Translate

Tuesday, 25 September 2012

பிள்ளையானுக்கு அமைச்சர் பதவி


தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேசியப் பட்டியல் ஆசனமொன்றின் மூலம் பிள்ளையானுக்கு நாடாளுமன்ற உறுப்புரிமை வழங்குவது குறித்துக் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தமது பதவியை இராஜினாமா செய்வார் எனவும், அந்த வெற்றிடத்திற்கு பிள்ளையான் தெரிவு செய்யப்படுவார் எனவும் ஊகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, தமது அரசியல் எதிர்காலம் தொடர்பில் பிள்ளையான் இன்று கொழும்பில் செய்தியாளர் சந்திப்பொன்றில் அறிவிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment