Translate

Friday, 22 June 2012

பிரணாப்புக்கு திமுக ஆதரவளிக்க சீமான் போடும் நிபந்தனை!


ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனைக் கைதிகளாக சிறையில் உள்ள  முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ரத்து  செய்வதாக உறுதி அளித்தால்,  ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜிக்கு திமுக  ஆதரவளிக்கலாம் என்று நாம் தமிழர் இயக்கத் தலைவருமான சீமான் கூறியுள்ளார். 


கடந்த திமுக ஆட்சியின்போது, ராமேஸ்வரம் பொதுக்கூட்டத்தில் இந்திய  இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக சீமான், இயக்குனர் அமீர் ஆகியோர் மீது வழக்கு  போடப்பட்டிருந்தது. 

அநத வழக்கு தொடர்பாக இன்று ராமநாதபுரம் நீதிமன்றத்தில் இருவரும்  ஆஜராகினர்.இதனையடுத்து இந்த வழக்கில் மீண்டும் ஜூலை 20 ம் தேதி இருவரும்  ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் கூட்டாக பேசிய சீமானும்,அமீரும்”ஜனாதிபதி  தேர்தலில் திமுகவும், திருமாவளவனும் பழங்குடி இனத்தவரான சங்மாவுக்கு ஆதரவு  தரவேண்டும்.பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு அளிப்பது தமிழர்களுக்கு இழைக்கும் துரோகம். 

அப்படி இல்லாவிடில்,ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனைக் கைதிகளாக  சிறையில் உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு  தண்டனையை ரத்து செய்வதாக உறுதி அளித்தால் ஜனாதிபதி தேர்தலில் பிரணாப்  முகர்ஜிக்கு திமுகவும், திருமாவளவனும் ஆதரவு அளிக்கலாம்.இதை அவர்கள் உறுதி  செய்ய வேண்டும்.

இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படை பிடித்தால் அவர்களுக்கு 20 வருடங்கள்  வரை சிறை அளிக்கும் வகையில் ராஜபட்ச பேசியிருக்கிறார். அப்படி இந்திய எல்லைக்கு  வந்து கைதாகும் இலங்கை மீனவர்களையும் 20 வருடங்கள் சிறையில் அடைக்கும்படி  நாங்கள் கூறினால் அது இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக வழக்கு  போடுவார்கள்” என்று தெரிவித்தனர். 

No comments:

Post a Comment