Translate

Saturday 4 February 2012

Tamil's Protest outside the UK Prime Ministers House -- 4th February 2012


இலங்கைத் தீவில் தமிழர் உரிமை பறிக்கப்பட்ட நாளான இன்று லண்டனில் தமிழ்ர்கள் கவன்யீர்ப்பப் போராட்டம் ஒன்றினையும், துண்டுப்பிரசுர விநியோகமும் செய்தனர்.

விடுதலைப் புலிகள் புராணம் பாடும் சிறீலங்கா அமைச்சர்கள்


வெளிநாடுகளிலுள்ள விடுதலைப் புலிகள் நாட்டை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்வதற்கு முயற்சிப்பதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொறுப்புள்ள அரசு என்ற வகையில் அதனை இலங்கை மிக நுட்பமான முறையில் தோற்கடிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
பொலன்நறுவை பிரதேசத்தில் இடம்பெற்ற இலங்கையின் 64வது சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை சுதந்திர தினத்தை புறக்கணித்த மட்டக்களப்பு மக்கள்


இலங்கை 64வது தேசிய சுதந்திர தினம் அனுஸ்டிக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுதந்திரமாக சுதந்திர தின நிகழ்வுகளை மக்கள் புறக்கணித்துள்ளனர்.

கடந்த காலங்களில் பல்வேறு அழுத்தங்களின் மத்தியில் சுதந்திர தினத்தின்போது வீடுகளிலும் வர்த்தக நிலையங்களிலும் தேசியக்கொடிகள் பறக்கவிடும் சம்பவங்கள் இடம்பெற்றுவந்தன. எனினும் இம்முறை எதுவித அழுத்தங்களும் பிரயோகிக்கப்படாத நிலையில் மக்கள் தேசிய சுதந்திர தினத்தில் ஈடுபடவில்லை............ read mor

வடக்கில் அரசினால் செய்யப்படும் திட்டங்கள் நல்லிணக்கத்தை தரவில்லை!


இலங்கையின் வடக்கில் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தித் திட்டங்கள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தத் தவறுகின்றன என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் அவதானித்து உள்ளனர்.

இந்த அவதானத்தை 2010 ஆம் ஆண்டு பெப்ரவரி 03 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு எழுத்துமூலம் அறிவித்து உள்ளனர்.

இலங்கைக்கு எதிராக அமெரிக்காவுடன் கை கோர்க்கும் இந்தியா அதிர்ச்சியில் மஹிந்த!

ஜெனிவாவில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக மேற்கத்தேய நாடுகள் கொண்டுவரவுள்ள தீர்மானத்துக்கு இந்தியாவும் ஆதரவளிக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில்,

இந்தியத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ புதுடில்லி சென்றுள்ளார்.

இனப் பிரச்னைக்கு இந்தியாவின் தீர்வு தேவையில்லை: ராஜபக்ச

தமிழர் பிரச்னைக்கு இந்தியா உள்ளிட்ட எந்த ஒரு வெளிநாடுகளின் தீர்வு திட்டங்களும் இலங்கைக்கு தேவையில்லை என்று அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்ச திட்டவட்டமாக, அதே சமயம் மறைமுகமாக தெரிவித்துள்ளார். 

தமிழர் பிரச்னைக்கு இந்தியா வலியுறுத்தி வரும் இலங்கை அரசியல் சாசனத்தின் 13 ஆவது சட்டதிருத்தத்தை மறைமுகமாக குறிப்பிட்டே அவர் இவ்வாறு கூறினார்..................... read more 

தமிழ்; மக்களது ஆணைக்கும் அபிலாசைகளுக்கும் கூட்டமைப்பு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் துரோகம் இழைக்கமாட்டாது -


 இரா.சம்பந்தன் : குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
தமிழ்; மக்களது ஆணைக்கும் அபிலாசைகளுக்கும் கூட்டமைப்பு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் துரோகம்

தமிழ்; மக்களது ஆணைக்கும் அவர்களது அபிலாசைகளுக்கும் கூட்டமைப்பு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் துரோகம் இழைக்கமாட்டாதென கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.இன்று திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இடைபெற்ற கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் எதிர்கட்சி தலைவர்களுக்கான இருநாள் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே  கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்............... read more 

சுதந்திர இலங்கையில் அந்நியமானவர்கள்

-இதயச்சந்திரன்
 

  • 1948இல் இலங்கை சுதந்திரமடைந்தபோது 47இல் உருவான சோல்பரி அரசியலமைப்பே நடைமுறையிலிருந்தது. 
  • தற்போது 13+ ஆக மாறியிருக்கும் செனட் சபையும் முதன் முதலாக அந்த நாட்களிலேயே உருவாக்கப்பட்டது.  
  • 30 பேர் கொண்ட சபையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 செனட்டர்களும் கவர்னர் ஜெனரலால் நியமிக்கப்பட்ட 15 பேரும் அங்கம் வகித்தார்கள்.

இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் செனட்டர்களாக எஸ். நடேசன், டாக்டர் நாகநாதன், பெரி. சுந்தரம் அவர்களும், நியமிக்கப்பட்ட தமிழ் செனட்டர்களாக சி. குமாரசுவாமி, சேர் சிற்றம்பலம் கார்டினர் மற்றும் முதலியார் ஏ.பி. இராஜேந்திராவும், அத்தோடு தெரிவு செய்ப்பட்ட முஸ்லிம் உறுப்பினர்களாக சேர். ரசீக் பரீட்டும், சேர் முஹம்மட் மாக்கான் மாக்கரும் சுதந்திர இலங்கையின் முதலாவது செனட் சபையில் பங்குபற்றியுள்ளார்கள்.

இது எங்கள் மாவீரர்களது கனவு! எங்கள் தேசியத் தலைவரது கட்டளை!!


இப்போது போரைச் சந்தித்த தலைமுறை வேண்டுமானால் இப்படியே வாழ்ந்து……மடிந்துவிடலாம். ஆனால், எங்களுடைய அடுத்த சந்ததி, தன்னுடைய தாத்தனுக்கும், பாட்டிக்கும், தந்தைக்கும், தாய்க்கும் இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து, எங்களைவிட இன்னும் வேகமாகப் போராடும்!’ என்று ஈழ மண்ணின் குரல் ஒன்று தமிழகத்தில் ஒரு பேரலையை உருவாக்கியுள்ளது.

இன்று லண்டனில் தமிழ்ர்கள் மேற்கொண்ட கவனயீர்ப்புப் போராட்டமும்! தூண்டுப்பிரசுர விநியோகமும்.


இலங்கைத் தீவில் தமிழர் உரிமை பறிக்கப்பட்ட நாளான இன்று லண்டனில் தமிழ்ர்கள் கவன்யீர்ப்பப் போராட்டம் ஒன்றினையும், துண்டுப்பிரசுர விநியோகமும் செய்தனர்.

இன்று மதியம் 1:00 மணிமுதல் மாலை 3:00 மணிவரை Oxford Circus, Oxford Street, Tottenham Court Road, Piccadilly Circus, ஆகிய பகுதிகளில் உள்ள நிலக்கீழ் தொடரூந்து நிலையங்களுக்கு முன்பாகவும், வீதிகளிலும் நின்று இலங்கைத் தீவில் நடைபெறும் தமிழின அழிப்பு, மற்ரும் மனித உரிமை மீறல்கள் போன்ர விடையங்கை எடுத்து விளக்கும் துண்டுப்பிரசுரங்களை வழங்கினர். 

அத்தோடு மாலை 4:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை பிரித்தானியப் பிரதமர் இல்லம் முன்பாக அமைந்திருக்கும் Downing Street பகுதியிலும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். 

புலிகள் அமைப்பில் 8,000 முதல் 12,000 வரையிலான போராளிகளே உள்ளனர்!

இலங்கையில் தற்போது சுமார் 3 லட்சம் இராணுவத்தினர் கடமையில் உள்ளனர். இத் தொகையானது பிரித்தானிய இராணுவத்தினரின் எண்ணிக்கையை விட அதிகம் என்பது கசப்பான உண்மையாகும். 
சமாதான காலப் பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பில் சுமார் 8000 முதல் 12000 வரையிலான போராளிகளே உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இக் கால கட்டத்தில் புலிகள் நூற்றுக்கணக்கான போராளிகளை இணைத்துள்ளதாகவும்...,

'இலங்கையின் கொலைக்களம்' நோபல் பரிசுக்காக பரிந்துரை!


சேனல்4 தொலைக்காட்சி வெளியிட்ட 'இலங்கையின் கொலைக்களம்' நோபல் சமாதானப் பரிசுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் சோபெய்ன் மக் டொனாவும், ஆஸ்ட்ரேலியாவின் கிரீன் சென்ட்டர் லீ டியனோனும் இணைந்து...,


நோபல் பரிசுக் குழுவுக்கு இந்தப் பரிந்துரையை அனுப்பியுள்ளனர்.சரியான நேரத்தில் சேனல்-4 வெளியிட்ட இந்த ஆவணப்படம் இலங்கை அரசின் அனைத்துலக மனித உரிமை மீறல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததாகவும், இது இலங்கையில் உள்ள எல்லா மக்களுக்கும் உண்மை, நல்லிணக்கம், அமைதி ஆகியவற்றுக்குப் பங்களிப்பு செய்துள்ளதாகவும் மக் டொனா தெரிவித்துள்ளார்.

