Translate

Saturday 25 June 2011

அகதிகளை திருப்பி அனுப்புவதை தடுக்க மாபெரும் ஆர்ப்பாட்டம் மக்களே வருக ….!


அகதிகளை திருப்பி அனுப்புவதை தடுக்க 

மாபெரும் ஆர்ப்பாட்டம் மக்களே வருக ….!


மக்களே வருக !….........மக்களே வருக !....… 


26.06.2011 ஞாயிற்றுக்கிழமை 



மாலை 4 மணி முதல் 7 மணி வரை 


பிரதமர் அலுவலக இல்லம் இல.10 டவுணிங் வீதி (DOWNING STREET, LONDON) இலண்டன் SW1A 2AA முன்பாக       


கொலை சித்திரவதை கற்பழிப்பு அடக்குமுறை சொத்தழிப்பு என சொல்லணாத் துயரங்களால் துன்பப்படுகின்ற இக்கால கட்டத்தில் தஞ்சம் கோரிப் பிரித்தானியாவிற்கு வந்துள்ள ஈழத்தமிழர்களை இனவெறிபிடித்த சிறிலங்கா அரசின் கரங்களில் ஒப்படைப்பதைத் தடுத்து நிறுத்திட இன உணர்வுடன் ஒன்றுதிரண்டு குரல் கொடுப்போம்.
உறவுகளை காக்க உணர்வுடன் எழுவோம்.

இலங்கை கிரிகெட் அணிக்கு எதிராக இளையோர் போராட்டம்: காணொளி !


இலங்கை கிரிகெட் அணிக்கு எதிராக இளையோர் போராட்டம்: காணொளி !

பிரித்தானிய பிரிஸ்டல் பகுதியில் இன்று நடைபெறும் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக தமிழ் இளையோர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். ஆளும் மஹிந்த அரசாங்கத்தின் மாத்தறைக்கான நா.உ ஆகவுள்ள இலங்கை கிரிக்கெட் விளையாட்டாளர் சனத் ஜெயசூரிய, இன்று சனிக்கிழமை பிரித்தானியா பிரிஸ்ரலில் நடக்கும் ஆட்டத்தில் இலங்கை அணியில் இணைந்து கொள்கிறார். இதனைக் கடுமையாக எதிர்த்து தமிழ் இளையோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்......... read more

கண்தானம் செய்யுங்கள்: ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்

சென்னை, ஜூன்.- 21 - இளைய தளபதி விஜய்யின் பிறந்த தினம் ஜூன் 22-ம் தேதி வருகிறது. அவர் தன் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு மக்கள் இயக்கத்தினருக்கும் அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- என் உயிருக்கும் மேலான அன்பு ரசிகர், ரசிகைகளே, மக்கள் இயக்கத் தோழர்களே, என்னை நேசிக்கும் தமிழ் நெஞ்சங்கள், எனது பிறந்த நாளை ஏழை-எளியவர்களுக்கு நற்பணி செய்யும் நாளாக கொண்டாடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தானத்தில் சிறந்த தானம் கண் தானம். நாம் மறைந்தபின் நமது கண்களை இன்னொருவருக்குக் கொடுப்பதால் மீண்டும் இந்த மண்ணில் நாம் வாழும் பாக்கியம் கிடைக்கிறது............ READ MORE  

இறந்த பெண் திடீரென எழுந்ததால் அதிர்ச்சி!

திருவனந்தபுரம் : இறந்ததாக கருதி பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லும் போது பெண் திடீரென எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கேரளாவில் எர்ணாகுளம் அருகே உள்ள பரவூர் பூசாரிப்படி பகுதியை சேர்ந்தவர் லெனின். இவரது மனைவி மணி (68). இவர்களுக்கு அனீஷ்குமார் என்ற மகனும், அனிதா என்ற மகளும் உள்ளனர். கணவன் மற்றும் குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மணி அதே பகுதியில் தனியாக வசிக்கிறார்............ READ MORE

ஜனநாயகமோ சிவில் நிர்வாகமோ வடக்கு மக்களுக்கு இன்று இல்லை: கருணாரட்ன _

ஜனநாயகமோ சிவில் நிர்வாகமோ வடக்கு மக்களுக்கு இன்று இல்லை: கருணாரட்ன _
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜனநாயக ரீதியிலான மக்கள் சந்திப்பில் இராணுவம் உட்புகுந்து தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இலங்கையில் தனது அரசியல் நிகழ்ச்சித் திட்டத்தை இந்தியா விரிவுபடுத்த வேண்டும் கொழும்புதமிழ்க்கூட்டமைப்பு பேச்சுவார்த்தை பயனுள்ளதாக அமைவதை உறுதிப்படுத்துவது அவசியம்; சர்வதேச நெருக்கடிக்குழு SATURDAY, 25 JUNE 2011 06:25 HITS: 87


இலங்கையில் தனது அரசியல் நிகழ்ச்சித் திட்டத்தை இந்தியா விரிவுபடுத்த வேண்டும் கொழும்புதமிழ்க்கூட்டமைப்பு பேச்சுவார்த்தை பயனுள்ளதாக அமைவதை உறுதிப்படுத்துவது அவசியம்; சர்வதேச நெருக்கடிக்குழு


ஆட்சி விவகாரங்கள் தொடர்பாக ராஜபக்ஷவின் நிர்வாகத்தை முன்தள்ளுவதற்கு புதுடில்லி தயங்குகிறது. இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது இழைக்கப்பட்ட கொடூரங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைக்கான அங்கீகாரத்தை
வழங்குவதற்கு புதுடில்லி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இந்த உள்நாட்டு யுத்தத்தில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது............. READ MORE 

அமெரிக்காவின் தலைமைத்துவ உச்சி மாநாட்டுக்கு இலங்கையில் இருந்து தமிழ் மாணவிகள் இருவர்

அமெரிக்காவின் தலைமைத்துவ உச்சி மாநாட்டுக்கு இலங்கையில் இருந்து தமிழ் மாணவிகள் இருவர்
news
உலகின் 30 நாடு களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட, ஆற்றல் மிக்க 300 எதிர்காலத் தலைவர்கள் பங்குகொள்ளும் உச்சி மாநாடு ஒன்று நடைபெறவுள்ளது.
2012 "செயலில் தலைமைத்துவ உச்சி மாநாடு' ஐக்கிய அமெரிக்காவின் ஹாவார்ட் மற்றும் ஸ்ரான்போர்ட் பல்கலைக்கழகங்களில் ஒருவாரத்துக்கு இடம்பெறவுள்ளது. வழமையாக ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதத்தில் இந்த மாநாடு நடைபெற்றுவருகிறது. இந்த முறை இலங்கையிலிருந்து இந்த மாநாட்டில் 33 மாணவத் தலைவர்கள் பங்குகொள்கின்றனர்........READ MORE

பிரித்தானியா சனல் 4 கடந்த 14.06.2011 வெளிவிட்டிருந்த ஆவணத்தின் விடயம் தமிழில்


பிரித்தானியா சனல் 4 கடந்த 14.06.2011 வெளிவிட்டிருந்த ஆவணத்தின் விடயம் தமிழில்



இலங்கையின் கொலைக் களங்கள் வீடியோ நம்மிடம் கோரும் கடமை என்ன?
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் முள்ளிவாய்க்காலில் முடிந்த இலங்கை அரசின் இன அழிப்புப் போர் கொடுமைகளை ஒரு வலிமையான துயரம் ததும்பும் ஆவணப்படமாக வெளியிட்டிருக்கிறது, இங்கிலாந்தின் சானல் 4 தொலைக்காட்சி!............... READ MORE

இனப் படுகொலை: ருவாண்டா முன்னாள் பெண் அமைச்சருக்கு சர்வதேச நீதிமன்றம் ஆயுள் தண்டனை


இனப் படுகொலை: ருவாண்டா முன்னாள் பெண் அமைச்சருக்கு சர்வதேச நீதிமன்றம் ஆயுள் தண்டனை



டார் எஸ் சலாம்: இனப் படுகொலை மூலம் 8 லட்சம் அப்பாவி டுட்சி இன மக்களை கொன்று குவித்த ருவாண்டா முன்னாள் பெண் அமைச்சருக்கு ஐ.நா. சர்வதேச குற்றவியல் நடுவர் நீதிமன்றம் (UN war crimes tribunal) ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

ருவாண்டா நாட்டின் முனனாள் குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்தவர் பாலின் நிராமாசுகுகோ (65). இவர் கடந்த 1994ம் ஆண்டு பதவியில் இருந்தபோது ருவாண்டாவின் தெற்கு புடார் மாகாணத்தில் டுட்சி இன மைனாரிட்டி மக்கள் போராட்டம் நடத்தினர்.............. READ MORE

ஜாக்சனின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம்: சகோதரி அதிர்ச்சி தகவல் வெளியீடு

நியூயார்க்: யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்று கூறுவது அதன் மதிப்பை வலியுறுத்துவதாக அமைகிறது. அதுபோல, அதற்கு நிகரான மதிப்பு மிக்க மனிதர்கள் இவ்வுலகில் இறந்தும் அவரது ரசிகர்கள் நெஞ்சில் இன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். அதற்கு சிறந்த உதாரணமாக, பாப் இசை உலகின் கடவுள் என்றழைக்கப்பட்ட மைக்கேல் ஜாக்சனை கூறலாம். 
மைக்கேல் ஜாக்சன் என்றால், அவரது துள்ளலான இசையுடன் கூடிய நடனம், அதற்கு வளைந்து நெளிந்து கொடுக்கும் அவரது உடல்வாகு உள்ளிட்டவை நமக்கு ஞாபகம் வருவதைப் போன்று, அவரை நினைத்தாலே, அவரது இசை மற்றும் நடனம் நமது கண்களுக்கு விருந்தளிக்கும்............. READ MORE     

தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு இன்றுடன் கலைப்பு, நாளை டெலோவுடன் கலப்பு: அதிரடி அறிவிப்பு

தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு இன்றுடன் கலைப்பு, நாளை டெலோவுடன் கலப்பு: அதிரடி அறிவிப்பு 



தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்துடன் (டெலோ) இணைந்து கொள்வதற்காக தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பை இன்றுடன் கலைப்பதாக அதன் தலைவர் சட்டத்தரணி என். ஸ்ரீகாந்தாவும் செயலாளர் எம்.கே. சிவாஜிலிங்கமும் அறிவித்துள்ளனர்............. READ MORE

இன்னுயிர் ஈந்த தமிழ்ச் சொந்தங்களுக்கு நாளை மாலை மெரினாவில் அஞ்சலி செலுத்துவோம்: சீமான்


இன்னுயிர் ஈந்த தமிழ்ச் சொந்தங்களுக்கு நாளை மாலை மெரினாவில் அஞ்சலி செலுத்துவோம்: சீமான்

