஊடகங்களினதும் அமைப்புகளின் போக்குகளின் பிரகாரம் இன்னும் சில வருடங்களில் இலங்கைத் தமிழினம் என்பது ஆவணத்திலும் புலம்பெயர் தேசங்களில் மட்டுமே வாழ முடியுமே தவிர எமது தாயக மண்ணில் வாழ முடியாத நிலையையே உருவாகிறது. சுருக்கமாக கூறுவதானால் தாம் புலம்பெயர்வாழ் தேசங்களில் பாதுகாப்பாக வாழ்ந்து கொண்டு தாயகத்தில் வாழும் மக்களை பகடக் காய்களாக வைத்து சூதாடுகிறர்கள். இந்த நபர்கள் தாயகத்தில் பல கஷ்டங்களுடன் வாழும் மக்களுடன் வாழ்ந்து கொண்டு இவ்வீர வசனங்களை கொக்கரித்தால் யாவரும் நிச்சயம் வரவேற்பார்கள்.
யதார்த்தவாதிகள் என்றும் பொது நன்மைகள் கருதியே செயற்படுவார்களென்றும் யாவற்றையும் தீமையாக கருதுபவர்கள் சுயநலத்துடனேயே செயல்படுவார்களெனவும் சில தத்துவஞானிகள் கூறியுள்ளார்கள்.
ஆகையால் பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் புலம்பெயர்வாழ் மக்கள் யாவரும் காலத்தை கடத்தாது உண்மை யாதார்த்தத்தின் அடிப்படையில் வேற்றுமையில் ஒற்றுமை காணவேண்டும். “சுவரிருந்தால் தான் சித்திரம் வரையலாம் என்பது முதுமொழி“. எமது மக்கள் எமது நிலம் இருந்தால் தான் நாம் எந்த அரசியல் இலக்கையும் அடைய முயற்சி செய்ய முடியும். ஆகையால் நாம் யாவரும் முதலில் ஒன்றுபட்டு மக்களையும் எமது நிலத்தையும் காப்பாற்ற வேண்டும்.
நாம் எமது இலக்குகளை சர்வதேசத்தின் துணையுடன் நகர்த்த வேண்டும். இதற்காக எமது வழிகாட்டிகள் கூறியது போன்று பாதைகளை மாற்றி விரும்பினால் தனித்தும் நின்று எமது இலக்கை அடைய முயற்சி செய்ய வேண்டும்.
தாயகத்தில் வாழும் மக்களை மேலும் துன்பங்களை அனுபவிக்கவிடாது சர்வதேசத்தின் உதவியுடன் ஓர் இடைகால தீர்வு ஊடாக நாம் ஓர் நிரந்தரத் தீர்வை அடைய முடியும். இது தான் யதார்த்தம். இதற்கு தான் சர்வதேச ஆதரவு உண்டு.
ஆகையால் நாம் வேற்றுமையில் ஒற்றுமையுடன் எமது தாயகத்தையும் எமது மக்களையும் காப்பாற்ற வேண்டும். இவற்றை யாரும் தமது வங்குரோட்டு அரசியல் லாபத்திற்கோ திரிபுபடுத்தும் ஊடகத்திற்கு தீனி போடுவதற்காகவோ ஆய்வாளர்களென தம்மை காண்பிப்பவர்களின் ஆக்கத்திற்காகவோ தீமையாக பார்ப்பது யதார்த்தம் அல்ல
எதிர்கால வேலை திட்டங்கள்
நாம் எமது எதிர்கால வேலை திட்டங்களை இரண்டு பிரிவாகச் செய்ய முடியும். முதலாவது ராஜதந்திர சர்வதேச ரீதியாகவும்இ இரண்டாவது புலம்பெயர்வாழ் தமிழ் மக்களுடனும் உலகத் தமிழர்களுடனும் யதார்த்தத்துடனும் உண்மையுடனும் வேலை செய்ய வேண்டும்.
இவற்றை யாரும் தமது உணர்வான அரசியலிற்காகவோ அல்லது தம்மை சமுகத்தில் ஒரு பெரிய மனிதராக காண்பிப்பதற்காகவோ தவறான அணுகுமுறையிலிட்டுச் செல்வார்களெயானால் மீண்டும் படுகொலைகளையும் அழிவுகளையும் தான் நாம் சந்திக்க நேடும். இது தான் எமது அரசியல் விடுதலைப் போராட்டத்தின் முக்கிய நோக்கமா?
எமது அவதானிப்பில் இலங்கையின் பிரசாரக்காரர்கள் தமது சர்வதேச பிரசார வேலைகளில் இடம் பெயர்ந்த 3 லட்சம் பேரை மீள் குடியேற்றம் செய்ததாகவும் முன்னாள் போராளிகள் 13 ஆயிரம் பேரை விடுதலை செய்ததாகவும் அமளியாக கூறிவருகின்றனர். ஆனால் இவர்களால் இராணுவத்திடம் சரணடைந்த முன்னாள் போரளிகள் பற்றியோ அல்லது பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டோ காணமல் போனோர் பற்றியோ பதில் கூற முடியாது தவிக்கின்றனர். ஆகையால் நாம் இவ்விடயங்களில் ஒருங்கிணைந்த ஓர் வேலை திட்டத்தை உலக வல்லரசு பிராந்திய வல்லரசுகளுடன் மேற்கொள்ள வேண்டும்.
இலங்கை தீவில் காலனித்துவ ஆட்சியாளரின் வருகைக்கு முன்னரே எமது தமிழீழ அரசு அதாவது தமிழர் தாயாக பூமி இருந்தது என்பதை வரலாறுகள் ஏற்கின்றன. எம்மில் சிலர், சுதந்திரத்தின் பின்னர் அதாவது 1948ம் ஆண்டின் பின்னர் தான் இலங்கை தீவில் எமக்கு அரசியல் பிரச்சனைகள் இருந்ததாக கருதுகின்றனர். இவை முற்றிலும் தவறான கருத்து.
1927-1931 டொனமூர் ஆணைக்குழு, 1947ல் சோல்பரி ஆணைக்குழு யாவும் தமிழீழ மக்களின் அரசியல் அவிலாசைகளை நிராகரித்துள்ளன. அத்துடன் 1948 ன் பின்னர் ஏற்றபட்ட அரசியல் யாப்பின் மாற்றங்கள் தமிழீழ மக்களின் அரசியல் உரிமைகளுக்கு எந்தவித அந்தஸ்த்தை வழங்கவில்லை.
ஆனால் உலகளாவிய ரீதியில், தமிழீழ மக்களில் ஒரு சிறு குழுவினர் மட்டுமே சிங்கள பெரும்பான்மை இனத்தவர்களின் ஆட்சியை ஏற்க மறுப்பதாக இலங்கை அரசு பிரச்சாரம் செய்து வருகின்றது. இவ் விடயங்கள் யாவற்றையும் சர்வதேச ராஜதந்திர ரீதியாக வல்லாசுக்கள,; சர்வதேச அமைப்புக்கள், முக்கிய புள்ளிகளின் உதவியுடன் நாம் உண்மை சரித்திரங்களை உலக நாடுகளுக்கு தெரிவிக்க வேண்டும்.
ஐக்கியம்
தெற்கில் உள்ள அரசியல் சார்பற்ற மக்களிடையே நாம் கலாசாரம் சமயம் மனிதாபிமான ரீதியான தொடர்பை பேணுவதற்கு இன்றும் காலதாமதமாகிவிடவில்லை. இந்த அடிப்படையிலேயே இலங்கைதீவில் இரு தேசிய இனங்களான தமிழர்களும் சிங்களவர்களும் அமைதியான சமாதானத்துடன் வாழ முடியும். அத்துடன் தமிழ் பேசும் இஸ்லாமிய சகோதரர்களுடனும் நாம் இணைந்து செயற்பட வேண்டும்.
உலகில் தமது சுயநிர்ணய உரிமைக்கு போராடும் மக்களிடையே இலங்கைத் தமிழ் மக்களே பெரும் தொகையான எண்ணிக்கையில் சர்வதேச ரீதியாக புலம் பெயர்ந்து வாழுகின்றனர்.
ஆனால் எமது இறந்தகால அனுபவத்தின் அடிப்படையில் நாம் இனியும் தனித்து நின்று போராட முடியாது. ஆகையால் இன்று எமக்கு பச்சை விளக்கைக் காட்டும் உலக பிராந்திய வல்லரசுகளான இந்தியாஇ அமெரிக்கா ஆகியவற்றின் உதவியுடன் எமது அரசியல் உரிமைகளை வென்றெடுக்க நாம் தயக்கம் கொள்ளக் கூடாது.
அப்படியாக தயக்கம் கொள்பவர்கள் எதிர்காலத்தில் நிலத்தில் வாழும் மக்களை மேலும் படுகொலைகள் இன்னல்களுக்கு ஆளாக்காது எப்படி எப்படியாக எமது உமைகளையோ சுதந்திரத்தையோ பெற்றுத் தருவார்கள் என்பதை யதார்த்த ரிதியாக மக்களுக்கு விளக்க வேண்டும்.
ஆகையால் மக்களையும் தாயகத்தையும் காப்பாதற்காக எமது உண்மையான எண்ணங்கள் சிந்தனைகள் நோக்கங்களை எந்த தயக்கமின்றி எமக்கு உதவ முன்வந்துள்ள உலக பிராந்திய வல்லரசுகளுடன் மனம் திறந்து உரையாட வேண்டும்.
இன்று எமக்குள் உள்ள வெறுப்புகள் பகைகள் தொடர்ந்தும் எமது தேசியத்தை தினம் நாசமாக்கிக் கொண்டிருக்கின்றன. இது எங்கள் யாருடைய உண்மை நோக்கமாகவும் இருக்க முடியாது. நாளுக்கு நாள் சந்ததி சந்ததியாக நாம் யாவரும் தெரிந்தோ தெரியாமல் எமது தேசிய இனத்தை அழிவுப்பாதையில் இட்டுச் செல்கிறோம். நாம் இவற்றை ஓர் முடிவுக்கு கொண்டுவர வேண்டும். தற்பொழுது நாம் யாவற்றையும் பறிகொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறோம். நாம் யாவரும் எமது கண்களை திறந்து எமது மொழி கலை கலாசாரம் தேசியம் தாயகம் இன்று என்ன நிலையில் இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். நாம் யாவரும் எமது தவறுகளை ஒத்துக் கொள்ள வேண்டும். நாம் இறந்த காலத்தை நிச்சயம் மாற்ற முடியாது. ஆனால் நாம் யாவரும் வேற்றுமையில் ஒற்றுமை காணும் கட்டத்தில் நிச்சயம் எதிர்காலத்தை மாற்ற முடியும். தயவு செய்து இனியும் காலம் தாமதிக்காதுஇ வேற்றுமையில் ஒற்றுமை கண்டு எமது தேசியம் தாயகம் ஆகியவற்றை காப்பாற்ற முன் வாருங்கள்.
முற்றும்.
No comments:
Post a Comment