Translate

Saturday, 2 June 2012

வடமகாணத்திலுள்ள ஒரு குடும்பத்துக்கு தலா 1 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது _


  வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் வடமாகாணத்திலுள்ள ஒரு குடும்பத்துக்கு தலா 1 மில்லியன் ரூபா வீதம் செலவிடப்பட்டிருப்பதாக வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

2009ஆம் ஆண்டு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட வடமாகாண செயலணிக் குழுவால் பல பில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தித் திட்டங்கள் நன்கொடைகள் மற்றும் கடன்கள் ஊடாக முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அபிவிருத்திப் பணிகள் மிகவும் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்ணிவெடி அகற்றும் பணிகள் முடிவடையும் தறுவாயில் இருப்பதாகச் தெரிவித்துள்ள சந்திரசிறி, இந்த மக்களுக்கான மீள்கட்டுமானப் பணிகள், சுகாதாரம், கல்வி, வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
_

Tuesday, 29 May 2012

சண்டிலிப்பாய் ஐயனார் ஆலயத்தில் 20 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளை _

சண்டிலிப்பாய் கோவிலில் கடந்த வியாழக்கிழமை பகல் வேளை கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இக்கொள்ளையில் 130 வருட பழைமை வாய்ந்த மூன்று ஐம்பொன்னிலான 75 கிலோ கிராம் நிறையுள்ள விக்கிரகங்கள், தாம்பாளங்கள், குத்துவிளக்குகள், பஞ்சாராத்திகள் அனைத்தும் கொள்ளையர்களால் திருடப்பட்டுள்ளது. இவற்றின் இன்றைய பெறுமதி ரூபா 20 இலட்சத்துக்கும் மேற்பட்டது என ஆலய நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

தனி ஈழ கோரிக்கையுடன் கருணாநிதி டெல்லியின் உண்ணாவிரதம் இருப்பாரா?


தனி ஈழ கோரிக்கையுடன் கருணாநிதி டெல்லியின் உண்ணாவிரதம் இருப்பாரா?தமிழீழம் பற்றி பேசிவரும் திமுக தலைவர் கருணாநிதி முடிந்தால் தனி ஈழம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் டெல்லியில் உண்ணாவிரதமிருக்கட்டும் பார்க்கலாம் என பாமக நிறுவனர் டாக்டர் ரமாதாஸ் சவால் விடுத்துள்ளார்.

சிறிலங்காவுக்கு எதிராக திரும்புகிறார் தாமரா – தடம்மாறுவதாக குற்றச்சாட்டு


ஜெனிவாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக பணியாற்றும் தாமரா குணநாயகம் சிறிலங்காவின் இராஜதந்திர சேவையில் இருந்து விலகிக் கொள்ளவுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 


அண்மையில் கியூபாவுக்கான தூதுவராக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இவரை இடமாற்றம் செய்ததை அடுத்தே அவர் இந்த முடிவுக்கு வந்துள்ளார். 

தமிழரசுக் கட்சியின் மாநாட்டைக் குழப்ப முயற்சிக்கவில்லை:த.ம.வி.பு.க _


  தமிழரசுக் கட்சியின் 14வது தேசிய மாநாடு மட்டக்களப்பில் நடைபெற்ற வேளை அதனைக் குழப்புவதற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி முயற்சித்ததாக தெரிவிக்கப்பட்ட கருத்தை முற்றாக மறுப்பதாகத் தெரிவித்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளரும் மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன், 14வது தேசிய மாநாட்டில் நடைபெற்ற குழப்பங்களுக்கும், எமது கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். 

தமிழர் பகுதிகளில் இராணுவப் பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும்:யாழ்.ஆயர் _


  "தமிழர் பகுதிகளில் அதிகளவான இராணுவப் பிரசன்னம் காணப்படுகிறது. இது குறைக்கப்பட வேண்டும். சிவில் கடமையில் இவர்களது தலையீடு அதிகமாகவே உள்ளது. இலங்கை இனப் பிரச்சினைத் தீர்வுக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு காலம் தாழ்த்தாது அரசுடன் பேச வேண்டும்" என யாழ்ப்பாணம் வந்த அவுஸ்ரேலியத் தூதுவரிடம் யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்தார்.

மகிந்தவுக்கு சவாலாக அமையும் பிரித்தானியப் பயணம்!


சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் பிரித்தானிய பயணம் சிறிலங்காவுக்கு கடும் சவாலாக மாறியுள்ளது.
பயணத்திற்கான தேதியை சிறிலங்கா அரச தரப்பு வெளிப்படையாக தெரிவிக்காத போதும், கடந்த முறைப் பயணம் போல் இம்முறைப் பயணம் கேள்விக் குறியாகிவிடக்கூடாது என்பதில் வலுதீவிரமாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யக்கோரி வெலிக்கடை சிறை முன்பு தமிழ் சிங்கள அரசியல் தலைவர்கள் ஆர்ப்பாட்டம்


தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யக்கோரி வெலிக்கடை சிறை முன்பு தமிழ் சிங்கள அரசியல் தலைவர்கள் ஆர்ப்பாட்டம்
என்ன குற்றம் என்பதே தெரியாமல் பல்லாண்டுகளாகச் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரி இன்று பகல் 12மணியளவில் வெலிக்கடை சிறைச்சாலையின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..................  read more

பீரிஸ் என்ன கூறினாலும் அமெரிக்கா அதை நம்பாது; இராஜாங்க பேச்சாளர் விக்டோரியா


 
வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் எதைக் கூறினாலும் நாம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தின் பின்னாலேயே நிற்போம் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

வாசிங்டனில் நடைபெற்ற நாளாந்த செய்தியாளர் சந்திப்பில் இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்டோரியா நூலன்ட் இதனைத் தெரிவித்தார். இலங்கை வெளிவிவார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், வூட்ரோவில்ச் நிலையத்தில் உரையாற்றியபோது அமெரிக்கா உள்ளிட்ட 24 நாடுகளின் ஆதரவுடன் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை நிராகரிப்பதாகக் கூறியதை செய்தியாளர்கள் அவரிடம் சுட்டிக்காட்டியிருந்தனர்.

அதற்குப் பதிலளித்த இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்டோரியா நூலன்ட், இலங்கையுடனான சந்திப்புத் தொடர்பாக அழகாகவும் விரிவாகவும் கடந்த வெள்ளிக்கிழமை பேசியதாக நினைக்கிறேன். அப்போது முழுமையான விபரங்களை வெளிப்படுத்தினேன். நாங்கள் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தின் பின்னால் நிற்கிறோம். அதன்படியே செயற்படுகிறோம். அதையே தொடர்வோம் என்று கூறியுள்ளார்.

பீரிஸ் எதைக் கூறினாலும் அமெரிக்கா ஜெனிவாத் தீர்மானத்தின் பின்னாலேயே நிற்கும் என்ற கருத்து அமைச்சர் பீரிஸின் கதையை அமெரிக்கா நம்பவில்லை என்பதையே சுட்டிக் நிற்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். அதேவேளை இச் செய்தியாளர் சந்திப்பில் சரத் பொன்சேகா விடுதலை தொடர்பாக அவர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காப்புரிமை: வலம்புரி


அரசியல் கைதிகளே இல்லையெனக் கூறி தமிழரின் விடுதலையை மறுக்கிறது அரசு: அமைச்சர் நிமால்



அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை. உண்ணாவிரதமிருந்துவரும் கைதிகள் சிறைச்சாலையில் வழங்கப்படும் உணவைத் தவிர ஏனைய உணவுகளை உட்கொள்கின்றனர் என்று அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்வதற்கு எளிதில் நடவடிக்கை எடுக்கமுடியாது என்றும், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கும் யாழில் படையினர் நிலைகொண்டுள்ளதற்கும் எதுவித சம்பந்தமுமில்லை என்றும் அவர் கூறினார்.

200 புலிகள் சேர்ந்தால் சிறிலங்காவின் தலைவிதியை மாற்றிவிடுவார்களாம்!- உணருமா தமிழினம்?


இருநூறு புலிகள்- ("தீவிரவாதிகள") தமிழர்கள் ஒன்று சேர்ந்தால் சிறிலங்காவில் தற்போது இருக்கும் நிலையினை தலைகீழாக மாற்றிவிடுவார்கள் என முன்னாள் சிறிலங்கா இராணுவத்தளபதி சரத்பொன்சேகா தெரிவத்துள்ளார்.

விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மீண்டும் கைது செய்யப்படுவது குறித்து தமிழகப் பத்திரிகை ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே சரத்பொன்சேக இவ்விடையத்தை குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளைத் தொடரத் தயார்!

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளைத் தொடரத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் அரசாங்கத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை தொடர விரும்புவதாக சுரேஸ் பிரேமசந்திரன் சிங்கள இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே மேற்கண்டவாறு  தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது:

ஆஸியில் பெண் காவலாளி முன், ஆடை களையப்பட்டு அச்சுறுத்தப்பட்ட இலங்கை அகதி!

அவுஸ்திரேலிய சிட்னி வில்லாவூட் தடுப்பு முகாமில் உள்ள இலங்கை அகதி, பெண் காவலர்கள் முன் தனது உள்ளாடை களைய வேண்டும் என பணிக்கப்பட்டு பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளார்.

சுவேந்திரன் என்ற இலங்கை அகதி இது தொடர்பில் உளவுத்துறை பிரிவுக்கு முறைப்பாடு செய்துள்ளார்.

படையினரின் அத்துமீறல்களால் கிளி. கிருஷ்ணபுர மக்கள் அவதி.

கிளிநொச்சி கிருஷ்ணபுர மக்கள் சிறஙீலங்கா ஆக்கிரமிப்புப் படையினரின் தொடரும் கெடுபிடிகள் கரணமாக அவதிப்பட்டு வருவதாக கிளிநொச்சி செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

சிறுவயதில் தமிழர்கள் என்றால் யார் என்று எனக்குத் தெரியாது !


நான் சிறுவயதாக இருந்த காலகட்டத்தில், தமிழர்கள் என்று ஒரு இனம் இருப்பதே எனக்குத் தெரியாது என்று கோத்தபாய BBC நிருபருக்குத் தெரிவித்து காமடி பண்ணியுள்ளார். பல பொதுமக்கள் காணமல் போவது தொடர்பாகவும், இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டது தொடர்பாகவும் BBC செய்தியாளர் கோத்தபாயவிடன் கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த கோத்தபாய, வடக்கு தமிழர்களுக்கு மட்டும் சொந்தமல்ல முழு இலங்கைக்கும் சொந்தம் என்று கூறியுள்ளார். அங்கே சிங்களவர்கள் காணிகளை வாங்கலாம் என்று தெரிவித்த அவர், தான் சிறுவயதில் அம்பாந்தோட்டையில் இருந்தவேளை அங்கே தமிழர் என்று ஒரு இனம் இருக்கவில்லையாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Through spiritual research, SSRF has identified and recommends the following.......


Through spiritual research, SSRF has identified and recommends the following mudrā, or posture, that is most conducive to gain the maximum divine energy through prayer.

The first stage in this mudrā is raising one’s hands in prayer with the thumbs gently touching the mid-brow region or the Ādnyā-chakra (the spiritual energy centre at the mid-brow region). It is best to begin praying after we are in this position.

யாழில் விடுதி நடாத்தி “மாமா” வேலை பார்த்தவரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு


யாழ்.குடாநாட்டில் விருந்தினர் விடுதிகளில் அதிகரிக்கும் காதல் ஜேடிகளின் காமலீலைகள். இதனை முற்றாக நிறுத்தவதற்கு யாழ்.மாநகர சபை நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளது.

Monday, 28 May 2012

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் 14ஆவது தேசிய மாநாடு மட்டக்களப்பில் ஆரம்பமானது!

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் 14ஆவது தேசிய மாநாடு மட்டக்களப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமைகாலை 9.30 மணிக்கு மேளவாதியம் முழங்க கோலாகலமாக ஆரம்பமானது.
கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா சம்பந்தன் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட அதிதிகள் அழைத்துவரப்பட்டனர்.
அதனையடுத்து மாநாட்டின் ஆரம்பிப்பையொட்டி சம்பந்தன் கட்சிக் கொடியினை ஏற்றிவைத்து அரம்பித்து வைத்தார்.

