Translate

Saturday, 10 December 2011

சொன்னதைச் செய்யுங்கள் புதிது புதிதாகக் குழப்பாதீர்! தீர்வு விடயத்தில் அரசிடம் வலியுறுத்தியது கூட்டமைப்பு


சொன்னதைச் செய்யுங்கள் புதிது புதிதாகக் குழப்பாதீர்!
தீர்வு விடயத்தில் அரசிடம் வலியுறுத்தியது கூட்டமைப்பு
news
இலங்கையிலுள்ள எல்லா மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவதற்கான முயற்சியில் அரசு கூட்டமைப்பு ஆகிய இரு தரப்புகளுக்கும் இடையில் இணக்கம் காணப்பட்ட விடயங்களுக்கு மதிப்பளித்து அவற்றை அரசு செயற்படுத்த வேண்டும் என்று அரசிடம் வலியுறுத்தி உள்ளார் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

அதிகார பகிர்வு அனுபவங்களை இலங்கை அரசுடன் பகிர்ந்து கொள்ள எந்நேரமும் தயார்!; இலங்கைக்கான பிரிட்டிஷ் தூதுவர் ஜோன் ரன்கின்


அதிகார பகிர்வு அனுபவங்களை இலங்கை அரசுடன் பகிர்ந்து கொள்ள எந்நேரமும் தயார்!; இலங்கைக்கான பிரிட்டிஷ் தூதுவர் ஜோன் ரன்கின் 
essayகடந்தகால துயரங்களுக்கு இலங்கை நேர்மையான பரிகாரம் தேடுவதே தற்போதைய அதிமுக்கிய தேவை.

கேள்வி: இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்து சுருக்கமாகக் கூறுவீர்களா?
பதில்: ஒரு பீடையைப் போல கடந்த 30 வருடங்களாக இலங்கையை வாட்டி வதைத்து வந்த உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. இதைப் பிரிட்டன் பெரிதும் வரவேற்கின்றது. அரசியல் நல்லிணக் கப்பாட்டை அடைவதற்கும், நிரந்தர சமாதானத் தைக் கட்டியெழுப்புவதற்குமான அரும் பெரும் முயற்சிகளுக்கு நாம் சமத்துவ ஆதரவை வழங்க விரும்புகிறோம்.

தூக்கில் தொங்கிய நிலையில் மூவரின் சடலம் மீட்பு

  தூக்கில் தொங்கிய நிலையில் மூவரின் சடலம் மீட்பு

எப்பாவல கடிகாவ பிரதேசத்தில் மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் மூன்று பேரின் சடலங்கள் இன்று காலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்டுள்ளவர்களில் 17 மற்றும் 15 வயதுடைய பெண்களும் 27 வயதுடைய ஆண் ஒருவரின் சடலமுமே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்......... read more 

யாழில் கடத்தல்களின் பின்னணியில் இராணுவம் : அம்பலமான உண்மை


சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி யாழ்ப்பாணத்தில் இன்று நடை பெறவிருந்த ஊர்வல பேரணியை பொலிசார் நடத்த தடை விதித்ததுடன் அங்கு கூடியிருந்த மக்களையும் விரட்டி அடித்தனர்.

இதனைத் தொடர்ந்து பொலிசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்கு வாதத்தின்போது பொலிசார் தம்மிடம் இருந்த கமராக்கள் மற்றும் கையடக்க தொலைபேசி கமராக்கள் மூலம் வாய் தர்க்கத்தில் ஈடுபட்டவர்களை புனைப்படம் எடுத்தனர். இன் நடவடிக்கையில் பொலிஸ் இன்ஸ்பெக்டர் உட்பட தமிழ் பொலிசாரும் ஈடுபட்டிருந்தனர். .......... read more

யாழில் பொதுமக்கள் - பொலிசார் மோதல் : பதட்டமான சூழ்நிலை

  யாழில் பொதுமக்கள் - பொலிசார் மோதல் : பதட்டமான சூழ்நிலை



யாழ்ப்பாணத்தில் இன்ற பகல் இடம் பெறுவதாக இருந்த சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டிய பேரணி பொலிசாரின் தலையிட்டைத் தொடர்ந்து தடுத்து நிறுத்தப்பட்டது.

இன்று காலையில் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்க்கு முன்பாக பொது மக்கள் வந்து கூடிய போதிலும் அதிகாலை முதல் யாழ்ப்பாணத்தில் குறிப்பாக பஸ் நிலைய சுற்றாடலில் அதிக எண்ணிக்கையான பொலிசார் குவிக்கப்பட்டு இருந்தார்கள்........... read more

இராணுவத்திடம் சரணடைந்த பாலகுமாரன், எழிலன் நிலை என்ன?-சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி


நடந்து முடிந்ததாகக் கூறப்படும் இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது, பொதுமக்கள் உள்ளிட்ட விடுதலைப்புலிகளின் பல உறுப்பினர்களும் இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்தனர்.

ஆனால் தற்போது அவர்களின் நிலை கேள்விக் குறியாக இருப்பதுடன், அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துத் தருமாறு உறவினர்கள் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள்

தேசிய பாதுகாப்பு என்பது இன்றியமையாதது ,தேசம் பாதுகாக்கப்பட வேண்டும், எனவே தேசிய பாதுகாப்புக்கு அதி முக்கியத்துவம் கொடுப்பட வேண்டியது அவசியம். இதில் இரண்டு கருத்துக்களுக்கு இடமில்லை. ஆனால் இலங்கையைப் பொருத்தமட்டில், தேசிய பாதுகாப்பு என்பது பூச்சாண்டி காட்டும் விடயமாக மாற்றப்பட்டிருப்பது கவலைக்குரியது............... read more

இன்றைய இராசிபலன்

"VAYASU" - Award winning short film.



இந்த VIDEO கட்டாயம் வயது வந்தவர்கள் மட்டும் பார்க்கவும் . ஆமா .அப்படி என்ன இருக்கு ..? இருக்குப்பா இருக்கு ..நீங்களே பார்த்து தெரிஞ்சு கொள்ளுங்க ..!

பிரிட்டனில் பணம் மோசடி தொடர்பாக குடிவரவு அதிகாரி ஒருவருக்கு கடூழிய சிறைத் தண்டனை!!

பிரிட்டனில் பணம் மோசடி தொடர்பாக குடிவரவு அதிகாரி ஒருவருக்கு கடூழிய சிறைத் தண்டனை!!

இலங்கை போன்ற நாடுகளில் இருந்து வந்த அரசியல் தஞ்சக் கோரிக்கையாளர்களை நீண்ட காலமாக ஏமாற்றி பெரும் தொகை பணம் மோசடி செய்து வந்த குடிவரவு அதிகாரி ஒருவருக்கு பிரிட்டனில் 08 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
பிறப்பால் இந்தியரான இராதாகிருஷ்ணன் இராமகிருஷ்ணன் ( வயது – 48 ) என்பவரே அரசியல் தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு  வேலை செய்கின்றமைக்கான அனுமதிப் பத்திரம் என்கிற பேரில் போலிப் பத்திரங்களை வழங்கி வந்திருக்கின்றார்............ read more 

இலங்கை தமிழ் மாணவர்கள் விடுதிகளில் தங்கிப் பயில அனுமதி - செல்வி ஜெயலலிதா !

இலங்கை தமிழ் மாணவர்கள் விடுதிகளில் தங்கிப் பயில அனுமதி - செல்வி ஜெயலலிதா !

இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வந்த தமிழர்களின் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர், மாணவியர் விடுதிகளில் தங்கிப் பயில அனுமதி அளித்து தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:.......... read more 

அரசுடன் ஒட்டி உறவாடும் மனிதன்! சிங்களப் பெண்ணின் பெயரில் லங்காசிறி நிறுவனம்!! -இரா.துரைரத்தினம்

அரசுடன் ஒட்டி உறவாடும் மனிதன்! சிங்களப் பெண்ணின் பெயரில் லங்காசிறி நிறுவனம்!! -இரா.துரைரத்தினம்

லங்காசிறி குழுவால் நடத்தப்படும் மனிதன், கூல்சுவிஸ், ஆகிய இணையத் தளங்களில் கடந்த 04.12.2011 அன்று என்மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் வெளிவந்த செய்தி தொடர்பாக...

ஏன் அவர்கள் என்மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் செய்தியை வெளியிட்டார்கள் என்பதை தமிழ் மக்களுக்கு விளக்க வேண்டியது எனது கடமை.

சில காரணங்களுக்காக லங்காசிறி குழுவைச்சேர்ந்தவர்கள் என்மீது இந்த பழியை போட்டு தமிழ் மக்கள் மத்தியிலிருந்தும் ஊடகதுறையிலிருந்தும் என்னை ஒதுக்குவதற்கு திட்டமிட்டனர். ............. read more 

சொந்தத்தைத் தொலைத்தவர்கள் சொல்லி அழக் கூட அனுமதியில்லை! யாழில் அராஜகம்!!

சொந்தத்தைத் தொலைத்தவர்கள் சொல்லி அழக் கூட அனுமதியில்லை! யாழில் அராஜகம்!!


சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் யாழில் காணாமல் போனவர்களின் உறவினர்களின் ஆர்ப்பாட்டத்தை இரும்புக்குக் கரம் கொண்டு அடக்குவதற்காக பொலிஸாரும் இராணுவத்தினர் மற்றும் அரச புலனாய்வாளர்கள் செயற்பட்டனர்.

மக்களின் மனித உரிமைகள் தினத்தில் ஜனநாயக ரீதியில் மக்களால் போராட முடியாதவாறு இராணுவத்தினர் மோட்டார் சைக்கிளில் மக்களின் போராட்டத்தை குழப்புவதற்கு செயற்பட்டனர்............ read more 

பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளை அரவணைக்கும் திட்டம்


ஆதரவற்ற பிள்ளைகளை என்றும் அரவணைப்போம்!
அவர்களுக்கு வாழ வழி காட்டுவோம்!!
அவர்களுக்கு படிப்பறிவித்து, இருளகற்றுவோம்!!!
அவர்களுக்கு கலங்கரை விளக்காக இருப்போம்!!!!
அவர்களை உயர்த்தும் ஏணிப்படியாக எங்களை அர்ப்பணிப்போம்!!!!!...... read more 

புலம்பெயர் நாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்து சகோதரியைக் கொலை செய்த சகோதரன்!

புலம்பெயர் நாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்து சகோதரியைக் கொலை செய்த சகோதரன்



யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியில் நேற்றிரவு கூரிய ஆயுதங்கள் மூலம் கணவன், மனைவி ஆகிய இருவரும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தனர்.

கைக்கோடாரி, இரும்புக் கம்பி போன்ற ஆயுதங்களால் தாக்கப்பட்டு மயக்கமுற்ற நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மார்க்கண்டு உதயகுமார் (வயது-55) மற்றும் அவரது மனைவியான வசந்தமலர் (வயது-45) ஆகியோரே இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்கள் அவர்............... read more

தமிழர்களின் பூர்வீக கலாசார பாரம்பரிய விழுமியங்களை பாதுகாப்பது ஆசிரியர்களின் கடமையாகும்!-சீ.யோகேஸ்வரன்

ஒவ்வொரு தமிழ் ஆசிரியர்களும் தமிழர்களின் பூர்வீக கலாசார பாரம்பரிய விழுமியங்களை மாணவர்களுக்கு ஊட்டுவதிலும், அதனை பாதுகாப்பதிலும் அக்கறை காட்ட வேண்டும். இது ஒவ்வொரு தமிழ் இன ஆசிரியர்களின் கடமையாகும். இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்............ read more 

“முன்னாள் போராளிகள் காட்சிப் பொருட்களா?” – சபையில் சீறினார் விஜயகலா!


“நீங்களும் மனிதர்கள்தானே! உங்களுக்கு சகோதரர்கள் இல்லையா?, உங்களுக்குப் பிள்ளைகள் இல்லையா? ஏன் இப்படி எங்கள் தமிழ்ச் சகோதரர்களை அவமானப்படுத்துகிறீர்கள்?” நாடாளுமன்றத்தில் இவ்வாறு நேற்றுக் கொதித்தெழுந்தார் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன். அரச தரப்பினரைப் பார்த்து அவர் ஆக்ரோஷமாகச் சீறினார். புனர்வாழ்வு வழங்கப்படுவதாகக் கூறிக் கடந்த  இரண்டரை வருடங்களாக அரசினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளில் 104 பேர் நேற்று நாடாளுமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டிருந்தனர்.

'டோன்ட் ஒர்ரி சாண்டி!'


தமிழக பெண்களின் மேல் மலையாளிகளின் சொல்ல நா கூசும் பாலியல் வன்முறை

தமிழா இதை படி என்ன செய்யலாம் என்று முடிவு செய்

எல்லையில் இருக்கும் கிராமங்களில் இருந்து கேரளத்துக்கு தினமும் கூலி வேலைக்குச் செல்லும் தமிழர்கள் எண்ணிக்கை இருபதாயிரத்தைத் தாண் டும். குறிப்பாக, கேரளத்தில் இருக்கும் காபி, ஏலக்காய் எஸ்டேட்டுகளில் வேலை செய்யும் பெரும்பாலான தொழிலாளர்கள் தேனி, கம்பம், உத்தமபாளையம் பகுதிகளில் இருந்து சென்று வருபவர்கள்.

'பாரத் ஜவான்கி ஜே ' ?

