Translate

Sunday 30 December 2012

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் தொகை 4 லட்சத்தை தாண்டியது


parappukadanthaanmannar%203.jpg
நாட்டின் பல பாகங்களிலும் பெய்து வரும் மழையுடன் கூடிய காலநிலையால் இதுவரை 109672 குடும்பங்களைச் சேர்ந்த 400003 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

40 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதோடு 7 பேர் தொடர்ந்தும் காணாமல் போயுள்ளனர். 

அனுராதபுரத்தில் கடமையாற்றும் மருத்துவர் சிவசங்கர் இராணுவத்தால் கைது


அனுராதபுரத்தில் சுகாதார வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மருத்துவர் இ.சிவசங்கர் நேற்றுக் கைது செய்யப்பட்டு கொக்காவில் இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் பற்றித் தெரியவருவதாவது:

13 ஐ நீக்கினால் மு.கா.எதிர்க்கும் அரசுக்கு அளித்துவரும் ஆதரவும் மீள்பரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்கிறார் ஜெமீல்


அரசமைப்புக்கான பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை  நீக்கினால் கடுமையாக எதிர்ப்போம். அத்தகைய முயற்சிகள் முற்றாக முறியடிக்கப்பட வேண்டும். இவ்வாறு கிழக்கு மாகாணசபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.
23 ஆம் பிரிவு விவசாயிகள் அபிவிருத்தி சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கத்தின் பதினோராவது வருடாந்த பொதுச்சபைக் கூட்டம் கடந்த புதன்கிழமை நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் பிரதம பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:

ரங்கன் போய்விட்டான்


ரங்கன் போய்விட்டான் அன்று அதிகாலை வந்த தொலைபேசி அழைப்பு.........ச.ச.முத்து ஐயா ...

27ம் திகதி அதிகாலை. விடிந்தும் விடியாத ஒரு இருள்காலையாத பொழுதில் தொலைபேசி அழைப்பொன்று. இப்படியான பொழுதில் வருவது இரண்டு அழைப்புகள்தான்.உயிரான உறவின் அழைப்பு.அது இல்லை என்றால் உறவொன்றின் உயிர்பிரிந்த அழைப்பு. மறுமுனையில் நண்பனொருவன். தொலைபேசிக்குள்ளாக வரப்போகும் செய்திக்காக காதுகளையும் இதயத்தையும் தயார்செய்படியே கேட்டபோதுதான் அவன்சொன்னான் 'ரங்கன் இப்ப கொஞ்சநேரத்துக்கு முந்தி போய்விட்டானாம்'.வலிக்க வலிக்க மரணங்களை பாத்தும் கேட்டும் மரத்துப்போனதாக நம்பிக்கொண்டிருந்த மனது உடையத்தொடங்கியது. ரங்கன் எத்தகைய உறவாக இருந்தான் என்பதைவிட அவன் தான் நம்பிய இலட்சியத்தின் மீதான நம்பிக்கையையும் அந்த இலட்சியத்துக்காக உறுதியுடன் வழிநடாத்தும் தலைமைமீதான நம்பிக்கையையும் இறுதி வைத்திருந்தானே,அதுதான் அவனுடனான உறவாக இருந்திருக்கும்.

செம்மொழி விருது நிகழ்ச்சி இந்தியில் நடந்தது தொடர்பான என் கண்டனக்கருத்துரை ( தமிழக அரசியல் இதழில் ) : தமிழர்க்கு விருது தமிழில் அல்ல


தமிழக அரசியல்  02.01.2013 ஆம் நாளிட்டு இன்று வந்த  இதழில் செம்மொழி விருதளிப்பு நிகழ்ச்சி தமிழில் நடத்தாமை பற்றிய  என் கருத்துரை வந்துள்ளது.  தமிழர்க்கு விருது! - தமிழில் அல்ல ..! டெல்லியில் அரங்கேறிய அவலம் என்னும் தலைப்பில் இதழின் பக்கங்கள்26-27 இல் வந்ததை இத்துடன் இணைத்துள்ளேன். செம்மொழி நிறுவனத்திற்கும் குடியரசுத்தலைவருக்கும் எடுத்து வரும் நிகழ்வுகளைத்  தமிழில் நடத்துமாறு அஞ்சலட்டை விடுக்கலாம். அன்புடன்
இலக்குவனார் திருவள்ளுவன்...................... read more

தயவு செய்து வண்டியில் செல்லும் போது கைபேசியை உபயோகிக்காதீர்கள்.


நண்பர்களே தயவு செய்து வண்டியில் செல்லும் போது கைபேசியை உபயோகிக்காதீர்கள்.... சிறு சந்தோசத்திற்க்காக உயிரை பணயம் வைக்காதீர்கள்..... வாகணத்தில் செல்லும்போது பேஸ்புக் உபயோகித்த ஒருவரின் நிலைமையை பாருங்கள்....இனி இது போல் கோர விபத்து நடைபெறாமல் இருக்க உங்களது நட்பு வட்டாரங்களுக்கும் இதை சேர் செய்யுங்கள்.... 
நண்பர்களே தயவு செய்து வண்டியில் செல்லும் போது கைபேசியை உபயோகிக்காதீர்கள்.... சிறு சந்தோசத்திற்க்காக உயிரை பணயம் வைக்காதீர்கள்..... வாகணத்தில் செல்லும்போது பேஸ்புக் உபயோகித்த ஒருவரின் நிலைமையை பாருங்கள்....இனி இது போல் கோர விபத்து நடைபெறாமல் இருக்க உங்களது நட்பு வட்டாரங்களுக்கும் இதை சேர் செய்யுங்கள்....

கம்பளையில் தமிழ் வர்த்தகர் கடத்தல் மக்கள் கண்காணிப்பு குழுவிடம் முறைப்பாடு: - மனோ கணேசன்

News Service
கம்பளை நகரில் கோவிந்தசாமி அருணாசலம் பிரபாகரன் என்ற 56 வயது தமிழ் வர்த்தகர் நேற்று இரவு கடத்தப்பட்டுள்ளார். அவர் பற்றிய தகவல்கள் கிடைக்காத நிலையில் குடும்பத்தவர்கள் மக்கள் கண்காணிப்பு குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளனர் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். இது பற்றி அவர் மேலும் கூறியதாவது,

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள்!