சுதந்திரத்தின் பொருள் அறியா சுதந்திர தினம் பாரீர்

இலங்கைத் திருநாட்டின் 64ஆவது சுதந்திர தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. காலனித்துவ ஆட்சியில் இருந்து இலங்கை மீட்சி பெற்றதனை ‘சுதந்திரம்’ என்று இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் கூறி வருகின்றனர். சுதந்திரம் என்ற சொற்பதம் பற்றி ஆள்பவர்களும் அடக்கப்படுபவர்களும் கொண்டுள்ள பொருள் வித்தியாசமானது. ஆள்பவர்கள் அடக்கப்படுபவர்களுக்குச் சுதந்திரம் கொடுக்காமல் தடுப்பதை தங்கள் சுதந்திரமாக கருதுகின்றன................... read more

புதுடில்லியில் எரிக் சொல்ஹய்ம் - இலங்கைக்கு எதிரான தீர்மானம்...?!!!

நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹய்ம் புதுடில்லிக்கு விஜயம் செய்துள்ளார். ஜெனிவாவில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 19-வது கூட்டத் தொடரில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான தீர்மானத்தை கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள மேற்கத்தேய நாடுகள் இந்தியாவின் ஆதர வைப்பெறும் முயற்சிகளில் இறங்கியுள்ளதாக தெரியவந்துள்ள நிலையில் அவரது விஜயம் அமைந்துள்ள............... read more

கடந்த காலப் பிரச்சினைகள் அனைத்துக்கும் நாம் அனைவருமே பொறுப்பு! சுதந்திர தின உரையில் மஹிந்தா

கடந்த காலங்களில் இடம்பெற்ற அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நாம் அனைவருமே பொறுப்பேற்க வேண்டுமென கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்ததற்கமைய எமது மனசாட்சியின்படி நாம் அனைவரும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். என ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ இன்றைய சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 64வது சுதந்திர தினக் கொண்டாட்டம் இன்று காலை அநுராதபுரத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.................... read more 

பரிந்துரைகளை அமுல்படுத்தினால் சர்வதேசம் தலையிட முடியாது


கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ள பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்றினால் எந்தவொரு நாடும் இலங்கை விவகாரத்தில் தலையிட முடியாத நிலைமை ஏற்படும். ........... read more 

சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் - இலக்குகளை எட்டுவதற்கான ஒரு கருவி என்கிறது அமெரிக்கா

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானம் மனிதஉரிமைகள் மற்றும் நல்லிணக்கம் ஆகிய விடயங்களில் இலக்குகளை எட்டுவதற்கான ஒரு கருவியாகப் பயன்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது................ read more 

தீர்வை மறுத்து மமதை காட்டினால் ஆசியாவின் \"அழிவு\' ஆகும் இலங்கை; தமிழ்க் கூட்டமைப்பு எச்சரிக்கை

news
தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சர்வதேசம் வழங்கும் சந்தர்ப்பங்களை இலங்கை அரசு தொடர்ந்தும் தட்டிக்கழிக்குமானால், இந்த நாட்டை சர்வதேச சமூகம் உலகில் நிராகரிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் சேர்த்துவிடக் கூடும். அதுமட்டுமன்றி, தமிழர்களுடன் பேசி பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முயலாமல் அரசு தொடர்ந்தும் போர் வெற்றி மமதையில் இருக்குமானால், ஆசியாவின் ஆச்சரியமாக அன்றி "அழிவு' ஆகவே இலங்கை தோற்றம் பெறும்.................. read more 

இனி பணக்காரர்களுக்கு மட்டுமே இங்கிலாந்தில் குடியுரிமை


இங்கிலாந்தில் ஐரோப்பியர் அல்லாத வெளிநாட்டவர்களின் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க அந்நாடு முடிவு செய்துள்ளது.

ஐரோப்பியர் அல்லாத வெளிநாட்டவர்கள் இங்கிலாந்தில் கல்வி கற்ற பிறகு அங்கேயே பணிபுரிவதற்கான விசாவை ரத்து செய்வதாக ஏற்கெனவே அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது. இதில் இந்தியர்களே பெரும்பாலும் பாதிப்புக்குள்ளாயினர்................. read more 

LLRC குறித்து அவுஸ்திரேலியா தனது நிலைப்பாட்டை வெளியிட வேண்டும்!


கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதியறிக்கை தொடர்பில்அவுஸ்திரேலியா தமது நிலைப்பாட்டை வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் இருந்து வெளிவரும் ஒஸ்ட்ரேலியன் நாளிதழ் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது. 

வாக்குறுதியை நிறைவேற்ற இலங்கை அரசு தவறிவிட்டது!

ஐ.நாவை கவனம் செலுத்துமாறு வலியுறுத்து

இலங்கையில் படைத்தரப்பினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் முடிபடைந்து சுமார் மூன்று வருடங்கள் ஆகின்ற போதிலும், பொறுப்புக்கூறல் விடயத்தைப் பொறுத்தவரை தனது மக்களுக்கும், மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் வழங்கிய வாக்குறுதியை இலங்கை அரசாங்கம் இதுவரை நிறைவேற்றவில்லை என மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக் காட்டியுள்ளது.அத்துடன்,இவ்விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக் குழு கவனத்தைச் செலுத்த வேண்டும் எனவும் நியூயோர்க்கைக் தளமாகக் கொண்டி யங்கும் மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது............ read more 

ஆணைக்குழுவின் அறிக்கையை அமுல்படுத்த ஆதரவு வழங்குவோம்" _


  கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளில் குறுகிய காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்தக்கூடியவைகளை அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி ஆதரவு வழங்கும் என்று கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். 

13ஆவது அரசியல் அமைப்பை அடிமை சாசனம் எனக் கூறும் மு.கா 13+ பாதுகாப்பு என்கிறதா? _


  13ஆவது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் முஸ்லிம்களின் முதுகில் எழுதிய அடிமைசாசனம் என்று கூறிய முஸ்லிம் காங்கிரஸால் 13 பிளஸ் (13+) முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு ஏற்பட்டு விடும் என்று கூற முடியுமா?

இவ்வாறு சம்மாந்துறை தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதம அமைப்பாளர் எம்.ஏ.எம்.ஹஸன் அலி கேள்வி எழுப்பினார். 

ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும்: சுதந்திர தின உரையில் ஜனாதிபதி


  கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 

முகத்துடன் கோபித்துக்கொண்டு மூக்கையே வெட்டிக்கொள்ளும் முட்டாள் அரசியலை செய்வதில்லை

'எனது முகத்துடன் கோபம் என்பதற்காக எனது மூக்கையே வெட்டிக்கொள்ளும் முட்டாள்தனமான காரியத்தை நான் ஒருபோதும் செய்வதில்லை. ஐதேகவுடன்  எமக்கு கடும் முரண்பாடுகள்  இருக்கின்றன. அதுபற்றி மறைப்பதற்கு எதுவும் கிடையாது. ஆனால்  ஐதேகவை  பழி  தீர்க்க  வேண்டும்  என்பதற்காக எமது  பொது எதிரியான  இந்த மக்கள் விரோத மஹிந்த அரசாங்கத்திற்கு சாதகமான நிலைப்பாடுகளை என்னால் ஒருபோதும் எடுக்க முடியாது. கோடிக்கணக்கான ரூபாய் கையூட்டுகளை வாங்கிகொண்டு மேயர் முஸம்மில் ஹாஜியாரின் கொழும்பு மாநகரசபை நிர்வாகத்தை சீர்குலைப்பதற்கு என்னால் துணை போக முடியாது. இந்த அரசியல் முதிர்ச்சியும், நேர்மையும் என்னிடம் இருக்கின்றன' என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்............... read more 

தீர்வை மறுத்து மமதை காட்டினால் ஆசியாவின் "அழிவு' ஆகும் இலங்கை

தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சர்வதேசம் வழங்கும் சந்தர்ப்பங்களை இலங்கை அரசு தொடர்ந்தும் தட்டிக்கழிக்குமானால், இந்த நாட்டை சர்வதேச சமூகம் உலகில் நிராகரிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் சேர்த்துவிடக் கூடும். அதுமட்டுமன்றி, தமிழர்களுடன் பேசி பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முயலாமல் அரசு தொடர்ந்தும் போர் வெற்றி மமதையில் இருக்குமானால், ஆசியாவின் ஆச்சரியமாக அன்றி "அழிவு' ஆகவே இலங்கை தோற்றம் பெறும்............... read more 

சூசையின் மனைவியிடம் மிரட்டி எடுக்கப்பட்ட பேட்டி: த நேஷன் ?

கடல் புலிகளின் தளபதியான சூசை அவர்களின் மனைவி முள்ளிவாய்க்காலில் இருந்து 2009ம் ஆண்டு மே மாதம் 14ம் திகதி வெளியேறி இருந்தார். அவர் அங்கிருந்து கடல் மார்க்கமாகத் தப்பி இந்தியா செல்ல முனைந்தவேளையில் இலங்கைக் கடற்ப்படையால் கைதுசெய்யப்பட்டார் என்பது யாவரும் அறிந்த விடையம். அவரிடம் பெருந்தொகையான பணமும் நகைகளும் இருந்ததாக இலங்கை இராணுவம் செய்தி வெளியிட்டது.
 பின்னர் அவர் தனியான சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுதலையாகி கொழும்பு புறநகர்ப்பிரதேசம் ஒன்றில் வசித்துவருகிறார். இவ்விடம் ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலை என்பதும் இவரை இரகசியப் பொலிசார் அவதானித்து வருவதும் பலர் அறிந்த விடையம். புலிகளின் சிரேஷ்ட தளபதிகள் சிலர் மேல் கரி பூசும் நடவடிக்கைகளை இலங்கை அரசு தற்போது கட்டவிழ்த்து விட்டுள்ளது. 

