போர்க்குற்றவாளிகளும் மட்டைபந்தும்
பிரித்தானியா தமிழ் இளையோரால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் சிறிலங்கா புறக்கணிப்புப்போராட்டம் தற்போதுபிரித்தானியாவில் நடைபெறும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பங்குபற்றும் சிறிலங்கா கிரிக்கட் அணிக்கு எதிராகபாரியளவில் தொடர் போராட்டமாக முன்னெடுக்கபட்டுவருகிறது. இளையோர் அமைப்பினால் தொடக்கப்பட்டஇப்போராட்டம் தமிழ் மக்கள் மத்தியிலும் தமிழர் அல்லாதவர்களிடமும் மிக வேகமாக பரவி வருகின்றது. குறிப்பாகசொல்லவேண்டும் என்றால் பிரித்தானிய ஆங்கில ஊடகங்கள் அனைத்தும் எமது போராட்டங்களை முன்னுரிமைகொடுத்து பிரசுரித்து வருகின்றன.
எதிர்வரும் சனிக்கிழமை போராட்டம் நடைபெறும் இடம் (25.06.11) 12:00PM
at GLOUCESTERSHIRE COUNTY CRICKET CLUB, NEVIL ROAD, BRISTOL, BS7 9EJ.
இவ் வாரம் சனிக்கிழமை நடைபெறும் போட்டியில் என்றுமே இல்லாதவாறு ஒரு வரலாற்று நிகழ்வு நடக்க இருக்கிறது. உலகிலையே முதன் முதலாக ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இன்னொரு நாட்டிற்கு எதிராக களம் இறங்க உள்ளார் அதுவும் இலங்கை ஜனாதிபதி மகிந்தவின் அழைப்பில் இவர் மறுபடியும் உள்வாங்கப்பட்டு விளையாட உள்ளார். சிங்கள இனவாதிகளின் ஒத்த கருத்தை கொண்ட சனத் ஜெயசூரிய தாமும் தன்னுடைய பங்கிற்கு சிங்கள இனவாதிகள் செய்தது இனப்படுகொலை இல்லை என்பதை ஊடகங்கள் மூலமாக வெளிக்கொண்டுவந்துள்ளர்.
பிரித்தனியாவின் முன்னணி பத்திரிகையான கார்டியன் இவருக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது நாளேட்டில் ஒரு கட்டுரையை பதிவு செய்துள்ளது. சேனல் 4 காணொளி பற்றி அதில் குறிப்பிட்டுள்ளது மட்டுமல்லாமல் இலங்கை போர்க்குற்றம் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் சனத் ஜெயசூரிய ஒரு போர்க்குற்ற அரசின் உறுப்பினர் என்றும் தனது செவ்வாய்க்கிழமை நாளேட்டில் பதிவு செய்துள்ளார்கள். சிங்கள இனவாத நாட்டினை அனைத்துலக மட்டத்தில் இருந்து காப்பாற்ற இலங்கைஅரசாங்கம் மும்முரமாக செயற்பட்டு வரும் இவ்வேளையில் அவர்கள் பயன்படுத்தும் ஒரு துருப்பு சீட்டு இந்த துடுப்பாட்டம்ஆகும்.
1970 களிலும் 1980 களிலும் தென்னாபிரிக்கா நாட்டின் தேசிய அணிகளை உலகம் புறக்கணித்தது 25 ஆண்டுகளுக்கு பின்புதான் அவர்களின் தேசிய அணி வெளி உலகத்திற்கு வந்தார்கள் அதேபோல் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் துடுப்பாட்டவாரியம் சிம்பாவே நாட்டின் தேசிய துடுப்பாட்ட அணியுடனான தனது அனைத்து உறவுகளையும் 2008 ஆம் ஆண்டு நிறுத்திகொண்டது. இவையாவும் ஏன் நடைபெற்றது? அந்த நாடுகளின் மனித உரிமைகளை நிலை நாட்ட அனைத்துலகம்மேற்கொண்ட முயற்சி ஆகும் இதில் பிரித்தனியாவின் பங்கு முக்கியம் பெற்றது அதேபோல் இலங்கை அரசிற்கு அழுத்தம்கொடுக்க எமது கடமைகளை நாம் செய்யவேண்டிய நிர்ப்பந்தத்தில் தற்போது உள்ளோம். இப்போராட்டத்தில் அனைத்துதமிழ் மக்களையும் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். புறக்கணிப்பு போராட்டம் சம்மந்தப்பட்டஅனைத்து தொடர்புகளும் எமது இணைய தளத்தில்(www.tyouk.org) கிடைக்கும்.
பேருந்து புறப்படும் இடம் மற்றும் மேலதிக விபரங்களுக்கு எமது இணையத்தை அல்லது தரப்படுள்ள தொலைபேசி மூலம்தொடர்பு கொள்ளவும்.
Leaflets:
Why boycott?
தொடர்புகட்கு Tel: 07539 444 824
மின்னஞ்சல்: info@tyouk.org
நன்றி
தமிழ் ஊடக ஒருங்கிணைப்பாளர்
சஞ்சய்
எதிர்வரும் சனிக்கிழமை போராட்டம் நடைபெறும் இடம்
25.06.11
12:00PM
GLOUCESTERSHIRE COUNTY CRICKET CLUB
NEVIL RD
BRISTOL
BS7 9EJ
info@tyouk.org
07539444824
12:00PM
GLOUCESTERSHIRE COUNTY CRICKET CLUB
NEVIL RD
BRISTOL
BS7 9EJ
info@tyouk.org
07539444824
--
Media Team
Tamil Youth Organisation - United Kingdom
No comments:
Post a Comment