Translate

Monday, 27 August 2012

வெள்ளைவான் கடத்தல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் -HRC


வெள்ளைவான் கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டுமென இலங்கை மனித உரிமை ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.வெள்ளைவான் கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல் சம்பவங்கள்தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரிக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டியதன்அவசியத்தை மனித உரிமை ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.வெள்ளைவான் கடத்தல் தொடர்பில் துரித கதியில் விசாரணை நடத்தப்படவேண்டுமென காவல்துறை மா அதிபர் என்.கே. இளங்கக்கோனிடம், மனித உரிமை ஆணைக்குழுகோரிக்கை விடுத்துள்ளது.வெள்ளைவான் கடத்தல் மற்றும் காணாமல் போதல் சம்பவங்கள்தொடர்பிலான பல முறைப்பாடுகள் நிலுவையில் கிடப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது
.

No comments:

Post a Comment