Translate

Saturday 4 February 2012

புலிகள் அமைப்பில் 8,000 முதல் 12,000 வரையிலான போராளிகளே உள்ளனர்!

இலங்கையில் தற்போது சுமார் 3 லட்சம் இராணுவத்தினர் கடமையில் உள்ளனர். இத் தொகையானது பிரித்தானிய இராணுவத்தினரின் எண்ணிக்கையை விட அதிகம் என்பது கசப்பான உண்மையாகும். 
சமாதான காலப் பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பில் சுமார் 8000 முதல் 12000 வரையிலான போராளிகளே உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இக் கால கட்டத்தில் புலிகள் நூற்றுக்கணக்கான போராளிகளை இணைத்துள்ளதாகவும்...,


அவர்கள் எந்தப் படையணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்பது போன்ற விபரங்களையும் அமெரிக்கா சேகரித்து தமது தலைமைக்கு அனுப்பியுள்ள விடையம் தற்போது விக்கி லீக்ஸ் வழியாக வெளியாகியுள்ளது.


கிழக்கு மாகாணத்தில் இருந்த கருணா தனது படையணியுடன் பிரிந்த பின்னர் வன்னியில் உள்ள புலிகளின் எண்ணிக்கையை அமெரிக்கா துல்லியமாகக் கணக்குப் போட்டு தமது தலைமைக்குத் தெரிவித்துள்ளது. இது தொடர்பான தகவல்களை அவர்கள் திரட்டியும் உள்ளனர்.


இதற்கு அமைவாகவே அவர்கள் 2006ம் ஆண்டு தமது தலைமைக்கு இவ்வறிவித்தலை விடுத்துள்ளனர். விடுதலைப் புலிகளில் ஆள் பற்றாக்குறை நிலவுவதாகவும் இருப்பினும் அவர்கள் தொடர்ந்தும் ஆட்களைச் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் அமெரிக்க தூதரகம் தமது தலைமைக்கு செய்தியை அனுப்பியுள்ளது.


போதாக்குறைக்கு புலிகள் படையணிகள் தொடர்பாகவும், மற்றும் எந்த எந்தப் படையணிகளில் எவ்வளவு பேர் உள்ளனர் என்பது போன்ற விபரங்களையும் அவர்கள் சேகரித்துள்ளனர். இத் தகவலானது இலங்கை அரசுக்கும் பரிமாறப்பட்டுள்ளது.


இதன் அடிப்படையிலேயே கோத்தபாய ராஜபக்ஷ சுமார் 1 லட்சம் இராணுவத்தை மேலதிகமாக இணைக்க இலங்கை அரசுக்கு பரிந்துரை செய்தார் என்றும் சொல்லப்படுகிறது.


இலங்கையில் தற்போது சுமார் 3 லட்சம் இராணுவத்தினர் கடமையில் உள்ளனர். இத் தொகையானது பிரித்தானிய இராணுவத்தினரின் எண்ணிக்கையை விட அதிகம் என்பது கசப்பான உண்மையாகு

No comments:

Post a Comment