Translate

Saturday, 29 September 2012

மகிந்தவை ஜனாதிபதியாக்கியதன் பின்னுள்ள தேசியத் தலைவரின் இராஜதந்திரம் என்ன?

மகிந்தவை ஜனாதிபதியாக்கியதன் பின்னுள்ள தேசியத் தலைவரின் இராஜதந்திரம் என்ன? 

தமிழீழத் தேசியத் தலைவரின் வீடுகளைப் பொது மக்களுக்கு காண்பித்து அதன் மூலம் மகிந்த அரசாங்கம் புதிய அரசியல் நாடகமொன்றை தொடங்கியிருக்கின்றது. தமிழீழத் தேசியத் தலைவர் வன்னியில் சகல வசதிகளுடனும் கூடிய வீட்டில் வாழ்ந்தார் என்று தென்னிலங்கை மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் பிரசாரம் செய்கின்ற சிறீலங்கா அரசாங்கமும் இராணுவமும் இதன்மூலம் தனது இருப்பைத் தக்க வைக்கும் உத்தியில் ஈடுபட்டு வருகின்றன.

147 புள்ளிகளைப் பெற்று தனது பாடசாலைகளுக்கு பெருமை தேடிக்கொடுத்த மாணவிய

147 புள்ளிகளைப் பெற்று தனது பாடசாலைகளுக்கு பெருமை தேடிக்கொடுத்த மாணவியர் Top News
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாக் கல்வி வலயத்துக்குட்பட்ட கோறளைப் பற்று வடக்கு வாகரை கோட்டத்துக்குட்பட்ட மட் - ஊரியன்கட்டு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இம்முறை 9 மாணவர்கள் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

சிறிலங்காவின் போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தும் புதிய நகர்வில் விடுதலைப் புலிகள்

சிறிலங்காவின் போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தும் புதிய நகர்வில் விடுதலைப் புலிகள்
ஜெனிவாவில் நடைபெறவுள்ள பூகோள கால மீளாய்வுக் கூட்டத்தில் சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை குறித்து அழுத்தம் கொடுக்க புதிய நகர்வு ஒன்றில் விடுதலைப் புலிகள் இறங்கியுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அநாதைகள் போல விடப்பட்டுள்ளோம் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை முல்லைத்தீவு அரச அதிபர் கூறுவது பொய் சூரியபுரம் காட்டில் உள்ள மக்கள் குமுறல்

அநாதைகள் போல விடப்பட்டுள்ளோம் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை முல்லைத்தீவு அரச அதிபர் கூறுவது பொய் சூரியபுரம் காட்டில் உள்ள மக்கள் குமுறல்
news
 அநாதைகள் போல காட்டுப் பகுதிக்குள் சுடலைக்குள் தள்ளிவிட்டு இதுவரை எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை. அவ்வாறு இருக்கும் போது அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு அரச அதிபர் கூறியிருப்பது வேதனைக் குரியது. அவர் கூறுவதில் உண்மை இல்லை. 

கிழக்கு மாகாண மக்களின் ஆணையை அரசும் சர்வதேசமும் மதிக்க வேண்டும்: சம்பந்தன்

கிழக்கு மாகாண தமிழ் மக்கள் தேர்தல் மூலமாக சரியானதொரு ஆணையை ௭மக்கு வழங் கியுள் ளனர். இம்மக்களின் ஜனநாயக ஆணையை மதிக்க வேண்டிய கடமை அரசாங்கத்துக்கும் சர்வதேச சமூகத்துக்கும் உண்டு ௭ன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலை வரும் பாராளுமன்ற உறுப்பி ன ரு மான இரா. சம்பந்தன் தெரிவித்தார். 

டெசோ தீர்மானங்களை ஐ.நா.விடம் சமர்ப்பிக்க அமெரிக்கா செல்லும் ஸ்டாலின்


இலங்கை விவகாரம் தொடர்பில் டெசோ மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அடங்கிய அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையிடம் ஒப்படைப்பதற்காக மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவொன்று  நியூயோர்க் செல்லவுள்ளது. 



தி.மு.க தலைவர் கருணாநிதி தலைமையிலான டெசோ மாநாடு கடந்த ஓகஸ்ட் மாதம் சென்னையில் நடைபெற்றது. இதன்போது, இலங்கைத் தமிழர்கள் நலனை காக்கும் வகையில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களை ஐ.நா.சபையிடம் கொடுக்க தி.மு.க முயற்சி செய்தது. ஆனால் இந்திய மத்திய அரசின் எதிர்ப்பு காரணமாறு அந்த முயற்சி தாமதமாகியிருந்தது.

இந்தியா TNA ஊடாக தீர்வை கொண்டுவந்தால் நாங்கள் கொதித்து எழுவோம்: சிங்களவர் !


இந்தியா TNA ஊடாக தீர்வை கொண்டுவந்தால் நாங்கள் கொதித்து எழுவோம்: சிங்களவர் !
இந்தியாவினூடாக இலங்கைக்கு அழுத்தங்கொடுத்து தீர்வைப் பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்குமானால், அதற்கு எதிராக சிங்கள மக்கள் கிளர்ந்தெழுவர். சிங்கள மக்களின் அனுமதியின்றி நாட்டில் எதையும் கூட்டமைப்பால் பெறமுடியாது என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்திய விஜயம் தொடர்பாக கருத்து வெளியிடும்போதே அந்த இயக்கத்தின் செயலாளர் கலாநிதி வசந்த பண்டார மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கையாளும் வழிமுறைகள் நாட்டுக்குப் பொருத்தமற்றவையாக இருக்கின்றன. அது சர்வதேச தீர்வையே எதிர்பார்க்கின்றது.

அரசாங்கம் மெய்யான அர்ப்பணிப்பை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்த வேண்டும்: ரொபர்ட் பிளேக் கோரிக்கை

அரசாங்கம் மெய்யான அர்ப்பணிப்பை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்த வேண்டும்: ரொபர்ட் பிளேக் கோரிக்கைTop News
உண்மையை கண்டறியும் ஆணைக்குழு இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் மெய்யான அர்ப்பணிப்பை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்த வேண்டுமென தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக் தெரிவித்துள்ளார்.

தமிழீழத்தை கைவிடுங்கள் - நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு சில நாடுகள் திடீர் அழுத்தம்!


ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாசையாகவுள்ள தமிழீழத்தினை கைவிடுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு சில சர்வதேச நாடுகள் கொடுக்கப்பட்ட அழுத்தம் தோல்வியில் முடிந்துள்ளது. 
இலங்கைத் தீவின் இனநெருக்கடிக்கு தீர்வுகாணும் பொருட்டு தமிழீழம் எனும் நிலைப்பாட்டினை கைவிட்டுவிட்டு பேச்சுவார்த்தை மேசைக்கு வாருங்கள் இந்த அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
தென்னாபிரிக்கா மற்றும் சுவிஸ் ஆகிய நாடுகள் உலகத் தமிழர் பேரவையுடன் பேச்சுவார்தைகளில் ஈடுபட்டதாக செய்திகள் வெளிவந்திருந்த நிலையில் குறித்த இவ்விரு நாடுகளுமே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு இந்த அழுத்தத்தினை கொடுத்ததாக தெரியவருகின்றது.

Friday, 28 September 2012

இடிந்தகரையில் கடல் மணலில் புதைந்து வைகோ அவர்கள்

இடிந்தகரையில் கடல் மணலில் புதைந்து வைகோ அவர்கள் 

இடிந்தகரையில் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் திரு வைகோ அவர்கள் பங்கேற்றார் . இறந்து போன மீனவர் சகாயத்தின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்பு அங்குள்ள தேவாலயத்தை சுற்றி வந்தார்.

கலந்தாய்வு: விடுதலை புலிகள் அமைப்பை தடை செய்வதா வேண்டாமா ?


விடுதலை புலிகள் அமைப்பை தடை செய்வதா வேண்டாமா ? அதற்கான போதுமான காரணம் இருக்கிறதா என்பதை பற்றி இன்று தில்லி அமர்வு மன்றம் இன்று மற்றும் நாளை சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் கலந்தாய்வு நடத்த உள்ளது .

முகவரி : ராஜா அண்ணாமலை புரம்
எம் ஆர் சி நகர் 
எண் 3, தாண்டவராயன் தெரு ,
இமேஜ் அரங்கில் இன்று மற்றும் நாளை காலை 11 மணிக்கு நடை பெறுகிறது .


தமிழர்கள் தவறாமல் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம் .எதிர்ப்பினை பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம் .

மீளக்குடியமர்த்தப்பட்ட ஈழத்தமிழர்கள் நிலைமை...


இருக்க இடமோ குடிக்கத் தண்ணீரோ உண்ண உணவோ இல்லாமல் நந்திக் கடலேரியை அண்டிய காட்டுப் பகுதிக்குள் கேப்பாபிலவு மக்கள் நேற்று மாலை அநாதைகளாக இறக்கிவிடப்பட்டனர்.

நேற்றுமுன்தினம் செட்டிக்குளம் முகாமைத் திடீர் என மூடிய இராணுவத்தினர் அங்கிருந்த இந்த மக்களை அப்புறப்படுத்தினர். இங்கிருந்த 360 குடும்பங்களில் கேப்பாபிலவு பகுதியைச் சேர்ந்த 110 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் நேற்றுமுன்தினம் வற்றாப்பளை மகாவித்தியாலயத்தில் இறக்கி விடப்பட்டனர். அவர்களுக்கு உணவு மட்டும் வழங்கப்பட்டது.

சீனியாமோட்டை காட்டுக்குள் தவிக்கும் மக்களை செ.கஜேந்திரன் சந்திப்ப


கேப்பாபிலவு மக்கள் அவர்களது சொந்த இடத்தில் குடியமர்வதற்கு இராணுவம் அனுமதி மறுத்துள்ளதுடன், கேப்பாபிலவை அண்டியுள்ள சீனியாமோட்டை என்னுமிடத்திலுள்ள காட்டுக்குள் அவர்களை கொண்டு சென்று பலவந்தமாக இறக்கிவிட்டுள்ளனர்.கடந்த மூன்று வருடங்களாக மெனிக்பாம் தடுப்பு முகாமில் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி இராணுவக் காவலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கேப்பாபிலவு பிரதேச மக்கள் திடீரென கடந்த 24ம் திகதி அங்கிருந்து இருந்து பலவந்தமாக இராணுவத்தினரால் அச்சுறுத்தப் பட்டு வெளியேற்றப்பட்டு தற்போது சீனியாமோட்டை என்னுமிடத்தில் அரைகுறையாக துப்பரவாக்கப்பட்டுள்ள காட்டினுள் தங்க வைக்கப் பட்டுள்ளனர். நேற்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அங்கு சென்றபோது அந்த மக்களது அவலநிலையை நேரில் பார்வையிட முடிந்தது.

உலகத்தமிழர் பேரவையின் ஊடக அறிக்கை - 27 September 2012


Clf mwpf;if      27 nrg;njk;gu;> 2012.       RNud; RNue;jpud;

cyfj; jkpou; Nguit midj;Jyf MjuTNjLk; Kaw;rpiaj; njhlu;fpd;wJ

Suren Surendiran's profile photocyfj; jkpou; Nguitapd; gpujpepjpfs; FOthdJ tz. V];.N[. ,khDNty; mbfshupd; jiyikapy; njd; Mgpupf;ff; FbauR kw;Wk; Rtp];jyhe;J ehl;L mjpfhupfis 2012Mk; Mz;L nrg;njk;gu; 23Mk; ehspYk; 24Mk; ehspYk; KiwNa re;jpj;jJ. ,yq;ifapy; jkpo; kf;fs;kPJ njhlu;e;J eilngw;WtUfpd;w nfhLikfis midj;Jyf muRfSf;F mwpaj;jUk; tplhKaw;rpapd; njhlu;r;rpahfNt ,r;re;jpg;Gf;fs; ,lk;ngw;wd.

இலங்கை நிலைமை குறித்து உலகத் தமிழர் பேரவை தென் ஆபிரிக்காவுடன் பேச்சுவார்த்தை


இலங்கை நிலைமைகள் குறித்து உலகத் தமிழர் பேரவை தென் ஆபிரிக்க அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.அவ் அமைப்பின் சார்பில் அருட்தந்தை எஸ்.ஜே. இமானுவெல் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர், தென் ஆபிரிக்க அரசாங்கப் பிரதிநிதிகளை சந்தித்துள்ளனர்.

சீனியாமோட்டை காட்டுப்பகுதிக்குள் கைவிடப்பட்ட மக்கள் குடியிருக்க வசதியில்லை; குடிப்பதற்கு தண்ணீரும் இல்லை


மெனிக்பாம் முகாமில் இருந்து வேறிடத்தில் சகல வசதிகளுடனும் குடியேற்றப் போவதாகத் தெரிவித்து திங்களன்று அழைத்துச் செல்லப்பட்ட கேப்பாப்பிலவு பகுதி மக்களை
அதிகாரிகள் சீனியாமோட்டை காட்டுப் பகுதியில் கொண்டு சென்று விட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தண்ணீரில்லா நடுக் காட்டுக்குள் கேப்பாபிலவு மக்கள் பரிதவிப்பு.


இருக்க இடமோ குடிக்கத் தண்ணீரோ உண்ண உணவோ இல்லாமல் நந்திக் கடலேரியை அண்டிய காட்டுப் பகுதிக்குள் கேப்பாபிலவு மக்கள் நேற்று மாலை அநாதைகளாக இறக்கிவிடப்பட்டனர்.

நேற்றுமுன்தினம் செட்டிக்குளம் முகாமைத் திடீர் என மூடிய இராணுவத்தினர் அங்கிருந்த இந்த மக்களை அப்புறப்படுத்தினர். இங்கிருந்த 360 குடும்பங்களில் கேப்பாபிலவு பகுதியைச் சேர்ந்த 110 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் நேற்றுமுன்தினம் வற்றாப்பளை மகாவித்தியாலயத்தில் இறக்கி விடப்பட்டனர். அவர்களுக்கு உணவு மட்டும் வழங்கப்பட்டது.

தீர்வு என்பது மக்களுக்கானது, தலைவர்களுக்கானதல்ல: சம்பந்தன்



தீர்வு தமிழ் மக்களுக்கு மாத்திரம் அல்ல, முஸ்லிம் மக்களுக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும். இறைமை மக்களுக்கு உரியது.இது தலைவருக்கோ அல்லது கட்சிக்கோ மாத்திரம் உரியது அல்ல. ஜனநாயம் இறைமையின் ஓர் அம்சம். இது மக்களுக்கு உரியது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

லண்டனில் நடந்த நா.கடந்த அரசின் பெண்கள் மற்றும் சிறுவருக்கான அமைச்சின் நிகழ்வு !