ஐக்கிய நாடுகள் அவையால் சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச ஆதரவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரையில் யூன் 26 ஞாயிற்றுக்கிழமை மாலை அணி திரள்வோம்,
தமிழின வதைக்கு நியாயம் கேட்டு தமிழர்களாகிய நாம் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி நிற்போம். என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்............ READ MORE

யூன் 26 இல் மரீனாவில் மெழுகுவர்த்தி தீப அஞ்சலி நிகழ்வுக்கு அழைக்கிறார் தமிழருவி! -காணொளி

தமிழீழத்திலும் தமிழகத்தின் கடல்ப்பரப்பிலும் சிங்கள இனவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து எதிர்வரும் யூன் 26ம் திகதி மரீனா கடல்க்கரையில் தமிழக மக்களால் மாபெரும் மெழுகுவர்த்தி தீப அஞ்சலி வணக்க நிகழ்வு நடைபெற உள்ளது. இந்த வணக்க நிகழ்வில் தமிழ் பற்றால் இணைந்துள்ள தமிழர்கள் அனைவரையும் தமது குடும்பத்துடன் வருகைதந்து அன்னியரின் ஆதிக்கத்தால் படுகொலை செய்யப்பட்ட எமது மக்களுக்கு மெழுகுவர்த்தி தீப அஞ்சலிகளை செலுத்த அலையெனத் திரண்டு வந்து இந்த வணக்க நிகழ்வில் கலந்து கொள்ளும்படி உங்கள் ஒவ்வேருவரையும் உரிமையோடு அழைக்கின்றோம்............. read more

2012 ஆம் ஆண்டின் ஒலிம்பிக் தீபத்தை தமிழர்களும் ஏந்த உலக தமிழ் மக்களே விரைந்து செயற்படுங்கள்.

2012 ஆம் ஆண்டின் ஒலிம்பிக் தீபத்தை தமிழர்களும் ஏந்த உலக தமிழ் மக்களே விரைந்து செயற்படுங்கள்.

பிரித்தானியாவில் 2012 ஆம் ஆண்டில் நடைபெற ஏப்பாடாகியுள்ள ஒலிம்பிக் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வான ஒலிம்பிக் தீபந்தத்தை தமிழர் தாங்க உலக தமிழ் மக்களே விரைந்து உங்கள் வாக்கை இவருக்கு அளியுங்கள்.
இவருக்கு வாக்களிப்பதற்கு" http://torchbearernominations.london2012.com/Nomination/Create எனும் பகுதியை அழுத்தி அப்பகுதியில் காணப்படும் விண்ணப்பப்படிவத்தில் விபரங்களை பூர்த்தி செய்து அனுப்புவதனூடாக உங்களின் வாக்கு அவருக்கு கிடைக்கும்................. read more

இன்று விளையாடும் சனத் ஜெயசூரியாவுக்கு எதிராக எழுவோம் !

ஆளும் மஹிந்த அரசாங்கத்தின் மாத்தறைக்கான நா.உ ஆகவுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூரிய, இன்று சனிக்கிழமை

பிரித்தானியா பிரிஸ்ரலில் நடக்கும் ஆட்டத்தில் இலங்கை அணியில் இணைந்து கொள்கிறார். கொடூரமான ராஜபக்�ஷ ஆட்சியிலிருந்து இந்த

புகழ்மிக்க பிரதிநிதியை மீள அழைத்துள்ளது பற்றி கார்டியன் பத்திரிகையாளர் கடுமையாக விமர்சித்துள்ளார். சனல் 4 நடத்திய ஒரு

கருத்துக்கணிப்பின்படி, இங்கிலாந்தானது இலங்கையின் கிரிக்கெட் சுற்றுலா குறித்து மீளக்கருத வேண்டும் என்ரு 87 வீதமான பிரிட்டன் மக்கள் ............... read more

சனல் 4 வீடியோவில் பிழைகளைக் கண்டுபிடித்துள்ளாராம் அம்சா !


சனல் 4 வீடியோவில் பிழைகளைக் கண்டுபிடித்துள்ளாராம் அம்சா !
சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள கொலைக்களங்கள் வீடியோ பொய்யானது என்று மறுத்துள்ள இங்கிலாந்துக்கான இலங்கையின் பதில்

உயர் ஸ்தானிகர் அம்சா, அவ்வீடியோவில் தமிழ் மொழியில் கூறபட்டுள்ளவற்றில் பிழையும் உள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளாராம். அதோடு சனல் 4 தொலைக்காட்சியினர் இலங்கைக்கு எதிராக நடத்திவரும் பழிதீர்க்கும் இப்பிரச்சாரத்தின் பின்னணியில் என்ன நோக்கம் உள்ளது
 .... read more

அழிக்கப்படாத சிறுபற்றைக்குள் சமூக விரோத செயற்பாடுகள்

வவுனியா, இராசேந்திரம் குளம் வால்கட்டுப்பகுதியில் உள்ள சிறிய பற்றைக்காடு அழிக்கப்படாமல் இருப்பதனால் அந்தப் பகுதியில் தகாத செயற்பாடுகள் நடைபெறு வதாகப் பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.............. read more

Friday 24 June 2011

கூட்டமைப்பிற்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்


தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நடாத்திய அளவெட்டி கூட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டமானது இன்று நண்பகல் 12 மணியளிவல் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றது. யாழ் அளவெட்டியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் சந்திப்பின் போது பலவந்தமாக அங்கு சென்ற இராணுவத்தினர் அவர்களைத் தாக்கியுள்ளதுடன் அச்சுறுத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தைக் கண்டித்தும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தெற்கில் இருக்கும் ஜனநாயகத்தை விரும்பும் கட்சிகள் ஒன்றினைந்து ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டன.