Super Bowl XLVI போட்டியில் தமிழ் பாடகி மாயா கலந்துகொள்கிறார் !

இந்த வாரத்தின் வட அமெரிக்காவின் மிகப்பெரிய கொண்டாட்டமாக Super Bowl XLVI போட்டி அமையப்போகின்றது. அமெரிக்காவின் Indianapolis ல் பெப். 05, மாலை 6.30 மணியளவில் நடைபெறவுள்ள 46வது Super Bowl போட்டியில் New England Patriots மற்றும் New York Giants அணிகள் மோதவுள்ளன. இப் போட்டியானது அமெரிக்காவில் சுமார் 90 மில்லியன் மக்கள் நேரடியாகவும் NBC தொலைக்காட்சி வழியாகவும் பார்க்கும் போட்டியாகும், அத்தோடு 185 நாடுகளில் 30 மொழிகளில் இப்போட்டி நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்படுகின்றது.
தமிழ் சினிமாப் படங்களில் வரும் ரவுடிகள் கடைக்காரரை மிரட்டி மாமுல் வாங்குவது போல ரூற்றிங்- மிச்சம் பகுதியில் 2 தமிழர்கள் மிக மோசமான அடாவடியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் "சேர்ச் மினி மார்க்கட்" என்னும் தமிழருக்குச் சொந்தமான கடை ஒன்றில், உரிமையாளரின் மனைவியை மிரட்டி 6 மாதகாலமாக குடி பாணங்களை இலவசமாகப் பெற்றுவந்துள்ளனர். இந்தியப் படங்களில் வரும் தாதா போல இவர்கள் செயல்பட்டதும் போக, கடைக்குச் சென்று அங்கே பணிபுரியும் உரிமையாளரின் மனைவியையும் வேலைசெய்பவர்களையும் இவர்கள் மிரட்டி வந்துள்ளனர். கடந்த வருடம் ஜனவரிமாதம் 15ம் திகதி மேற்படி இந்த 2 தமிழர்களும் குறிப்பிட்ட கடைக்குள் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அங்கே வேலைசெய்தவர் தலையில் வொட்க்கா போத்தலால் பலமாகத் தாக்கியும் உள்ளனர்.

Kuppa Kadhal - A Short Film

Cast :  Lingeshwar,  Soundarya

பெப்ரவரி 4 - சிங்களத்தின் சுதந்திரதினம் ; தமிழர்க்கு கரிநாள்: சுதந்திரதினத்தைப் புறக்கணிப்போம்


பெப்ரவரி 4 - சிங்களத்தின் சுதந்திரதினம் ; தமிழர்க்கு கரிநாள்: 

சுதந்திரதினத்தைப் புறக்கணிப்போம்








பெப்ரவரி 4 - இலங்கைத்தீவில் தமிழர் உரிமை மறுக்கப்பட்ட நாள்!


பெப்ரவரி 4 - இலங்கைத்தீவில் தமிழர் உரிமை மறுக்கப்பட்ட நாள்!


பிரித்தானிய ஆட்சியின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த இலங்கைத்தீவின் ஆட்சி அதிகாரம் 04.02.1948 இல் பெரும்பான்மை சிங்களவர்களிடம் கையளிக்கப்பட்டது. அன்றைய நாளே ஈழத்தமிழர்களின் உரிமை முழுமையாக மறுக்கப்பட்ட நாளாகவும் ஆனது. 

சிங்கள தேசத்தின் சுதந்திரநாள் விடுதலை மறுக்கப்பட்ட தமிழினத்தின் துயரநாள்.

சிறீலங்கா அரசு, தனது அறுபத்தி நான்காவது சுதந்திரநாளை, முன்னெப்போதும் இல்லாதவாறு, கோலாகலமாகக் கொண்டாடுகின்றது. 
பெப்ரவரி நான்கு, பிரித்தானிய ஆட்சி அதிகாரத்திடம் இருந்து, தன்னை விடுவித்துக்கொண்ட நாளாக இலங்கைத் தீவு முழுமையும் இந்நாளைக் கொண்டாட வேண்டியதாக இருந்தபோதும், இலங்கைத் தீவில், தமிழர் தாயகம், இந்நாளை துயரநாளாகவும், கரிநாளாகவுமே கடைப்பிடித்துவருகின்றது. 

225 கி.மீ கடந்து 7 ஆவது நாளாக பிரான்சில் தொடரும் நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைபயணம்!


காணொளி மற்றும் படங்கள் இணைப்பு:

225 கி.மீ கடந்து ஆவது நாளாக பிரான்சில் தொடரும் நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைபயணம்!

கடந்த சனிக்கிழமஇ காலை 11.20 க்கு பிரித்தானியப் பாராளுமன்ற முன்றலில் இருந்து ஜெனீவா நோக்கி புறப்பட்ட நீதிக்கும் சமாதானத்துக்குமான நடை பயணம் 225 கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்து இன்று 7 ஆவது நாளாக பிரான்சில் நாட்டில் தொடர்கின்றது.

கடந்த செவ்வாய்க்கிழமை பிரான்ஸ் நாட்டின் Dippe எனும் துறைமுகத்தை சென்றடைந்த இவர்கள் இன்றுவரை 125 கி.மீ தூரத்தை பிரான்ஸ் நாட்டில் நடந்து கடந்துள்ளனர்.

கறுப்புப் பணம்: அதிர்ச்சியூட்டும் உண்மைகள்! பாகம் -1


சுவிஸ் வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் இந்தியக் கோடீசுவரர்கள் பதுக்கியுள்ள கறுப்புப் பணம் எவ்வளவு? 25 இலட்சம் கோடி ரூபாய் முதல் 70 இலட்சம் கோடி ரூபாய்கள் வரை இருக்கலாம் என்று பல மதிப்பீடுகள் கூறப்படுகின்றன.
இந்தியாவில் உள்ள கிராமங்களின் எண்ணிக்கை 6,38,365. எழுபது இலட்சம் கோடி ரூபாயை கிராமங்களின் எண்ணிக்கையால் வகுத்தால், ஒவ்வொரு கிராமத்துக்கும் 10 கோடி ரூபாய் கிடைக்குமென்றும், அதை வைத்துப் பள்ளிக்கூடம், மருத்துவமனை உள்ளிட்ட எல்லாத் தேவைகளையும் நிறைவு செய்து விடலாம் என்றும் முழங்கினார், பாபா ராம்தேவ். ‘இந்த ஐடியா நமக்குத் தோன்றவில்லையே’ என்று எண்ணிய அத்வானி, உடனே கறுப்புப் பண எதிர்ப்பு ரத யாத்திரை கிளம்பி, “எழுபதை ஏழால் வகுத்தால் பத்து” என்று திக்கெட்டும் முழங்கினார். வகுத்தல் கணக்கின் விடையென்னவோ சரிதான். 70 இலட்சம் கோடி எப்படி வந்தது, எங்கே இருக்கிறது, அதுயார் யாருக்குச் சொந்தமானது, அதை எப்படிப் பறிமுதல் செய்வது என்பவையல்லவா விடை காண வேண்டிய உண்மையான கேள்விகள்.................... read more 

காங்கிரசு காலிகளை உதைத்து விரட்டுவோம்!

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த சில மாதங்களாக ஜனநாயக முறையில் தீவிரமாக போராடி வருகிறார்கள். இதை முறியடிப்பதற்கு மத்திய அரசு, மாநில அரசு, தரகு முதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்கள், பார்ப்பன ஊடகங்கள், காங்கிரசு – பா.ஜ.க முதலான ‘தேசிய’க் கட்சிகள் என அனைவரும் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்கியுள்ளனர்................ read more 

பத்தி எழுத்தாளர் கஜேந்திரகுமாரின் கயிறு திரிப்பு!


 பத்தி எழுத்தாளர் கஜேந்திரகுமாரின் கயிறு திரிப்பு!
திருவிளையாடல் திரைப்படத்தில் ஒரு நகைச் சுவைக் காட்சி.  மதுரையை ஆண்ட சண்பக பாண்டியனுக்கு ஓர் அய்யம்.
பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உள்ளதா?’ என்பதே சண்பக பாண்டியனின் அய்யம்.  ‘உண்டு’ என்பது மதுரை இறையனார் கருத்து.  ‘இல்லை’ என்பது புலவர் நக்கீரரின் வாதம்.

Friday 3 February 2012

பிரித்தானியாவில் நாளை மாபெரும் போராட்டம் அறிவிப்பு !

பிரித்தானியாவில் நாளை மாபெரும் போராட்டம் அறிவிப்பு !
இலங்கையின் சுதந்திர தினமானா நாளை (04.02.2011) பிரித்தானிய பிரதமர் இல்லத்திற்​கு முன் பாரிய கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. 
இலங்கையில் ஊடக அடக்குமுறை, மனிதப் படுகொலைகள், யுத்தக்குற்றங்கள், இன அழிப்பு மற்றும் காணமல் போதல் என்பன மிகவும் மலிந்து கிடக்கின்ற நிலையில் அங்கே கொண்டாடப்படும் சுதந்திர தினத்தை தமிழர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதனை தமிழர்கள் பறைசாற்றும் நாளாக, நாளையதினம் மாறவேண்டும். தமிழர்களுக்கு சுதந்திரத்தைக் கொடுக்காத நாட்டின் சுதந்திர தினம் தமிழர்களுக்கு ஒரு கரி நாள் ! 
4th Feb Saturday

1PM to 4PM OXFORD STREET 
(BTF, GTF, TCC, TGTE, Etc...)

4PM to 7PM DOWNING STREET (TCC, BTF, GTF, TGTE, Etc....)

ஒவ்வொரு தனிப்பட்ட நபரும் அறிந்துவைத்திருக்க வேண்டியது .


www.ewow.lk
தனிப்பட்டவர்கள் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க சில ஐ.நா உடன்படிக்கைகள் உள்ளன.ஆனால் எந்த அரசாங்கத்துக்கு எதிராக முறைப்பாடு செய்கிறதோ அந்த நாடு அவ் முறைப்பாட்டை அங்கீகரிக்க வேண்டும். மோசமானதும் தொடர்ச்சியானதும் மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகள்,உள்நாட்டில் எவ்வித நிவாரணமும் கிடைக்காத சந்தர்ப்............ read more 

நாம் இனி என்ன செய்யப் போகிறோம் ?

2009 முதல் இன்றுவரை நடைபெற்றுவரும் விடயங்கள் எம்மைப் பொறுத்தவரையில் நல்ல சமிக்ஞைகளாகத் தெரியவில்லை. 2009 இல் அழிக்கப்பட்ட எமது தாயக விடுதலைப் போராட்டமும் அதனுடனிணைந்த எமது கனவுகளும், நம்பிக்கைகளும். போரின் பின்னர் ஐ. நா உற்பட பல உலக நாடுகள் நடந்துகொண்ட விதங்கள். இடைக்கிடயே எமக்கு நம்இக்கை தருவதாகத் தோன்றி மின்னி மறைந்த போர்க்குற்ற விசாரணைகளுக்கான தனிநபர் கோரிக்கைகள், சனல் 4 ஒளிப்படங்கள், பா கீ மூனினால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கைகள், அவ்வப்போது காற்றில் ஆடி எரியும் மெழுகுவர்த்திப்போல தமிழகத்தின் மூலைகளில் அணையாமல் எரிந்துகொண்டிருக்கும் எம்மீதான அனுதாபக் கோஷங்கள், தற்கொடைகள் .

ஈரானிடம் 4 அணுகுண்டு தயாரிக்கும் திறன்: 100 குண்டு வைத்துள்ள இஸ்ரேல் அலறல்!

ஜெருசலேம்: 4 அணுகுண்டுகளைத் தயாரிக்க தேவையான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் தயாரித்து வைத்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதனால் தனது நாட்டுக்கு பேராபத்து எழுந்திருப்பதாகவும் அது அச்சம் வெளியிட்டுள்ளது........... read more 

எனக்கு மதுவும் மாதுவும் தந்த மஹிந்தவை நீங்களும் நம்புங்கோ: ஒட்டுக்குழு கருணா


எனக்கு மதுவும் மாதுவும் தந்த மஹிந்தவை நீங்களும் நம்புங்கோ: ஒட்டுக்குழு கருணா



ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் அமர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புபங்கேற்கச் சென்று அங்கு சிறிலங்கா அரசுக்கு எதிராகச் செயற்பட்டால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பான அனைத்து விடயங்களையும் தான் அம்பலப்படுத்துவேன் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

பொறுப்புடைமையும் நீதியும் இலங்கை அரசாங்கத்திடமிருந்து வராது: மனித உரிமைகள் கண்காணிப்பகம்


பொறுப்புடைமையும் நீதியும் இலங்கை அரசாங்கத்திடமிருந்து வராது: மனித உரிமைகள் கண்காணிப்பகம்



இலங்கையில் போர்க்காலத்தில் இடம்பெற்ற துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்புடைமையின்மை குறித்து,  மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் ஆராயப்பட வேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.

பெண்களை கொடுமை செய்யும் காட்டு மிராண்டி நாடுகளிடமும்

எந்த ஒரு பயங்கரவாத பெண்களை கொடுமை செய்யும் காட்டு மிராண்டி நாடுகளிடமும் எந்த பயங்கர ஆயுதம் இருக்க அனுமதிக்க முடியாது ஸ்ரீலங்கா இனபடுகொலை செய்ய பெரிதும் உதவிய இந்த இரான் அழிக்க பட வேண்டிய நாடே 

லட்சம் கோடி மெகா ஊழலும் - மலையாளிகளும் தமிழர்களும்

லட்சம் கோடி மெகா ஊழலும் - மலையாளிகளும் தமிழர்களும் - 
மலையாளிகளை காப்பாற்றும் மத்திய அரசு!!! 

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் தலைவர் மலையாளி கே. மாதவன் நாயரின் தலைமையில் - தனியார் நிறுவனமாகிய மல்டி மீடியா நிறுவனத்துடன் 2005-ல் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டது. 

தெரிவுக்குழுவில் இடம்பெறமாட்டோம்- விஜித்த ஹேரத் _


  இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது தொடர்பாக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவில் மக்கள் விடுதலை முன்னணி ஒருபோதும் இடம்பெறாது. தெரிவுக்குழுவானது தீர்வு விடயத்தில் காலத்தை வீணடிப்பதற்காக முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடாகும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

அத்துடன் அரசாங்கம் முதலில் தீர்வுத்திட்ட விடயத்தில் தனது திட்டத்தை வெளியிடவேண்டும். அதனைவிடுத்து அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை நடத்துவதில் அர்த்தம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
 

பிரபாகரனை சுபாஸ் சந்திரபோஸுடன் ஒப்பீடு செய்து இருக்கும் பழ. நெடுமாறன்!


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரனை இந்தியாவின் விடுதலைப் போராளிகளில் ஒருவரான சுபாஸ் சந்திர போஸ் நேதாஜியுடன் ஒப்பீடு செய்து இருக்கின்றார் தமிழ் தேசிய இயக்கத்தின் தலைவரும் தமிழ்நாடு அரசியல்வாதியுமான பழ. நெடுமாறன்.

இந்திய ஊடகவியலாளர்களை இலங்கையிலிருந்து வெளியேற்றுமாறு புலனாய்வு பிரிவினர் உத்தரவு!


இலங்கையின் நிலைமை தொடர்பாக ஆவணப்படம் ஒன்றைத் தயாரிக்க கொழும்பு சென்ற இந்தியாவின் புதிய தலைமுறை தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் இருவரை உடனடியாக நாட்டில் இருந்து வெளியேற்றுமாறு சிறிலங்காவின் அரச புலனாய்வுச்சேவையின் தலைவர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண உத்தரவிட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பிளேக்கின் வருகையால் கொழும்பில் பரபரப்பு; கூட்டமைப்பையும் சந்திப்பாராம்

news
 அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் எதிர்வரும் பதினொராம் திகதி கொழும்பு வருகிறார்.

2588 சிறுவர் துஷ்பிரயோகங்கள் பதிவு - பொலிஸ் தலைமையகம் தெரிவிப்பு

news
இலங்கையில் 2011ம் ஆண்டில் மாத்திரம் இரண்டாயிரத்து 588 சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் 
தலைமையகம் தெரிவித்துள்ளது. 
 
அதற்கமைய, 2011 ம் ஆண்டில் ஆயிரத்து 503 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களும், ஆயிரத்து 85 ஏனைய துஷ்பிரயோகங்களும் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Thursday 2 February 2012

ரவுடிகளை, நாகரீகம் தெரியா மனிதர்களை தேர்தலில் போட்டியிட வைத்தால் மக்கள் எப்படி வாக்களிப்பார்கள் – டக்ளசை கேட்ட பட்டதாரி

“தண்ணியடித்துவிட்டு வீதிகளில் கிடக்கும் ரவுடிகளை, நாகரீகம் தெரியாத மனிதர்களை தேர்தலில் போட்டியிட வைத்தால் மக்கள் எப்படி வாக்களிப்பார்கள்.” என்று பட்டதாரியொருவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேரில் கேட்டுள்ளார்................. read more 

அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு முயற்சிக்கின்றது – இராமலிங்கம் சந்திரசேகரன்

அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு முயற்சித்து வருவதாக ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்இராமலிங்கம் சந்திரசேகரன் சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் இவ்வாறு தெரிவித்துள்ளார்............. read more

தமிழ் மக்களின் ஆதரவினை அரசாங்கம் பெற்றுக் கொள்ளவில்லை!- அதுரலிய ரதன தேரர்


தமிழ் மக்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்புக்களை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ளவில்லை என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தவிசாளர் அதுரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு மக்களுக்கு உரிய முறையில் அபிவிருத்தித் திட்டங்களையோ அல்லது அரசியல் தீர்வுத் திட்டத்தையோ அரசாங்கம் வழங்கவில்லை. இதன் காரமணாகவே தமிழ் இனவாத சக்திகள் 13ஆம் திருத்தச் சட்டத்திற்கு அப்பாலான தீர்வுத் திட்டங்களை கோருகின்றன என அதுரலிய ரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்............... read more