தமிழீழத் தாயகத்தில் போரினால் கணவனை இழந்த பெண்களினதும் மற்றும் ஆதரவற்ற சிறுவர்களினதும் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள் சிறுவர் முதியோர் விவகார அமைச்சு லண்டனில் நிகழ்வொன்றினை நடத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை (22.09.2012) இடம்பெற்றிருந்த இந்த நிகழ்வில் பிரித்தானிய அரசியல் பிரமுகர்கள் தமிழர் அமைப்பு பிரநிதிகள் உட்பட பன்முகத் தளங்களில் இருந்தும் பெருந்திரளானவர்கள் பங்கெடுத்து சிறப்பித்துள்ளனர்.

இந்நிகழ்வு தொடர்பாக நா.த.அரசாங்கத்தின் பெண்கள் சிறுவர் முதியோர் விவகார அமைச்சகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையின் முழுவிபரம் :

ஆடுகளம் 2012

Lobal Tamil Youth League (T-League) Presents 2nd Annual International Dance Competition.  Hosted by: TYO-UK
 
ஆடுகளம் 2012 

உலகளாவிய தமிழ் இளையோர் அவை நடத்தும் ஆடுகளம் நடனப்போட்டி இரண்டாவது தடவையாக லண்டனில் நடைபெறவுள்ளது.
 இதில் ஐந்துக்கும் மேற்பட்ட நாடுகள் பங்குபற்றவுள்ளன. இத்தாலி, ஐக்கிய இராச்சியம், மலேசியா, பிரான்ஸ், ஜெர்மனி, சிங்கபூர், ஸ்வீடன் மற்றும் கனடா ஆகிய நாடுகளிலுள்ள இளையோர்கள் பங்குபற்றும் மிகப்பிரமாண்டமான ஒரு நிகழ்ச்சி லண்டன் லோகன் ஹாலில் 6th of October நடைபெறவுள்ளது.


Thursday, 27 September 2012

"இலங்கை மீது அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் செலுத்தவேண்டும்"



இலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையில் நடந்த இறுதிப் போரின்போது நடந்ததாக கூறப்படும் போர்குற்றங்கள் உள்ளிட்டவற்றுக்கு உரியவர்களை பொறுப்பாக்குவது மற்றும் போருக்குப்பிறகு நல்லிணக்கத்தை உருவாக்குவது ஆகியவை தொடர்பில் இலங்கை அரசு மீது அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் செலுத்தவேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு ஒன்று கோரிக்கை விடுத்திருக்கிறது.

முஸ்லீம் காங்கிரஸ் பிரமுகர் வீடுகள் மீது தாக்குதல்


 அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்கள் இருவரது வீடுகளின் மீது புதன் கிழமை அதிகாலை அடையாளந் தெரியாத ஆட்களினால் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கூட்டமைப்பை ஆதரிக்காமை மு.கா. செய்த பெரும் துரோகம்


  கிழக்கில் முதலமைச்சர் பதவியுடன் ஏனைய அமைச்சுப் பதவிகளையும் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என எதுவித நிபந்தனைகளும் இன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் தரப்பினருக்கு அழைப்பு விடுத்தது.

புலிகள் மீதான தடை விசாரணையில் வை.கோ


விடுதலைப் புலிகள் மீதான தடை குறித்த சட்டத் தீர்ப்பாயத்தின் விசாரணையில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வை.கோ பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீட்டித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது. அந்தத் தடையாணை சட்டவிரோத தடுப்புச் சட்டம் தொடர்பான தீர்ப்பாயத்தில் பொது விசாரணை மேற்கொள்ளப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் கருத்தைக் கேட்டறிந்து, பின்னர் தடையாணை தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.

அதனால்தான் விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்திப் போராடினார்கள்

"கருணாநிதி, ஜெயலலிதா அல்ல... வைகோ தான் என் சாய்ஸ்!" - குல்தீப் நய்யார்

ஆக்கம்: இரா.வினோத்

மகாத்மா காந்தி, முகமது அலி ஜின்னா, மவுன்ட் பேட்டன், மன்மோகன் சிங்... பத்திரிகையாளர் குல்தீப் நய்யாரின் கேள்விகளுக்குப் பதில் சொல்லாத தலைவர்களே இல்லை. இந்தியாவின் மிக மூத்த பத்திரிகையாளர். நேருவின் காதல் கடிதங்கள், லால்பகதூர் சாஸ்திரியின் மர்ம மரணம், இந்திரா காந்தியின் எமர்ஜென்சி ரகசியங்கள்... இந்தியாவைப் பரபரக்கவைத்த குல்தீப் நய்யாரின் சாம்பிள் 'ஸ்கூப்’கள் இவை. சமீபத்தில் பெங்களூரு வந்திருந்தவரிடம் பேட்டிக்கு நேரம் கேட்டபோது இரவு 9 மணிக்கு வரச் சொன்னார். ஓபராய் ஹோட்டலின் அறையில் 'பிரிட்டிஷ் இந்தியா’வில் துவங்கி 'ராகுல் இந்தியா’ வரை பேசி முடித்து, அவருக்கு நான் 'குட் நைட்’ சொன்னபோது அதிகாலை 3.50 மணி.