இராணுவத்தினரின் செயற்பாட்டிற்கு கபே அமைப்பு கண்டனம்


கிளிநொச்சியில் நேற்று நடத்தப்பட்ட காணாமல் போனோரது உறவினர்களின் ஆர்ப்பாட்டத்துக்கு இராணுவத்தால் இடையூறு விளைவிக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
ஆர்பாட்டம் நடைபெறவிருந்த பகுதியில் அதிகளவில் குவிக்கப்பட்ட படையினர் ஆர்பாட்டத்திற்காக வந்தவர்களை கிளிநொச்சியை விட்டு வெளியேறுமாறு கூறியதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்........read more    

போர்க்குற்றவாளிகளுக்கு துணையாக நிற்கும் "ஜெயசூரியாவை" பிரித்தானியாவை விட்டு விரட்டுவோம்.


சர்வதேசத்தின் கவனத்தை போர்க்குற்றவாளியாக ஈர்த்துள்ள சிறீலங்காவின் அரசத் தலைவர்,மகிந்த ராஜபக்சேவின் கட்சியில் அங்கத்தவராகவும்பாராளுமன்ற உறுப்பினராகவும் உள்ளசிறீலங்கா துடுப்பாட்ட வீரர் "சனத் ஜெயசூரியவை" 25-06-2011 அன்று இங்கிலாந்தில் நடைபெறவுள்ளதுடுப்பாட்டத்தில் பங்குகொள்ளவிடாது தடுத்து விரட்டுவோம்.

சர்வதேச சித்திரவதை நாளில் எங்கள் உறவுகளுக்காக குரல் கொடுப்போம்


சர்வதேச சித்திரவதை 26.06.2011  நாளில் 

எங்கள் உறவுகளுக்காக குரல் கொடுப்போம்



26.06.2011 


ஞாயிற்றுக்கிழமை


மாலை 4 மணி முதல் 7 மணி வரை

பிரதமர் அலுவலக இல்லம் இல.10 டவுணிங் வீதி (DOWNING STREET, LONDON) இலண்டன் SW1A 2AA  முன்பாக
 


கொலை சித்திரவதை கற்பழிப்பு அடக்குமுறை சொத்தழிப்பு என சொல்லணாத் துயரங்களால் துன்பப்படுகின்ற இக்கால கட்டத்தில் தஞ்சம் கோரிப் பிரித்தானியாவிற்கு வந்துள்ள ஈழத்தமிழர்களை இனவெறிபிடித்த சிறிலங்கா அரசின் கரங்களில் ஒப்படைப்பதைத் தடுத்து நிறுத்திட இன உணர்வுடன் ஒன்றுதிரண்டு குரல் கொடுப்போம்.

உறவுகளை காக்க உணர்வுடன் எழுவோம்..

தமிழர்களை விரட்டிவிட்டு பிரிட்டன் நியாயம் பேசுகிறது!


தமிழர்களை விரட்டிவிட்டு பிரிட்டன் நியாயம் பேசுகிறது!

இலங்கையர்கள் 26 பேரை பிரிட்டனில் இருந்து அவர்களது நாட்டுக்கு திருப்பி அனுப்பிய தமது நடவடிக்கையை பிரிட்டன் நியாயப்படுத்தியுள்ளது.
ஆசிய நாடுகளைப் பொறுத்தவரை இவ்வாறு திருப்பி அனுப்பப்படுபவர்கள் தமது நாடுகளில் தொந்தரவுக்குள்ளாகலாம் என்று அச்சம் தெரிவித்து மனித உரிமை கண்காணிப்பகம் உட்பட மனித உரிமை அமைப்புக்கள் இவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டதை கண்டித்துள்ளன. அவர்கள் மீது நடத்தப்பட்ட விசாரணைகளில், அவர்களுக்கு இலங்கையில் எந்தவிதமான பாதுகாப்பும் தேவையில்லை என்று தாம் திருப்தியடைந்துள்ளதாக அது கூறியுள்ளது. .............. read more

அடுத்து விஜய்யை இயக்கப் போவது சீமானா... முருகதாசா?

இதோ அதோ என ஒராண்டுக்குமேல் ஆகிவிட்டது, விஜய்யை சீமான் இயக்கப் போகிறார் என அறிவித்து.
காவலன் முடித்த பிறகு..., வேலாயுதம் முடிந்த பிறகு...., ஷங்கர் படம் முடிந்த பிறகு... என இழுத்துக் கொண்டே போன விஜய், இப்போதுதான் சீமானிடம் கதையை கேட்டு நடிக்க ஒப்புக் கொண்டதாக செய்திகள் வெளியாகின.............. read more   

ஏர்செல்-மேக்ஸிஸ் 'டீல்'..லண்டனில் சிபிஐ விசாரணை: வசமாய் சிக்கும் தயாநிதி!


ஏர்செல்-மேக்ஸிஸ் 'டீல்'..லண்டனில் சிபிஐ விசாரணை: வசமாய் சிக்கும் தயாநிதி!

டெல்லி: ஏர்செல் நிறுவனத்தை மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்க மத்திய அமைச்சர் தயாநிதி மாறனால் நிர்பந்திக்கப்பட்டதாக குற்றம் சாட்டிய தொழிலதிபர் சிவசங்கரன் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் லண்டன் சென்ற சிபிஐ குழு, அங்கு இரு நிதித்துறை ஆலோசகர்களிடம் வாக்குமூலத்தை வாங்கிக் கொண்டு திரும்பியுள்ளது.

இதனால் தயாநிதி மாறன் மீதான சிபிஐயின் பிடி விரைவில் இறுகும் என்று தெரிகிறது......... read more

அடிபணிவு அரசியலிற்குள் தலையைப் புதைத்துக் கொள்பவர்கள் போராடத் தேவையில்லை - இதயச்சந்திரன்


அடிபணிவு அரசியலிற்குள் தலையைப் புதைத்துக் கொள்பவர்கள் போராடத் தேவையில்லை - இதயச்சந்திரன்


தமிழ் மக்களின் வாழ்வு மட்டும் அழிக்கப்படவில்லை, போராட்டமுனைப்பும் அழிக்கப்பட்டுள்ளதென, சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலண்டன் கருத்தரங்கில், அரந்ததிராய் அவர்கள் குறிப்பிட்டிருந்தார். அத்தோடு, கவலை தெரிவிப்பதாலோ, அல்லது கண்டனம் செய்வதாலோ, எதுவித பயனுமில்லையென்று கருத்துரைத்த அருந்ததிராய், இப் போராட்டம் ஏன் பிழைத்துப் போனது என்பது குறித்து சுயபரிசோதனைக்கு  உட்படும் வகையில் ஆழமான கலந்துரையாடல் ஒன்றின் தேவை உணரப்படுவதாக கூறினார்.

தமிழர்களின் நிலையினை நேரில் பார்வையிடுவேன் பாஜக தலைவர்

தமிழக கடல்தொழிலாளர்கள் தொடர்ந்து கொல்லப்படுவது தொடர்பாகவும்,தமிழ் மக்கிள் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காகவும் தமிழ்மக்களின் நிலையினை நேரில் பார்வையிட சிறீலங்கா செல்லவுள்ளதாக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் சுஷ்மாசுவராஜ்  தெரிவித்துள்ளார்......... read more

தமிழ் வாணியை கடுமையாகத் தாக்கிய சவீந்திர சில்வா: கூட்டத்தை குழப்ப முயற்சி !


தமிழ் வாணியை கடுமையாகத் தாக்கிய சவீந்திர சில்வா: கூட்டத்தை குழப்ப முயற்சி !
நியுயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகம் அருகேயுள்ள ஐ.நா தேவாலய நிலையத்தில் �சிறிலங்காவின் கொலைக்களங்கள்� ஆவணப்படம் நேற்று திரையிட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளது. அனைத்துலக மன்னிப்புச் சபை, மனிதஉரிமைகள் கண்காணிப்பகம், முரண்பாடுகளுக்கான அனைத்துலக குழு ஆகியன இணைந்து இந்த ஆவணப்படத்தை திரையிட்டுள்ளன. இந்த ஆவணப்படத்தை பல்வேறு நாடுகளினதும் இராஜதந்திரிகளும் அதிகாரிகளும் பார்வையிட்டுள்ளனர். இந்த நிகழ்வில் அழைக்கப்படாத விருந்தாளிகளாக நுழைந்த ஐ.நாவுக்கான சிறிலங்காவின் வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்னவும். பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவும் குழப்பம் விளைவித்துள்ளனர்.......... read more

போர்க் குற்றம் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மீண்டும் விவாதம் !


போர்க் குற்றம் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மீண்டும் விவாதம் !
சனல் 4 வெளியிட்டுள்ள கொலைக்களங்கள் வீடியோவைத் தொடர்ந்து, பிரித்தானிய பாராளுமன்றில் இலங்கைக்கு எதிரான போர்க் குற்றம் பற்றிய விவாதம் மீண்டும் நேற்று 22 ஆம் திகதி நடைபெற்றுள்ளது. இவ்விவாதம் பாராளுமன்றத்திலுள்ள யூனியன் அறையில் நடந்தது. இதற்கு சனல் 4 செய்திகளின் வெளிநாட்டு விவகாரத் தொடர்பாளர் ஜொனாதன் மில்லர் தலைமை தாங்கியதோடு, இவ்விவாதக் குழுவில் தயாரிப்பாளர் கலும் மேக்ரேயும் பங்கெடுத்துள்ளார்............ read more

இலங்கை கிரிக்கெட் புறக்கணிப்புப் போராட்டம் 25ம் திகதி !


இலங்கை கிரிக்கெட் புறக்கணிப்புப் போராட்டம் 25ம் திகதி !
சிறீலங்காவிற்கும் இங்கிலாந்திற்குமிடையில் எதிர்வரும் 25ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2:30 மணிக்கு பிரிஸ்டல் கவுன்றி (Gloucestershire County Cricket Club, Nevil Rd, Bristol, BS7 9EJ) மைதானத்தில் நடைபெறவிருக்கும் 20�20 கிரிக்கெட் விளையாட்டின்போது, பிரித்தானிய தமிழர் இளையோர் அமைப்பினால் மேற்கோள்ளப்படவிருக்கும் �சிறீலங்கா கிரிக்கெட் புறக்கணிப்பு� போராட்டத்தில் பங்குபற்றி போராட்டம் முழு வெற்றி பெறுவதற்கு ஆதரவளிக்குமாறு, பிரித்தானிய தமிழர் பேரவை தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது............ read more

போர்க்குற்ற அறிக்கை: ஐநாவுக்கு இலங்கை அளித்த ரகசிய பதில்!

