மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Saturday, 14 April 2012
யாழ்ப்பாணத்தில் காணாமல்போன லலித், குகன் புறக்கோட்டை 6ஆவது மாடியில் தடுத்து வைப்பு! தகவல்கள் அம்பலம்
அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களை திருப்பியனுப்புவதை இடைநிறுத்தியது சுவிஸ்!
அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்களைத் திருப்பி அனுப்புவதை, ஐரோப்பிய நாடுகள் ஒரு வருட காலத்துக்கு இடை நிறுத்தியுள்ளன.
இலங்கை செல்லும் எம்.பி.,க்கள் குழு நியமனத்தில் சர்ச்சை
இலங்கைக்கு அனைத்துக் கட்சி குழுவை அனுப்பும் மத்திய அரசின் முடிவு, பலத்த சர்ச்சையில் சிக்கியுள்ளது. "இந்த குழுவில் இடம் பெறமாட்டோம்' என, திடீரென அ.தி.மு.க., பின்வாங்கியுள்ளது, டில்லி அரசியல் வட்டாரங்களில், புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவு முக்கிய கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதால், இலங்கைக்கு, அனைத்துக் கட்சி குழுவை அனுப்பும் முடிவில் மாற்றம் நிகழலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
திருக்கேதீஸ்வரம் தீர்தக் கரைக்கு அருகில் புதிதாகப் புத்தர் சிலை!
ஈழத்தில் பாடல் பெற்ற இரண்டு தலங்களின் ஒன்றான திருக்கேதீஸ்வரம் பாலாவி தீர்த்தக் கரைக்குச் சமீபமாக தனியார் காணி ஒன்றில் வெண்கலத்திலான புத்தர் சிலை திடீரென கொண்டு வரப்பட்டு "பிரித்" ஓதி வழிபாட்டுக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கருணாவின் ஆங்கிலம் கேளுங்கள் இந்த எட்டப்பனின் பேச்சுக்கள், தொகுப்பு யாழ்
வெள்ளைவான் வான் கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய சாரதி ஒருவர் பற்றிய தகவல்களை லங்கா ஈ நியூஸ் என்ற இணைய தளம் அம்பலப்படுத்தியுள்ளது.
நாட்டில்; இடம்பெற்ற பாரியளவிலான கடத்தல் சம்பவங்களுடன் குறித்த வாகன வாரதிக்கு தொடர்பு இருப்பதாக அந்த இணைய தளம் தெரிவித்துள்ளது.
Friday, 13 April 2012
முல்லைத்தீவு கொக்கிளாயில் பிள்ளையார் இருந்த இடங்களில் புத்தர்!
முல்லைத்தீவு கொக்கிளாயில் சிறீலங்காப்படையினர் இந்தது கடவுள்களின் சிலையினை உடைத்தெறிந்துவிட்டு அங்கு புத்தர்சிலை நிறுவப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
முல்லைத்தீவு கொக்கிளாயில் அங்கு வாழ்ந்த மக்களால் பன்னெடுங்காலமாக வழிபடப்பட்டு வந்த இந்துக் கடவுளர்களின் சிலையை அகற்றி சந்நிதியை உடைத்து புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது.
அருள் சோதிடரின் எச்சரிக்கை – இரக்கமில்லாத மனிதர்களே, அழிந்து போங்கள்!
சோதிட ரீதியாக மேட ராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் லக்கின உதயம், வருடம் பிறக்கிறது, இது சூரிய குடும்ப சுற்றின் கிர நிலைப்படியான காலக்கணிப்பு. சித்திரை முதல் நாள் தமிழ் வருடப் பிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதில் கருத்துவேறுபாடு இருந்தாலும், இதை அதற்குரியவர்கள் தீர்மானிக்க முயலவேண்டும். இது அவர்கள் வேலை.
தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுவதை தடுக்க வேண்டும் - பிரான்ஸ் இந்திய தூதராலயதிற்கு முன் நடைபெற்ற போராட்டம்!
இந்திய தூதராலயதிற்கு முன் தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுவதை தடுக்க வேண்டும், இந்தப் படுகொலையை செய்யும் சிறி லங்கா ராணுவம் கைது செய்யப்பட்டு சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட வேண்டும், தமிழர்களின் நலன்கள் ஏனையே இனங்களின் நலன்கள் போல் பாதுகாக்கப்படவேண்டியவை என்ற வேண்டுகோளுடன் பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை ஒன்றுகூடலை ஏற்பாடு செய்து இருந்தது.
1980களில் வானூர்தியை உருவாக்கிய புலிகள்: நேரில் பார்த்த கொளத்தூர் மணி உரை
சென்னையில் இன்று மாலை 13.04.2012 சர்.பிடி. தியாகராயர் அரங்கில் நடைபெற்ற பழ.நெடுமாறன் அவர்கள் எழுதிய “பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்” நூல் வெளியீட்டு விழாவில் கொளத்தூர் மணி ஆற்றிய உரையில் புலிகளின் பனங்கொட்டை கைக்குண்டு, பன்றிக்குட்டி வெடிகுண்டுகள் பற்றியும் 1980களிலேயே விமானத்தை உருவாக்கிய புலிகளை நேரில் பார்த்ததையும் தெரிவித்துள்ளார்.
http://www.youtube.com/ watch?v=Q1fiLFhsyqE&feature =player_embedded#!
http://www.youtube.com/
http://www.periyarthalam.com/கொளத்தூர் மணி உரை
தமிழீழத்தில் மீண்டும் ஆயுதம் ஏந்த வேண்டுமா வேண்டாமா என்பதை உலகநாடுகளே தீர்மானிக்க வேண்டும்: வைகோ
சென்னையில் இன்று மாலை 13.04.2012 சர்.பிடி. தியாகராயர் அரங்கில் நடைபெற்ற பழ.நெடுமாறன் அவர்கள் எழுதிய “பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்” நூல் வெளியீட்டு விழாவில் வைகோ ஆற்றிய உரையில் உலக நாடுகள் தமிழீழத்தை ஆதரித்து பொது வாக்கெடுப்பு எடுக்க முன்வர வேண்டும், தமிழீழத்தில் மீண்டும் ஆயுதம் ஏந்த வேண்டுமா வேண்டாமா என்பதை உலகநாடுகளே தீர்மானிக்க வேண்டும் அதற்கு உந்துதலாக பழ.நெடுமாறன் எழுதிய இந்நூல் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசின் ஆள் கடத்தும் "கைத்தொழிலின்'' மிக அசிங்கமான ஓர் அம்சம் . ஆசிய மனித உரிமைகள் ஆணைக் குழு.
இலங்கையில் இடம் பெறும் ஆள்கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் உயர் மட்ட
விசாரணைகளை நடத்துமாறு ஐ.நா. இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஹொங் கொங்கைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக் குழு கோரிக்கை விடுத்துள் ளது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.
விசாரணைகளை நடத்துமாறு ஐ.நா. இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஹொங் கொங்கைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக் குழு கோரிக்கை விடுத்துள் ளது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.
நந்தன வருடம் பற்றிய தகவல்கள்
நந்தன வருடம் சித்திரை 1ஆம் திகதி (13.04.2012)வெள்ளிக்கிழமை மாலை 5.45மணிக்கு அபரபக்க அட்டமித் திதியில், உத்தராட நட்சத்திரத்தின் முதலாம் பாதத்தில் சித்த நாமயோகத்தில், பாலவக்கரணத்தில், கன்னி லக்கினத்தில், கடக நவாம்சத்தில் இப்புதிய நந்தன வருடம் பிறக்கிறது.
இலங்கையில் ஆட்கடத்தல்: இலண்டனில் ஆர்ப்பாட்டம்
:23
சிறிலங்காவில் வெள்ளைவான் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவதனைக் கண்டித்தும் இந்தக் கடத்தல் விவகாரத்துக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்று கோரியும் பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பிரித்தானியாவிலுள்ள சிறிலங்கா தூதரகத்துக்கு முன்பாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் போராட்ட அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள், ஆர்வலர்கள் மற்றும் அரிசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கு கொண்டனர்.
சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சர்வாதிகார ஆட்சிமுறைக்கு எதிராகவும் அங்கு கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Related posts:
மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கக் கூடிய நாட்டை உருவாக்க இலங்கையர் ஒன்றுபடுமாறு அமெரிக்கா புத்தாண்டு வாழ்த்து
மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கக் கூடிய நாட்டை உருவாக்க இலங்கையர் ஒன்றுபடுமாறு அமெரிக்கா புத்தாண்டு வாழ்த்து |
மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கக் கூடிய நாட்டை உருவாக்க, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் இலங்கை மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென, தமிழ் சிங்களப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
|
மனித உரிமை மீறல்கள் எனது கடத்தல் மூலம் அம்பலம் பிரேம்குமார்
இலங்கையில் ஆட்கடத்தல்கள் மனித உரிமை மீறல்கள் அரசாங்கத்தின் ஆதரவுடனேயே மேற்கொள்ளப்படுகின்றதென்ற செய்தி சர்வதேசத்துக்கும் உள்நாட்டிற்கும் எனது கடத்தல் மூலம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளதாக முன்னிலை சோஷலிசக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் அவுஸ்திரேலியாவிற்கு நாடு கடத்தப்பட்டவருமான பிரேம்குமார் குணரட்ணம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் புதிய முகாம்களை உருவாக்கி இருக்கிறார்களே தவிர, 23 ஆண்டுகளாக வைத்திருக்கும் பழைய முகாம்களைக்கூட கலைத்துவிடவில்லை.- நிமல்கா பேட்டி
எந்தப் பயமும் இல்லாமல் பேசுகிறார் நிமல்கா!
இலங்கையர் என்று சொல்லவே வெட்கம்
நாட்டில் இடம்பெறும் கடத்தல்கள் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்காக இலங்கையர் என்ற ரீதியில் நான் வெட்கப்படுகின்றேன் என முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். தற்பொழுது நாட்டில் இடம்பெற்று வரும் சட்ட விரோத சம்பவங்களுக்காக தான் வெட்கப்படுவதாக முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார். இங்கிரியவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
"பாதிக்கப்பட்ட தமிழர்களை சந்திக்கவே இலங்கை செல்கிறோம்"
இலங்கை செல்லவிருக்கும் இந்திய நாடாளுமன்ற குழுவின் பயணத் திட்டம் இலங்கை அரசின் விருந்துபசாரமாக இருப்பதாக அதிமுக தலைவி ஜெயலலிதா கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலளித்த இந்திய நாடாளுமன்ற குழுவில் செல்ல இருக்கும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன், பாதிக்கப்பட்ட தமிழர்களை நேரில் சந்திப்பதே தங்களின் முக்கிய நோக்கம் என்று கூறினார்.
இலங்கையில் டான் விட்டோ கார்லியோன் குடும்பம்- குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக - யமுனா ராஜேந்திரன்
டான் விட்டோ கார்லியோனுக்கு என்றும் மரணமில்லை. மரியோ புசோவுக்கு கார்லியோன் அவரது கற்பனைப் பாத்திரம். இலங்கையில் கார்லியோன் வாழும் நவீன அரசியல் கதாபாத்திரம். புசோவின் கார்லியோனுக்கும் இலங்கையின் நவீன கார்லியோனுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. இருவரும் பாசமிகு தந்தையர். இருவருமே தமது தொழிலை தமது வாரிசுகளுக்குக் கற்பித்தார்கள்.
யுத்தம் முடிந்துவிட்டது கடத்தல் மட்டும் முடியவில்லை; கோர்டன் வொய்ஸ் கிண்டல்
முன்னிலை சோசலிக் கட்சியின் தலைவர் பிரேம்குமார் குணரட்ணம், திமுது ஆட்டிகல ஆகியோர் கடத்தப்பட்டமை மற்றும் மீண்டும் விடுவிக்கப்பட்டமை என்பன இல ங்கை அரசியல் தன்மையின் அடையாளத்தை வெளிப்படுத்துகின்றது.
இந்திய குழுவினரின் சிறிலங்காப் பயணம் இன்னொரு நாடகம்! ஜெயலலிதா புறக்கணித்ததன் பின்னணி!! எல்லாமே தமிழர்கள் தலையில் மிளகாய் அரைக்கத்தான்!!!-ம.செந்தமிழ்.
மீண்டும் ஒரு சிறிலங்கா-இந்தியா கூட்டுத்தயாரிப்பில் நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட உள்ளது. போரிற்கு பின்னரான தமிழர்களது வாழ்வைப் பற்றி ஆய்வு செய்யவென இந்தியாவில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு வரும் 16ம் திகதி சிறிலங்கா புறப்பட்டுச் செல்ல உள்ளது.
இந்தியா பாராளுமன்ற எதிர்க் கட்சி தலைவியான பா.ஜ.க. தலைவர் சுசுமா சுவராச் தலைமையில் 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த நாடகத்தில் நடிகர்களாக பங்கேற்கின்றனர்.
அதிமுக விலகல்: நெடுமாறன் ஐயா வரவேற்பு
கண்துடைப்புக்காக இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழுவில் இருந்து அதிகமுக விலகியதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சிறிய முகாம்களை அகற்றி நிரந்தர முகாம்களை அமைக்கும் சிறீலங்கா ராணுவம்
மாதகலில் கடற்படையினரால் விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ள சம்பில்துறையிலிருந்து திருவடிநிலை நோக்கியதான கடற்கரையோரப் பகுதிகளில் கடற்படையினர் சீன அரசால் வழங்கப்பட்ட கூடாரங்களைப் பயன்படுத்தி நிரந்தர கடற்படை முகாம்களை தனியார் காணிகளில் அமைத்து வருகின்றனர்.
பிறக்கும் தமிழ்ப் புத்தாண்டில் பிரகடனம் செய்து கொள்வோம்
தமிழ்- சிங்கள புத்தாண்டு இன்று பிறக்கின்றது. பிறக்கின்ற புத்தாண்டு சிறப்பு மிக்கதாக அமைய வேண்டும் என்பது அனைவரதும் விருப்பம். எனினும் இந்த விருப்பம் முழுமைபெறாமல் போவதன் காரணம் யாது என்பதை ஒரு கணம் சிந்தித்தாக வேண்டும். அந்த சிந்தனை தூய்மையானதாக - பலமான தாக- பக்கம் சாராததாக இருக்குமாயின் வெற்றி களுக்கும் தோல்விக்கும் நாங்களே காரணம் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
புலித்தேவைக் கட்டிவைத்து நெருப்பால் சூடு வைத்த இலங்கை இராணுவம் !
புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் அவர்களை இலங்கை இராணுவம் கட்டி வைத்து நெருப்பால் சூடு வைத்துள்ளனர். 2009ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி, சரணடைய விரும்பிய புலித்தேவன் மற்றும் ப.நடேசன் ஆகியோரை வெள்ளைக்கொடியோடு தம்மிடம் வருமாறு இலங்கை இராணுவம் தெரிவித்தது. ஐ.நா அதிகாரி நம்பியார், இந்திய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மற்றும் சமீபத்தில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் மேரி கொல்வின் ஆகியோர் அணுசரணை வழங்கிய நிலையில், இவர்கள் இராணுவத்திடம் சரணடைந்தனர். இவர்களோடு காயப்பட்ட போராளிகள் சிலரும் சென்றுள்ளனர்.
பேச்சு உடன் ஆரம்பிக்கும் அறிகுறி எதுவுமே இல்லை அதற்கான புறச்சூழலை அரசுதான் உருவாக்க வேண்டும்
பேச்சு உடனடியாக ஆரம்பிக்கும் அறிகுறி எதுவும் இல்லை. அரசுதான் பேச்சுக்கான முன் முயற்சிகளை எடுக்க வேண்டும். அவ்வாறான முயற்சிகள் எதனையும் அரசு இதுவரை மேற்கொள்ளவில்லை.
Thursday, 12 April 2012
இலங்கையில் ஆட்கடத்தல்கள் மனித உரிமை மீறல்கள் அரசாங்கத்தின் ஆதரவுடனேயே மேற்கொள்ளப்படுகின்றதென்ற
முன்னாள் பிரதமருக்கு தான் இலங்கையர் என்று சொல்லவே வெட்கமாக உள்ளதாம்
முன்னாள் பிரதமருக்கு தான் இலங்கையர் என்று சொல்லவே வெட்கமாக உள்ளதாம் |
நாட்டில் இடம்பெறும் கடத்தல்கள் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்காக இலங்கையர் என்ற ரீதியில் நான் வெட்கப்படுகின்றேன் என முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்பொழுது நாட்டில் இடம்பெற்று வரும் சட்ட விரோத சம்பவங்களுக்காக தான் வெட்கப்படுவதாக முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார். |
இந்திய எம்.பி. க்கள் குழுவின் இலங்கை விஜயம் முக்கியத்துவம் வாய்ந்தது _
இலங்கையில் ஆள்கடத்தல் குறித்து விசாரணைகளுக்கு உத்தரவிடுங்கள்; ஐ.நாவிடம் கோருகிறது ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு
இலங்கையில் இடம் பெறும் ஆள்கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் உயர் மட்ட விசாரணைகளை நடத்துமாறு ஐ.நா. இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஹொங் கொங்கைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக் குழு கோரிக்கை விடுத்துள் ளது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.
இலங்கை அரசால் அவர்களுக்கு சாதகமான ஒரு கருத்து இந்தியாவில் ஏற்பட தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்
இலங்கை அரசால் அவர்களுக்கு சாதகமான ஒரு கருத்து இந்தியாவில் ஏற்பட தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் - ஜெயலலிதா
இம்மாதம் 16ம் தேதி முதல் 21ம் தேதி வரை இந்திய நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் 15 உறுப்பினர்கள் அடங்கிய குழுவை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் அந்தக் குழுவினருக்கு போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுடன் நேரடியாக கலந்துரையாடவும், அவர்களது உள்ளக் குமுறல்களை கேட்டறியவும் வாய்ப்பு இல்லாத நிலை உள்ளதால், தமது கட்சியின் சார்பில் நியமிக்கப்பட்டிருந்த உறுப்பினரை விலக்கிக் கொள்வதாக ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இம்மாதம் 16ம் தேதி முதல் 21ம் தேதி வரை இந்திய நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் 15 உறுப்பினர்கள் அடங்கிய குழுவை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் அந்தக் குழுவினருக்கு போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுடன் நேரடியாக கலந்துரையாடவும், அவர்களது உள்ளக் குமுறல்களை கேட்டறியவும் வாய்ப்பு இல்லாத நிலை உள்ளதால், தமது கட்சியின் சார்பில் நியமிக்கப்பட்டிருந்த உறுப்பினரை விலக்கிக் கொள்வதாக ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முழுதாக இருள்நிறைந்த பாதையின் ஒளிவீச்சு
முழுதாக இருள்நிறைந்த பாதையின் ஒளிவீச்சு
2002 ஏப்ரல்மாதத்தின் 10ம்நாள் சிங்களதேசத்தின் ஊடகங்கள் அனைத்தும்,இந்தியாவின் அச்சு, ஓலி,ஒளி,இலத்திரனியல் ஊடகங்கள் முழுதும்,சர்வதேசத்தின் மிகமுக்கியமான ஊடகநிறுவனங்கள் எல்லாம் கிளிநொச்சியில் குழுமி இருந்தனர்.தமிழர்களின் வரலாற்றில் ஒரு தமிழனின் செய்திக்காக அவர் சொல்லப்போகும் பதில்களுக்காக ஒரே நேரத்தில் இவ்வளவு பத்திரிகையாளர்களும் ஊடகங்களும் குழுமியது வரலாற்றில் முதலானது.
இலங்கையர் என்று சொல்லவே வெட்கம்
நாட்டில் இடம்பெறும் கடத்தல்கள் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்காக இலங்கையர் என்ற ரீதியில் நான் வெட்கப்படுகின்றேன் என முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். தற்பொழுது நாட்டில் இடம்பெற்று வரும் சட்ட விரோத சம்பவங்களுக்காக தான் வெட்கப்படுவதாக முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார். இங்கிரியவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் ஈழத்துக்கான வாக்கெடுப்பு: ஐ.நா.வில் புதிய யோசனை
ஐ.நா., ஏப்.12 - தமிழ் ்ஈழம் குறித்த முடிவை தமிழர் விருப்பத்துக்கே விட்டுவிடுவது என்ற புதிய யோசனை ஐ.நா. சபையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் ஈழத்துக்கான வாக்கெடுப்பு ஒன்றை இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடத்துவது குறித்த ஆலோசனைகளை சில நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையில் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
விடுதலைப் புலிகளுக்கும், தமிழ் மக்களுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை அரசிலுள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் - சந்திரிகா குமாரதுங்க
'விடுதலைப் புலிகளுக்கும், இலங்கையில் வசிக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே வேறுபாடு உள்ளது என்பதை, இலங்கை அரசில் பொறுப்பில் உள்ளவர்கள், முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஜனாதிபதி ராஜபக்ஷே, போரால் பாதிக்கப்பட்ட மக்களின் மறு வாழ்வுப் பணிகளுக்காக, தற்போது செய்வதை விட, இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டும்'' என, இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் பகுதியில் சிங்களவர் குடியேற்றம் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது
தமிழர்கள் பகுதியில் சிங்களவர் குடியேற்றம் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இந்தியாவின் மதுவரையில் தெரிவித்துள்ளார்.
நேதாஜி, பகத்சிங் உள்ளிட்டோரின் சுதந்திர போராட்ட தீவிரவாதமா? புலிகள் தடை வழக்கில் கேள்வி
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் தர்மராஜ், வேணுகோபால் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
தமிழீழத்தில் சிங்களம் கட்டாய பாடமாகிறது
இலங்கை அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மும்மொழி கொள்கைத் திட்டத்தின் ஊடாக, தமிழீழத்தில் தமிழ் மாணவர்களுக்கு, சிங்கள மொழியினைக் கட்டாயப்பாடமாக்க இலங்கை அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்ன.
சிறிலங்கா அதிபருடன் விருந்துண்பதற்கு அதிமுக உறுப்பினரை அனுப்ப முடியாது
சிறிலங்கா அதிபர் ராஜபக்சவுடன் விருந்துண்பதற்காக, அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரை சிறிலங்காவுக்கு அனுப்ப முடியாது என்று தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். போருக்கு பிந்திய ஈழத்தமிழர்களின் மறுவாழ்வு குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு வரும் ஏப்ரல் 16 நாள் எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜ் தலைமையில் கொழும்பு செல்லவுள்ளது.
சிறிலங்காப் படையினரே கடத்தினர், பாலியல் ரீதியாகவும் சித்திரவதை செய்தனர் – சிட்னியில் குணரட்ணம் செவ்வி
கடத்தி வைத்திருந்த சிறிலங்காப் படையினர் தன்னை உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் சித்திரவதை செய்ததாக குமார் குணரட்ணம் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட குமார் குணரட்ணம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் சிட்னியின் வடக்கில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
சிறிலங்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட குமார் குணரட்ணம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் சிட்னியின் வடக்கில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
சிறிலங்காவையும், அதன் தேசிய விமான சேவையையும் புறக்கணிக்கும் ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகள்
நட்டத்தில் இயங்கும் சிறிலங்காவின் தேசிய விமான சேவையான சிறிலங்கன் எயர்லைன்ஸ், ஐரோப்பாவுக்கான தனது சேவைகளையும் விமானத்தில் வழங்கப்படும் பயணிகளுக்கான வசதிகளையும் குறைப்பதாக அறிவித்துள்ளது.
செலவுகளைக் குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக பயணிகளுக்கான உணவு வசதிகளை குறைக்கவுள்ளதாக சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
செலவுகளைக் குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக பயணிகளுக்கான உணவு வசதிகளை குறைக்கவுள்ளதாக சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Posts (Atom)