Translate

Saturday 23 June 2012

வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இராணுவம் மக்களிடையே போர்ப் பீதியை ஏற்படுத்துகிறது; தேசிய சமாதானப் பேரவை நடத்திய சர்வதேச மாநாட்டில் சுட்டிக்காட்டு


வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இராணுவம் மக்களிடையே போர்ப் பீதியை ஏற்படுத்துகிறது; தேசிய சமாதானப் பேரவை நடத்திய சர்வதேச மாநாட்டில் சுட்டிக்காட்டு
news
 போர் முடிவடைந்த பின்னரும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இராணுவம் நிலைகொண்டிருப்பது அந்தப் பகுதி மக்கள் மத்தியில் போர்ப் பீதியை ஏற்படுத்துகிறது. அது மட்டுமன்றி நாட்டில் அமைதி ஏற்பட இது தடையாக இருக்கிறது என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

 
தேசிய சமாதானப் பேரவையுடன் இணைந்து தேசிய சர்வமத அமைப்பு கடந்த சனிக்கிழமை கொழும்பு புத்த ஜயந்தி நிலைய மாநாட்டு மண்டபத்தில் நடத்திய சர்வதேச மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் தீர்வு காண இன்னும் ஏன் தாமதம்?; மஹிந்தவிடம் துருவினார் மன்மோகன் சிங்


அரசியல் தீர்வு காண இன்னும் ஏன் தாமதம்?; மஹிந்தவிடம் துருவினார் மன்மோகன் சிங்
news
 இலங்கையில் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வொன்றை வழங்குவதில் இன்னும் தாமதம் காட்டப்படுவது ஏன்? என இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கேள்வி எழுப்பினார். 
 
தீர்வுக்கான முயற்சிகளைத் துரிதப்படுத்தி விரைவில் நிரந்தரத் தீர்வொன்றை எட்டுவதற்கான நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ளுமாறும் அவர் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆலோசனை வழங்கினார்.

பாகிஸ்தானை பிரிப்பதற்காக அலி ஜின்னா இறுதியாக பிரயோகித்த வார்த்தையை சம்பந்தன் பாவித்துள்ளார் _


  அரசியல் முகவரியை தொலைத்து விட்ட கருணா நிதியும் வேறு பல தலைவர்களும் இலங்கைத் தழிழர்களை முன்வைத்து தமக்கு முகவரியை தேடுகின்றனர் என்று குற்றம் சாட்டும் ஜாதிக ஹெல உறுமய பாகிஷ்தானை பிரிப்பதற்கான அலி ஜின்னா இறுதியாக பிரயோகித்த டிரக்ஹிட் ( நேரடித் தாக்கு) என்ற வார்த்தை பிரயோகத்தை சம்பந்தன் எம்.பி. பாவித்திருப்பது ஆபத்தானதாகுமென்றும் சுட்டிக் காட்டியுள்ளது. 

ஆதீன மடத்தில் ஆபாச நடனம்: நித்யானந்தா மீது வழக்கு பதிவு _


  மதுரை ஆதீன மடத்தில் ஆபாச நடனம் ஆடியது தொடர்பாக நித்யானந்தா, நடிகை ரஞ்சிதா ஆகியோர் மீது விளக்குத்தூண் பொலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்டத் தலைவர் சோலை கண்ணன். இவர், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்து உள்ளதாவது: பஜனை செய்வதற்காக நானும் நண்பர்களும் மே 12இல் மதுரை ஆதீன மடத்திற்கு சென்றோம். நித்யானந்தா எங்களைத் தனியாக அழைத்து, ‘சமாதானமாகப் போய்விடுவோம்'' என்றார். ‘ஆதீனத்தில் சமய, சன்மார்க்க நெறிகள் மீண்டும் கடைப்பிடிக்கப்பட்டால் ஆதரவு தருகிறோம்'' எனக் கூறினோம்.

த ராஜபக்ச, மீள்குடியமர்வு தொடர்பாக கொடுத்த புள்ளிவிபரங்கள் முழுப்பொய் என்பது உறுதியாகியுள்ளது.


பிறேசிலில் நடந்த சந்தப்பின் போது, தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்க முற்பட்ட இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் பொய்யான புள்ளிவிபரங்களைக் கூறி- அவரது கவனத்தை திசைதிருப்பி- சிறிலங்கா அதிபர் ஏமாற்றிய விபரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டியது மிகவும் முக்கியமானது.-பிரபா கணேசன்


ஆளும் கட்சி அமைச்சர்களை வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெறுமனே அனுப்பி வைப்பதில் பயனில்லை என ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஆளும் கட்சியில் இணைந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சனத்தொகை 2 கோடியே 8 இலட்சத்து 69 ஆயிரம் பேர்


இலங்கையின் சனத்தொகை 2 கோடியே 8 இலட்சத்து 69 ஆயிரம் பேர்

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட குடிசன வீட்டு வசதிகள் மதிப்பீட்டின் பிரகாரம் ஒருகோடியே மூன்று இலட்சத்து 57 ஆயிரம் ஆண்களும் (10357000) ஒரு கோடியே ஐந்து இலட்சத்து 12 ஆயிரம் பெண்களுமாக (10512000) மொத்தம் இரண்டு கோடியே எட்டு இலட்சத்து 69 ஆயிரம் பேர் (20,869000) நாட்டில் வசிப்பதாகத் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதென நிதி திட்டமிடல் அமைச்சு நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தது.

பிரித்தானியத் தமிழர் ஒன்றியம் கண்டனம்


இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள யாழ்-தெல்லிப்பழைப் பகுதியில் தமது வாழ்வுரிமையை வலியுறுத்தியும், தமது சொந்த இடங்களில் குடியமர அனுமதி கோரியும் ஜனநாயக முறையில் அமைதிவழியில் போராட்டம் நடத்திய மக்கள் மீது காட்டுமிராண்டித் தனமான முறையிலும், மிகவும் கீழ்த்தரமான வகையிலும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பிரித்தானியத் தமிழர் ஒன்றியம் BTU தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

Friday 22 June 2012

மன்மோகன் சிங் - ராஜபக்சே சந்திப்பு


ரியோ உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங்கும், இலங்கை அதிபர் ராஜபக்சேயும் 22.06.2012 அன்று சந்தித்து பேசினர். 

மன்மோகன்சிங் ராஜபக்சே நடத்திய பேச்சு வார்த்தை குறித்து, வெளியுறவு துறை செயலாளர் ரஞ்சன் மத்தாய் நிருபர்களிடம் கூறியதாவது: 

தென்னிலங்கையில் இந்த நிலமை என்றால் வடக்கு தமிழ் மக்களின் கதியை நினைக்கவே அச்சம் லக்ஷ்மன் கிரியல்ல கூறுகிறார்

lakshman_kiriella_
தென்னிலங்கையில் அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டிருக்கும் அடாவடித்தனங்களை பார்க்கும் போது வடக்கில் தமிழ் மக்களுக்கு என்ன நடக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கவே பயமாக இருப்பதாக தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல நாட்டு மக்களுக்கான பாதுகாப்புக்கு எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாதெனவும் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
செய்தியாளர்கள் மத்தியில் அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;

ஐபோன்களிலும் வலைப்பதிவு​களை மேற்கொள்ளலா​ம்


blogger_podcast_01கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட வலைப் பூ(blogger) என்பது இன்று உலகளாவிய ரீதியில் பிரபல்யமாகக் காணப்படுவதுடன் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பையும் பெற்றுள்ளது.

அமைச்சர் சம்பிக்கவுக்கு இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

சென்னை:  தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் பேசியதாக இலங்கை அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

சம்பிக்கவையும் விமலையும் வெளியேற்றாவிட்டால் அரசு கவிழும் அபாயம் - விக்கிரமபாகு


சம்பிக்கவையும்  விமலையும் வெளியேற்றாவிட்டால்  அரசு கவிழும் அபாயம் - விக்கிரமபாகு
 அணைந்து போகவுள்ள விளக்கு பிரகாசமாக எரிவதுபோன்றே, அரசாங்கத்திலுள்ள இனவாத அமைச்சர்களான சம்பிக்க ரணவக்கவும், விமல் வீரவன்சவும் பிரகாசிக்கின்றனர். விரைவில் இந்தப் பிரகாசம் மறைந்து போய்விடும் என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவரும், தெஹிவளை, கல்கிசை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

விடுதலையாகிய முன்னாள் போராளிகளிடமிருந்து படையினர் அடையாள அட்டைகள் பறிப்பு!


விடுதலையாகிய முன்னாள் போராளிகளிடமிருந்து படையினர் அடையாள அட்டைகள் பறிப்பு!
தடுப்பு முகாம்களில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னால் பேராளிகளுக்கு புனர்வாழ்வு பெற்றவர்கள் என்பதனை நிரூபித்து ஐ.ஓ.எம் சர்வதேச தொண்டு நிறுவனத்தினால் வழங்கப்பட்ட அடையாள அடடைகளை இராணுவத்தினர் கட்டாயப் படுத்தி பறித்து வருகின்றனர்.

இனி பிரச்சினை இல்லையென்ற திருப்தியுடன் இலங்கை இருக்க முடியாது!


இனி பிரச்சினை இல்லையென்ற திருப்தியுடன் இலங்கை இருக்க முடியாது!

அண்மையில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்ஸில் கூட்டத்தொடரில் இலங்கை பற்றி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை எதுவும் குறிப்பிட்டுக் கூறவில்லை. இருப்பினும் இனி  பிரச்சினை இல்லை என்ற திருப்தியுடன் நாடு இருக்க முடியாது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இனவாதிகளை வெளியேற்றாவிடின்அரசாங்கம் திடீரென கவிழும் அபாயம்


அரசாங்கத்திலுள்ள சிங்கள, பௌத்த இன வாதிகள் வெளியேற்றப்படாவிட்டால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் ௭ந்த நேரத்திலாவது திடீரென கவிழும் அபாயம் உள்ளதாக ௭ச்சரிக்கை விடுக்கும் நவசமசமாஜக் கட்சி அரசுக்குள்ளேயே அரசுக்கு ௭திரான சக்திகள் செயற்படுவதாகவும் சுட்டிக் காட்டியுள்ளது.

நில ஆக்கிரமிப்புக்கு எதிரான TNA யின் சாத்வீகவழி ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ள SLMC தீர்மானம்

வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நில ஆக்கிரமிப்புக்கு எதிராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்துவரும் சாத்வீக வழியிலான ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்வதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறப்பு முகாம்களை முற்றுகை இடுவோம் அரசுக்கு எச்சரிக்கை (படங்கள்)

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்கள் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என பல முறை உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்களின் போராட்டத்திற்கு அரசு இது வரை செவி சாய்க்கவில்லை. அதானால் இம்முறை விடுதலை அடையும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என முகாம் வாசிகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளார் . அவர்களுக்கு ஆதரவாக தமிழ் உணர்வுக் கட்சிகள் மற்றும் அமைப்புகள் பல் வேறு வகையில் போராடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று செங்கல்பட்டில் அனைத்து தமிழ் உணர்வு கட்சிகளும் கலந்து கொண்டு செங்கல்பட்டு முகாம் தமிழர்களை விடுதலை செய்வதற்கு போராட்டம் நடத்தினர் . இந்த போராட்டத்தில் மதிமுக மல்லை சத்தியா, விடுதலை சிறுத்தைகள் வன்னி அரசு, மனித நேய மக்கள் கட்சி சாஜகான், தோழர் அதியமான் , தோழர் திருமுருகன் , காசி மக்கள் மன்றத்தினர், பெரியார் திக டேவிட் பெரியார் மற்றும் பல அமைப்பு சாரா தமிழ் உணர்வாளர்கள் பங்கு பெற்று தங்கள் கண்டனத்தை அரசுக்கு தெரிவித்தனர். ............... read more

பிரணாப்புக்கு திமுக ஆதரவளிக்க சீமான் போடும் நிபந்தனை!


ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனைக் கைதிகளாக சிறையில் உள்ள  முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ரத்து  செய்வதாக உறுதி அளித்தால்,  ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜிக்கு திமுக  ஆதரவளிக்கலாம் என்று நாம் தமிழர் இயக்கத் தலைவருமான சீமான் கூறியுள்ளார். 

ஏ.டி.எம். உங்கள் அக்கவுன்டில் பணம் குறைகிறதா? - உஷார்!