கடும் மழை காரணமாக வட பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, கிளி நொச்சி ஆகிய இடங்களில் சுமார் 20 ஆயிரம் குடும்பங்கள் தமது இல்லிடங்களை விட்டு வெளி யேறி நலன்புரி முகாம்களில் தங்கியுள்ளனர் என்ற தகவல் வேதனை தருவதாகும். போரினால் பாதிக்கப்பட்டு தற்காலிக வீடு களில் தஞ்சமடைந்த மக்களை இயற்கையும் பழிதீர்ப்பது கண்டு உள்ளம் பதைக்கிறது.

பிரபல சமூகத் தொண்டரும் தேசப்பற்றாளருமான திரு இராசையா நவநாயகம் அவர்கள் காலமானார்


பிரபல சமூகத் தொண்டரும் தேசப்பற்றாளருமான திரு இராசையா நவநாயகம் அவர்கள் 27.12.2012 அன்று அதிகாலை காலமானார்.

நவா அண்ணா என்று அன்போடு அழைக்கப்படும் இவர்இ தமிழ்த் தேசியத்தின் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்ததோடுஇ பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுடன் இணைந்து தமிழீழ விடுதலைப் போராட்டதின் அனைத்துச் செயற்பாடுகலிலும் முன்னின்று உழைத்து இன்று வரையும் உறுதியோடு குரல் கொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ். பல்கலை மாணவர்கள் புனர்வாழ்வு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளமை சட்டவிரோதம்: சரத் பொன்சேகா

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் புனர்வாழ்வு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளமை சட்டவிரோதம் எனவும், தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பாதுகாப்புச் செயலாளரும், குற்றப் புலனாய்வுப் பிரிவும் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்கள் என்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

புலிகள் தலைதூக்குகிறார்கள் என்ற அரசின் குற்றச்சாட்டில் எந்தவித உண்மையும் இல்லை: - ஆனந்தசங்கரி

News Service
தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இறுக்கமான உறவினைப் பேணுவதோடு,தமிழ் மக்களினதும், தமிழ் கட்சிகளினதும் ஒற்றுமைக்காக உழைப்பதற்காக உறுதிகொள்வதென்ற தீர்மானத்தினை எடுத்துக் கொள்ளவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்த சங்கரி உறுதியளித்துள்ளார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் வருடாந்த பொதுச்சபை கூட்டம் நேற்றுக் காலை 11 மணிக்கு யாழ். நாச்சிமார் கோவிலடியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் கெமருன் பங்கேற்ககூடாது: - பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்

News Service
இலங்கையில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள பொதுநலவாய தலைவர்களின் மாநாட்டை புறக்கணிக்குமாறு பிரித்தானிய பிரதமரை அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கோரியுள்ளார். Rochdale Simon Danczuk என்ற இந்த உறுப்பினர், பிரதமர் கெமருன், இலங்கை மாநாட்டில் பங்கேற்பது தொடர்பில் மீண்டும் சிந்திக்கவேண்டும் என்று கேட்டுள்ளார். 

தமிழர்களே வேண்டாம் என்று சொன்னாலும் வல்லரசு நாடுகள் தமிழ் ஈழம் உருவாக்குவார்கள். - ஜெகத் கஸ்பார் பேச்சு!

News Service
'நாம்' அமைப்பும் தமிழ் மையம் அமைப்பும் இணைந்து சங்கம் 4 என்ற பெயரில் 21 நாள் மார்கழித் தமிழ் விழா ராயப்பேட்டையில் நடந்து வருகிறது. 7-ம் நாள் நிகழ்ச்சியில் முள்ளி வாய்க்கால் முடிவா, தொடக்கமா? என்ற தலைப்பில் நாம் இயக்க நிறுவனர் ஜெகத் கஸ்பார் பேசினார். அவர், "முள்ளிவாய்க்கால் பேரழிவிற்குப் பின் உலகெங்கும் தன்னெழுச்சியாக தமிழர்கள் நூற்றுக் கணக்கான அறவழிப் போர் முனைகளை திறந்துள்ளனர். இந்தப் புதிய போர் ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் உலக அளவில் புதிய அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும். உலகின் பல்வேறு நாடுகள், குறிப்பாக மேற்கத்திய நாடுகள் இப்புதிய அறவழிப் போரினை ஏற்று ஊக்குவிக்கின்றன.

போருக்குப் பிந்திய சிறிலங்காவில் ஊடக சுதந்திரம் -ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆய்வறிக்கை


பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைக்கான றொய்ட்டர்ஸ் நிலையத்தில், மிக அண்மையில் சிறிலங்கா தொடர்பான ஆய்வறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  ’போருக்குப்பிந்திய சிறிலங்காவில் ஊடக சுதந்திரம் மற்றும் நல்லிணக்க முயற்சிகளில் அதன் தாக்கங்கள்’ என்ற தலைப்பில் இந்த ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தில் சேர்ந்த ஓடுகாலிக்கு உதவப்போன வைத்தியர் மாட்டிக்கொண்டார்


சிறிலங்கா இராணுவத்தில் பாலியல் தொழிலுக்காக சேர்ந்த தமிழ் பெண்ணுக்கு உதவுவதற்காக சென்ற தமிழ் வைத்தியர் ஒருவர் மாட்டிக்கொண்டுள்ளார்.  அனுராதபுரத்தில் சுகாதார வைத்தியஅதிகாரியாகக் கடமையாற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மருத்துவர் இ.சிவசங்கர் நேற்றுக் கைது செய்யப்பட்டு கொக்காவில் இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

வருங்கால தலைவர்களின் இக்கால சாதனைகள் .....


வருங்கால தலைவர்களின் இக்கால சாதனைகள் .....
தமிழ்நாட்டு மாணவர்களே என்ன செய்கிறீர்கள்.. உங்கள் வெளிப்படாத சாதனைகளை யாரவது வெளியிடுக ...நாமும் பெருமிதம் கொள்ள வேண்டாமா?
மின்சாரம் இல்லாத வீடுகளில்ஒளியேற்றும் கல்லூரி மாணவர்கள்

:"ஊதாரித்தனமாக செலவு செய்பவர்கள்' என, சிலரால் வசைபாடப்படும் கல்லூரி மாணவர்கள், தங்களின், "பாக்கெட் மணி'யை சேமித்து, 4,000 வீடுகளில் வெளிச்சத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

மும்பையில் உள்ள, எச்.ஆர்., கல்லூரி மாணவர்கள், ஐந்து பேர், இரண்டாண்டுகளுக்கு முன், சுற்றுலா சென்ற போது, மும்பை புறநகர் பகுதியில் ஒரு கிராமத்தை கண்டனர். தலைநகர் மும்பையில் இருந்து, 150 கி.மீ.,யில் இருந்த அந்த கிராமத்தில், மின் வசதி அறவே கிடையாது. மொபைல் போனை, சார்ஜ் செய்வதற்கு கூட, 10 கி.மீ., சென்று, மின்சாரம் உள்ள இடத்தில், சார்ஜ் செய்ய வேண்டி இருந்தது.