இந்திய ராணுவம் ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு மாவோயிஸ்ட் போராளி பெண்ணை கொன்று விட்டு, எப்படி தூக்கி வருகிறார்கள் பாருங்க. ஒரு நாயை விட கேவலமாக.... மனிதாபிமானமற்ற முறையில் ....

இப்போதும் உங்களுக்கு சொல்லத் தோன்றுகிறதா 'பாரத் ஜவான்கி ஜே ' என்று ?

''இது என்ன வகை ஜனநாயகமோ? - மறுக்கும் ஜெ... சலிக்கும் சீமான்!

'நாம் ஏந்த வேண்டிய ஆயுதம் எது என்பதை நம் எதிரி தான் தீர்மானிக்கிறான்’ -புரட்சியாளர் மாவோ வின் வரிகளுடன் வரவேற்றார் சீமான். 

''முல்லைப் பெரியாறு விவகாரத்தில் நாம் தமிழர் இயக்கத் தோழர்கள் பல இடங்களில் வன்முறையில் இறங்கியதாகச் சொல்கிறார்களே?''

''வன்முறை வெறி யாட்டத்தை முதலில் ஆரம்பித்துவைத்தது கேரளாதான். இடுக்கியில் வாழும் தமிழர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியவர்கள், அங்கு தோட்டத்தில் பணிபுரியும் தமிழ்ப் பெண்களின் சேலையை இழுத்து அத்துமீறினார்கள். முல்லைப் பெரியாறு என்பது தமிழர்களின் உரிமைப் பிரச்னை. சொல்லப்போனால், தமிழர்கள்தான் முதலில் களம் இறங்கி இருக்க வேண்டும். ஆனால், அமைதியாகத்தானே இருந்தோம். அணையை உடைக்க வேண்டும் என்று முதலில் கிளம்பியவர்கள், தமிழர்கள் மீது தாக்குதல், பக்தர்களை கோயிலுக்குப் போக விடாமல் தடுத்தல், முதல்வரின் உருவப் பொம்மையை எரித்தல் என்று எல்லை மீறி ஆடினார்கள்.

‎''பெருந்தன்மையே நமது பலவீனம்!'' - முல்லைப் பெரியாறு விவகாரம்... முஷ்டி முறுக்கும் திருமா!

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் அனல் கிளப்பிக்கொண்டிருப்பது முல்லைப் பெரியாறு விவகாரம்தான்! 

இரண்டு வார காலமாக தினமும் காலை 10.30 மணிக்கு, கட்சி பாகுபாடு இல்லாமல் ஒன்றாக ஆஜராகிவிடும் கேரள எம்.பி-க்கள், தமிழகத்துக்கு எதிராக அரை மணி நேரம் கோஷம் போட்டுவிட்டுத்தான் நாடாளுமன்றத்துக்குள் செல்கிறார்கள். தமிழக எம்.பி-க்களோ, வழக்கம் போல ஆளுக்கு ஒரு பக்கமாக பிரிந்து நிற்கிறார்கள்.

கேரள எல்லையில் கேவல சேட்டைகள்!

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தின் எதிரொலியாக தமிழகத்தில் சில மலையாளிகளின் கடைகள் தாக்கப்பட்ட செய்திகளைத் தமிழர்களாகிய நாம் சங்கடத்தோடு படித்திருப்போம். ஆனால், கேரள எல்லையில் வசிக்கும் கிராமப்புறத் தமிழர்கள் மீதும் கேரளத்துக்கு கூலி வேலைக்குச் செல்லும் பெண்கள் மீதும் சொல்லில் வடிக்க முடியாத வன்முறைகளை அரங்கேற்றி இருக்கிறார்கள் கேரளத்தைச் சேர்ந்தவர்கள்.

கின்னஸ் கிணறு ..!


யாழ் மண்ணின் வரலாற்றுப்பாதையில் பதிவாகியுள்ள அதிசயங்களில் ஒன்றாக. ..    பிரமிப்பான நிலாவரைக்கிணறு ..!
மிக அரிதாக மட்டுமே காணக்கிடைக்கவல்ல இக்கிணற்றின் சிறப்பம்சம், இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கின்ற இதன் ஆழம்தான் ..!
   புத்துரில் இருந்து சுன்னாகம் செல்லும் வழியில் சென்றால் ..  ராசவீதிச்சந்தியில் ஒன்றும் தெரியாத சாதுவாக நம்மை பார்க்கிறது இந்தக்கிணறு. நெருங்கிச்சென்று நாமும் பார்த்தால், தலையைச்சுற்றும் அளவுக்கு மர்மத்தை தனக்குள் வைத்திருக்கிறது ..

கோடி ரூபாய் கிடைத்த நாள் இன்று ..!


நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் - பாரதி இன்று உனக்கு கோடி ரூபாய் கிடைத்தால் எவ்வளவு மகிழ்வாய் நெஞ்சமே ..!  ஆம் .., பல ஆண்டுகளுக்கு முன் அப்படியொரு நாள்தான் இன்றைய நாள்…  நீ மகிழ்ந்திடவும்,  பாடிடவும்,  உழைத்திடவும், தேடிடவும் , வாழ்ந்திடவும் உன்னில் அக்கறை கொண்ட ஒருவன் இன்றுதான் இங்கே வந்தான் ..

இன்று ஊரெல்லாம் கார்த்திகை ஒளிவெள்ளம் ..!!


இத்திருநாள், முருகக்கடவுள் அவதரித்தத் தினமாகவும் கொண்டாடப்படுகிறது.
பெரும்பாலோனோர் காலை முதல் விரதமிருந்து, மாலை பூஜை முடிந்தபின்னர், அகல் விளக்கேற்றி வரிசையாக வாசல் தொடங்கி வீடு முழுவதும் வைப்பார்கள். நகர்புறங்களில் இட நெருக்கடி இருந்தாலும், பால்கனி, மொட்டைமாடி சுவர், மாடிப்படிகட்டுகள், சன்னல் விளிம்புகள் என்று எங்கெல்லாம் இடம் இருக்கிறதோ அங்கெல்லாம் விளக்கேற்றி வைப்பார்கள். பாரம்பரியமாக களிமண்ணால் செய்யப் பட்ட சிறு அகல் விளக்குகள்தான் ஏற்றி வைக்கப்படும். ஆனால் இப்பொழுது வேறுவகை விளக்குகளும், அலங்கார மெழுகுவத்திகளும் ஏற்றப்படுகின்றன.

காணாமற்போனோரை கண்டறியும் குழு உறுப்பினர் 38 பேர் பொலிஸாரால் தடுத்துவைப்பு! மறுக்கிறது பொலிஸ்!

காணாமற்போன தமது உறவுகளை  கண்டுபிடித்துத் தருமாறு கோரி யாழ்ப்பாணத்தில் தற்போது நடைபெற்று வருகின்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக கொழும்பிலிருந்து சென்ற காணாமல்ப்போனோரை தேடியறியும் குழுவின்  உறுப்பினர்கள்  38  பேரை  அவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவிடாது பொலிஸார் தடுத்துவைத்துள்ளதாக காணாமல்ப்போனோரை தேடியறியும் குழுவின் இயக்குநர் சுந்தரம் மகேந்திரன் தெரிவித்துள்ளார்............. read more 

மூன்று விடயங்கள் தொடர்பில் மீண்டும் அரசுடன் பேசுவோம்-சுமந்திரன்!

நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரசாங்க உறுப்பினர்களுடனான பேச்சுவார்த்தையில் மூன்று விடயங்கள் தொடர்பில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்............ read more 

ஐநா மனித உரிமைகள் தினத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் வேண்டுகோள்!


இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளிலும் அவசரகால மற்றும் பயங்கரவாத சட்ட விதியின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள  சுமார் 800 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.
இது தொடர்பாகக் தமிழ் அரசியல் கைதிகளின் சார்பில் அறிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.
அதன் முழு விபரம் வருமாறு:.......... read more 

மீள்குடியேற்றப்படாத பகுதிகளில் மக்களது சடலங்களா? – ஐரோ. பாராளுமன்ற உறுப்பினர் கேள்வி!

2009இல் இறுதிப் போர் இடம்பெற்ற பகுதிகளில், இதுவரை மக்கள் சென்றுவர அனுமதிக்கப்படாத இடங்களில் பல பொதுமக்களது சடலங்கள் புதைக் கப்பட்டிருக்கலாம் என்று தான் நம்புவதாக இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் யஹாவிட் கூறியுள்ளார்............ read more 

யாழில் மனித உரிமை தினப் பேரணி:பொலிஸ் – பொதுமக்கள் மோதல்! (படங்கள்)

மனித உரிமைகள் தினத்தையொட்டி காணாமல்போனோரைக் கண்டுபிடித்துத் தருமாறு யாழில் இன்று நடைபெறும் பேரணியின்போது பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் இடம்பெற்றுள்ளது. ஊடகவியலாளர்கள் சிலரும் பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது................ read more 

லெப்.கேணல் மனோஜ் வீரவணக்க நாள்

11.12.2001 அன்று திருகோணமலை பாலத்தோப்பூரில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் மனோஜ்(மயூரன்) உட்பட்ட மாவீரர்களின் 10ம் ஆண்டு நினைவு வணக்க நாள்