முன்பெல்லாம் ரொக்கமாகப் பணத்தை கையில் வைத்துக் கொள்ள பயப்படுவார்கள். ஆனால் இப்போது டெபிட் கார்டுகளை வைத்திருக்கதான் அதிகம் பயப்பட வேண்டிருக்கிறது! காரணம், சமீப காலமாக பலருடைய பேங்க் அக்கவுன்டில் இருந்து அவர்களுக்குத் தெரியாமல் பணம் சூறையாடப்பட்டு விடுவதுதான்!
ஏ.டி.எம். கார்டில் இருக்கும் தகவல்களை 'ஸ்கிம்மர்’ எனும் கருவி மூலம் அபகரித்து, அதைக் கொண்டு போலி கார்டுகளை உருவாக்கி, பணத்தை எடுத்து விடுகிறார்கள் சில சமூக விரோத சக்திகள். குறிப்பாக சென்னை போன்ற நகரங்களில் இத்தகைய நவீன கொள்ளைகள் அதிகமாக நடந்து வந்தாலும், மற்ற இடங்களிலும் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
அதனால்  பணத்தைப் பறிகொடுப்பதற்கு முன்பாக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டால் இழப்பைச் சந்திக்க வேண்டியதிருக்காது.
கவனிக்க வேண்டியவை..!

கேட்டதைப் போல 2 மடங்கு தொகையை அள்ளிக் கொடுத்த லண்டன் ஏ.டி.எம். பணம் எடுக்க போட்டா போட்டி.


லண்டன் மாநகரில் டோட்டன்ஹாம் கோர்ட் சாலையில் சான்ஸ்பரி என்ற இடத்தில் இருந்த ஏ.டி.எம். ஒன்று வாடிக்கையாளர்கள் கேட்டதைப் போல 2 மடங்கு தொகையை அள்ளிக் கொடுத்தது. ஆனால் கணக்குச் சீட்டிலோ பாதியைத்தான் கழித்தது.

திருமுறிகண்டி மக்கள் குழப்பம் விளைவிக்காமல் இருப்பதற்கு ஒரு லட்சம் ரூபா!


திருமுறிகண்டிப் பகுதியில் இராணுவத்தினர் நிர்ணயித்த எல்லைக்குள் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ள நிலையில், சொந்த இடங்களை கேட்டு மக்கள் குழப்பம் விளைவிக்கக்கூடாது என்பதற்காக மீள்குடியேறும் மக்களுக்கு தலா 1லட்சம் ரூபாவை வழங்கி மக்களை பேசாமல் செய்வதற்குரிய நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது.

மக்களின் காணிகளை படையினர் மீள ஒப்படைக்க வேண்டும்!


வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையினையடுத்து பொதுமக்களின் காணிகளினை பயன்படுத்தும் பாதுகாப்பு தரப்பினர், அவற்றை அம்மக்களின் பாவனைக்கு மீள ஒப்படைக்க வேண்டும் என்று கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

தீர்வுக்காக 60 வருடங்கள் ஏமாற்றினோம் – சிங்கள பேரினவாத அமைச்சர்


தீர்வுக்காக 60 வருடங்கள் ஏமாற்றினோம் – சிங்கள பேரினவாத அமைச்சர்

சிங்கள பேரினவாத, மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரட்ன
தீர்வுக்காக 60 வருடங்கள் முயற்சித்தவர்கள் 6 மாத செயற்பாட்டில் பங்குகொள்ள முடியாதா? ௭ன்று சிங்கள பேரினவாத,மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
தெரிவுக்குழுவில் இணைந்துகொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காட்டும் தயக்கத்திற்கு சிங்கள பேரினவாத அமைச்சர் தெரிவித்துள்ள கருத்துக்களே இவை.

வாழும் வரலாறு தோழர் இரா.நல்லகண்ணு


Inline image 1
திரு. இரா.நல்லகண்ணு, தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் ராமசாமி - கருப்பாயி தம்பதியருக்கு 1925 டிசம்பர் 26 அன்று மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார். பின்னர் தனது பதினெட்டாவது வயதிலேயே இந்தியப் பொதுவுடமைக் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டு பொதுவாழ்வு வாழத் தலைப்பட்டார்.

Thursday 21 June 2012

மாரடைப்பு போது முதலுதவி குறிப்புக்கள்

மாரடைப்பு போது முதலுதவி குறிப்புக்கள்
 

உங்கள் நண்பரோ அல்லது உறவினருடனோ போய்க் கொண்டிருக்கும்போது, திடீரென அவருக்கு மாரடைப்பு வுருகிறது. அப்போது நீங்கள் என்ன முதலுதவி செய்ய வேண்டும்?
மாரடைப்பு வரும்போது கொடுக்கப்படவேண்டிய முதலுதவி என்ன?

