தமிழர் பகுதிகளில் இலங்கை அரசாங்கமும் இராணுவமும் இணைந்து மேறகொண்டுவரும் நில அபகரிப்பை எதிர்த்து நாடு தழுவிய வகையில் சாத்வீகப் போராட்டம் ஒன்றை நடாத்துவதற்கு தமிழரசுக்கட்சியின் கொள்கைபரப்புச் செயலர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.இம்மாத இறுதியில் கிளிநொச்சியின் முறிகண்டியில் இப்போராட்டமானது ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக நாட்டின் சகல இடங்களுக்கும் இது விஸ்தரிக்கப்படும் என்றும் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.’
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Friday, 8 June 2012
இலங்கை கொடியை ஏற்ற மறுத்த அப்பாத்துரை விநாயகமூர்த்தி – கடுப்பில் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது தேசிய கொடியை ஏற்றி வைக்குமாறு சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா மூன்று தடவைக்கு மேல் பணித்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி ‘நான் ஏற்றமாட்டேன்’ என கூறி மறுத்துள்ளார்.
அத்துடன் “ஏற்றுவதற்குரிய காலம் வரட்டும் அப்போது பார்ப்போம்” எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
கோவை வந்த இலங்கை அமைச்சர் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் திரும்பின
கோவை வந்த இலங்கை அமைச்சருக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் திரும்பினார். கோவையில் CENTRAL GOVT CONTROLLED - மத்திய அரசின் வேளாண்மை துறை கட்டுப்பாட்டில் கரும்பு இனப்பெருக்க மையம் செயல்படுகிறது. இந்த மையத்தை நேரில் பார்வையிட்டு, அதேபோல் இலங்கையில் ஒரு மையத்தை அமைப்பதற்கு இலங்கை சிறு ஏற்றுமதி மற்றும் பயிர் உற்பத்தித்துறை அமைச்சர் ரெஜினால்டு குருவே தலைமையில் குழுவினர் நேற்று முன்தினம் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மெல்பேர்ண் நகர மையத்தில் உத்தியோகபூர்வமாக ஏற்றி வைக்கப்பட்ட தமிழீழத் தேசியக் கொடி!
இன்று வெள்ளிக் கிழமை (08-06-2012) மாலை 4.45 மணிக்கு தமிழீழத் தேசியக் கொடிக் கீதம் ஒலிக்க தொழிற் சங்கத்தின் முக்கிய உறுப்பினர் Jacob Cragg அவர்களால் தமிழீழத் தேசியக் கொடி கட்டிடத்தின் உச்சியில் ஏற்றி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஒஸ்ரேலிய பல்லினமக்கள், கரவொலி எழுப்பித் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
தமிழினத்தின் மீதான இலங்கையின் போர்க்குற்றங்கள் அடங்கிய புதிய ஆதாரங்கள்
இது தொடர்பில் நா.த.அரசாங்கத்தின் தகவற்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்............. read more
Thursday, 7 June 2012
தமிழர்களின் ஆர்ப்பாட்டத்தினால் வெட்கித் தலைகுனிந்த மகிந்த (முழுமையான விபரங்கள்)
http://www.eelamdaily.com/
தமிழர்களின் ஆர்ப்பாட்டத்தினால் வெட்கித் தலைகுனிந்த மகிந்த (முழுமையான விபரங்கள்)
(காணொளிகள், படங்கள் இணைப்பு) சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சவின் லண்டன் பயணம் அவருக்கும், அவரது நாட்டிற்கும் மிகப்பெரும் அவமானத்தைக் கொடுத்து, அவர் வெட்கித் தலைகுனியும் நிலையை தமிழ் மக்களின் இன்றைய (06-06-2012) போராட்டம் கொடுத்துள்ளது.

சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சவின் லண்டன் பயணம் அவருக்கும், அவரது நாட்டிற்கும் மிகப்பெரும் அவமானத்தைக் கொடுத்து, அவர் வெட்கித் தலைகுனியும் நிலையை தமிழ் மக்களின் இன்றைய (06-06-2012) போராட்டம் கொடுத்துள்ளது.
மன்சன் ஹவுஸ் ஆர்ப்பாட்டம்:
இன்று மகிந்த பேச இருந்த மன்சன் ஹவுசிற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் காணொளி இது:
http://www.youtube.com/watch? v=IIyeU0JNwxw
மதிய விருந்து:
காவல்துறையினர் மக்களை மறிக்கும் காட்சிகள்:
http://www.youtube.com/watch? v=fhR3ulSF924
மக்களின் பேரணியின் முழுமையான தொகுப்பையும், மகிந்த உள்ளேவரும் காட்சியையும் இங்குள்ள காணொளிகளின் காணலாம்:
http://www.youtube.com/watch? v=rdABFhRDZQ8
http://www.youtube.com/watch? v=39cxze0kFnI
மகிந்தவைத் தொடர்ந்து பிரித்தானிய மகாராணியார் அங்கு வந்தபோது, போர்க்குற்ற நபரை விருந்துள்ள அழைத்ததைக் கண்டித்து மக்கள் எழுப்பி முழக்கங்களை அவரும் அவதானித்துச் சென்றிருந்தார்.