எங்கு போனாலும் இறுதியில் எம்மிடம் தான் வரவேண்டும் - கூட்டமைப்புத் தொடர்பில் அரசு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவுக்குச் சென்று அந்நாட்டின் தலைவர்களுடன் ௭ன்னதான் பேச்சுவார்த்தை நடத்தினாலும் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் ௭மது நாட்டின் பாராளுமன்றத்திடமே வரவேண்டும். யதார்த்தபூர்வமான தீர்வைக் காணவேண்டுமாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் பங்கேற்க வேண்டியது அவசியமாகும் ௭ன்று ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

இன்னும் 500 பேர்தான் விடுவிக்கவுள்ளார்களாம்! நூற்றுக்கணக்கான அரசியல் பிரிவு போராளிகள் எங்கே?


தற்போது தடுப்புக் காவலில் 500 போராளிகள் மட்டுமே உள்ளதாகவும் அதில் 320 பேர் மட்டுமே புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்படுவர். எஞ்சிய 180 போராளிகளும் விடுவிக்கப்படமாட்டார்கள் என்று சிங்கள போர்குற்ற இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.


  •  பாலகுமார், அவரது மகன், புதுவை இரத்தினதுரை, லோரன்ஸ் திலகர், சுதா, உட்பட நூற்றுக்கணக்கான அரசியல் பிரிவு போராளிகள் எங்கே? 
  • 2009 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி அரச தகவல் திணைக்கள அறிக்கையின் படி 15 000 போராளிகள் சரணடைந்ததாக கூறப்பட்டுள்ளது.
  •  அவ்வாறாயின் அரசின் தற்போதைய கணக்கின்படி மீதி மூவாயிரம் போராளிகளும் எங்கே? 
  • கொல்லப்பட்டுள்ளார்களா? 
  • அல்லது இரகசிய முகாம்களில் சித்திரவதைக் கூடங்களில் இன்னமும் உள்ளார்களா?

போரின் முடிவில் 12,000 விடுதலைப் புலிகள் சரணடைந்தனர். இவர்களில் 11,500 முன்னாள் போராளிகள், பல்வேறு கட்டங்களாகப் புனர்வாழவு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தற்போது 500 பேர் மட்டுமே தடுப்புக்காவலில் உள்ளனர்.எனக் கூறியுள்ளார்.

எங்கும் இராணுவமயம்; இலங்கை சென்று திரும்பிய கனேடிய அமைச்சர் தகவல்


எங்கும் இராணுவமயம்; இலங்கை சென்று திரும்பிய கனேடிய அமைச்சர் தகவல்

Posted Yesterday, 10:40 PM
 

சோமாலியா எம்.பி.க்கள் அனைவரையும் படுகொலை செய்வோம்: ஷெபாப் எச்சரிக்கை

சோமாலியா நாட்டை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவர் பின் ஒருவராக கொல்லப்படுவார்கள் என ஷெபாப் இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமீபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் முஸ்தப் ஹாஜி முகமத் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

புலிகளின் தோல்வி வருத்தமடைய வைத்தது -பிரபல பத்திரிகையாளர் குல்தீப் நய்யார்

மண்ணுக்காகவும் மக்களுக்காவும் உண்மையிலே பல்வேறு தியாகங்களைச் செய்த புலிகள் தோற்றுப்போனதில் தனிப்பட்ட முறையில் எனக்கும் வருத்தம்தான் என 91 அகவை நிரம்பிய இந்தியாவின் பிரபல மூத்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் ஆனந்த விகடனிடம் தெரிவித்துள்ளார்.

Tuesday, 25 September 2012

நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் இங்கிலாந்து, அமெரிக்கா விஜயம்

நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் இங்கிலாந்து, அமெரிக்கா விஜயம்
 

நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கான விஜயமொன்றை மேற்கொண்டு இன்று காலை பயணமானார்.

உலக முஸ்லிம் தலைமைத்துவப் பேரவை, லண்டன் மேபெயார், டார்மூத் ஹவுஸில் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வில் 'சிறுபான்மை சமூகமொன்றை வழிநடத்துதல் - ஓர் இலங்கை அனுபவம்" என்ற தொனிப்பொருளில் தலைமைத்துவம் பற்றிய சிறப்புரையை நாளை ஆற்றுவார்.

தேர்தலின் பின்னர் அரசும் மு.காவும் இணைவதே திட்டம்

தேர்தலின் பின்னர் அரசும் மு.காவும் இணைவதே திட்டம்
essayகிழக்கைப் பொறுத்தவரை அரசுக்கு சார்பான, அரசின் கொள்கைகளை ஏற்ற ஜனாதிபதியின் தலைமைத்துவத்தை ஏற்ற அரசின் அமைச்சரவையில் அரச நாடாளுமன்றக் குழுவில் இருக்கும் கட்சிகள் கிழக்குத் தேர்தலில் வெவ்வேறாகவே போட்டியிட்டன. உண்மையில் அவர்கள் அரசுக்காகவே அரசின் சார்பாகவே போட்டியிட்டனர்.

மரநிழலில் மந்தைகள் போல் கேப்பாபிலவு மக்கள் அவலம்;அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் பெண்கள், சிறுவர்கள் கண்ணீர்

மரநிழலில் மந்தைகள் போல் கேப்பாபிலவு மக்கள் அவலம்;அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் பெண்கள், சிறுவர்கள் கண்ணீர்
news
 பலத்த எதிப்புக்கும் மத்தியில் செட்டிகுளம் நலன்புரி முகாமில் தங்கி யிருந்த கேப்பாபிலவு, மந்துவில் கிராமங்களைச் சேர்ந்த 361 குடும்பங்களும் நேற்றுத் திங்கட்கிழமை இராணுவத்தினரால்  பலத்த பாதுகாப்புடன் வற்றாப்பளைக்கு கொண்டுவரப்பட்டன.பலவந்தமாக  இந்தக் குடும்பங்கள் முல் லைத்தீவு மாவட்டத்தின் கைவேலி மற்றும் வற்றாப்பளை மகா வித்தியாலயம் ஆகிய இடங்களில் எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றித் தங்கவைக்கப்பட்டுள்ளன. அடிப்படை வசதிகள் எதுவும் இல்லா மையால் தாம் அங்கு பெரும் அவலப்பட்டுக் கொண்டிருந்ததாக அந்த மக்கள் உதயனுக்குத் தெரிவித்தனர்.

கொள்கை ரீதியாக ஒன்றுபடக்கூடிய கட்சிகள் கூட்டமைப்பில் இணையலாம்..



 தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த பொ ழுது கொள்கை, புரிந்து ண ர்வு அடி ப்ப டையில் ஒத்தியங்குவ தற் காக உருவாக்க ப்ப ட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று சர்வதேச அங்கீகாரம் பெற்ற சக்தியாக வள ர்ந் திருக்கிறது.

தமிழர்களின் வலிமையான சக்தியாக சர்வதேசம் ஏற்றுக்கொள்வதற்கு கொள்கை ரீதியாக ஒன்றுபடக்கூடிய ஏனைய கட் சிகளும் கூட்டமைப்புடன் இணைய முன் வரவேண்டும் ௭ன தமிழ்த்தேசியக் கூட்டமை ப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அழை ப்பு விடுத்துள்ளார். 

புலிகள் மீள இயங்கக் கூடிய சாத்தியங்கள் மிகவும் குறைவு - ஹரிஹரன்


புலிகள் மீள இயங்கக் கூடிய சாத்தியங்கள் மிகவும் குறைவு - ஹரிஹரன் - தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்

- தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் மீள இயங்கக் கூடிய சாத்தியங்கள் மிகவும் அரிதாகவே காணப்படுவதாக இந்தியாவின் முன்னாள் புலனாய்வுப் பிரிவு முன்னாள் உயரதிகாரி கேணல் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

1987 முதல் 1990ம் ஆண்டு வரையில் இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கையில் நிலைகொண்டிருந்த போது கேணல் ஹரிஹரன் சிரேஸ்ட புலனாய்வு அதிகாரியாக கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபாகரனை brave man என்றார் ராஜீவ்:சுப.வீ விழாவில் கலைஞர்


புத்தக வெளியீட்டு விழாக்கள் என்பவை அரசியல் பரபரப்புக்கிடையே தனக்குக் கிடைக்கும் இளைப்பாறல் என்று சொல்வார் கலைஞர்.

2ஜி வழக்கில் ஆ.ராசாவுக்கு ஜாமீன் கிடைத்த மே 15ந் தேதி, கலைஞருக்கு கூடுதல் மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைக்கும் வகையில் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது பேராசிரியர் சுப.வீ எழுதிய வானவில் புத்தகாலயத்தின் 5 புத்தகங்களின் வெளியீட்டு விழா.

கிழக்கு மாகாண மக்களுக்கு அரசியல் தெரியாது : பிள்ளையான்

கிழக்கு மாகாண முதலமைச்சராக தெரிவுசெய்யப்படுவோம் என்ற எதிர்பார்ப்பு இருந்தாக அந்த மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மேலும் 3 ஆசனங்களை கைப்பற்றியிருந்தால் அந்த ஆசை நிறைவேறியிருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

சர்வதேச அழுத்தங்களிலிருந்து மகிந்தவை காப்பாற்ற சம்பந்தன் முற்படுகிறார்- சுரேஷ் பிரேமச்சந்திரன்


சர்வதேச அழுத்தங்களிலிருந்து மகிந்தவை காப்பாற்ற சம்பந்தன் முற்படுகிறார்- சுரேஷ் பிரேமச்சந்திரன்


SAM_5262 சர்வதேச அழுத்தங்களிலிருந்து சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராசபக்சவையும் அவரது அரசையும் காப்பாற்றுவதற்காகவே சம்பந்தன் தனியாக மகிந்த ராசபக்சவை சந்தித்து வருகிறார் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
சிறிலங்கா ஜனாதிபதி இந்தியாவிற்குப் போகுமுன்பும், ஜெனிவா மகாநாட்டிற்கு முன்பாகவும் திரு.சம்பந்தன் அவர்களுடன் பேச அழைப்பு விடுத்தார். ஜனாதிபதி அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு முன்பாக தனக்கு வரும் அழுத்தங்களைக் குறைத்துக்கொள்வதற்காகவே இச்சந்திப்புக்களை ஏற்பாடு செய்து வந்தார்.