1.நோயாளியின் இறுக்கமான உடைகளைத் தளர்த்தி அவரை படுக்க வைத்திருக்க வேண்டும்.

2.ஆக்ஸிஜன் சிலிண்டர் இருந்தால் நோயாளிக்கு கட்டாயம் செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும்

மேனனின் வருகை அரசுக்குத் தெரியாதாம்


news
 இந்தியப் பிரதமரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனின் கொழும்புக்கான பயணம் தொடர்பாக அதிகாரபூர்வமான தகவல் எதுவும் தமக்குக் கிடைக்கவில்லை என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
 
எனினும் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம், இந்தியப் பிரதமரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் இந்த மாத இறுதியில் கொழும்பு வரவுள்ளதை உறுதி செய்துள்ளது.

புலனாய்வாளர்களே மக்களைத் தாக்கினர் நாடாளுமன்றத்தில் சுமந்திரன் எம்.பி. சாடல்


புலனாய்வாளர்களே மக்களைத் தாக்கினர் நாடாளுமன்றத்தில் சுமந்திரன் எம்.பி. சாடல்
news
 நிலங்கள் சுவீகரிக்கப்படுவதற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் ஜனநாயக ரீதியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்த மக்கள் மீது இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே தாக்குதல் நடத்தினர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் நேற்று நாடாளுமன்றில் கூறினார்.

மலையக கலை கலாசார சங்கத்தின் இரத்தின தீபம் விருது விழா _


  மலையக கலை கலாசார சங்கத்தினால் வருடாந்தம்; நடைபெறும் 17ஆவது இரத்தின தீபம் விருது விழா இரண்டாவது தடவையாக கிழக்கில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு மஹஜனாக் கல்லூரி கலை மண்டபத்தில் மலையக கலை கலாசார சங்கத்தின் வடக்கு,கிழக்கு மாகாணத் தலைவரும் கல்முனை பிரதேச செயலாளருமான எம்.எம்.நௌபல் தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற்றது............... read more 

வடக்கில் இடம்பெறும் காணி அபகரிப்புக்கள் நிறுத்தப்பட வேண்டும் சுவாமிநாதன் எம்.பி. _


  வடக்கில் இடம்பெற்று வரும் காணி அபகரிப்புகள் உடனடியாக நிறுத்தப்பட்டு, மக்கள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழக்கூடிய சூழலை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம். சுவாமிநாதன் கோரியுள்ளார். 

கால வரையறையின்றி தடுப்பிலுள்ள இலங்கை புகலிடக் கோரிக்கையாளரை விடுவிக்க அவுஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவு!

Posted Imageஅவுஸ்திரேலியாவில் கடந்த 2004ம் ஆண்டு முதல் கால வரையறையின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை புகலிடக் கோரிக்கையாளரை விடுதலை செய்யுமாறு அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 36 வயதான குறித்த நபருக்கு புகலிடம் வழங்கப்பட்ட போதிலும், பாதுகாப்பு காரணங்களுக்காக பாதுகாப்பு வீசா வழங்க மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சிறுவர்கள் கட்டாய விபச்சாரத்தில் அமெரிக்க அறிக்கை.


இலங்கையில் சிறுவர்கள், பெண்கள் அதிகம் பாலியல் கடத்தலுக்கு உட்படுத்தப்படுவதாகவும் அதிலும் பெண்களைவிட சிறுவர்கள் பலாத்காரமாக கடலோரா சுற்றுலா தள பகுதிகளில் பாலியல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாகவும் ஐக்கிய அமெரிக்கா தெரிவித்துள்ளது.

திருத்த முடியாத இடத்தில் சிங்கள இனவாதக் கட்சி


தமிழ்க் கட்சிகள் மீது வழக்கு உயர்நீதிமன்றில் பேரினவாதக் கட்சி தாக்கல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள தமிழரசுக் கட்சி உட்பட நான்கு தமிழ்க் கட்சிகளுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இன்றைய தமிழ் கட்சிகளின் ஒற்றுமை தொடர வேண்டும்: மனோ


பெரும்பாலான தமிழ் கட்சிகள் மத்தியிலே இன்று ஏற்பட்டுள்ள ஒற்றுமை தொடர வேண்டும். இதுவே இன்று உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழும் தமிழ் மக்களினது எதிர்பார்ப்பு. அநீதிக்கு எதிராக சாத்வீகரீதியாக நாம் அணிதிரண்டு இருப்பது, இன்று ஆதிக்கவாதிகளையும், அவர்களுக்கு துணை போகின்றவர்களையும் அசர வைத்துள்ளது. சர்வதேச சமூகத்தையும்,

ஈழத்தமிழர் பிரச்சினையை காரணங்காட்டி தேர்தலைப் புறக்கணிக்கிறது தே.மு.தி.க!