போர்க்குற்ற அறிக்கை: ஐநாவுக்கு இலங்கை அளித்த ரகசிய பதில்!
கொழும்பு: இலங்கை இறுதிப் போரில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் குறித்து ஐநா நிபுணர் குழு அளித்த அறிக்கைக்கு இலங்கை அரசு ரகசியமாக பதில் அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் நடந்த இறுதிக் கட்ட போரில் ஆயிரக் கணக்கான தமிழர்களை ராணுவம் படுகொலை செய்தது. இந்த போர்க்குற்றம் குறித்து ஐ.நா. நிபுணர் குழு தனது அறிக்கையில் மிக விரிவாக கூறியிருந்தது......... read more

தமிழர்களை திருப்பி அனுப்பாதே!!! சுவிஸ் அரசிடம் தமிழர்களிடம் பெறப்பட்ட கையெழுத்துக்கள் ஒப்படைக்கப்பட்டது


நேற்று 23.06.2011 வியாழக்கிழகை காலை 9.30 மணிக்கு பேர்ன் பாராளுமன்றத்திடம் இலங்கை அகதிகளைத் திருப்பி அனுப்பாதே என்று தமிழர்கள் மத்தியில் சேர்க்கப்பட்ட 4844 கையெழுத்துக்கள் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த பெர்பிரவரி மாதம் சுவிஸில் தற்காலிகமாகத் தங்கியிருக்கும் இலங்கை அகதிகளை திருப்பி அனுப்பப் போவதாக சுவிஸ் அரசு அறிவித்தது........read more

ஜூன் 26இல் மெழுகுவர்த்தி எந்தி வணக்கம் செலுத்துமாறு வைகோ அழைப்பு!


ஜூன் 26இல் மெழுகுவர்த்தி எந்தி வணக்கம் செலுத்துமாறு வைகோ அழைப்பு!

சித்திரவதைக்கு உள்ளான இலங்கைத் தமிழர்களையும் இந்திய மீனவர்களையும் கருத்திற் கொண்டு அனைத்து உலக நாளாகிய ஜூன் 26 ஆம் திகதி மே 17 இயக்கம் அழைப்பு விடுத்துள்ள மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் தமிழ் இன உணர்வாளர்கள் பங்குபெற வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து மதிமுக பொதுச்செயலர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,....... read more

உயிரிழந்த ஈழத் தமிழர்களுக்கு அஞ்சலி: பழ. நெடுமாறன் அழைப்பு


சென்னை, ஜூன் 24- இலங்கை படையினரின் தாக்குதலில் உயிரிழந்த ஈழத் தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னை மெரீனா கடற்கரையில் நாளை மறுநாள் நடைபெறுகிறது.

இதுகுறித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:  read more

தெற்கில் அரங்கேறிய அரசபயங்காரவாதம் தற்போது வடக்கில் துளிர்விட ஆரம்பித்துள்ளது -

 தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீது அளவெட்டியில் வைத்து இராணுவத்தினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையைக் கண்டித்து இடது சாரி கட்சிகளினாலும், ஜனநாயக விரும்பிகளாலும் இன்று நண்பகல் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னாள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது......... read more

ஆபிரிக்கரை அழித்த முறையில் தமிழர்களை அழிக்க நடக்கும்விபச்சார எயிட்ஸ் சிங்கள சதிகள் ..!


ஆபிரிக்கரை அழித்த முறையில் தமிழர்களை அழிக்க நடக்கும்விபச்சார எயிட்ஸ் சிங்கள சதிகள் ..!

தாய் மற்றும் மகப்பேற்று நலமருத்துவர் முன்னாள் இராணுவத்தளபதி சந்திரசிறியின் அரவணைப்புடன் தமிழினத்தை அழிக்க களமிறக்கப்பட்டுள்ளார் கணவனை இழந்தபெண்களை விபச்சாரியாக்கி விபச்சாரத்தினுடாக இனத்தை வேரறுக்க தான்பெற்ற அறிவை சமுகத்திற்கும் வழங்கினால் கர்ப்பமாகாது தவிர்த்துக் கொள்ளமுடியும் அத்துடன் அவர்கள் பாலியல் செயற்பாடுகளில் மும்மரமாக ஈடுபடவும் அதன்முலம் எயிட்ஸ் போன்ற நோய்கள் சமுகத்தில் பரவவும் பெண்தான் ஏற்ற கருவி என்ற மருத்துவ அறிவை உரமாகவே பயன்படுத்தும் மிகவும் கோரமான ஒர் செயற்பாட்டின் முன்மாதிரி வடிவம் இதுவாகும்.......... read more

தமிழகம் தனது பூகோள அரசியல் முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்பட வேண்டும் : பேராளர் ஈழவேந்தன்


தமிழகம் தனது பூகோள அரசியல் முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்பட வேண்டும் : பேராளர் ஈழவேந்தன்

இந்தியாவின் நலன்களுக்கு எப்போதுமே தமிழீழம் தடையாக இருக்காது என்பதனை எப்போதுமே ஈழவிடுதலைப் போராட்டம வலியுறுத்தி வந்துள்ளது. இன்றைய சூழ்நிலையில், தமிழீழத்தை நாம் வென்றெடுக்க இந்திய மத்திய அரசினை நோக்கியதான ஈழவிடுதலை அரசியலை தமிழகம் முன்னெடுக்க வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதி ஈழவேந்தன் தெரிவித்துள்ளார்.......... read more

இறுதி யுதத்தின் சாட்சியான வாணிக்கு சர்வேந்திர சில்வா மறைமுக அச்சுறுத்தல்!

இறுதி யுதத்தின் சாட்சியான வாணிக்கு சர்வேந்திர சில்வா மறைமுக அச்சுறுத்தல்!


இலங்கையின் இறுதி யுத்தத்தில் போர் குற்றம் புரிந்த மேஜர் ஜெனரல் சர்வேந்திர சில்வா மறைமுக அச்சுறுத்தல் விடுத்துள்ளார். வன்னி இறுதி யுதத்தின் சாட்சியாக இருந்து வருபவர் வாணி குமார். இறுதி யுத்தத்தில் அகப்பட்டு பிரித்தானிய அரசால் மீட்கப்பட்டார். இவர் பல்வேறு பெயர்களில் உலாவுவதாகவும் சந்தேகப்பேர்வழி எனவும் இலங்கையின் முன்னணி இராணுவ தளபதிகளில் ஒருவரான சர்வேந்திர சில்வா பல நூறு வெளிநாட்டு ஆய்வாளர்கள் மத்தியில் அச்சுறுத்தியுள்ளார்............. read more

23 மீனவர்களை விடுதலை செய்யாவிடில் மீனவர்களுடன் இணைந்து போராட்டம் – சீமான்.


23 மீனவர்களை விடுதலை செய்யாவிடில் மீனவர்களுடன் இணைந்து போராட்டம் – சீமான்.

நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.
இது வரை 550 க்கும் மேற்பட்ட மீனவர்களைக் கொலை செய்தும் ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரங்களைச் சிதைத்தும் அவர்களைச் சித்திரவதை செய்த சிங்களப் படை சிறிது காலம் தனது வெறியாட்டத்தை நிறுத்தி வைத்திருந்தது. சில நாட்களுக்கு முன் இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்ததன் பேரில் 16-ந் தேதி விடுதலை செய்யப்பட்டனர். இப்பொழுது மீண்டும் சிங்களக் கடற்படை தனது அட்டூழியத்தையும் வெறித்தனத்தையும் ஆரம்பித்துள்ளது.

எமக்கு இந்த சரீரத்தை இறைவன் கொடுத்தது ஏன்..!? 

சைவ மக்கள் இறைவனின் திருவருளை பெறுவதற்குச் சிறந்த  சாதனமாக வழிபாட்டினை ஏற்றுக் கொண்டுள்ளனர். இறைவனின் திருவருள் எமக்கு கிட்ட வேண்டுமானால் இறைவனை வழிபாடு செய்தல் வேண்டும். இந்த சரீரத்தை இறைவன் எமக்கு தந்து உதவியது தன்னை பூசித்து வணங்கி  சீரோடும் சிறப்போடும்  இந்த உலகத்தில் வாழ்ந்து முத்தியின்பம் பெறவேண்டும் என்ற நல்ல சிந்தனையோடேயே என்று ஸ்ரீலஸ்ரீ  ஆறுமுகநாவலர்  கூறியுள்ளார். எம்முடைய உடல் கடவுளை வழிபாடு செய்வதற்கு வாய்ப்பாக எமக்கு தரப்பட்டு உள்ளது.

16 வயதுச் சிறுமியின் கர்பப்பையை பாலியல் தொழிலுக்காக அகற்ற முயற்சி !


பாலியல் தொழிலுக்காக தமிழ் சிறுமியின் கர்ப்பப்பையை அகற்ற முயற்சி !
இச் செய்தியை வாசித்தால் நரம்புகள் நடுங்கும் ! நாளங்கள் ஆடி விடும் ! யாழ்ப்பாணம் மற்றும் வன்னிப் பகுதியில் போரினால் பதிக்கப்பட்ட பல பெண்களையும் சிறுமிகளையும் வேலை தருவதாகக் கூறி, தென்னிலங்கை அழைத்து வரும் ஒரு கும்பல், அவர்களை பாலியல் தொழிலில் பலாத்காரமாக ஈடுபடவைக்கிறது. 

பொய் சொல்லி இவ்வாறு தென்னிலங்கை அழைத்து வரும் தமிழ் பெண்களை அடைத்து வைத்து அவர்களை சிங்கள காமவெறியர்களுக்கும் பணக்கார முதலைகளுக்கும் தாரைவார்ப்பதையே இவர்கள் செய்துவருகின்றனர். இதனைக் கூட ஒருவகையில் மன்னிக்கலாம் ஆனால் இலங்கை தனியார் வைத்தியசாலைகளில் நடக்கும் அட்டூளியங்கள் தான் தலைவிரித்தாடுகிறது !

சர்வதேச சித்திரவதை நாளில் எங்கள் உறவுகளுக்காக குரல் கொடுப்போம்

சர்வதேச சித்திரவதை நாளில் எங்கள் உறவுகளுக்காக குரல் கொடுப்போம்

26.06.2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் 7 மணி வரை பிரதமர் அலுவலக இல்லம் இல.10 டவுணிங் வீதி (DOWNING STREET, LONDON) இலண்டன் SW1A 2AA  முன்பாக


கொலை சித்திரவதை கற்பழிப்பு அடக்குமுறை சொத்தழிப்பு என சொல்லணாத் துயரங்களால் துன்பப்படுகின்ற இக்கால கட்டத்தில் தஞ்சம் கோரிப் பிரித்தானியாவிற்கு வந்துள்ள ஈழத்தமிழர்களை இனவெறிபிடித்த சிறிலங்கா அரசின் கரங்களில் ஒப்படைப்பதைத் தடுத்து நிறுத்திட இன உணர்வுடன் ஒன்றுதிரண்டு குரல் கொடுப்போம்.

Thursday 23 June 2011

இத்தாலியில் புலிகள் என கைது செய்ய பட்ட 30பேரும் குற்றமற்றவர்கள் என விடுதலை -தமிழர்க்கு கிடைத்த முதல் வெற்றி .!VIDEO I


இத்தாலியில் புலிகள் என கைது செய்ய பட்ட 30பேரும் குற்றமற்றவர்கள் என விடுதலை -தமிழர்க்கு கிடைத்த முதல் வெற்றி .!VIDEO I   

இத்தாலி நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளிற்கு முன்னர் பயங்கரவாத  செயல்களில் ஈடு பட்டு வந்தனர் என குற்றம் சுமத்தபட்டு புலிகள் என கைது செய்ய பட்ட முப்பது தமிழர்களும் சற்றும் முன்னர் இத்தாலி  நீதி மன்றினால் குற்ற மற்றவர்கள் என கூறி விடுதலை  செய்ய பட்டுள்ளனர் .
இது ஈழ தமிழருக்கு கிடைத்த முதல் வெற்றி எனவும் இதை தொடர்ந்து பிற ஐரோப்பிய நாடுகளும் அங்கு கைது செய்யபட்டவர்களை விடுதலை செய்ய கூடும் என எதிர்பார்க்க படுகின்றது ..!  ................ READ MORE          

ஜூன்26, நினைவேந்தல் வணக்க நிகாழ்வு பற்றிய பத்திரிகையாளர் சந்திப்பு


ஐ.நா.வின் சித்திரவதை பாதிப்புள்ளானவர்களுக்கான ஆதரவு சர்வதேச தினம்.
ஐ.நா.வினால் அறிவிக்கப்பட்ட சர்வதேச சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆதரவு தினத்தில். இலங்கை அரசினால்  பல ஆண்டுகளுக்கு மேலாகவும் தமிழீழத்தின் மீது கடந்த 2009ம் ஆண்டில் நடத்திய இனப் படுகொலைப் போரில் படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளுக்காகவும், போருக்கு பின்னான காலப்பகுதியில் சித்திரவதை செய்யபட்டு படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளுக்காகவும், சிங்கள இனவெறி அரசின் ஊடக அடக்கு முறையை எதிர்த்து உண்மை நிலவரங்களை வெளியிட்டதால் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியளாளர்கள் அனைவருக்காகவும், ........... READ MORE

தமிழ் வாணியை கடுமையாகத் தாக்கிய சவீந்திர சில்வா: கூட்டத்தை குழப்ப முயற்சி !

நியுயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகம் அருகேயுள்ள ஐ.நா தேவாலய நிலையத்தில் �சிறிலங்காவின் கொலைக்களங்கள்� ஆவணப்படம் நேற்று திரையிட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளது. அனைத்துலக மன்னிப்புச் சபை, மனிதஉரிமைகள் கண்காணிப்பகம், முரண்பாடுகளுக்கான அனைத்துலக குழு ஆகியன இணைந்து இந்த ஆவணப்படத்தை திரையிட்டுள்ளன. இந்த ஆவணப்படத்தை பல்வேறு நாடுகளினதும் இராஜதந்திரிகளும் அதிகாரிகளும் பார்வையிட்டுள்ளனர். இந்த நிகழ்வில் அழைக்கப்படாத விருந்தாளிகளாக நுழைந்த ஐ.நாவுக்கான சிறிலங்காவின் வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்னவும். பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவும் குழப்பம் விளைவித்துள்ளனர்................ READ MORE

Wednesday 22 June 2011

இங்கிலாந்தில் சாதனை புரிந்த யாழ் சாவகச்சேரி மாணவன்

இங்கிலாந்தில் சாதனை புரிந்த யாழ் சாவகச்சேரி மாணவன்


யாழ்ப்பாணம்-சாவச்சேரியைச் சேர்ந்த டாக்டர் சிதம்பரநாதன் சபேசன் இங்கிலாந்தில் a groung breaking radio teal time tagging system என்ற கண்டுபிடிப்பை நிகழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
இச் சாதனைக்காக அவருக்கு Uk pioneer (கண்டுபிடிப்பாளர்) மற்றும் royal academic enterpreneur ship (கண்டுபிடிப்பை வர்த்தக ரீதியாக அறிமுகப்படுத்துபவர்) ஆகிய உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.............. read more

போர்க்குற்றவாளிகளும் மட்டைபந்தும்


போர்க்குற்றவாளிகளும் மட்டைபந்தும்

பிரித்தானியா தமிழ் இளையோரால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் சிறிலங்கா புறக்கணிப்புப்போராட்டம் தற்போதுபிரித்தானியாவில் நடைபெறும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பங்குபற்றும் சிறிலங்கா கிரிக்கட் அணிக்கு எதிராகபாரியளவில் தொடர் போராட்டமாக முன்னெடுக்கபட்டுவருகிறதுஇளையோர் அமைப்பினால் தொடக்கப்பட்டஇப்போராட்டம் தமிழ் மக்கள் மத்தியிலும் தமிழர் அல்லாதவர்களிடமும் மிக வேகமாக பரவி வருகின்றதுகுறிப்பாகசொல்லவேண்டும் என்றால் பிரித்தானிய ஆங்கில ஊடகங்கள் அனைத்தும் எமது போராட்டங்களை முன்னுரிமைகொடுத்து பிரசுரித்து வருகின்றன.

எதிர்வரும் சனிக்கிழமை போராட்டம் நடைபெறும் இடம் (25.06.11) 12:00PM 
at GLOUCESTERSHIRE COUNTY CRICKET CLUB, NEVIL ROAD, BRISTOL, BS7 9EJ. 
தொடர்பு கொள்ள: info@tyouk.org, 07539444824