லெப்.கேணல் மனோஜ் அவர்களின் வீரவரலாற்றின் ஒரு பகுதி

சர்வதேசப் பாதுகாப்பைக் கோருவதுதான் இன்று தமிழ் மக்களுக்கு உள்ள ஒரே தெரிவு


முறிவடைந்தது என அறிவிக்கப்பட்ட அரசு-கூட்டமைப்பு பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சக்திகளின் நிர்ப்பந்தம்தான் இதற்கு காரணம். அரசு தற்போது மிகப் பெரிய பொறியில் மாட்டுப்பட்டுள்ளது போலவே தெரிகிறது. அதிலிருந்து விலகுவதற்கு பேச்சுவார்த்தை என்ற நாடகத்தைத் தொடர்ந்து நடாத்தத்தான் போகிறத....... read more 

குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டுமென நவனீதம்பிள்ளை பிள்ளை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்


குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டுமென நவனீதம்பிள்ளை பிள்ளை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்
 குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டுமென நவனீதம்பிள்ளை பிள்ளை மீண்டும் வலியுறுத்தியுள்ளார் 
 
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவனீதம்பிள்ளை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

பௌத்த பிக்குகளுக்கு எதிராக வழக்குகளை விசாரணை செய்ய தனி நீதிமன்றம் -

பௌத்த பிக்குகளுக்கு எதிரான வழக்குகளை விசாரணை செய்ய தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என பிரதமர் டி.எம். ஜயரட்ன கோரிக்கை விடுத்துள்ளார்.

தனி நீதி மன்றம் அமைப்பது குறித்த வரைவு சட்ட மூலம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளு மன்றுக்கு அழைத்து வரப்பட்டவர்கள் முன்னாள் போராளிகள் அல்ல

நாடாளுமன்றுக்கு அழைத்து வரப்பட்டிருப்பவர்கள் முன்னாள் போராளிகள் அல்ல, அவர்கள் எமது உறவுகள் எனது சகோதகள் அவர்களுக்கு சீருடை அணிவித்து அழைத்து வந்து காட்டிக் கொடுத்து விட்டீர்கள். அமைச்சர்களே! உங்களுடைய சகோதகளாக இருந்தால் இப்படி செய்வீர்களா? என ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் சபையில் நேற்று தெரிவித்துள்ளார்.

சீருடை அணிவித்து முன்னாள் புலி போராளிகள் என ஏன் பகிரங்கப்படுத்த வேண்டும்? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Friday, 9 December 2011

3 கோரிக்கைகளையும் கைவிட்டு வாருங்கள்; அழைக்கிறார் கெஹலிய

3 கோரிக்கைகளையும் கைவிட்டு வாருங்கள்; அழைக்கிறார் கெஹலிய

அரசாங்கத்துடன் இடம்பெறும் பேச்சுக்களில் வடக்கு கிழக்கு இணைப்பு, பொலிஸ் அதிகாரம், காணி அதிகாரம் ஆகிய முக்கிய மூன்று விடயங்கள் குறித்து தொடர்ந்தும்.

விரிவாக கலைந்துரையாடவுள்ளதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சுமந்திரன் எம்.பி கூறியதாவது, நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடை பெற்ற அரசாங்க உறுப்பினர்களுடனான பேச்சுவார்த்தையில் மூன்று விடயங்கள் தொடர்பில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன............... read more

போர்க்குற்ற அனைத்துலக விசாரணையை வலியுறுத்த பிரித்தானிய தமிழ் அமைப்புக்கள் முடிவு!


சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்ட தமிழின அழிப்பின்போது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை தொடர்ந்து வலியுறுத்துவது என பிரித்தானியாவில் உள்ள தமிழ் அமைப்புக்கள் அனைத்தும் இணைந்து ஒருமனதாக முடிவு செய்துள்ளன............. read more 

கெஹெலிய ரம்புக்வெல்லவுகு த.தே.கூ சரியான பதில்


தாம் முன்வைத்த கோரிக்கைகளை அரசாங்கம் நிராகரிப்பதற்கான காரணங்கள் குறித்து, இன்னும் தமக்கு தெளிவுப் படுத்தப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு
தெரிவித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.கவும், காங்கிரசும் ஒன்றுதான் எனபது கேரளாவிலும் காணலாம்.


பா.ஜ.கவும், காங்கிரசும் ஒன்றுதான் எனபது கேரளாவிலும் காணலாம்.