ஈழத்தமிழர் பிரச்சினையை காரணங்காட்டி தேர்தலைப் புறக்கணிக்கிறது தே.மு.தி.க!
இலங்கைத் தமிழர் விவகாரத்தினை முன்னிலைப்படுத்தி குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணிக்க தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான தேசிய முற்போக்கு திராவிட கழகம் தீர்மானித்துள்ளது.குடியரசுத் தேர்தலில் வாக்களித்தாலும் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாது என்பதால், தேர்தலில் வாக்களிக்காதிருக்க தீர்மானித்ததாக தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந் குறிப்பிட்டுள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

Home Latest News யாழ். இளம் பெண்களை விபச்சார வலையில் வீழ்த்தும் பெண் தரகர்கள்


யாழ். இளம் பெண்களை விபச்சார வலையில் வீழ்த்தும் பெண் தரகர்கள்
கடந்த மாதத்தில் ஒரு செவ்வாய்க்கிழமை காலை 8 மணியிருக்கும். யாழ். மத்திய பேரூந்து நிலையம் பரபரப்பாக இருந்தது. குடாநாட்டின் நாற்றிசைகளிலிருந்தும் வந்த பயணிகள் பெருமளவிலானோர் அங்கு திரண்டிருந்தனர். காலை வேளை என்பதால் அது வழமையை விட பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. அரச ஊழியர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களில் கடமை புரிபவர் என தத்தமது கடமைகளின் நிமித்தம் ஏனைய இடங்களுக்குக் குறிப்பாக தீவகப் பிரதேசத்திற்கு புறப்படும் பேரூந்துகளுக்காக தவங்கிடந்தனர்.

சிங்கள அமைச்சரின் இனவெறிப் பேச்சைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்!


சிங்கள அமைச்சரின் இனவெறிப் பேச்சைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்!

thol_thirumaavalavan
இன்னும் நூறு முள்ளிவாய்க்கால் படுகொலைகளைச் சந்திக்க நேரிடும்” என சிங்கள அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் இனவெறிப் பேச்சைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பா தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

ஐ.நா குழுவை அனுமதிக்க மறுத்தால் கடும் நடவடிக்கையில் இறங்குவார் நவிபிள்ளை

pillei-lankatruth
ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியக அதிகாரிகள் குழுவை சிறிலங்கா அரசாங்கம் அனுமதிக்க மறுத்தால், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவிபிள்ளை அடுத்தகட்டமாக கடும் நடவடிக்கைகளில் இறங்கக் கூடும் என்று ஜெனிவா தகவல்கள தெரிவிக்கின்றன.

விக்லீக்ஸ் ஸ்தாபகர் யூலியனுக்காக இலவசமாக சட்ட உதவி வழங்க முன்வந்துள்ள தமிழ் ஆலோசகர் குலேந்திரன்


பிரித்தானியாவின் நீதி மன்றங்களின் தீர்ப்பின்படி சுவீடன் நாட்டுக்கு நாடுகடத்தப்படும் நிலையில் உள்ள சர்ச்சைக்குரிய விக்லீக்ஸ் ஸ்தாபகர் யூலியன் எசேன்ஜ் (40 வயது) 240000 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் பிணையில் விடப்பட்டுள்ளார்.
எனினும் தான் சுவீடனுக்கு நாடு கடத்தப்படும் நிலையிலிருந்து விடுபடுவதற்காகவும் பாதுகாப்பு காரணங்களுக்காகவும்  பிரித்தானியாவில் உள்ள எக்குவாடோர் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார்.

சிங்களவன் வெறியாட்டம் போடுகிறான்...- வைகோ ஆவேச அறிக்கை!