தேமுதிக உறுப்பினரை ரகசியமாக யாழ்ப்பாணம் அனுப்பிய விஜயகாந்த்


இலங்கைத் தமிழர்களை வைத்து அரசியல் செய்து வரும் திமுக, அதிமுகவிற்கு மத்தியில் தற்பொழுது தேமுதிகவும் களமிறங்கியுள்ளது.
தமிழக அரசியல் தலைவர்கள், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள் ஆகியோர் அரசு அனுமதி பெற்று தூதுக்குழுக்களில் இணைந்து இலங்கை செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

சர்ச்சையை கிளறிவிட்டிருக்கும் பிரிட்டிஷ் தூதுவரின் கருத்துகள்

வடக்கு, கிழக்கில் பொருத்தமற்ற வகையில் அதிகளவிலான இராணுவப் பிரசன்னம் இருப்பதாக பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் தெரிவித்திருந்தமை இலங்கையில் சர்ச்சையை கிளறிவிட்டிருக்கிறது. “நாட்டின் ஏனைய பகுதிகளில் காணப்படும் இராணுவப் பிரசன்ன மட்டத்தில் வடக்கு, கிழக்கில் இராணுவ பிரசன்னம் இருக்க முடியுமென நாம் கருதுகிறோம். தற்போது தொடர்ந்தும் நாம் வட, கிழக்கில் வைத்திருக்கும் பாரிய அளவிலான இராணுவ பிரசன்னத்திலும் பார்க்க ஏனைய பகுதிகளிலுள்ள இராணுவ பிரசன்னத்தின் அளவுக்கு வட,கிழக்கில் கொண்டிருக்க முடியுமென கருதுகிறோம்’ என்று பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் ஜோன் ரன்கின் கூறியிருந்தார்.

வடக்கு தமிழர் பகுதி என்று கருத முடியது

பிரிவினைவாத போர் இடம்பெற்ற இலங்கையின் வட பகுதியை பெருமளவில் தமிழர்கள் வாழும் பிரதேசமாக கருத முடியாது என பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.

பீபீசி செய்திச் சேவைக்கு வழங்கியுள்ள விசேட பேட்டியிலேயே பாதுகாப்புச் செயலாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புலிகள் ஆதரவு தலைவர்களுக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் நடத்திய உண்ணாவிரதம் பிசுபிசுப்பு


தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படும் அரசியல் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காங்கிரஸ் கட்சி நேற்று நடத்திய போராட்டம் பிசுபிசுத்துப் போனது. ராகுல் மக்கள் சேவகர் பேரவை சார்பில் சென்னை அண்ணாசாலை மின்வாரிய பணியகத்துக்குப் பின்புறம் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.

தமிழரசுக் கட்சியின் மாநாட்டை குழப்ப மேற்கொண்ட பிள்ளையானின் செயற்பாடு அனைத்தும் தோல்வி


இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய இம்மாநாட்டை குழப்ப வேண்டும் என்ற பிள்ளையானின் செயற்பாடு அனைத்தும் தோல்வி கண்டது. தமது எண்ணம் நிறைவேறவில்லை என்ற வேதனையுடன் தமது சகாக்கள் மீது கோபத்துடன் இருக்கின்றார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

ஆயர் மீது அவதூறு பரப்பிய அமைச்சர் றிசாட் பதியூதீனுக்கு எதிராக மன்னார் மாவட்ட மக்கள்


மன்னார் மறைமாவட்ட ஆயர் மீது அவதூறு பரப்பிய அமைச்சர் றிசாட் பதியூதீனுக்கு எதிராக மன்னார் மாவட்ட மக்கள் பேதங்களை மறந்து ஒன்றுபட்டு தமது எதிர்ப்புக் குரலை தெரிவித்திருப்பதுடன் பல்வேறு சமுக அமைப்புக்களும் கடுமையாக கண்டித்துள்ளன.நேற்று காலை மன்னாரில் அமைச்சர் றிசாட்டிற்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கிறிஸ்த்தவ இந்து மதங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அமைச்சருக்கு எதிரான பதாகைகளை ஏந்தியவாறு கண்டன ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்றிருந்தனர்.

LLRC பரிந்துரைக்கு பொன்சேகா ஆதரவு: இலங்கையில் மனித உரிமை மீறல் இருப்பதாகவும் தெரிவிப்பு

Posted ImageLLRC பரிந்துரைக்கு பொன்சேகா ஆதரவு: இலங்கையில் மனித உரிமை மீறல் இருப்பதாகவும் தெரிவிப்பு

தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் அனைவரின் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டு அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் அல்லது அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

இலங்கை எதிர்நோக்கும் உண்மையான சவால்

புலம்பெயர்ந்த தமிழர்களினால் முன்னெடுக்கப்படுகின்ற அரசியல் செயற்பாடுகள் இலங்கைக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக கூறுகின்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய விவகாரங்களில் சர்வதேச சமூகத்தின் முன்னணி வல்லாதிக்க நாடுகள் காட்டுகின்ற அக்கறைக்கும் புலம்பெயர் தமிழர்களின் பிரசாரங்களே பின்புலமாக இருப்பதாக குறைகூறுகிறது. இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற பாரிய பொருளாதார அபிவிருத்திப் பணிகளை சீர்குலைப்பதை நோக்கமாகக் கொண்டு செயற்படுவதாக புலம்பெயர் தமிழர்களைக் குற்றஞ்சாட்டும் அரசாங்கம் அவர்கள் மத்தியிலுள்ள அமைப்புக்களினால் முன்னெடுக்கப்படுகின்ற இலங்கைக்கெதிரான பிரசாரங்களை முறியடிப்பதையே அதன் பிரதானமான இராஜதந்திர செயற்பாடாக மாற்றி இருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இராணுவமயத்தைக் குறைப்பதற்கு இயலாமல் இருப்பதற்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் இருக்கக்கூடிய ஈழம்வாதிகளின் அச்சுறுத்தலையே அரசாங்கம் காரணம் காட்டுகிறது.

நவநீதம்பிள்ளையின் இரண்டாவது பதவிக்காலம்

ஜெனீவாவில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளைக்கு இரண்டாவது பதவிக்கால நீடிப்பு அரைமனதுடன் வழங்கப்பட்டிருப்பதாக தென்படுகிறது. தென்னாபிரிக்காவின் முன்னாள் நீதிபதியாகவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலும் பணிபுரிந்த நவநீதம்பிள்ளை 2008 செப்டெம்பரில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டிருந்த அவரின்  முதலாவது பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் மேலும் இரு ஆண்டுகளுக்கு அவரின் சேவைக்காலத்தை நீடிக்க ஐ.நா. பொதுச் சபை அங்கீகரித்துள்ளது. 

நாடுகடந்த தமிழீழ அரசின் வானொலியை சிறிலங்காவில் தடுக்க முடியாது – அனுச பல்பிட்ட

Posted Imageநாடுகடந்த தமிழீழ அரசினால் அண்மையில் தொடங்கப்பட்ட சிற்றலை வானொலி ஒலிபரப்பை சிறிலங்காவில் கேட்காமல் தடுக்க முடியாது என்று சிறிலங்காவின் தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணையத்தின் பணிப்பாளர் நாயகம் அனுச பல்பிட்ட தெரிவித்துள்ளார்.

“நாடு கடந்த தமிழீழ அரசினால் நடத்தப்படும் சிற்றலை வானொலி ஒலிபரப்பு சமிக்ஞைகளை தடுப்பதற்கான கருவிகள் எம்மிடம் இல்லை.

பிரித்தானியர்களுக்குக் குழந்தை பெற்றுக்கொடுக்கும் இந்திய வாடகைத்தாய்மார்


வாடகைத்தாய்மூலமாகக் குழந்தை பெறும் தொழில் பெரும்பாலும் பிரித்தானியர்களாலேயே பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றதாக அறியப்படுகின்றது.

தற்போது 1000 வாடகைத்தாய்ப் பரிசோதனை நிலையங்கள் உள்ளன. பெரும்பாலான அனைத்திலுமே பிரித்தானியப் பெற்றோர்களுக்காகக் குழந்தைபெற்றுக்கொடுக்கும் பெண்களே காணப்படுகின்றனர்.

மண்டைதீவில் கலாசாரச் சீரழிவு! கண்ணை மூடித் தூங்கும் காவல்துறை!!


மண்டைதீவில் கலாசார சீரழிவில் ஈடுபட்ட இரு குடும்பஸ்தர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த போதும் அவர்கள் மீது எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் விடுவிக்கப்பட்டதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

சென்னை ரசிகர்களை ஏமாற்றிய திரிஷா:கடுப்பில் ரசிகர்கள்!


நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளும் மோதின.

இந்த இறுதிப் போட்டியைக் காண பிரபல நட்சத்திரங்கள் பலர் மைதானத்திற்கு வந்திருந்தனர். நடிகை திரிஷாவும் மைதானத்திற்கு இப்போட்டியைக் காண வந்திருந்தார்.