காங்கிரஸ் கட்சிதான் இந்த முல்லைபெரியார் பிரச்சனையை ஊதி பெரிதாக்கி, பொய்யை கிளப்பி அதில் மீன் பிடிக்க, எர்நாகுல்கம் மாவட்ட, பிரவம் தொகுதிக்கான இடைதேர்தல் ஒத்திகையை பார்க்கிறது என்றால், அதற்கு போட்டி போட்டு அச்ச்தானந்தனும் அந்த தொகுதியை கைப்பற்ற அதே நாடகத்தை நடத்துகிறார்கள் என்றால், பா.ஜா.காவிற்கு எண்ண இழவு வந்தது? அவர்கள் பங்கிற்கு கோட்டயம் மாவட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து சென்ற "ஐயப்ப சாமிகள்" வரும்போது அவர்களை வழி மறித்து, அதில் இரண்டு "சாமிகளுக்கு" செருப்பு மாலை போட்டிருக்கிறார்கள். அதில்தான் தொடங்கியது மோதல்.

துப்பாக்கி முனையில் அதிரடிக் கொள்ளை! இரகசியக் கமராவில் பதிவான காட்சிகள்


தபால் நிலையத்துக்குள் நுழைந்த துப்பாக்கி ஏந்திய முகமூடிக் கொள்ளையர்களின் கையில் சிக்காமல் நழுவும் அம்மாவும் குழந்தையையுமே கீழே உள்ள வீடியோவில் காண்கிறீர்கள்.
உள்ளே புகுந்த காடையர் குழு பணத்தை தேடி அலையும் காட்சி இரகசிய கமராவில் பதிவாகியுள்ளது.
தெற்கு லண்டனில் உள்ள Tulse Hill, Lambeth என்ற இடத்திலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொள்ளையர்கள் அங்கிருந்த வாடிக்கையாளர்கள், ஊழியர்களை வெளியே செல்ல விடவில்லை.
ஒரு கொள்ளையன் அங்கிருந்த காசுக் கவுண்டருக்கு தீ வைக்கும் காட்சியும் பதிவாகியுள்ளது.
குறித்த கொள்ளையில் ஈடுபட்டவர்களுக்கு 25 வயது இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமைச்சரவை தீர்மானங்கள் ஏன் தமிழ்மொழியில் வழங்கப்படவில்லை! ஊடகவியலாளரிடம் மன்னிப்பு கோரிய அமைச்சர் கெஹலிய


அமைச்சரவை தீர்மானங்கள் அடங்கிய ஊடக அறிக்கைகள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வழங்கப்படாமை தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் மன்னிப்புக் கோரிய அமைச்ர் கெஹெலிய ரம்புக்வெல எதிர்வரும் ஜனவரி மாதத்திலிருந்து அவை தமிழில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார். 

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது............. read more

ஜேர்மனியில் தஞ்சம் புகுந்த இலங்கையருக்கு மீண்டும் பிரிட்டனில் வாழ நீதிமன்று அனுமதி


பிரித்தானியாவில் இருந்து ஜேர்மனிக்குச் சென்றுள்ள இலங்கைக் குடும்பம் ஒன்றுக்கு மீண்டும் பிரித்தானியாவில் குடியேறி வாழ்வதற்கான உரிமை உண்டு என பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வடக்கு லண்டனில் வசித்து வந்த இக்குடும்பம் சட்டத்திற்கு முரணாக தடுத்து வைக்கப்பட்டிருந்தமையால் கடந்த 6 வருடங்களுக்கு முன் ஜேர்மனியில் தஞ்சம் புகுந்தது.

இன்றைய இராசிபலன்

Raasi Palan 09-12-2011 Sun Tv


Raasi Palan 09-12-2011 Sun...

Raasi Palan 09-12-2011 Jaya Tv


 

Raasi Palan 09-12-2011 Jaya...

என்னவென்பது இந்த நிலைகெட்ட மாந்தரை?

இந்தியக் கடலோரக் காவல்படை தமிழக மீனவர்களுக்கு எதிரான மனுவை திரும்பப் பெற்றது. நாம் மெய்சிலிர்க்க வேண்டிய செயலை நம் கடலோரக் காவல்படை செய்திருக்கிறது. இதையே அடுத்த நாட்டு காவல் படை செய்திருந்தால் நாம் அவர்களை பிடித்து உச்சியே முகர்ந்திருக்கலாம். ஏனென்றால் தமிழக மீனவர்கள் மீது அடுத்த நாட்டு காவல் படை வழக்கு போடுவதுதானெ முறையும் நியாயமும். ஆனால் நடந்திருப்பது என்ன? தன் நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி சென்றார்கள் என்று, தன் நாட்டு மீனவர்கள் மீதே பொய் புகார் கொடுக்கும் ஒரே நாடு இந்தியா.

தமிழ்நாட்டில் நிலவிய பஞ்சத்தின் போது எடுக்கப்பட்டது .

நீங்கள் காணும் இந்த குடும்ப புகைப்படம் சொமாலியாவிலோ , ஆப்ரிகா விலோ எடுக்கப்பட்டது இல்லை .நம் தமிழ் நாட்டில் (அப்போதைய சென்னை மாகாணம் ) எடுக்கப்பட்டது .முல்லை பெரியார் அணை கட்டபடுவதர்க்கு முன்பு ஒரு முறை மழை பொய்த்து போய் இருந்த சமயம் தமிழ்நாட்டில் நிலவிய பஞ்சத்தின் போது எடுக்கப்பட்டது .அதன் காரணமாக இருக்கும் மக்களுக்கு உணவளிக்க முடியாததால் பல்வேறு நாடுகளுக்க...ு உணவுக்காக மக்கள் அனுப்பப்பட்டனர் .ஒப்பந்த அடிப்படையில் .பர்மா ,மலேசியா ,மொரீசியஸ் மக்கள் அங்கு அனுப்பப்பட்டனர் .இன்னும் நம் மக்கள் அங்கு வாழ்வது குறிப்படத்தக்கது .

மூளை சுறுசுறுப்புடன் இருக்கும் மீன் சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும்


மூளை சுறுசுறுப்புடன் இருக்கும் மீன் சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும்

அசைவ உணவால் ஏற்படும் தீமைகள்!


அசைவ உணவால் ஏற்படும் தீமைகள்!

அவனுக்கு உயிர் வாழ உணவு தேவை என்றளவே தெரிந் திருந்தது. நாளாக நாளாக நிலத்தைப் பண்படுத்தி, சாகுபடி செய்யக் கற்றுக் கொண்ட பின், அவனது உணவிலும் மாற்றம் ஏற்பட்டது. தானியங்கள், காய்கறிகள் பழங்களைச்  சாப்பிட ஆரம்பித்தான்.

தலைவர் ஆட்லறி அடித்தும் சிங்களவர் செல்லவில்லை; இதைவிட என்னதான் செய்வது என்கிறார் பிள்ளையான்

நில ஆக்கிரமிப்பு, இன அழிப்பு ஆகியவற்றைத் தடுப்பதற்காகவே நாங்கள் அரசியல் செய்கிறோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறுகின்றனர்.ஆனால், அம்பாறை, புளுக்குணாவையில் ஆட்லறியை வைத்து தலைவர் அடித்தார்தானே? சிங்களவர்கள் விட்டுவிட்டுப் போனார்களா? இதனை விடவும் என்ன செய்வது?
இவ்வாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கேள்வியெழுப்பியுள்ளார்............. read more 

‘உச்சிதனை முகர்ந்தால்’ திரைப்படம் கொடுமைகளின் கொடிய விளைவுகளை அலசுகிறது:காசி ஆனந்தன்


‘உச்சிதனை முகர்ந்தால்’ திரைப்படம் நச்சு இனவெறிச் சிங்கள ஆட்சியாளரை வெளிச்சத்தில் நிறுத்தி தோல் உரிக்கிறது.அடக்குமுறைச் சிங்கள இனவெறியர்களின் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளை மட்டுமல்ல- அக்கொடுமைகளின் மிகக்கொடிய விளைவுகளையும் இத்திரைப்படம் அலசுகிறது.
தென்தமிழ் ஈழமான மட்டக்களப்பில் பிறந்த புனிதவதி- சிங்கள படைவெறியர்களால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டாள் என்பது உண்மைச் செய்தி. ............. read more

முள்ளிவாய்க்காலில் சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம்: ஐ. ஒ. பிரதி நிதி

EUமுள்ளிவாய்க்காலில் போரின் போது நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு புதைக்கப்பட்டிருக்கலம் என்று ஐரோப்பிய ஒன்றிய பிரதி நிதி கூறியுள்ளார். இந்த இடங்களிற்கு செல்வதற்கு இராணுவம் அனுமதி மறுத்துவருகின்றது. மூன்று வருடமாகியும் இந்த நிலை நீடிக்கின்றது. உண்மையில் இந்த இடங்களைப்பார்வையிட்டால் பொதுமக்கள் கொல்லப்பட்டது தெரியவரால் என சிறிலங்கா அஞ்சுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார் ஐரோப்பிய ஒன்றிய பிரதி நிதி ரிச்சார்ட் ஹாவிட்....... read more