http://www.youtube.com/watch? v=Gknuvy1KLZI
சிறீலங்கா அரசியல் சாசனம், மகிந்த உருவப்பொம்மை எரிப்பு:
பொதுநலவாய அமைப்பின் செயலகத்திற்கு முன்பாக ஈழத்தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது, சிங்கள, பௌத்த, இனவாதத்தை நிலைநாட்டும் வகையில் எழுதப்பட்ட அந்த நாட்டின் அரசியல் யாப்பு வாசித்துக் காண்பிக்கப்பட்டு, அது தீயிட்டுக் கொழுத்தப்பட்டதுடன், மகிந்தவின் உருவப் பொம்மையும் அங்கு ஆவேசத்துடன் இளைஞர்களால் கொழுத்தப்பட்டது.
http://www.youtube.com/watch? v=UpTHZlyaBYc
விடுதிக்கு முன்பாக:
மகிந்தவின் ஊர்தியை அடையாளம் கண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்த ஊர்தியை நோக்கி முட்டைகள், தண்ணீர் போத்தல்களை வீசி எறிவதை இங்குள்ள காணொளியில் பார்க்கலாம். இதற்கு முன்னதாக பலர் வைத்திருந்த முட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்திருந்ததும் அங்கு நினைவூட்டத்தக்கது.
http://www.youtube.com/watch? v=nvfH7Mll340
மகிந்த பரிவாரங்கள்:
மகிந்தவுடன் வந்திருந்த பரிவாரங்கள் விடுதிக்கு வெளியே வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை படம் பிடிக்க முனைந்தபோது சனல்-4 மற்றும் ஈழம் டெய்லி செய்தியாளர்களால் அவர்கள் படம் பிடிக்கப்பட்டதுடன், அவர்களது நடவடிக்கை பற்றி காவல்துறையினரிடம் முறையிடப்பட்டது.
http://www.youtube.com/watch? v=P271g4eRsfg
ஊடகங்கள்:
போர்க்குற்ற நபரை விரட்டியடித்த தமிழ் மக்களின் இன்றைய போராட்டம் தொடர்பான செய்திகளை சனல்-4, ஐ.ரி.என் தொலைக்காட்சி, பி.பி.சி உலகசேவை, பி.பி.சி பண்பலை, தி. இன்டிபென்டன் பத்திரிகை, கார்டியன் பத்திரிகை உட்பட பல முக்கிய ஊடகங்கள் மற்றும் சுயாதீன ஊடகவியலாளர்கள் பல மணி நேரங்கள் அங்கு வந்திருந்து சேகரித்துக் கொண்டிருந்தனர்.
மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது, மத்திய லண்டனிற்கு செல்ல வேண்டாம் எனக்கோரும் போக்குவரத்துச் செய்திகளில், தமிழ் மக்களின் போராட்டம் பற்றி அடிக்கடி அறிவிக்கப்பட்டதுடன், ஆர்ப்பாட்டங்கள் முடிவடைய முன்னரே லண்டனில் பல இலட்சம் மக்கள் வாசிக்கும் இலவசப் பத்திரிகையான ‘லண்டன் ஈவினிங் ஸ்ரான்ட்டட்டில்’ ஆர்ப்பாட்டம் பற்றி செய்தி வெளியாகி இருந்தது.
மன்சன் ஹவுஸ் ஆர்ப்பாட்டம்:
இன்று மகிந்த பேச இருந்த மன்சன் ஹவுசிற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் காணொளி இது:
http://www.youtube.com/watch?
மதிய விருந்து:
காவல்துறையினர் மக்களை மறிக்கும் காட்சிகள்:
http://www.youtube.com/watch?
மக்களின் பேரணியின் முழுமையான தொகுப்பையும், மகிந்த உள்ளேவரும் காட்சியையும் இங்குள்ள காணொளிகளின் காணலாம்:
http://www.youtube.com/watch?
http://www.youtube.com/watch?
மகிந்தவைத் தொடர்ந்து பிரித்தானிய மகாராணியார் அங்கு வந்தபோது, போர்க்குற்ற நபரை விருந்துள்ள அழைத்ததைக் கண்டித்து மக்கள் எழுப்பி முழக்கங்களை அவரும் அவதானித்துச் சென்றிருந்தார்.
http://www.youtube.com/watch?
சிறீலங்கா அரசியல் சாசனம், மகிந்த உருவப்பொம்மை எரிப்பு:
பொதுநலவாய அமைப்பின் செயலகத்திற்கு முன்பாக ஈழத்தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது, சிங்கள, பௌத்த, இனவாதத்தை நிலைநாட்டும் வகையில் எழுதப்பட்ட அந்த நாட்டின் அரசியல் யாப்பு வாசித்துக் காண்பிக்கப்பட்டு, அது தீயிட்டுக் கொழுத்தப்பட்டதுடன், மகிந்தவின் உருவப் பொம்மையும் அங்கு ஆவேசத்துடன் இளைஞர்களால் கொழுத்தப்பட்டது.
http://www.youtube.com/watch?
விடுதிக்கு முன்பாக:
மகிந்தவின் ஊர்தியை அடையாளம் கண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்த ஊர்தியை நோக்கி முட்டைகள், தண்ணீர் போத்தல்களை வீசி எறிவதை இங்குள்ள காணொளியில் பார்க்கலாம். இதற்கு முன்னதாக பலர் வைத்திருந்த முட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்திருந்ததும் அங்கு நினைவூட்டத்தக்கது.
http://www.youtube.com/watch?
மகிந்த பரிவாரங்கள்:
மகிந்தவுடன் வந்திருந்த பரிவாரங்கள் விடுதிக்கு வெளியே வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை படம் பிடிக்க முனைந்தபோது சனல்-4 மற்றும் ஈழம் டெய்லி செய்தியாளர்களால் அவர்கள் படம் பிடிக்கப்பட்டதுடன், அவர்களது நடவடிக்கை பற்றி காவல்துறையினரிடம் முறையிடப்பட்டது.
http://www.youtube.com/watch?
ஊடகங்கள்:
போர்க்குற்ற நபரை விரட்டியடித்த தமிழ் மக்களின் இன்றைய போராட்டம் தொடர்பான செய்திகளை சனல்-4, ஐ.ரி.என் தொலைக்காட்சி, பி.பி.சி உலகசேவை, பி.பி.சி பண்பலை, தி. இன்டிபென்டன் பத்திரிகை, கார்டியன் பத்திரிகை உட்பட பல முக்கிய ஊடகங்கள் மற்றும் சுயாதீன ஊடகவியலாளர்கள் பல மணி நேரங்கள் அங்கு வந்திருந்து சேகரித்துக் கொண்டிருந்தனர்.
மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது, மத்திய லண்டனிற்கு செல்ல வேண்டாம் எனக்கோரும் போக்குவரத்துச் செய்திகளில், தமிழ் மக்களின் போராட்டம் பற்றி அடிக்கடி அறிவிக்கப்பட்டதுடன், ஆர்ப்பாட்டங்கள் முடிவடைய முன்னரே லண்டனில் பல இலட்சம் மக்கள் வாசிக்கும் இலவசப் பத்திரிகையான ‘லண்டன் ஈவினிங் ஸ்ரான்ட்டட்டில்’ ஆர்ப்பாட்டம் பற்றி செய்தி வெளியாகி இருந்தது.
சிறீலங்காவின் அரசியல் யாப்பு இன்று மீண்டும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது
சிறீமாவினால் கொண்டுவரப்பட்ட பௌத்த குடியரசு யாப்பு மற்றும் ஜே.ஆரின் அரசியல் யாப்பு வரையாக ஏந்தி வந்த மாணவர்கள் முன்னைய வெள்ளையின பிரதிநிதிகளது அடையாளமாகவுள்ள அவர்களது கல்லறை முன்பதாக மலர்வளையம் வைத்து தமது இறுதியஞ்சலியினை செலுத்தி தீயிட்டுக் கொழுத்தினர்..

ஒன்றரை இலட்சம் தமிழீழ மக்களைக் கொன்று குவித்த போர்க்குற்றவாளியை கைது செய்யக் கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம்
ஒன்றரை இலட்சம் தமிழீழ மக்களைக் கொன்று குவித்த சிங்களத் குடியரசுத் தலைவரும், போர்க்குற்ற வாளியுமான மஹிந்த ராஜபக்ச பிரிட்டனிலேயே கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தியும், பொதுநலவாய நாடுகள் கூட்டமைப்பிலிருந்து சிறீலங்காவை வெளியேற்றக் கோரியும்..

மகிந்தாவுக்கு எதிரான போராட்டத்தில் தமிழர்களுடன் இணைந்த பிரித்தானிய காவல்துறை!
மாலை 5.30 மணியளவில் பிரித்தானியா காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் விமான நிலையம் நோக்கி புறப்பட்ட மகிந்தாவின் வாகன அணி விடுதியில் இருந்து புறப்பட்டு சில வினாடிகளில் தமிழர்களின் தாக்குதலுக்கு உள்ளானது.
வாகனங்களில் சிறு சிறு நெளிவுகள் ஏற்பட்டதையும் அவதானிக்க முடிந்தது. வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வேளை அமைதியாக இருந்து வேடிக்கை பார்த்து சிரித்ததையும் அவதானிக்க முடிந்தது.............. read more
பிரித்தானிய மகாராணியுடன் விருந்துண்ண இலங்கையின் தேசியக்கொடியை தூக்கி வீசினார் மகிந்தர்!
பிரித்தானிய மகாராணிக்கு கொமன்வெல்த் செயலாளர் அளித்த மதிய விருந்தில் பங்கேற்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக, தமிழர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.............. read more
பிரித்தானியப் பிரதமருடன் குழுப்படத்தில் ஒட்டிக் கொண்ட மகிந்த!
பிரித்தானிய மகாராணிக்கு கொமன்வெல்த் செயலாளர் கமலேஸ் சர்மா நேற்று வழங்கிய மதிய விருந்தின் போது, எடுக்கப்பட்ட குழுப்படத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரோனுடன் ஒட்டிக்கொண்டார்.
கொமன்வெல்த் தலைமையகமான மால்பரோ ஹவுசில் மகாராணிக்கு நேற்று விருந்துபசாரம் அளிக்கப்பட்டது. இதில் 54 கொமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மற்றும் விருந்தினர்கள் பங்கேற்றனர்.................. read more
பொலிஸாரின் தடைகளை உடைத்து லண்டனில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்; ஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிராகப் புலிக்கொடிகளை உயர்த்திக் கோஷம்
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வருகையை எதிர்த்து லண்டனில் உள்ள பொதுநலவாய நாடுகளின் செயலகத்தை நோக்கி புலம்பெயர் தமிழர்கள் நேற்று நடத்திய பெரும் ஆர்ப்பாட்டப் பேரணியைக் கட்டுப்படுத்த முடியாமல் பொலிஸார் திணறினர்..................... read more
குடாநாட்டிலும் 61 ஏக்கர் நிலத்தை ஏப்பம்விட இராணுவம் முன்முயற்சி; மூன்று பிரதேச செயலர் பிரிவுகளில் முதல் கட்ட நடவடிக்கை
வன்னி மாவட்டங்களில் தமிழ் மக்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஏப்பம் விட்ட இலங்கை இராணுவம் தற்போது யாழ். மாவட்டத்திலும் முதற்கட்டமாக 61 ஏக்கர் நிலத்தை அபகரிப்பதற்கு முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ பூர்வாங்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன...................... read more
சம்பந்தனை பாராளுமன்றத்திலிருந்து இடைநிறுத்தி கைது செய்ய வேண்டும் :குணதாச _
சிங்கள அமைச்சருக்கு கோவையில் எதிர்ப்பு: 100 பேர் கைது.
இந்தியாவின் கோவை பகுதிக்குச் சென்றுள்ள இலங்கை அமைச்சர் ஒருவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 100 பேர். வரை கைது செய்யப்பட்டனர். திருமண விழா ஒன்றில் பங்கேற்க இலங்கை அமைச்சர் கோவை சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. ..................... read more
ஆர்பாட்டத்தில் மகிந்தரின் கொடும்பாவி எரிப்பு (படங்கள்)
இலண்டன் போல் பகுதியில் முற்றுகைப் போராட்டத்தை ஆரம்பித்திருக்கும் ஈழத்தமிழர்கள் மகிந்தரின் கொடும்பாவிக்கு மரண ஊர்வலம் ஒன்றை நிகழ்த்தி வந்து பறையொலி எழுப்பி கண்டன முழக்கம் எழுப்பியவாறு கொடுங்கோலன் மகிந்தரின் கொடும்பாவியை போல் மால் வீதிகள் ஊடாக கயிற்றால் கட்டியிழுத்தவாறு ஈழத்தமிழர்கள் நகர்ந்து சென்று பின்னர் மகிந்தரின் ஒரு கொடும்பாவி மற்றும் இலங்கை தேசியக் கோடியை எரித்துள்ளனர்............... read more
அரசியல் கைதிகளே இல்லையெனக் கூறி தமிழரின் விடுதலையை மறுக்கிறது அரசு: அமைச்சர் நிமால்
அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை. உண்ணாவிரதமிருந்துவரும் கைதிகள் சிறைச்சாலையில் வழங்கப்படும் உணவைத் தவிர ஏனைய உணவுகளை உட்கொள்கின்றனர் என்று அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார்....................... read more
தமிழர் சேனையைக் கண்டதும் ஓட்டமெடுத்த சிங்களவர்கள்!
இலண்டன் போல் மால் மால்பரோ மாளிகை முன்றலில் முற்றுகைப் போராட்டத்தை நிறைவு செய்துவிட்டு மகிந்தரின் ஹில்ரன் தங்குவிடுதியை நோக்கி ஈழத்தமிழ் போராட்டவாதிகள் புறப்படும் செய்தியைக் கேள்வியுற்றதும் அங்கு நின்ற 100 சிங்களவர்கள் ஓட்டமெடுத்துள்ளனர்....................... read more
கணவரை கொல்ல விமானிக்கு பணம் கொடுத்த லண்டன் மனைவி!
திருகோணமலை ஐயனார்கேணி வீதியில் 2012-04-18ம் திகதி அன்று இரவு 09.30 மணியளவில் 28 வயதுடைய கிரிக்கெட் வீரரான ஈஸ்வரதாஸன் கேதீஸ்வரன் என்ற நபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.............. read more
சம்பந்தனை பாராளுமன்றத்திலிருந்து இடைநிறுத்தி கைதுசெய்ய வேண்டும்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை பாராளுமன்றத்திலிருந்து இடைநிறுத்தி உடனடியாகக் கைது செய்ய வேண்டும். இதற்கான கடிதத்தை சட்டமா அதிபருக்கும் சபாநாயகருக்கும் அனுப்பிவைத்துள்ளோம் ௭ன்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்தார். மட்டக்களப்பு மாநாட்டில் தேசத்துரோகியாக சம்பந்தன் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். ௭னவே, நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒரு மைப்பாட்டை கருத்தில் கொண்டு கூட்டமைப்பிற்கு ௭திராக கடும் நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டும். அரசியலமைப்பை மீறிச் செயற்பட ௭வருக்கும் உரிமையில்லை ௭ன்றும் அவர் குறிப்பிட்டா................... read more
Tuesday, 5 June 2012
இந்துக் கோவிலை இடித்து புத்தர் சிலையமைக்கு சிறிலங்கா படையினர்
கிளிநொச்சி கிருஷ்ணபுரம் பகுதியிலுள்ள பொதுமக்களின் காணிகளை ஆக்கிரமித்துள்ள சிறிலங்காப் படையினர், அங்கிருந்த இந்து ஆலயமொன்றை இடித்து அகற்றி புத்தர் சிலையை அமைத்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இப் பகுதியிலுள்ள 15 குடும்பங்களுக்குச் சொந்தமான சுமார் 20 ஏக்கர் காணிக்குள் பலாத்காரமாக இச் செயற்பாட்டில் சிறிலங்காப் படையினர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் சிங்களவர்களே வந்தேறு குடிகள் தமிழர் அல்ல; சிறிதரன் எம்.பி முழக்கம்
இலங்கை வரலாற்றில் சிங்கள மக்களே வந்தேறு குடிகள். தமிழ் மக்கள் அல்ல என்பதை பெளத்த பிக்குகள் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்
மன்னார் ஆயரின் பாதுகாப்புக் குறித்து மஹிந்தவிடம் வினவுவார் பாப்பரசர்
மன்னார் ஆயர் மேதகு இராயப்பு ஜோப் ஆண்டகையின் பாது காப்பு அச்சுறுத்தல் குறித்துப் பரிசுத்த பாப்பரசர் 16 ஆவது பெனடிக்ற், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தனது அதிருப்தியை வெளியிடுவார் என்று வத்திக்கான் வட்டாரங்கள் கூறுகின்றன.
பிரிட்டன் மகாராணியின் வைர விழா நிகழ்வுக்காகப் பிரிட்டனுக்குச் சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் 7 ஆம் திகதியன்று வத்திக்கானுக்கு செல்லவுள்ளார். இதன் போது அவர் பாப்பரசரைச் சந்திக்கவுள்ளார்.
வரலாற்று சிறப்புவாய்ந்த மட்டக்களப்பின் சைவ கோயில் சிலைகள் சிங்கள இராணுவ படையினரால் சிதைப்பு.
மட்டக்களப்பை ஆக்கிரமிக்கும் சிங்கள இராணுவத்தினர் பட்டிப்பாழை வட்டாரத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிகுந்த தாந்தாமலை முருகன் கோயில் கற் சிலைகளை இடித்து சிதைத்துள்ளனர்.
கிழக்குப் பகுதியினர் இக்கோயிலை ' சின்ன கதிர்காமம்' கோயிலென்று அழைப்பது வழக்கமாகும். இதனை சுற்றியுள்ள 25 ஏக்கர் நில பகுதி, 1959-ஆம் ஆண்டில் சிலோன் நீதிமன்ற ஆணையினரால் சைவ புனித தளமாக முத்திரையிடப் பட்டது.
தாந்தாமலை முருகன் கோயில், 1994-ஆம் ஆண்டு முதல் பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக புலிகள் படையினரால் காக்கப்பட்டும் நன் முறையில் பராமரிக்கப்பட்டும் வந்தது. ஆனால், நடந்த போருக்குப் பின்னர் அது இலங்கை இராணுவ படையினரின் கைக்கும் கொழும்பு தொல்பொருள் ஆராய்ச்சி துறைக்கும் கைமாறிவிட்டது.
இதனிடையே, இச்சைவ கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் கொழும்பு அரசாங்கத்தினர் புத்தர் கோயில் கட்ட முற்படுவதாக கிராம மக்கள் கவலைக்கிடம் தெரிவித்துள்ளனர்.
ஈழத் தமிழர்களின் தொடர் ஆர்ப்பாட்டம் ; தற்பாதுகாப்புக் கருதி மஹிந்த உரை ரத்து
நாளை காலை உரையாற்ற திட்டமிடப்பட்டபோதிலும் இன்று இரத்து செய்யப்பட்டுள்ளது.
புலப்பெயர் தமிழர்களின் தொடர் போராட்டமானது, தான் உரையாற்ற இடஞ்சலை ஏற்படுத்தும் என்பதனாலும், தற்பாதுகாப்புக்காகவுமே இவ் உரையாற்றும் திட்டத்தை இரத்து செய்ததாக மஹிந்த தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
புலப்பெயர் தமிழர்களின் தொடர் போராட்டமானது, தான் உரையாற்ற இடஞ்சலை ஏற்படுத்தும் என்பதனாலும், தற்பாதுகாப்புக்காகவுமே இவ் உரையாற்றும் திட்டத்தை இரத்து செய்ததாக மஹிந்த தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு சவாலாக அமைந்துள்ள மகிந்த ராஜபக்சவின் பிரித்தானியப் பயணம்!
யூன் 6ம் நாள் புதன்கிழமை பொதுநலவாய பொருளாதார மாநாட்டில் சிறப்புரையொன்றினை மகிந்த ராஜபக்ச ஆற்றவுள்ளதாக Commonwealth Economic Forum அமைப்பின் நிகழ்ச்சி நிரலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறுதிப்படுத்தப்பட்ட பேச்சாளர்களுக்கான Commonwealth Economic Forum விபரத்தில் இலங்கை அரசுத் தலைவரின் பெயரும் குறித்த நிகழ்ச்சி நிரலில் இடப்பட்டுள்ளதோடு 10மணிக்கு அவருடைய சிறப்பு பேச்சொன்றும் இடம்பெறுமென குறிக்கப்பட்டுள்ளது................. read more
இலங்கை போராட்ட இயக்கத்திற்கு உதவியதாக கனடாவில் இரு ஆலயங்களுக்கு அபராதம்
இலங்கை போராட்ட இயக்கத்திற்கு உதவியதாக கனடாவில் இரு ஆலயங்களுக்கு அபராதம்
இலங்கையில் போராட்ட இயக்கத்தின் முகவர் நிறுவனம் என சந்தேகிக்கப்பட்ட தமிழ் அகதிகள் நிறுவனத்துக்கு, 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தை தொடர்ந்து பணம் வழங்கியதற்காக டொரண்டோவில் உள்ள இரண்டு இந்து ஆயலங்களுக்கு கனடா இறைவரி நிறுவனம் அபராதம் விதித்துள்ளது.
பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளைகளான றிச்மண்ட் ஹில் இந்து ஆலயம், மிஸஸாகோ இந்து மிஷன் ஆலயம் ஆகியவற்றுக்கு முறையே 140,000 டொலர், 300,000 டொலர் அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.
மகிந்தவிற்கு எதிராக அணி திரள்வோம் - சீமான் உரிமையுடன் அழைப்பு
தமிழின அழிப்பை மேற்கொண்டு, போர்க்குற்றம் புரிந்த சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சவை லண்டனில் பேச அனுமதிக்கக்கூடாது என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உலகத் தமிழ் மக்களை நோக்கி உரிமையுடன் அழைப்பு விடுத்திருக்கின்றார்.
மத்திய லண்டன் Bank நிலக்கீழ் தொடரூந்து நிலையத்திற்கு அருகிலுள்ள மன்சன் அரங்கத்தில் நாளை காலை 9:00 மணியளவில் மகிந்த உரையாற்ற இருக்கின்றார். எனவே தமிழ் மக்களை அந்த இடத்தில் காலை 8:00 மணிக்கு அணிதிரள வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

போர்க்குற்றவாளியான மஹிந்தவுடன் மகாராணி விருந்தில் பங்கேற்பது ஏன்?
போர்க்குற்றவாளியான மஹிந்தவுடன் மகாராணி விருந்தில் பங்கேற்பது ஏன்? மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கேள்வி
போர்க்குற்றவாளியான மகிந்த ராஜபக்ஷவுடன் ஏன் மதிய உணவில் பங்கேற்க வேண்டும் என பிரித்தானிய மகாராணியிடம் கேள்வி எழுப்பியுள்ளார் மனிதஉரிமைகள் கண்காணிப்பகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கென் ரோத் .
ஐரோப்பிய நாடுகளில் இருந்து பஸ்ஸில் புறப்படும் தமிழர்கள்: நாளை பாரிய ஆர்பாட்டம் !
நாளை காலை, 9.00 மணிக்கு லண்டன் மான்சன் ஹவுஸில் மகிந்தர் சிறப்புரையாற்றவுள்ளார். காமன்வெலத் வணிக சம்மேளனத்தின் இந் நிகழ்வில் மகிந்த உரையாற்றுவதை எதிர்த்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை தமிழர்கள் நடத்தவுள்ளனர். லண்டனில் பல பாகங்களில் இருந்து, பஸ் புறப்பட உள்ளதோடு, ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் இருந்தும் தமிழர்கள் லண்டன் நோக்கிப் புறப்பட ஆரம்பித்துள்ளனர் என அதிர்வு இணையம் அறிகிறது. சுவிஸ், ஜேர்மன், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து பல தமிழர்கள் லண்டன் நோக்கி வர ஆரம்பித்துள்ளனர். இதேவேளை லண்டன் வாழ் தமிழர்கள் அனைவரும் நாளை திரண்டு வந்து, தமது எதிர்ப்பைக் காட்டவேண்டும் என ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்......................... read more
யேர்மனியில் நடைபெற்ற அனைத்துலக மக்களவை மாநாட்டில் எட்டப்பட்ட தீர்மானம்.
யேர்மனியில் நடைபெற்ற அனைத்துலக மக்களவை மாநாட்டில் புலம்பெயர் தமிழீழ மக்களின் அரசியல் வேணவாவை வலியுறுத்தும் முகமாக எட்டப்பட்ட தீர்மானம்.
யேர்மன் தலைநகர் பெர்லினில் 26 ஃ 27 .05 .2012 நாட்களில் நடைபெற்ற அனைத்துலக மக்களவையின் மாநாடு-
முதலில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு இதுவரைகாலமும் தாயக விடுதலைப் போரில் வீரகாவியமான மாவீரர்களுக்கும் அந்நிய ஆக்கிரமிப்பால் படுகொலைசெய்யப்பட்ட எமது மக்களுக்குமாக அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாநாடு ஆரம்பமானது.

தீர்வின்றேல் சர்வதேசத்தின் தலையீட்டுடன் பிரிவினை
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்காவிட்டால் சர்வதேசத்தின் தலையீட்டுடன் இலங்கையில் பிரிவினை உருவாகுமென எச்சரிக்கை விடுக்கும் “” எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு” அமைப்பு தமிழ் தேசிய கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை நடத்த முயற்சிப்பதென்பது காலத்தை கடத்தி சர்வதேசத்தை ஏமாற்றும் செயலாகுமென்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
இன்று தமிழீழப் போராட்ட இயங்குசக்தியாக விளங்கும் புலம்பெயர் மக்களுக்கான முக்கிய வேண்டுகோள்!
அன்பான பிரித்தானிய, ஐரோப்பிய வாழ் தமிழீழ உறவுகளே! இன்றைய நெருக்கடியான சூழ்நிலையில் ஈழத்தமிழர்களுடைய அரசியல் போராட்ட நகர்வை எமது ஒட்டுமொத்த மக்கள் சக்தியின் மூலமே முன்னகர்த்தி வெற்றிகொள்ள முடியும். ஈழத்தமிழர்களுடைய போராட்ட இயங்குசக்தியாக இன்று புலம்பெயர் மக்களே உள்ளனர். முள்ளிவாய்க்காலின் இறுதிநாட்களில் எமது தேசியத் தலைவர் அவர்கள் அந்தப் பொறுப்பை எமது புலம்பெயர் மக்களிடமே ஒப்படைத்துவிட்டுச் சென்றிருந்தார். புலம்பெயர் மக்களாகிய நாம் அனைவரும் இன்றைய காலத்தின் வரலாற்றுக் கட்டாயத்தை உணர்ந்து, எங்கள் நிலைப்பாட்டை உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் இந்த உலகிற்கு, ‘நாம் ஓய்ந்துவிடவில்லை! எமக்கு வேண்டும் தமிழீழம்! எங்கள் போராட்டத்தை நசுக்கிய உலகமே, எங்களுக்கான நீதியைப் பெற்றுத்தா!’ என்ற செய்தியை நாம் ஒன்று திரண்ட மக்கள்திரட்சியால் மட்டுமே வெளிப்படுத்த முடியும்.
ஆசியாவின் ஆச்சரியம்: இலங்கையில் 90 விநாடிக்கு ஒருமுறை பாலியல் துஷ்பிரயோகம்!
இலங்கையில் பதிவாகும் பாலியல் வல்லுறவுகளில் நூற்றுக்கு 89 சதவீதமானவை 16 வயதுக்கும் குறைந்த சிறுமியர் மீது மேற்கொள்ளப்பட்டவை என சோசலிஷ மகளிர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சமன்மலி குணசிங்க தெரிவித்துள்ளார்.
பெலவத்தை ஜே.வி.பி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.நாட்டில் இடம்பெறும் துஷ்பிரயோகங்களில் 48 சதவீதமானவை பாலியல் துஷ்பிரயோகங்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை இராணுவத்திற்கு இந்திய இராணுவம் பயிற்சி வழங்கக்கூடாது
இலங்கைக்கு இந்தியா இராணுவப் பயிற்சி வழங்கக்கூடாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இலங்கைத்தீவில் மீள எழும் தமிழர்களின் உரிமைக்குரல்கள் : வீக்கென்ட லீடர்
சிங்கள அரசின் கொடுஞ்செயல்களுக்கு எதிராக போர்க் கொடி ஏந்துபவர்கள் புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றும், தமிழகத் தமிழர்கள் மட்டுமல்ல, இலங்கைத்தீவில் உள்ள ஈழத் தமிழர்களும் தங்கள் உரிமைக் குரலை உயர்த்த தொடங்கிவிட்டனர் என்பதுதான் என இந்தியாவின் வீக்கென்ட லீடர் ஊடகம் கருத்து தெரிவித்துள்ளது.
கடந்த யூன் 1ம் நாள் வெளிவந்த குறித்த ஆக்கத்தின் தமிழாக்கம் :
தமிழர்களின் ஆர்ப்பாட்டத்தின் மத்தியில் தப்பியோடிய மகிந்த (காணொளி இணைப்பு)
சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச லண்டன் வந்தடைந்துள்ள பின்புலத்தில்,நேற்று (04-06-2012) அவர் தங்கியுள்ள ஹில்டன் தங்ககத்திற்கு முன்பாக பிரித்தானியாவாழ் தமிழ் மக்கள் ஒன்று திரண்டு பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்................. read more
தமிழீழ அணியின் சர்வதேச உதைபந்தாட்டம்: TV இல் பார்க்க இங்கே அழுத்தவும் !
தமிழீழ அணியின் சர்வதேச உதைபந்தாட்டம்: TV இல் பார்க்க இங்கே அழுத்தவும் !
05 June, 2012 by admin
சர்வதேச வீவா உலக சுற்றுக்கிண்ண காற்பந்து (VIVA Football World Cup) போட்டிகளில் முதன்முறையாக பங்கேற்கும் தமிழீழ அணியினர் இன்று தமது முதல் போட்டியை எதிர்கொள்கின்றனர். சர்வதேச அளவில் தமிழீழ அணி பங்குகொள்ளும் இவ்விளையாட்டை நேரலையாகப் பார்க்க இங்கே அழுத்தவும். லண்டன் நேரம் மாலை 6.30 மணிக்கு தமிழீழ அணி விளைடாட ஆரம்பிக்கிறது.
பிரித்தானியாவில் 6ம் திகதி கவனஈர்ப்புப் போராட்டத்திற்கு போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டிருக்கும் இடங்கள்
பிரித்தானியாவில் 6ம் திகதி கவனஈர்ப்புப் போராட்டத்திற்கு போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டிருக்கும் இடங்கள்
Monday, 4 June 2012
கிட்லரை விஞ்சியது இலங்கை அரசு; வடக்கு இராணுவ மயப்படுத்தப்பட்டது குறித்து கூட்டு எதிர்க்கட்சிகள் கருத்து
கிட்லரை விஞ்சியது இலங்கை அரசு; வடக்கு இராணுவ மயப்படுத்தப்பட்டது குறித்து கூட்டு எதிர்க்கட்சிகள் கருத்து |
வடக்கில் சந்திக்குச்சந்தி இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் கூட இவ்வளவு இராணுவ முகாம்கள் இருந்தனவா என்பது சந்தேகம்.
வடக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் இராணுவத்தின் தலையீடு அதிகமாக இருப்பதால் மக்கள் நிம்மதியாக வாழமுடியாதுள்ளனர். இவ்வாறு கொழும்பில் நேற்று பொது எதிரணிக்கட்சிகள் தெரிவித்தன.
மேலும், வடக்கில் தேர்தலை நடத்துவதற்கு அரசிற்கு அச்ச மில்லையெனில், சுயாதீன பொலிஸ், தேர்தல்கள் திணைக்களம், அரச சேவைகள் திணைக்களங்கள் என்பவற்றை நிறுவி அங்கு தேர்தலை நடத்துமாறும் அரசிற்கு பொது எதிரணிக்கட்சிகள் சவால் விடுத்துள்ளன. |
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வின்றேல் சர்வதேசத்தின் தலையீட்டுடன் பிரிவினை ஏற்படும்
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வின்றேல் சர்வதேசத்தின் தலையீட்டுடன் பிரிவினை ஏற்படும்
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்காவிட்டால் சர்வதேசத்தின் தலையீட்டுடன் இலங்கையில் பிரிவினை உருவாகுமென எச்சரிக்கை விடுக்கும் “” எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு”அமைப்பு தமிழ் தேசிய கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை நடத்த முயற்சிப்பதென்பது காலத்தை கடத்தி சர்வதேசத்தை ஏமாற்றும் செயலாகுமென்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழ்த்தேசியம் - சாதியம் - தியாகு உரை
தமிழ்த்தேசியமும் சாதிச் சிக்கல்களும் - ஆய்வரங்கம்
இடம்: லயோலா கல்லூரி , சென்னை
நிகழ்ச்சி ஏற்பாடு: தமிழர் சமூக, அரசியல், பொருளாதார பண்பாட்டு ஆய்வுக்கழகம்
இடம்: லயோலா கல்லூரி , சென்னை
நிகழ்ச்சி ஏற்பாடு: தமிழர் சமூக, அரசியல், பொருளாதார பண்பாட்டு ஆய்வுக்கழகம்
நவீன கிட்லரை நாட்டை விட்டுத் துரத்துவோம் திரண்டு வாருங்கள்!
21ம் நூற்றாண்டின் மாபெரும் இனஅழிப்பை மேற்கொண்ட நவீன கிட்லர் என்று நோக்கப்படும் சிங்கள ஆட்சியாளன், அத்தேசத்தின் அனைத்து நிறைவேற்று அதிகாரங்களை கொண்ட சனாதிபதி மகிந்தா ராஐபக்சா, பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் அதிராணியாகிய எலிசபெத் மகாராணியின் வைரவிழா கொண்டாட்டத்திற்கு தனது ஆட்சியதிகாரத்திற்குட்பட்ட காலனித்துவ நாடுகளுக்கு விடுக்கப்பட்ட அழைப்பினைச் சாதகமாக்கி பயன்படுத்திக் கொண்டு வருகை தரவிருக்கின்றதும், தனது இனவழிப்பை நியாயப்படுத்தவொரு சந்தர்ப்பமாகவும் பார்க்கின்றனர்.
Sunday, 3 June 2012
திருடர்கள் போல புறப்படவேண்டி நிலையில் உள்ளர் மகிந்தர் !
மகிந்த ராஜபக்ஷ இன்று(ஞாயிறு) மாலை 8.05க்கு லண்டன் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொழும்பில் இருந்து புறப்பட்ட UL503 என்ற விமானம், கட்டார் சென்று அங்கிருந்து லண்டன் ஹீத்துரோ விமான நிலையம் வந்தடைய உள்ளது. டேர்மினல் 4 க்கு வரும் இவ்விமனத்தில் தான் மகிந்தர் பயணிப்பதாக அறிகிறது. இருப்பினும் இதனை உறுதிசெய்ய முடியவில்லை. இன்றைய தினம் 1 விமானம் மட்டுமே, இலங்கையில் இருந்து பிரித்தானியா நோக்கி வருகின்றது. இவ்விமானத்தை விட்டால், நாளை மதியமே மற்றொரு விமானம் இலங்கையில் இருந்து பிரித்தானியா வரவுள்ளது. நாளை மகிந்த ராஜபக்ஷ வந்தால், அவரால் பிரித்தானிய இராணியின் வைரவிழாவில் கலந்துகொள்ள முடியாது !
ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையையும், தமிழீழ தேசியக் கொடியையும் அங்கீகரித்த இத்தாலி
இத்தாலி ஈழத்தமிழர் மக்களவை, தமிழீழத் தேசியக் கொடியை அங்கீகரித்து நகரசபையில் வைத்திருக்க வேண்டும் என்று மேஜரை கேட்ட போது அதனையும் அனைத்துக் கட்சியினரும் ஏக மனதாக ஏற்றுக் கொண்டனர்.26-03-2012 அன்று இத்தாலி தமிழ் தேசிய அமைப்புக்களினுடைய பிரதிநிகளுக்கும் வியல்லா மாநகரத்தில் உள்ள திறிவேரோ நகரசபை அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையில் நடந்த கலந்துரையாடலில் இத்தாலி ஈழத்தமிழர் மக்களவை, தமிழ் இளையோர் அமைப்பினரினால் தயாரிக்கப்பட்ட தமிழ் இனப்படுகொலையை வெளிப்படுத்தும் காணொளி காண்பிக்கப்பட்டு தாயக மக்களுடைய இன்றைய நிலை தொடர்பாகவும் எமது இனத்துக்கு சிங்கள அரசுகளால் நடாத்தப்படும் கொடுமைகள் நிறுத்தப்பட்டு சர்வதேசத்தால் இதற்கு நீதி வழங்கி சுயநிர்ணய உரிமையுடன் கூடிய நிரந்தர அரசியல் தீர்வு வேண்டும் என்றும் கேட்டிருந்தோம்.
Subscribe to:
Posts (Atom)