Translate

Friday 2 March 2012

ஈழத்தமிழர்களுக்கு எதிராக ஐ.நாவில் வல்லரசுகளின் சதிக்கூட்டணியாம்


தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஈழத்தமிழர் இனச்சிக்கல் குறித்து ஐ.நா.மன்றத்திலிருந்து கசிந்து வரும் செய்திகள் கவலை அளிக்கின்றன.

ஜெனீவாவில் கூட்டமைப்பின் பங்கேற்பின்மை பயங்கரமான சதித்திட்டத்தின் வகிபாகம்

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணை தொடர்பில் இந்தியாவின் மௌனமும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்து கொள்ளாமையும் பயங்கரமான சதித்திட்டத்தின் வகிபாகமாகும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்தார்.

பிரதிப் பொலிஸ்மா அதிபர் நியமனத்தில் தமிழர்கள் புறக்கணிப்பு! தவறு என்கிறார் அமைச்சர் வாசுதேவ


பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், நியமனத்தில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டமை பிழையான செயலாகும் என்று தேசிய மொழிகள் மற்றும் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்திற்கான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். 

சுவிசிலும் காட்டிக் கொடுக்கும் வேலையை கச்சிதமாகச் செய்யும் டக்ளஸ் தேவானந்தா


சிறிலங்காவில் தமக்கு உயிராபத்து இருப்பதாகக் கூறி சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரிய இரண்டு ஊடகவியலாளர்கள் குறித்து சுவிஸ் அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யப் போவதாகக் கூறியுள்ளார் சிறிலங்கா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை: மத்திய அரசுக்கு சீமான் கேள்வி


இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை தொடர்பான விடயத்தில் மத்திய அரசு மௌனம் சாதிப்பது ஏன்? என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கேள்வி விடுத்துள்ளார். 


இது தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

சென்னையில் இலங்கை தூதரகம் முன் 5ஆம் தேதி ஆர்ப்பாட்டம்


 1/1 
சென்னை, மார்ச்.- 3 - இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னையில் உள்ள அந்நாட்டு தூதரகம் முன்பு வரும் 5​ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் நடக்கும் ஆடுபுலி ஆட்டம்

தமிழர்களிற்கு இப்போதுள்ள ஒரேயொரு தெரிவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிளவுபடுத்தும் சதியொன்று பலமாக இடம்பெறுவதாகத் தெரியவருகிறது. பேச்சுவார்த்தைக்கான தரப்பாக மேற்குலகால் தமிழ்த் தேசியக் கூட்;டமைப்பு தேர்வு செய்யப்பட்டதையடுத்தே இந் நிகழ்வு இடம்பெற்றுவருகிறது.

டக்ளஸ், கருணா, தொண்டமான் ஆகியோர் அரசுக்கு தலையாட்ட வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர்!- பிரபா கணேசன்


அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், விநாயகமூர்த்தி முரளிதரனும், ஆறுமுகம் தொண்டமானும் இலங்கை அரசின் பங்காளிகள். அவர்கள் அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளுக்கும் தலையாட்ட வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார்கள். என நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் இலங்கை அரச பிரதிநிதிகளுடன் புலம்பெயர் தமிழர்கள், மனிதஉரிமை அமைப்புகள் கடும் விவாதம்


ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் பக்க நிகழ்வாக, இலங்கைக்கு ஆதரவு தேடும் நோக்கில் நடத்தப்பட்ட கூட்டத்தில் கடும் விவாதங்கள் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 

பிரித்தானியப் பெண்ணின் கொலை தொடர்பில் சில உண்மைத் தகவல்கள்


கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள ரேணுகா ஹோட்டல் அறையில் கத்திக்குத்துக் காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு காணப்பட்டதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், இறந்த இப்பெண்ணை பதிவு திருமணம் செயதவரை சந்தேகத்தின் பெயரில் கொள்ளுப்பிட்டிய பொலிசார் கைது செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இலங்கை தனக்கான காலத்தை நழுவ விட்டுள்ளது - ஜெனீவா கூட்டத் தொடரில் அமெரிக்கா


இலங்கை தனக்கான காலத்தை நழுவ விட்டுள்ளதாக அமெரிக்காவின் பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான செயலர் மரியா ஒற்றேரோ சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் இடம்பெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றும்போதே போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்............ read more 

ஜெனிவாவில் பரபரப்பு! தமிழர்களை கண்டு கால்தெறிக்க ஓட்டம் பிடித்த கனகரத்தினம்!


ஜெனிவாவிற்கு வருகை தந்திருக்கும் சிறிலங்கா குழு தங்கியிருக்கும் ஹொட்டலில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
இலங்கைக்குழுவுடன் வருகை தந்திருக்கும் கனகரத்தினம் நேற்று ஜெனிவா நகரை சுற்றிப்பார்ப்பதற்கு என வேறு ஒரு நபருடன் சென்ற போது இரு தமிழ் இளைஞர்களை கண்டிருக்கிறார். அந்த இளைஞர்கள் கனகரத்தினத்தை நோக்கி வருவதை கண்ட கனகரத்தினம் தான் இருந்த ஹொட்டலை நோக்கி கால்தெறிக்க ஓடியுள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்ற கட்டித் தொகுதியில் சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தும் கையேடு வெளியிடப்பட்டது


நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள், போர்குற்றம், இனப்படுகொலை விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் உருவாக்கத்தில் வெளிவந்துள்ள  “WE ACCUSE; WAR CRIMES AND GENOCIDE”  எனும் கையேடு, பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

சீனா இலங்கையை கைவிடாதாம்! உறுதியளித்தார் சீனா பாதுகாப்பு அமைச்சர் !!


இலங்கையில் இடம்பெற்றுவரும் அபிவிருத்தி, சமாதான முயற்சிகள் மற்றும் நாட்டின் இறைமையினைப் பாதுகாப்பதற்கு சீனா முழு ஆதரவையும் வழங்கும் என உறுதியளித்துள்ளதாக, “சின்ஹுவா” செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.

ஐ.நா மனித உரிமைப் பேரவை, இலங்கை விவகாரம் குறித்து கவனம் செலுத்தும் - நவனீதம்பிள்ளை


ஐ.நா மனித உரிமைப் பேரவை, இலங்கை விவகாரம் குறித்து கவனம் செலுத்தும் - நவனீதம்பிள்ளை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கை விவகாரம் குறித்துகவனம் செலுத்தும் என பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

பத்மினியிடம் சிவனேசனின் இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டவர்கள் குறித்து விசாரணை


2ம் இணைப்பு - பத்மினியிடம்  சிவனேசனின் இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டவர்கள் குறித்து விசாரணை
வன்னியில் இலங்கை அரச படைகளது ஆழ ஊடுருவும் படையினரால் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் உயிரிழந்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கிட்டினன் சிவனேசனின் இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டவர்கள் தொடர்பான தகவல்களை தம்மிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் கேட்டிருந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தருமான திருமதி;.பத்மினி சிதம்பரநாதன் தெரிவி;த்துள்ளார். இன்றைய தினம் கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல் தலைமையகத்திற்கு திருமதி;.பத்மினி சிதம்பரநாதன் விசாரணைக்கென அழைக்கப்பட்டிருந்தார்.

"அரசாங்கத்தின் வாக்குறுதி குறித்து நம்பிக்கையில்லை"–சர்வதேச மன்னிப்புச் சபை!


அரசாங்கத்தின் வாக்குறுதிகள் தொடர்பில் நம்பிக்கை கிடையாது எனசர்வதேச மன்னிப்புச் சபை அறிவித்துள்ளது. குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்த கால அவகாசம் தேவை எனஅரசாங்கம் விடுத்தள்ள கோரிக்கை தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.

மார்ச் 5 ஐநா.முன் வாருங்கள் வீட்டுக்குள்ளேயே இருந்து எமக்குள்ளே பேசிக்கொண்டிருப்பதில் பயன்??

ஈழத் தமிழர்களுக்கான விடிவினைப் பெற்றுக்கொடுக்க உலகத் தமிழினமே சர்வதேசத்திடம் உண்மைகளை எடுத்துச் சொல்லி நீதிகேட்போம். எம்மோடு மார்ச் 5ம் திகதி அனைவரும் வாருங்கள் என்று அன்புரிமையோடு அறைகூவல் விடுத்து நீதிக்கான நடைப்பயணம் இன்று 25வது நாளாகவும் தொடர்கின்றது....... read more 

மாயமானாக உருவெடுத்துள்ள சிங்களத்திற்கு எதிரான சர்வதேச அழுத்தங்களை நிரந்தரமாக்கி வெற்றிகொள்ள ஜெனீவா நோக்கி படைதிரட்டி வாருங்கள் தமிழர்களே!!!


முள்ளிவாய்க்காலில் அரங்கேற்றப்பட்ட தமிழினப்படுகொலைக்கான நீதி கேட்டு உலகத்தமிழினம் மூன்றாண்டுகள் கடந்து பல்வேறு வழிவகைகளில் வெவ்வேறு தளங்களில் களமாடிவருகையில் இன்று ஏற்பட்டுள்ள சர்வதேச புறச்சூழலானது தமிழர்தரப்பால் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ள வேண்டிய விடையமாக இருக்கின்றபோதும் இதுவே நிகழ்த்தப்பட்ட தமிழின அழிப்பிற்கான இறுதித் தீர்வினை வழங்கிவிடப் போவதில்லை என்ற யதார்த்தத்தினையும் உணர்ந்து கொண்டு செயற்பட வேண்டியது அவசியமாகும்.

விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் - ஜெனிவா பேரணிக்கு ஆதரவ

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளின் பேரவைக் கூட்டம் கடந்த 27-2-2012 அன்று ஜெனிவாவில் கூடியுள்ளது. இக்கூட்டம் வழக்கத்திற்கு மாறாக, உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் சிறப்பைப் பெற்றுள்ளது.

சிறிலங்காவுக்கு சீனா தொடர்ந்து ஆதரவு நல்குமாம் சீன பாதுகாப்பு அமைச்சர்


சிறிலங்காவின் சுதந்திரம், இறைமை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாக்கவும் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாட்டுக்கு சீனா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என சீனப் பாதுகாப்பு அமைச்சர் லியங் குவாங்லி தெரிவித்துள்ளார்.

இன்று இலங்கைக்கு ஆப்பு: விவாதத்தில் 2வது இடம் இலங்கைதான் !

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத்தொடரின் உயர்மட்டத் தொகுதிக்கூட்டம் நேற்று நிறைவடைந்த நிலையில் இக்கூட்டத்தொடரின் வழக்கமான நிகழ்ச்சிகள் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளன. இலங்கை விவகாரமானது நிகழ்ச்சி நிரலின் இரண்டாவது அம்சத்தின் கீழ் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது.

2 ஊடகவியலாளரைக் காட்டிக் கொடுப்பேன்: டக்ளஸ் மாமா பிதற்றல் !



இலங்கையில் தமக்கு உயிராபத்து இருப்பதாகக் கூறி சுவிட்ஸர்லாந்தில் புகலிடம் கோரிய ஊடகவியலாளர்கள் இருவர் தொடர்பாக சுவிட்ஸர்லாந்து அதிகாரிகளிடம் தான் முறைப்பாடு செய்யப் போவதாக முந் நாள் மண்ணெண்ணை வியாபாரியும், இந் நாள் ஒட்டுக்குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

ஐ.நாவில் துள்ளிக்குதித்தது எகிப்த்தும் பாக்கிஸ்தானும் மட்டுமே !

ஐநா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்கள் இன்று தனது வருடாந்த அறிக்கையை வாசித்தவுடன் சூடு பிடித்தது கருத்துக் கண்மணிகளின் பேச்சுக்கள். அம்மையார் பேசும்போது ஐநா நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கை பற்றி சொல்லி விட்டார். முழுமையாகப் பொறுப்புக் கூறும் கடப்பாடு இலங்கைக்கு இருப்பதாகவும் வெடியொன்றை வீசிவிட்டார். தமக்குச் சார்பாக எந்தக் கண்மணி பேசவருமென்று காத்திருந்த தமாரா குணநாயகம் கும்பலுக்கு கை கொடுத்தது எகிப்தும், பாகிஸ்தானும் மட்டுமே.

ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் விவாதிப்பதையிட்டு நவனீதம் பிள்ளை பெருமை


கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஆலோசனை நடாத்துவதையிட்டு பெருமை கொள்வதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் உயர்ஸ்தானிகர் நவனீதம் பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.

ஜெனிவா சமருக்காய் தமிழ்ப் பெண்மணியை களமிறக்குகிறது சிறிலங்கா


ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இலங்கை விவகாரங்களைக் கையாள்வதற்காக விசேட இராஜதந்திரிகள் குழுவொன்றை நியமித்திருக்கும் அரசு, அந்தக் குழுவின் தலைமைப் பொறுப்பை ஜெனிவாவிலுள்ள ஐ.நா. அலுவலகத்தின் இலங்கைக்கான தூதுவர் தமரா குணநாயகத்திடம் ஒப்படைத்திருக்கிறது.

இதன்படி இன்றுமுதல் எதிர்வரும் 23ம் திகதி வரை ஜெனிவாவில் இலங்கை தொடர்பான விடயங்களைத் தமரா தலைமையிலான குழுவே கையாளும் எனத் தெரிகிறது.

Thursday 1 March 2012

ஆதித்தமிழர்களும் பரிணாம அறிவியலும் (வீடியோ இணைப்பு)


கீ.மு 10ம் நூற்றாண்டுக்கு முன் பண்டைய தமிழர்கள் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி சம்பந்தமாக தெளிவான ஆறு புலன்களின் மூலம் அதாவது தொடுதல், சுவைத்தல், மணத்தல், பார்த்தல், கேட்டல், அறிதல் என வகுத்துள்ளான்.

அமெரிக்காவின் தீர்மானத்துக்கு இந்திய ஆதரவு அளிக்க வேண்டும்!


ராஜபக்ஷே கும்பலுக்கு சர்வதேச நீதிமன்ற நடவடிக்கை

கோரி 10 லட்சம் பேரிடம் வி.சி.க.பெற்ற கையொப்பப் படிவங்கள் ஐ.நா.வுக்கு அனுப்பப்பட்டன.

அமெரிக்காவின் தீர்மானத்துக்கு இந்திய ஆதரவு அளிக்க வேண்டும்!

- தொல். திருமா அறிக்கை


ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அவை கூட்டம் பிப்ரவரி 27 அன்று ஜெனிவாவில் தொடங்கியுள்ளது.  இக்கூட்டத் தொடரில் சிங்கள இனவெறி ஆட்சியாளர்களுக்கு எதிரான தீர்மானம் ஒன்றை முன்மொழிவதற்கு அமெரிக்க வல்லரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இலங்கைக்கு எதிராக தமது முடிவை மாற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு


இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்திற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகள் ஆதரவு தர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர். இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு அவர் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து விடுத்த கோரிக்கைகள் இன்று அவருக்கே நெருக்கடியாகி உள்ளன: மங்கள சமரவீர


ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தவறுகளை தேசிய கொடியைக் கொண்டு மறைப்பதற்கு அனுமதிக்க முடியாது என ஐ.தே கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கொள்ளுப்பிட்டி விடுதியில் தமிழ் பெண் கொலை! சந்தேகத்தில் உயிரிழந்த பெண்ணின் இரண்டாவது கணவன் கைது!


கொள்ளுப்பிட்டி விடுதி அறையொன்றில் தமிழ்ப் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின் பெயரில், இன்று காலை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டிப் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடிக்கும் முயற்சியில் உலகக் கோடீஸ்வரரான தக்ஸின் ஸின்வத்ரா!