மஹிந்தருக்கு வெடிவைக்க பெரும்பாலானோர் தயாராகவுள்ளனர்


மஹிந்தருக்கு வெடிவைக்க பெரும்பாலானோர் தயாராகவுள்ளனர்

”ஜனாதிபதிக்கு வெடி வைக்க…” என்ற தலைப்பில் அண்மையில் வெளியான “சண்டே லீடர்“ பத்திரிகையில் பிரசுரமாகியிருந்த கட்டுரை ஒன்று தொடர்பில் இரகசியப் பொலிஸாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எழுச்சி மிக்க திடலில் நடைபெற்ற எமது நிலம் எமக்கு வேண்டும்


இனத்தின் விடுதலையை அடையாளப்படுத்தும் மக்கள் போராட்டங்கள் இன்று உலகில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. தமிழின விடுதலைக்காய்த் தலைவன் வழியில் போராடிவரும் தமிழ் மக்கள், ஐ நா சபையின் முன்றலில் தமது நீதியின் அவசியத்தை வலியுறுத்தி நேற்று நடாத்திய பொங்குதமிழ் நிகழ்வு தமிழர்கள் இறுதிவரை தமது விடுதலைக்காய்ப் போராடியே தீருவார்கள் என்ற உண்மையை வெளிப்படுத்தியது.
சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகரில் நடைபெற்ற எமது நிலம் எமக்கு வேண்டும் என்ற பொங்குதமிழ் நிகழ்வுடன்  நடைபெற்ற பேரணி நேற்று (22.10.2012) மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது.


ஜெனீவா ஐ.நா சபை முன்பாக முருகதாசன் திடலில் நேற்று (22.09.2012) இடம்பெற்ற பொங்குதமிழ் 2012 நிகழ்வில் ஐரோப்பிய வாழ் தேசமெங்கும் இருந்து வருகை தந்த மறாவாத் தமிழர்கள் பல்லாயிரக் கணக்கானோர்   பேரெழுச்சியுடன் கலந்து கொண்டனர்........................   read more

மெனிக்பாம் மூடல்--ஐநா எச்சரிக்கையுடன் வரவேற்கிறது


முகாமிலிருந்து வெளியேறும் மக்கள் இலங்கையில் போரினால் இடம் பெயர்ந்த மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட மெனிக்பாம் முகாமில் எஞ்சியிருந்த மக்களும் முகாமை விட்டு வெளியேறிய நிலையில், அந்த முகாம் மூடப்பட்டாலும், இலங்கை அரசு, நாட்டில் போரினால் இடம்பெயர்ந்து தற்போதும் முறையாக மீள் குடியேற்றம் செய்யப்படாமல் நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் வீடுகளில் வசிக்கும் மக்களின் நிலைக்கு தீர்வு காணுமாறு ஐநா மன்ற மனித நேய அலுவலகம் வலியுறுத்தியிருக்கிறது.

பள்ளி மாணவிகளை கடத்தி கடாபி கற்பழித்தது அம்பலம்


லிபியாவின் முன்னாள் அதிபராக இருந்தவர் மும்மர் கடாபி. சர்வாதிகாரியான இவரை எதிர்த்து பொது மக்கள் நடத்திய போராட்டம் காரணமாக பதவி இழந்தார். போராட்டத்தின் போது புரட்சி படையினரால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
தற்போது அவர் பற்றி அதிர்ச்சி தரும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. பிரான்சை சேர்ந்த பத்திரிகையாளர் ஆன்னிக் கோஜியன் என்பவர் புத்தகம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

600 இலங்கையரை திருப்பி அனுப்ப பிரிட்டன் தீர்மானம்


600 இலங்கையரை திருப்பி அனுப்ப பிரிட்டன் தீர்மானம்
பிரிட்டனில் தஞ்சமடைந்து புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 600 இலங்கையரை திருப்பி அனுப்ப அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

தமிழீழ விடுதலையை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்ற இலட்சியத்துக்காக போராடுவேன்! பதவிக்காக உயிர்வாழ மாட்டேன்! வைகோ


நான் பிறரைப் போன்று பதவிக்காக வாழவில்லை. தமிழீழ விடுதலையை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்ற இலட்சியத்துக்காக போராடுவேனே தவிர பதவிக்காக எப்போதும் உயிர் வாழ மாட்டேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சேலத்தில் கூறினார்.

சேலம் நெத்திமேடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் விஜயராஜா, இலங்கை அதிபர் ராஜபக்சவின் இந்திய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த 17-ம் தேதி தீக்குளித்தார்.
பலத்த தீக்காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி 18-ம் தேதி இறந்தார்.

அஷ்ரப் உயிரோடு இருந்திருந்தால் இப்படி ஒரு முடிவை எடுத்திரார்….

அரசுக்கெதிராக 22 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். 11 பேர் கூட்டமைப்பு சார்பிலும் 7 பேர் முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும் 4 பேர் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பிலும் தெரிவாகினர். ஐக்கிய தேசியக் கட்சி எங்களை ஆதரிக்க சம்மதித்தது.
 
 
 முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் நான் இது பற்றி பேசியபோது, இதனை மிகவும் கவனமாக சிந்தித்து நல்லதொரு முடிவை எடுப்பதாக கூறி இருந்தார். ஆனால் இறுதி நேரத்தில் அவர்கள் எடுத்த முடிவு தமிழ் பேசும் மக்களை, தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் பாதிக்கக்கூடிய முடிவாக அமைந்து விட்டது

நியாயமான தீர்வை தமிழ் மக்களுக்குப் பெற்றத்தர வேண்டும்: கிழக்கு முதல்வரிடம் இரா. துரைரெட்ணம் கோரிக்கை


கிழக்கு மாகாணத்தில் கடந்த கால ஆட்சியாளர்களின் துரோகத்தனத்தை தாங்கள் எமக்குச் செய்யாமல், எமது பிரச்சினைக்கு நியாயமான தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வெற்றிலைக்கு தமிழர்கள் வாக்களித்த முட்டாள் தனத்தால் முஸ்லீமும் சிங்களவரும் அமைச்சர்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்கள் பெருமளவில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களித்ததன் பலனாக சிங்கள பேரினவாத கட்சி ஆட்சி அமைத்ததன் பலன் இன்று முஸ்லீம்களும் சிங்களவர்களும் கிழக்கு மாகாணசபையில் அமைச்சர்களாகவும் சபாநாயகர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முஸ்லீம் காங்ரஸ் முஸ்லிம்களை கைவிட்டாலும் கூட்டமைப்பு கைவிடாது! .


கிழக்கு மாகாண சபையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சியமைக்க உதவியதன் மூலம் வரும் விளைவுகளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் விரைவில் அனுபவிக்கத்தான் போகிறது.

நியாயமான தீர்வை தமிழ் மக்களுக்குப் பெற்றத்தர வேண்டும்: கிழக்கு முதல்வரிடம் இரா. துரைரெட்ணம் கோரிக்கை


கிழக்கு மாகாணத்தில் கடந்த கால ஆட்சியாளர்களின் துரோகத்தனத்தை தாங்கள் எமக்குச் செய்யாமல், எமது பிரச்சினைக்கு நியாயமான தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அமெரிக்காவின் புதிய நகர்வு! “அச்சத்தில் மகிந்த அரசு”…!


அமெரிக்காவின் புதிய நகர்வு! தப்பாகிப்போன இலங்கை அரசின் கணிப்பு!
  • அமெரிக்க நாடாளுமன்றத் தீர்மானத்தைத் தோற்கடிக்க, இலங்கை அரசாங்கமும் தனது பங்கிற்கு முயற்சி செய்வதாகத் தகவல். இலங்கை அரசுக்கு ஆதரவான அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து, இந்தத் திருத்தப் பிரேரணையைத் தோற்கடிக்கும் முயற்சிகளில் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய ஈடுபட்டுள்ளார். இது ௭ந்தளவுக்குப் பயனளிக்கும் ௭ன்பது தெரியவில்லை. 

பிள்ளையானுக்கு அமைச்சர் பதவி


தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை சிறையில் தமிழக மீனவர் சாவு: ஆயுள் தண்டனை பெற்றவர்


இலங்கை சிறையில் தமிழக மீனவர் சாவு: ஆயுள் தண்டனை பெற்றவர்ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது62). மீனவரான இவர் கடந்த 2004ம் ஆண்டு மீன்பிடிக்க சென்றபோது, இலங்கையின் தலைமன்னார் போலீசார் கைது செய்தனர். அவர் மீது போதைப்பொருள் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணை முடிவில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து உள்ளூர் கோர்ட் தீர்ப்பளித்தது. 

மன்னார் மீனவர்களின் விவகாரம் தொடர்பாக ரிஷாத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை அவதானிக்க, ஜெனீவா பிரதிநிதி இலங்கை விஜயம்.

Posted Image
மன்னார் உப்புக்குளம் மீனவர்களின் விவகாரம் தொடர்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத் தையடுத்து அமைச்சர் ரிஷாத் பதி யுதீ னுக்கு ௭திராக தொடரப்பட்டுள்ள வழ க்கு விசா ர ணைகளை அவதானிக்கும் பொருட்டு ஜெனீ வாவில் அமைந்துள்ள சர்வதேச பாராளுமன்ற உறுப் பினர் களின் ஒன் றி யம் தனது பிரதிநிதி யொரு வரை இலங் கை க்கு அனு ப்பி வைத்துள்ளது.

எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும்: வைகோ

இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச விஜயத்தை கண்டித்து தீக்குளித்த வாலிபர் விஜயராஜா குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் வழங்கினார் வைகோ.
விஜயராஜாவின் சொந்த ஊரான சேலத்திற்கு சென்ற வைகோ, அவரது வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அங்கு நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது, தீக்குளிப்பவர்களை நான் ஆதரிக்க வில்லை. இருப்பினும் எதற்காக தீக்குளித்தார்கள் என்பதை நாம் நினைவு கூர வேண்டும்.