
மன்னார் மறைமாவட்ட ஆயர் மீது அவதூறு பரப்பிய அமைச்சர் றிசாட் பதியூதீனுக்கு எதிராக மன்னார் மாவட்ட மக்கள் பேதங்களை மறந்து ஒன்றுபட்டு தமது எதிர்ப்புக் குரலை தெரிவித்திருப்பதுடன் பல்வேறு சமுக அமைப்புக்களும் கடுமையாக கண்டித்துள்ளன.
நேற்று காலை மன்னாரில் அமைச்சர் றிசாட்டிற்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கிறிஸ்த்தவ இந்து மதங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அமைச்சருக்கு எதிரான பதாகைகளை ஏந்தியவாறு கண்டன ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்றிருந்தனர்.
இதன்போது அமைச்சருக்கு எதிரான தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது காலை 10மணிக்கு புனித செபஸ்திரியார் தேவாலயத்தில் ஆரம்பமான ஆர்ப்பாட்டம் பிற்பகல் 1மணிவரையும் நடைபெற்றது. இதன்போது சமுக அமைப்புகளும் கிறிஸ்த்தவ மதத்தலைவர்களும் தமது கடுமையான கண்டனத்தை தெரிவித்ததுடன் தமிழ் மக்களின் உரிமைக்குரலை நசுக்க விடமாட்டோம் எனவும் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment