
இவர் 2007 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்துக்கும் 2010 ஆம் ஆண்டு மே மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் நடுச் சாமத்தில் மூன்று பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்து இருக்கின்றார்.
இப்பாலியல் குற்றவாளியை கண்டுபிடிக்கின்றமைக்கு லண்டனில் வாழும் தென்னாசிய சமூகத்தினர் உதவ வேண்டும் என்று வாண்ஸ்வொர்த் பொலிஸார் கோரி உள்ளனர்.
நெருக்கமான உறவினர்கள் இவரை மறைத்து வைத்திருக்கக் கூடும் என்று சந்தேகிக்கின்றனர்.
இவரை ஒளித்து வைத்திருக்கின்றமை உறவினர்களுக்கு பேராபத்தில் முடியலாம் என்றும் இவர் அடுத்து வரும் நாட்களில் தாய், மகள், சகோதரி போன்றவர்களைக்கூட வல்லுறவுக்கு உட்படுத்தக் கூடும் என்றும் பொலிஸார் எச்சரித்து உள்ளனர்.