அந்த கிராமத்தில் தங்கி, அந்த மக்கள் படும்பாட்டை அறிந்த மாணவர்கள், மிகுந்த மனவேதனை அடைந்தனர். பகலில் மட்டுமே பள்ளி குழந்தைகளால் படிக்க முடியும்; இரவில் படிக்கவே முடியாது. இதை கண்ட மாணவர்கள், மேலும் வருந்தினர்.மாணவர்கள் தங்களின், "பாக்கெட் மணி'யை சேர்த்து, அந்த கிராமத்திற்கு, சூரிய ஒளி மின்சாரம் வழங்க முடிவு செய்தனர். இந்த உன்னத முயற்சிக்கு, பிற மாணவர்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக, கொஞ்சம் வித்தியாசமான நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இரவு நேரத்தில், கல்லூரி ஹாஸ்டலில், திடீரென மின்சாரத்தை துண்டித்தனர். மின்Œõரம் இல்லாததால், மாணவர்கள் தவித்து, சத்தம் போட்டு ரகளை செய்யவும், மீண்டும் மின்சாரத்தை வழங்கினர்.ரகளை செய்தவர்கள் மத்தியில் பேசிய மாணவர் ஒருவர், "10 நிமிட நேரம், மின்சாரம் இல்லாததற்கே இப்படி சத்தம் போடுகிறீர்களே, ஆண்டாண்டு காலமாக மின்சாரம் இல்லாமல் எத்தனையோ கிராமங்கள், அந்த கிராமங்களில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் அவதிப்படுவதை பற்றி ஏன் கவலைப்படுவதில்லை...' என, கேட்டார்.

மனம் வருந்திய மாணவர்கள், ஒவ்வொருவரும், தலா, 10 ரூபாய் கொடுத்து, சேர்ந்த பணத்தை கொண்டு, மற்றொரு கிராமத்திற்கு, சோலார் விளக்குகள் ஏற்பாடு செய்யப்பட்டன. ஒரு சோலார் விளக்கிற்கு, 4,000 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை, 106 கிராமங்களில், 4,000 சோலார் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

மகாராஷ்டிரா மட்டுமின்றி, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், கர்நாடகா மாநிலங்களிலும், மும்பை, எச்.ஆர்., கல்லூரி மாணவர்கள், சோலார் விளக்குகளை பொருத்தி, புரட்சி ஏற்படுத்தி வருகின்றனர்."புராஜெக்ட் சிராக்' என, பெயரிடப்பட்டுள்ள இந்த மாணவர் அமைப்பில், மும்பை நகர கல்லூரிகளின் பெரும்பாலான மாணவர்கள், உறுப்பினர்களாக மாறி வருகின்றனர். நல்ல நோக்கத்திற்காக பாடுபடும் மாணவர்களுக்கு, பல நிறுவனங்களும் பணம் கொடுத்து உதவுகின்றன.கிடைக்கும் பணத்தை கொண்டு, மின்சார வசதி இல்லாத கிராமங்கள், வீடுகளுக்கு சோலார் மின் விளக்கு வசதிகள் செய்து கொடுக்கின்றனர்.
மின்சாரம் இல்லாத வீடுகளில்ஒளியேற்றும் கல்லூரி மாணவர்கள்

:"ஊதாரித்தனமாக செலவு செய்பவர்கள்' என, சிலரால் வசைபாடப்படும் கல்லூரி மாணவர்கள், தங்களின், "பாக்கெட் மணி'
யை சேமித்து, 4,000 வீடுகளில் வெளிச்சத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

மும்பையில் உள்ள, எச்.ஆர்., கல்லூரி மாணவர்கள், ஐந்து பேர், இரண்டாண்டுகளுக்கு முன், சுற்றுலா சென்ற போது, மும்பை புறநகர் பகுதியில் ஒரு கிராமத்தை கண்டனர். தலைநகர் மும்பையில் இருந்து, 150 கி.மீ.,யில் இருந்த அந்த கிராமத்தில், மின் வசதி அறவே கிடையாது. மொபைல் போனை, சார்ஜ் செய்வதற்கு கூட, 10 கி.மீ., சென்று, மின்சாரம் உள்ள இடத்தில், சார்ஜ் செய்ய வேண்டி இருந்தது.

300 கோடி ரூபாய்கள் - 3 மணி நேரத்தில்


300 கோடி ரூபாய்கள் - 3 மணி நேரத்தில் - என்னா காமெடி என்பவர்களுக்கு இப்போது புரிந்திருக்கு இதன் சூத்திரம். ஆம் இது தான் உலக சினிமாக்களின் முதன் ஃபார்முலா - None other by - நம்ம வசூல்ராஜாவின் சாதனை.

நேற்று ஏர்டெல் மட்டும் அறிவித்திருந்தது 30 லட்சம் பேர் முன் பதிவு என்று முப்பது லட்சம் X 1000 ரூபாயை பெருக்கினால் 300 கோடி ரூபாய்கள் இது ஒரு டி டி ஹெச் தான் இது மாதிரி இன்னும் 6 ஜாம்பவான்களின் புக்கிங்கை சேர்த்து கூட்டி கழிச்சி பாருங்கள் 300 கோடி நான் குறிபிட்டது கொசுறு தான். இந்தியாவின் 10% சதவிகத மக்கள் டி டி ஹெச்சுக்கு மாறியாச்சுனு இந்த புள்ளி விவரம் நன்கு வெந்த குழாய் புட்டு போல புட்டு புட்டு வச்சிருக்கேன். இது தான் உண்மை.

Friday 28 December 2012

இராணுவத்தில் பலவந்தமாக இணைத்துக்கொள்ளப்பட்ட பெண்களின் பயிற்சி முடிவடைகிறது


இலங்கை இனப்படுகொலை இராணுவத்தில் பலவந்தமாக இணைத்துக்கொள்ளப்பட்ட தமிழ் பெண்களின் பயிற்சி நிறைவு எதிர்வரும் 3ம் திகதி நடைபெறவுள்ளதாக தெரியவருகின்றது. கடந்த நவம்பர் மாதம் 17 ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகளுக்கு கிளிநொச்சி பாரதிபுரத்தில் அமைந்துள்ள இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி வழங்கப்பட்டு வந்தது என இராணுவத் தரப்பு தெரிவித்திருந்தது.

முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை-அஸாத் சாலி எச்சரிக்கை! Read more about முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை-அஸாத் சாலி எச்சரிக்கை! [7557] | இலங்கை செய்திகள் | செய்திகள் at www.inneram.com


முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை-அஸாத் சாலி எச்சரிக்கை!இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சிங்களர்களின் அராஜக நடவடிக்கைகளை அரசு ஏன் வேடிக்கைப் பார்ப்பதாக, முஸ்லிம் தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவரும், கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயருமான அஸாத் ஸாலி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்:
"முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அண்மைக்காலமாக நாட்டில் அதிகரித்து வருகின்றன. இதற்கு ஆதாரமாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை பௌத்த பிக்குகள் சிங்களக் குழுவினரால் முஸ்லிம் வர்த்தகர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.

சூடு பிடிக்கிறது குற்றப்பிரேரணை விவகாரம்; அரசும் எதிரணியும் பகிரங்க தொலைக்காட்சி விவாதம்

news
ஆளும் தரப்பினருக்கும் எதிரணியினருக்கும் இடையில் புதுவருடத்தில் பகிரங்க விவாதம் ஒன்று நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்படுக்கின்றது.

தனியார் தொலைக்காட்சி சேவை ஒன்றிலேயே இந்த விவாதம் நடத்தப்படவிருப்பதாகவும் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணை தொடர்பிலேயே இந்த விவாதம் நடத்தப்படவிருக்கின்றது.

ஜனநாயகத்தை மதித்து குற்றவியல் பிரேரணைக்கு ராஜபக்ஷ அரசு தீர்வு காண வேண்டும்! – ‘த இந்து’ வலியுறுத்து


ஜனநாயகத்தை மதித்து குற்றவியல் பிரேரணைக்கு ராஜபக்ஷ அரசு தீர்வு காண வேண்டும்! – ‘த இந்து’ வலியுறுத்து

மஹிந்த ராஜபக்ஷ அரசானது நிறுவனங்கள் அல்லது ஜனநாயக அரசியல் நடைமுறைகள் ஆகியவற்றைப் பலவீனப்படுத்தாத வகையில்  பிரதம நீதியரசருக்கு எதிராக கொண்டுவந்த குற்றவியல் பிரேரணை மீதான மோதலுக்குத் தீர்வு காணவேண்டுமென சென்னையிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளேடான ‘த இந்து’ நேற்றைய தனது  ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:

அகிலன் பவுண்டேசனின் உதவியுடன் வந்தாறுமூலையில் விசேட தேவையுடையோருக்கான பாடசாலை

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்த அனர்த்தின் தாக்கம் காரணமாக விசேட தேவையுள்ள சிறுவர்களாக பிறந்தவர்களை அரவணைக்கும் வகையிலான பாடசாலையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.   இலண்டன் அகிலண் பவுன்டேசனின் அனுசரணையுடன் மட்டக்களப்பு, வந்தாறுமூலையில் இந்தபாடசாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

அன்பகம் பாடசாலை என்ற பெயரில் திறந்துவைக்கப்பட்ட இப்பாடசாலையில் இப்பகுதியை சேர்ந்த சுமார் 27 விசேட தேவையுடைய மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  அன்பகம் தலைவர் டேவிட் சுதாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, இலண்டன் அகிலன் பவுண்டேசன் ஸ்தாபர் கோபாலகிருஸ்ணன், மாகாணசபை உறுப்பினர்களான கி.துரைராஜசிங்கம், பிரசன்னா இந்திரகுமார் தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணியின் இணைத்தலைவர் சேயோன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது பாடசாலையின் பெயர்ப்பலகை திரை நீக்கம் செய்யப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.
 http://www.thinakkathir.com/?p=46065

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் கட்டுநாயக்கவில் கைது!


அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் படகு மூலம் குறித்த நபர்கள் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்துள்ளனர். இவ்வாறு பிரவேசித்த 46 பேரை அவுஸ்திரேலிய அரசாங்கம் விசேட விமானம் ஒன்றின் மூலம் நாடு கடத்தியிருந்தது.

பிரித்தானிய குடியுரிமையுடைய கைதிகளை அந்நாட்டு சிறைகளுக்கு அனுப்பி வைக்குமாறு சுரேஸ் கோரிக்கை


பிரித்தானிய குடியுரிமையுடைய கைதிகளை அந்நாட்டு சிறைகளுக்கு அனுப்பி வைக்குமாறு சுரேஸ் கோரிக்கை
பிரித்தானிய குடியுரிமையுடைய கைதிகளை அந்நாட்டு சிறைகளுக்கு ஆனுப்பி வைக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இலங்கைச் சிறைகளில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரித்தானிய குடியரிமையுடைய சிறைக் கைதிகளை அந்நாட்டு சிறைச் சாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

தலைவர் பிரபாகரன் பற்றி எம்மிடம் விசாரணை ஏதும் நடத்தப்படவில்லை;ஹத்துருசிங்க சொன்னது பொய்: மாணவர்கள் தெரிவிப்பு!


பயங்கரவாத விசாரணைத் திணைக்களத்தினர் தம்மிடம் நடத்திய விசாரணைகளில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பற்றிய கேள்விகள் எவையும் எழுப்பப்படவில்லை என்றும் அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது பற்றிய எந்தக் கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என்றும் யாழ்ப்பாணப் பல்லைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆயிரம் புலி உறுப்பினர்களை கைது செய்ய புலனாய்வுப் பிரிவினர் நடவடிக்கை: சிங்கள ஊடகம்


ltte-akka2ஆயிரம் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை கைது செய்யும் நோக்கில் இராணுவப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டு செயற்பட்ட உறுப்பினர்களே இவ்வாறு கைது செய்யப்பட உள்ளனர்.
புனர்வாழ்வு அளிக்கப்படாத, சரணடையாத மற்றும் கைது செய்யப்படாதவர்களே இவ்வாறு கைது செய்யப்பட உள்ளனர்.முன்னாள் புலி உறுப்பினர்கள் பாதாள உலகக் குழுக்களுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.

மன்னாரில் சிங்கள குடியேற்ற விரிவாக்கம்; கோத்தபாய நேரில் ஆராய்வு!


ts_Mannar_20121226_08p12மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட எல்லையோரக்கிராமமான முள்ளிக்குளம் சிங்கள மயப்படுத்திவரும் நிலையில் அதன் உச்சமாக பாதுகாப்புச்செயலாளர் கோத்தபாய நேரடியாகச் சென்று சிங்கள மயமாக்கும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கடற்படையினருடன் விசேட கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்
மன்னார் மாவட்ட அபிவிருத்தியை ஆராய்தல் என்ற போர்வையில் நேற்று முன்தினம் முள்ளிக்குளம் சென்ற கோத்தபாயவை  வடமேற்கு பிராந்திய கடற்படைக் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ரோஹன பெரேரா உட்பட அதிகாரிகள் வரவேற்று அழைத்துச்சென்றனர்

யாழில் கைதான 45 பேரும் பூசா முகாமில்!- கைது செய்யப்பட வேண்டியவர்கள் நிறைய பேர் உள்ளனர்: பொலிஸ் பேச்சாளர்


SRILANKA_POLICEயாழ்ப்பாணத்தில் கடந்த பல வாரங்களில் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட 45 பேர் பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிஷாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் என்றும், நீண்டகாலமாக சேகரித்து வந்த புலனாய்வுத் தகவல்களின்படியே இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது தொடர்பாக கனடா மாநகர சபையின் சிரேஸ்ட உறுப்பினர் பான் கீ மூனுக்கு அவசரக் கடிதம்!


யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது தொடர்பாக கனடாவின் ரொரென்ரோ மாநகர சபையின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவரான றேமன் சோ ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

மாத்தளையில் தமிழ் இளைஞர் சிங்கள காடையர்களால் அடித்துக் கொலை!


இரத்தோட்டை - பாத்தாளவத்தை மத்திய பிரிவு பண்வில பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் சிங்கள காடையர்களால் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த மோதல் சம்பவம் 26ம் திகதி மாலை இடம்பெற்றதாக இரத்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 36 வயதுடைய கோபால் என்பவரே உயிரிழந்துள்ளார்.

"கொழும்பு சிறைகளின் தமிழ்க் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்"



ஜயலத் ஜெயவர்த்தன
கொழும்பு சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலி சந்தேகநபர்களுக்கும் புனர்வாழ்வு பயிற்சி வழங்கி அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும் என்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயலத் ஜெயவர்த்தன கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த சிறைச்சாலைகளிலுள்ள தமிழ்க் கைதிகளுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் அவர் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.

மன்னார் ஆயரிடம் சி.ஐ.டி இனர் விசாரணை


மன்னார் ஆயர் வணக்கத்திற்குரிய பிதா. இராயப்பு ஜோசப் மீது குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் சட்டவிரோதமாக செல்லும் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படுதல் தொடர்பில் ஆயரினால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பிலேயே அவரிடமிருந்து பல கோணங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது.

வடக்கில் அடை மழை; குளங்கள் பெருக்கெடுப்பு: மக்களின் இயல்பு வாழ்வு பெருமளவு பாதிப்பு!


வடக்கில் பெய்துவரும் அடை மழை மற்றும் குளங்களின் பெருக்கெடுப்புக் காரணமாக மக்களின் இயல்பு வாழ்வு பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
 
கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மன்னார் ஆகிய மாவட்டங்களில்அனைத்துக் குளங்களும் நிரம்பி வழிகின்றன. ஆறுகள் பெருக்கெடுத்துப் பாய்கின்றன. இதனால் வீதிப்போக்குவரத்து பல இடங்களிலும் தடைப்பட்டுள்ளது.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த அனைத்து சமூக மக்களையும் மீள்குடியேற்றுமாறு JNP , டக்ளஸிடம் கோரிக்கை


யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த அனைத்து சமூக மக்களையும் மீள்குடியேற்றுமாறு JNP , டக்ளஸிடம் கோரிக்கை

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த அனைத்து இன சமூக மக்களையும் மீள் குடியேற்றுமாறு ஜே.என்.பி கட்சி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் N;காரியுள்ளது.  
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை மீள் குடியேற்ற அரசாங்கம் காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜே.என்.பி.யின் பேச்சாளர் முஹமட் முசம்மில் தெரிவித்துள்ளார்.

பிரபாகரனை விட அடிப்படைவாத சக்திகளின் நடவடிக்கைகள் தலைதூக்கியுள்ளன: வசந்த பண்டார



நாட்டில் இன்று வேலுப்பிள்ளை பிரபாகரனை விட அடிப்படைவாத சக்திகளின் நடவடிக்கைகள் தலைதூக்கி வருகின்றன.
எனவே, இவை தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகுமென தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் வசந்த பண்டார தெரிவித்தார்.

தமிழ் இளைஞர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதற்கு அரசு முயற்சி



தமிழ் இளைஞர்களை மிகவும் திட்டமிட்ட முறையில் வன்முறையில் தள்ளி அவர்களைப் பயங்கரவாதிகள் எனக் காட்டுவதற்கு இந்த அரசு முயல்கிறது. தமிழ் இளைஞர்கள் எவரும் இந்த அரசின் சதி வலையில் சிக்கவேண்டாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்தி போராடும் நிலைமையை ஏற்படுத்த வேண்டாம்: அஸாத் ஸாலி எச்சரிக்கை!



'பொதுபல சேனா' என்ற சிங்கள அமைப்பினூடாகவும், ஏனைய சிங்கள இனவாதிகளினூடாகவும் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அராஜக நடவடிக்கைகளை அரசு ஏன் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கின்றது.

முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகளையும், அராஜகங்களையும் அரசு தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்துவிடுவதனூடாக முஸ்லிம்கள் தமது உரிமைகளைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்தவேண்டும் என்பதையா அரசு எதிர்பார்க்கின்றது எனக் கேள்வி எழுப்பிய முஸ்லிம் தமிழ்த் தேசிய முன்னணி, முஸ்லிம்களை அந்த நிலைக்கு ஆளாக்கவேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தது. 

கோதாபாய கருத்து தெரிவிப்பது தேசிய நல்லிணக்கத்துக்கு எதிரான செயல்..



தமிழர்கள் கைவிட்டு விட்ட, முஸ்லிம்கள் நினைத்து பார்த்திராத பிரிவினை பாதையை இவர்கள் இன்று தூண்டிவிடுகிறார்களா? என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார். 

Saturday 15 December 2012

தமிழ் உணர்வாளர்கள் தொடர்பு கொள்க


சனிக்கிழமை காலை 10.30 க்கு "எக்ஸ்பிரஸ் அவன்யு " வாயிலில் "இலங்கையை புறக்கணிப்போம் " பிரச்சாரம் துவங்க உள்ளது .இப்போராட்டத்தில் கலந்துகொள்ள வாய்ப்புள்ள தோழர்கள் ,பொதுமக்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் தொடர்பு கொள்க : இராஜா ஸ்டாலின் -9884877487.(15/12/12-சென்னை)
Photo

Saturday 8 December 2012

இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவின் மூலோபாயத் திட்டம் என்ன?