அறிக்கையில் வைகோ!
சிங்கள அமைச்சரின் ஆணவ திமிர் பேச்சு இலங்கை அதிபர் ராஜபக்சேயின் குரூரமான எண்ணத்தின் வெளிப்பாடே ஆகும்.
தமிழர்களுக்கு ஒரு முள்ளிவாய்க்கால் போதும் என்று திமிராகப் பேசிய இலங்கை அமைச்சர் சம்பிக ரணவக்கவை எதிர்த்து தமிழக அரசியல் கட்சிகள் அறிக்கைகள் விடுத்து வருகின்றன.

வைகோ அறிக்கை வருமாறு: இலங்கைத் தீவில் லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களைக் கொடூரமாக படுகொலை செய்த மகிந்த ராஜபக்சேயின் பேரினவாத சிங்கள அரசின் உண்மையான கோரம் முகம் மீண்டும் அம்பலத்திற்கு வந்து விட்டது.

'100 முள்ளிவாய்க்கால்கள்': சம்பிக்க ரணவக்கவின் திமிருக்கு கருணாநிதி கண்டனம்-மன்மோகனுக்கும் கடிதம்


'100 முள்ளிவாய்க்கால்கள்': சம்பிக்க ரணவக்கவின் திமிருக்கு கருணாநிதி கண்டனம்-மன்மோகனுக்கும் கடிதம்

'100 முள்ளிவாய்க்கால்கள்': சம்பிக்க ரணவக்கவின் திமிருக்கு  கருணாநிதி கண்டனம்-மன்மோகனுக்கும் கடிதம்
ஒரு முள்ளிவாய்க்கால் சம்பவமே போதும், நூறு முள்ளிவாய்க்கால் படுகொலை சம்பவங்கள் நடைபெற யாரும் முயற்சிக்க வேண்டாம் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்திருப்பதற்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் துயரத்துக்குப் பின் வட இலங்கையில் தமிழர் தாயகப் பகுதிகளில் நிலங்கள் ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. தங்கள் பூர்வீக வீடுகள், நிலங்களை இழந்த தமிழ் மக்கள், இப்போது அறவழிப் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.

புலிகளுக்கு எதிரான போரில் இலங்கைக்கு ''எல்லா வகையிலும்'' உதவிகளைச் செய்த இந்தியாவை மிதிக்கிறதுஇலங்கை


புலிகளுக்கு எதிரான போரில் இலங்கைக்கு ''எல்லா வகையிலும்'' உதவிகளைச் செய்த இந்தியாவை மிதிக்கிறதுஇலங்கை

விளக்கம் கேட்கவே மேனன் இலங்கை செல்கிறார்:-
புலிகளுக்கு எதிரான போரில் இலங்கைக்கு ''எல்லா வகையிலும்'' உதவிகளைச் செய்த இந்தியாவை மிதிக்கிறதுஇலங்கை
புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசுக்கு ''எல்லா வகையிலும்'' உதவிகளைச் செய்த இந்தியாவை காலில் போட்டு மிதிக்கிறது இலங்கை:- 
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசுக்கு ''எல்லா வகையிலும்'' உதவிகளைச் செய்திருந்தாலும் சமீபகாலமாக இந்திய அரசையே அலட்சியப்படுத்துகிறது இலங்கை அரசு. இந்தியாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை ரத்து செய்யவும், கொடுத்த வாக்குறுதிகளைக் காலில் போட்டு மிதிக்கவும் தயாராகிவருகிறது. அத்துடன் சீனாவுடன் கொஞ்சிக் குலாவத் தொடங்கிவிட்டது.

அமெரிக்கா விஜயங்களின் போது மகிந்த டெலி புரம்டர் ஒப்பரேட்டரை அழைத்துச் சென்றார்:- – விக்கிலீக்ஸ்


அமெரிக்கா விஜயங்களின் போது மகிந்த டெலி புரம்டர் ஒப்பரேட்டரை அழைத்துச் சென்றார்:- – விக்கிலீக்ஸ்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ டெலி புரம்டர் கருவியை இயக்கக் கூடிய நபர்ஒருவரையும் தமது அமெரிக்க விஜயங்களில் இணைத்துக் கொள்வதாக விக்கிலீக்ஸ் தகவல்வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டுராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த தகவல்களில் இந்த விடயம்குறிப்பிடப்பட்டுள்ளது.

மஹிந்தவின் மனிதப் படுகொலை அரசை வீட்டுக்கு அனுப்புங்கள்..


மஹிந்தவின் மனிதப் படுகொலை அரசை வீட்டுக்கு அனுப்புங்கள்..
ஹம்பாந்தோட்டையில் தமது கட்சி அங்கத்தவர் இருவரின் கொலைக்கு அரசியல் பின்னணி உள்ளதாகவும் இந்த இரு மரணங்களுக்குமான பொறுப்பை மஹிந்த ராஜபக்ஷ அரசே ஏற்க வேண்டும் என்றும் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார். 

போரில் துணைவனை இழந்த விதவையின் அவலம்-வவுனியாவில்!



போரின் போது துணைவனை இழந்த 29 அகவை தாய் ஒன்று கருத்தரித்து பிறந்த சிசுவினை புதைத்து 15 நிமிடங்களில் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.
பிறந்து ஐந்து நாட்களேயான சிசுவொன்று புதைக்கப்பட்டு 15 நிமிடங்களின் பின்னர் உயிரோடு மீட்கப்பட்ட சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. மேற்படி சிசுவை புதைத்த குற்றச்சாட்டில் 29 வயதான தாய் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட பெண்ணின் பெற்றோர் மற்றும் அயலவர்களினால் குறித்த சிசு மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

கடத்தல், காணாமல் போதல் சம்பவங்களில் படையினரே ஈடுபடுகின்றனர் – ரணில் குற்றச்சாட்டு!

கடத்தல் மற்றும் காணாமல் போதல் சம்பவங்களுடன் பல சந்தர்ப்பங்களில் ஆயுதப்படையினரே ஈடுபடுத்தப் பட்டுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிர மசிங்க நாடாளுமன்றில் கூறினார். இது தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றிய அவர் மேலும் கூறியவை வருமாறு:
நாட்டில் சட்டம், ஒழுங்கு முழுமையாகச் சீர்குலைந்துள்ளது. காட்டுச் சட்டமே நடைமுறையில் உள்ளது. ஹம்பாந்தோட்டையில் ஜே.வி.பி. நடத்திய பகிரங்கக் கூட்டத்தின் போது ஆயுததாரிகள் அங்கு வந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

3 பேரால் கற்பழிக்கப்பட்ட இலங்கைப் பெண்: குவைத்தில் சம்பவம் !

குவைத்தில் நீண்ட காலம் பணியாற்றிய பின்னர் இலங்கை திரும்பத் தயாராக இருந்த பெண்ணொருவரை பலாத்காரமாகக் கடத்திச் சென்று அவர் மீது மூன்று இளைஞர்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் குறித்து நாம் ஏற்கனவே செய்திவெளியிட்டிருந்தோம். தனது எஜமானுடன் வீதியில் நடந்துசென்றுகொண்டிருந்த குறிப்பிட்ட பெணணை, வாகனத்தில் வந்த 3 குவைத் இளைஞர்கள் கடத்தியுள்ளனர். பிரமாண்டமான கட்டடம் ஒன்றுக்குப் பின்புறமாகக் கொண்டு சென்று அப்பெண்ணை அவர்கள் கற்பழித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் குவைத் பொலிஸாருக்கு வழங்கிய வாக்கு மூலத்தில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

லண்டன் கடை உரிமையாளர்களே கவனம்: புது சுத்துமாத்தில் இறங்கியுள்ள வெள்ளையர்கள் !

லண்டனில் கடை வைத்திருக்கும் தமிழ் உரிமையாளர்களே கவனம் ! புதிதாக ஒரு சுத்துமாத்தில் சிலர் இறங்கியுள்ளனர் என அதிர்வு இணையம் அறிகிறது. TFL என்று அழைக்கப்படும் லண்டன் போக்குவரத்து கழகம், கடைகளுக்கு ஒயிஸ்டர் இயந்திரத்தை வழங்கிவருகிறது. பலர் இந்த இயந்திரத்தைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பித்துள்ளார்கள். இவ்விண்ணப்பங்களை எப்படியோ களவாடியுள்ள ஒரு கும்பல், தமிழ் கடை உரிமையாளர்களை தொலைபேசி மூலம் அணுகி, உங்களுக்கான ஒயிஸ்டர் இயந்திரம் இன்னும் 10 நாட்களில் பொருத்தப்படும் என்று கூறி, 450 பவுண்டுகளை குறிப்பிட்ட வங்கிக் கணக்கு ஒன்றில் கட்டுமாறு கோருகின்றனர்.