இதயச்சந்திரன் 

அடுத்த வருடம் ஜனவரி மாதமளவில் அமெரிக்காவின் அழைப்பை ஏற்று , தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அங்கு செல்லவிருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன.
மார்ச்சில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் முக்கிய கூட்டத்தொடரிற்கு முன்பாக , அமெரிக்கா சில காய் நகர்த்தல்களை இலங்கை விவகாரத்தில் கையாள முற்படுகிறது என்பதையே இந்த வசந்த அழைப்பு உணர்த்துகிறது.

யாருக்குச் சொல்லி அழ?


தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் இருக்கும் வரைக்கும் தமிழரின் பாதுகாப்புக்கு ஒரு கவசம் இருந்தது. தமிழரின் மீது கை வைத்தால்பிரபாகரன் படை பதில் சொல்லும் என்ற அச்சம் சிங்களப் பேரினவாதத்திடம் இருந்ததுஆனால் அந்தக் கவசத்தை இழந்து நாங்கள் கேட்கஒருவரற்ற இனமாய் நாதியற்று நடுத்தெருவில் நிற்கின்றோம்.
http://www.infotamil.ch/photos/top/general/K%20%203.jpg


  • "உங்களின் பிள்ளைகள், உறவுகள் புதைக்கப்பட்ட மண்ணில்- அவர்கள் நினைவாக ஒன்று கூடி- அழுவதற்காக, அவர்களின் ஆன்மாக்களோடுஉறவாடுவதற்கான உரிமையைப் பெற்றுக் கொடுப்போருக்காக எதிர்காலத்தில் வாக்களியுங்கள். வாக்குகளுக்காக உங்களைத் தேடிவருவோரிடம் இதையெல்லாம் நிறைவேற்றித் தருவீர்களா என்று கேள்வியை எழுப்புங்கள். அத்தகைய உறுதிமொழி தருவோருக்குவாக்களியுங்கள். இந்தக் கேள்வியை எழுப்பத் தகுந்த தருணம் இதுவே. இதைத் தவற விட்டால் எம் உறவுகளுக்காக மௌனமாகஅழுவதைவிட வேறேதையும் செய்யமுடியாது போகும்." மரணித்த வீரர்களுக்காக ஒரு நினைவுத்தூபியைக் கூட வைத்திருக்க முடியாதநிலை காணப்படுகிறது. தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகத்திலேயே இந்த நிலை. சிங்களப் பேரினவாதம் தமிழர் மீது எந்தளவுக்குக்கோலோச்ச முனைகிறது என்பது இதிலிருந்தே வெளிப்படையாகிறது. இறந்தோரை வணங்கும் மரபு தமிழருடையது. ஆனால் அந்த மரபைக்கூடக் கடைப்பிடிக்க முடியாத வகையில் சிங்களப் பேரினவாதம் காடைத்தனங்களைக் கட்டவிழ்த்து விடுகிறது. சிங்கள அரசுடன் இணங்கிப்போகலாம் என்று தமிழ்மக்களுக்கு ஆலோசனை கூறிவோர்இந்த உரிமையைக் கூட விட்டுக் கொடுக்காதவர்களிடத்தில் இருந்துஎதைத் தான் பெற்றுக் கொடுக்கப் போகிறார்கள்? தமிழ் மக்கள் தமது நிலத்தில் ஒரு நினைவுச்சின்னத்தை வைப்பதற்குக்குக் கூடஉரிமை இல்லாத போதுஅடிப்படைச் சுதந்திரத்தை எப்படிப் பெற்றுக் கொடுக்கப் போகிறார்கள்? இறந்தவர்களுக்கு மரியாதைசெலுத்துவதே மனிதனின் இயல்பு- மரபு.
    அது எதிரியாயினும் நண்பனாயினும் மாறுபாடு இருக்கக் கூடாது என்பதே நாகரீக மனித சமுதாயத்தின் பண்பு. ஆனால் இறந்து போனஒருவரின் நினைவுத்தூபியைக் கூட விட்டுக் வைக்கக் கூடாது என்று கங்கணம் கட்டியுள்ள சிங்களப் பேரினவாதம் உயிரோடு இருக்கும்தமிழர்களுக்கா உரிமைகளை வழங்கப் போகிறது?

இலங்கை ஊடாக இந்திய இரகசியங்களை பாகிஸ்தானுக்கு கடத்த முயன்றவர் சிக்கலில்

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டிணம் ஆசாத் நகரை சேர்ந்தவர் தமிம் அன்சாரி (வயது35). கடந்த செப்டெம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு இலங்கையில் உள்ள தூதுவர்கள் மூலம் இந்திய ராணுவ ரகசியங்களை சி.டி., மற்றும் பென்டிரைவ் மூலம் கடத்த முயன்ற போது கியூ பிரிவு பொலிஸார் தமிம் அன்சாரியை கைது செய்தனர்.

விபசாரத்தில் ஈடுபட்ட தொலைக்காட்சி நாடக நடிகை கைது


விபசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் தொலைக்காட்சி நாடக நடிகை ஒருவரை கண்டி பொலிஸின் விஷேட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கொழும்பைச் சேர்ந்த இவர், கண்டி, தங்கொல்லை பிரதேசத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அங்கிருந்தவாரே இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என்று விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

தேங்காய் எண்ணெய் தேய்த்தால் வழுக்கை ஆவீர்கள் -அதிர்ச்சி ரிப்போர்ட்


தேங்காய் எண்ணெய்  தேய்த்தால் வழுக்கை  ஆவீர்கள் -அதிர்ச்சி ரிப்போர்ட் ..

ஆமாம் கடைகளில் விற்கும் கலப்பட தேங்காய் எண்ணெய்  பயன்படுத்தினால் வழுக்கை  ஆவது -முடி கொட்டுவது மட்டும் இல்லாமல் முடி நரைக்கவும் செய்யும் எனபது உண்மை 
தேங்காய்  எண்ணையே  கலப்படம் தானா ? 
கடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய்   என்பது தேங்காய் எண்ணையே இல்லை என்பது தான் அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது !!!
சரி ..வேறு என்ன தேங்காய் எண்ணெய்க்கு  பதில் வேறு என்ன இருக்க முடியும் ?

என்னைப்பார்த்து ஜாதி வெறியன் என்கின்றனர் : ராமதாஸ் ஆவேசப்பேச்சு

திருக்கோவிலூரில் நேற்று பா.ம.க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் பேசினார். 

அப்போது அவர், ''தமிழகத்தில் நடைபெறும் 2016 சட்டமன்ற தேர்தலில் 110 இடங்களில் நாம் வெற்றிபெறப்போகின்றோம். இதுவரை வன்னிய மக்களிடம் ஒற்றுமை இல்லாமல் இருந்து வந்தது. தற்போது நாம் ஒற்றுமையாகிவிட்டோம். எனவே நாம் ஆட்சி அதிகாரத்தை பிடிப்பது சுலபம். வன்னியர்கள் ஆண்டால்தான் நாடு உருப்படும். 

ராஜபக்சே சொல்லித்தான் தமிழர்களைக் கொன்று குவித்தோம்.. சிங்கள தளபதி ‘பகீர்’ பேச்சு!


ராஜபக்சேதான் எந்தவித சர்வதேச நெருக்கடி வந்தாலும் அதற்குப் பயப்படாதீர்கள். தொடர்ந்து தாக்குதல் நடத்தி தமிழர்களைக் கொன்று குவியுங்கள் என்று உத்தரவிட்டார். அவரது ஊக்குவிப்பால்தான் எங்களால் தமிழர்களைக் கொல்ல முடிந்தது என்று பச்சையாகவே பேசி சிங்களத்தின் இன அழிப்பை உறுதி செய்துள்ளார் இலங்கை ராணுவ தளபதியான ஜெகத் ஜெயசூரியா.
ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் முள்ளிவாய்க்கால் என்ற மிகச் சிறிய பகுதிக்குள் சிக்கிக் கொண்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களை கொத்துக் கொத்தாக கொத்து வெடிகுண்டுகளை வீசிக் கொடூரமாகக் கொன்று குவித்தது சிங்கள ராணுவம்.
இந்த நிலையில் இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து விடாமல் நடத்துமாறும், தமிழர்களைக் கொல்லுமாறும் ராஜபக்சேதான் உத்தரவிட்டதாக இலங்கை ராணுவ தளபதி ஜெயசூர்யா பகிரங்கமாகவே கூறியுள்ளார்.

போர்க்காயங்களின் மீது உப்பினைத்தடவும் சிறிலங்கா – அமெரிக்க ஊடகம்


“எனது சொந்த வீட்டில் எனது சொந்த மகளுக்கு பிறந்தநாள் விழா செய்வதற்குக் கூட நான் இராணுவத்தின் அனுமதியைபட பெறவேண்டும். அவர்கள் அனுமதியைத் தர மறுத்ததால் எனது எட்டு வயது நிரம்பிய மகளுக்கு எனது சொந்த வீட்டில் கூட பிறந்த நாளைச் செய்யமுடியாது”
இவ்வாறு அமெரிக்காவினை தளமாகக்கொண்ட The Washington Post ஊடகத்தில் Simon Denyer எழுதியுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச்செய்தி அறிக்கையின் முழுவிபரமாவது:

முள்ளிவாய்க்கால் முழுவதும் மரண சுவாசம்.. காட்டின் நடுவே நீச்சல் குளம் – மார்க்ஸின் ஈழ அனுபவங்கள் !


நாங்கள் செல்லும் வழியில் இருந்த ஒவ்வோர் இடமும், ஏதேனும் போர்க் கொடுமையின் நினைவுகளைச் சுமந்தே நிற்கிறது. அவ்வப்போது அவற்றை நினைவுபடுத்திக் கொண்டே வந்தார் கர்ணன்.
கிளிநொச்சியை நோக்கி வரும் வழியில் கண்ட இரணமடு குளத்தில் இப்போது இராணுவம் ஏதோ விமான நிலையம் கட்டுகிறார்களாமே என்று கேட்டேன்.

Friday 30 November 2012

யாழ். பல்கலை. மாணவர்கள் மீதான தாக்குதல் விவகாரம்! அமெரிக்கா தூதரகம் அறிக்கை

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து வெள
ியாகியுள்ள தகவல்கள் தொடர்பாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டள்ளதாவது.

விழுவது மட்டுமே அலையின் தொழிலன்று! மீண்டும் எழுவதும் தான்!- கவிஞர் வைரமுத்து"


"விழுவது மட்டுமே அலையின் தொழிலன்று! மீண்டும் எழுவதும் தான்!- கவிஞர் வைரமுத்து"
===================
''உண்மையைச் சொல்லுங்கள்... இலங்கையில் எப்படி இருக்கிறார்கள் தமிழர்கள்?''  இவ்வாறு தமிழக சஞ்சிகையான ஆனந்த விகடனில் வாரந்தோறும் வெளிவரும் "விகடன் மேடை" என்னும் பகுதியில் கவிஞர் வைரமுத்துவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் வருமாறு:
 

இறந்தவர்கள் வீர சொர்க்கத்தில்,  இருப்பவர்கள் கோர நரகத்தில். 

பத்துத் தமிழர்கள் கூடி நின்று பேசினாலும் இராணுவத்திற்குச் செய்தி போகிறது. அடுத்த சில நிமிடங்களில் கூட்டம் அச்சுறுத்திக் கலைக்கப்படுகிறது. 

கையில் வைத்து அழுத்தப்படும் பணமோ, கழுத்தில் வைத்து அழுத்தப்படும் கத்தியோ, சில தமிழர்களை உளவாளிகளாக மாற்றி வைத்திருக்கிறது. 

இரகசியமாக விநியோகிக்கப்படும் போதைப் பொருள் பகிரங்கமாகப் பாதுகாக்கப்படுகிறது. 

பதின்பருவத்துப் பிள்ளைகள் இன்னோர் ஆயுதம் ஏந்திவிடக் கூடாது என்பதற்காகச் சாராயத்திலும் போதைப் பொருளிலும் காயடிக்கப்படுகிறார்கள். 

எது நேரக் கூடாதோ - ஆனால், ஒரு போர்ச் சமூகத்தின் உடன் விளைவாக எது நேருமோ - அது நேர்ந்தேவிட்டது. நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சொல்கிறேன்; கொத்துக் கொத்தாய்ப் பாலியல் தொழில் நடக்கிறது. 

அரசு ஊழியர்கள் தமிழர்களாயிருந்தால் சிங்களப் பகுதிக்கும், சிங்களவர்களாயிருந்தால் தமிழ்ப் பகுதிக்கும் திட்டமிட்டுப் பரிமாறப்படுகிறார்கள். 

இதனால், இனவாத அரசு எதை எதிர்பார்க்கிறதோ, அது நடந்துகொண்டே இருக்கிறது. அதாவது, சிங்கள - தமிழ் இல்லற இனக்கலப்பு தொடங்கித் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 

இது அதிகரிக்கும் பட்சத்தில் இன்னும் சில பத்தாண்டுகளில் நம்மவர்களின் இனமொழி அடையாளம் முதலில் கொஞ்சம் கொஞ்சமாகவும் முடிவில் முற்றிலுமாகவும் அழிக்கப்பட்டு விடும். பிறகு, எவரை எதிர்த்து எவர் போராடுவது? 

இந்தியாவும் ஐ.நா-வும் தமிழர்கள் கொல்லப்படுவதை ஏதோ உடல்தானம் செய்கிறார்கள் போலும் என்று ஒதுங்கிக்கொண்ட பிறகு எங்கே போய் முறையிடுவது? 

இன உணர்வாளர்கள் கதறிக்கொண்டே இருக்கிறார்கள், கரையில் மாரடித்துக் கதறும் அலைகளைப் போல. 

ஆனால் ஒன்று. விழுவது மட்டுமே அலையின் தொழிலன்று, மீண்டும் எழுவதும்தான்.
 
ஆனந்த விகடன்''உண்மையைச் சொல்லுங்கள்... இலங்கையில் எப்படி இருக்கிறார்கள் தமிழர்கள்?'' இவ்வாறு தமிழக சஞ்சிகையான ஆனந்த விகடனில் வாரந்தோறும் வெளிவரும் "விகடன் மேடை" என்னும் பகுதியில் கவிஞர் வைரமுத்துவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் வருமாறு:


இறந்தவர்கள் வீர சொர்க்கத்தில், இருப்பவர்கள் கோர நரகத்தில். 

தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனது மாவீரர் வணக்க நாள் செய்தி !


Posted Image

• நமது தேசத்தின் கூட்டு நினைவுகளில் நீங்கா இடம் பெற்;றுவிட்ட மாவீரர் தந்த வலுவோடும் ஆன்மபலத்தோடும் விடுதலைப்பயணத்தினை அயராது தொடர்ந்து முன்னெடுப்போம்!
• உலக சமூகம் தமிழ் மக்களது அரசியல்பெருவிருப்பினைக் கண்டறிய அனைத்துலக நியமங்களின்படி மக்கள் வாக்கெடுப்பினை நடாத்த வேண்டும்!
இன்றைய தேசியமாவீரர் நாளில் நமது மாவீரர்களை மனதிருத்தி நாம் உலக சமுதாயத்திடம் நீதி கோருகிறாம். நாம் நம்மை சிங்களத்தின் பிடியிலிருந்து விடுவித்து நமக்கெனச் சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசினை அமைத்துக் கொள்ள ஆதரவு தாருங்கள் என்று நியாயத்தின் பேரால் உலக சமுதாயத்திடம் கோருகிறோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர்வி.உருத்திரகுமாரன் அவர்களது மாவீரர் வணக்கநாள் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பு ஒரு போதும் 13 ஐ நிராகரிக்கவில்லை; அரச ஊடகங்கள் பொய்ப்பிரசாரம் - சுமந்திரன்

news
தமிழர்களுக்கு முழுமையான அதிகாரப்பகிர்வை வழங்க அத்திபாரமாக அமையும் 13ஆவது திருத்தச் சட்டத்தை தாம் ஒருபோதும் நிராகரித்ததில்லை என உறுதிபடத் தெரிவித்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

தமது நிலைப்பாட்டைத் தெளிவாக எடுத்துரைத்த பின்னரும் அரச ஊடகங்கள் தொடர்ச்சியாகப் பொய்ப் பிரசாரங்களைச் செய்வது விஷமத்தனமானது என்றும் குறிப்பிட்டது. 

அடக்குமுறைகள் வென்றதாக வரலாறில்லை: த.தே.கூ.



அடக்குமுறைகள் வென்றதாக உலகெங்கிலும் வரலாறில்லை. இதனைப் புரிந்துகொண்டு அரசாங்கம் செயற்பட வேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


யாழ். பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதலில் ஈடுபட்ட இராணுவம் மற்றும் பொலிசாரின் செயலைக் கண்டித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் உத்தியோகபூர்வ பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது,

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

முறையிட்டால்தான் நடவடிக்கை; டி.ஐ.ஜி. சொல்கிறார்

news
பல்கலைக்கழக விடுதிக்குள் இராணுத்தினர் அத்துமீறி நுழைந்தது தொடர்பாகவோ அல்லது பொலிஸாரால் மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பிலோ எதுவித முறைப்பாடும் செய்யப்படவில்லை. முறைப்பாடு செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதிப் பொலிஸ்மா அதிபர் (டி.ஐ.ஜி) எரிக் பெரேரா தெரிவித்தார். 

தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலையே : முன்னாள் ஐரோப்பிய எம்.பி. எவன்ஸ்


இலங்கைத்தீவில் உள்ள தமிழ்மக்கள் மீது சிறிலங்கா அரசு மேற்கொள்வது ஒர் இனப்படுகொலையே என பிரித்தானியாவினைச் சேர்ந்த முன்னாள் ஐரோப்பிய பாரளுமன்ற உறுப்பினர் ரொபர்ட் எவன்ஸ் தெரிவித்துள்ளார். பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் பங்குகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பிரித்தானியாவில் ஆரம்பமமாகியுள்ள நாடுகடந்த அரசாங்கத்தின் நான்காவது பாராளுமன்ற அமர்வின் முன்நிகழ்வாக, பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றிருந்த மாநாட்டில கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே இக்கூற்றினை அவர் தெரிவித்துள்ளார்.

இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துதைத் தடுப்பது காட்டுமிராண்டித்தனம்: சுரேஷ்


யாழ் பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதலில் ஈடுபட்ட இராணுவம் மற்றும் பொலிசாரின் செயலைக் கண்டித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் உத்தியோகபூர்வ பேச்சாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையின் முழு விபரம் வருமாறு:

இனவாடை வீசும் சிறிலங்கா கிரிக்கற்றைப் புறக்கணிப்போம் - ஆஸி. எழுத்தாளர்


மனித உரிமைகள் தொடர்பாக அவுஸ்திரேலியா சர்வதேச அரங்கில் ஒரு தோற்றப்பாட்டைக் காட்டுகின்றபோதும்,  பாதுகாப்பில்லாத ஒடுக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பதற்கு பதிலாக அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அல்லது அவர்களின் வேண்டுகோள்களை செவிமடுக்காத ஒரு தலைமையாகவே இருந்துவருகிறது.  


ஆனால் இதற்கு விதிவிலக்காக இந்தப் போக்கை கண்டிக்கும் வகையிலான ஒரு நிகழ்வு.