ஜெனிவா மனித உரிமைகள் அமர்வில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற, அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் தீவிரமாக செயற்பட்டு வரும் தற்போதைய சூழ்நிலையில், இலங்கைக்கு ஆதரவு பெற்றுக்கொடுக்கும் இராஜதந்திரச் செயற்பாடுகளில் தாய்லாந்தின் முன்னாள் பிரதமரும் உலகக் கோடீஸ்வரர்களில் ஒருவருமான தக்ஸின் ஸின்வத்ரா களமிறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன........... read more 

மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐ.நா. தீர்மானம்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்



இலங்கையில் இறுதிக்கட்ட போரின்போது நடந்த மனித உரிமைகள் மீறல் தொடர்பாக ஐக்கிய நாடு மனித உரிமைகள் கவுன்சில் கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்க் கூட்டமைப்பு கலந்து கொள்வதை இந்தியாவே தடுத்தது


தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்க முன்வரும்போது ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் விமல் வீரவன்ச, சம்பிக ரணவக்க ஆகியோர் மக்கள் மீது சுமைகள் சுமத்தப்படும்போது ஏகாதிபத்தியத்தை மறுத்து விடுகின்றனர் என இடதுசாரி முன்னணி தெரிவித்தது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கான இலங்கையில் எழுத்து மூலமான உறுதிமொழியை பெற்றுக் கொள்ளவே இந்தியா முயற்சிப்பதாகவும் அம் முன்னணி அறிவித்தது.
இடதுசாரி முன்னணியின் தலைவரும் தெஹிவளை, கல்கிஸை மாநகரசபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.............. read more 

கூட்டமைப்பின் பங்கேற்பின்மை பயங்கரமான சதித்திட்டம்


ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணை தொடர்பில் இந்தியாவின் மௌனமும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்து கொள்ளாமையும் பயங்கரமான சதித்திட்டத்தின் வகிபாகமாகும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்தார்.
நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்து அரசாங்கமே தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக கலாநிதி குணதாச அமரசேகர மேலும் தெரிவிக்கையில், பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இந்தியாவின் தேவைக்காகவே அமெரிக்கா இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் பிரேரணையை கொண்டு வருகிறது.................. read more 

கால அவகாசம் மனித உரிமை கண்காணிப்பகம் அதிர்ச்சி


மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்துமாறு சர்வதேசம் ஏற்கனவே கோரிக்கை விடுத்த போதெல்லாம் அவற்றை நிராகரித்த இலங்கை அரசு, மேலும் கால அவகாசம் கோருவதையிட்டு மனித உரிமை கண்காணிப்பகம் அதிர்ச்சி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் மனித உரிமை விடயங்களில் கால அவகாசம் பற்றி இலங்கை கோரிக்கை விடுப்பது புதிதான விடயம் அல்ல என சர்வதேச மன்னிப்புச் சபையின் இலங்கை ஆய்வாளர் யொலன்டா பொஸ்டர் தெரிவித்துள்ளார்........... read more 

இன்று பிரித்தானியாவில் பெற்றோர் பெரும் பரபரப்பாக இருப்பர் !

இன்றைய தினம் பிரித்தானியாவில் பெற்றோர்கள் பெரும் ஏக்கத்தில் இருப்பார்கள் என்றும், பலர் தமது வேலைக்குச் செல்ல மாட்டார்கள் என்றும் பத்திரிகைகள் தெரிவித்துள்ளன. 11+ என்று அழைக்கப்படும் 10 வயது நிரம்பிய மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வெளியாக உள்ளது. தமிழ் பெற்றோர்கள் தொடக்கம் அனைத்து இன மக்களும் இந்தப் பரிட்சைப் பெறுபேறுகளை எதிர்பார்த்துக் காத்து நிற்கின்றனர்.

தூக்கில் தொங்கிய த.தே.கூட்டமைப்பு உறுப்பினர் சுமந்திரன் MP !

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கொடும்பாவியொன்று நேறு யாழ்பல்கலைக்கழக வளவினுள் தூக்கில் தொங்கவிடப்பட்டிருந்தது. மாலை வேளையினில் இது தொங்க விடப்பட்டிருக்கலாமென நம்பப்படுகின்றது. தமிழின துரோகி சுமந்திரன் எனத்தெரிவிக்கப்பட்டிருந்த அக்கொடும்பாவியினில் தொங்க விடப்பட்டிருந்த சுலோக அட்டையினில் போர் குற்ற விசாரணை எங்கே எனக்கேள்வியும் எழுப்பப்பட்டிருந்தது.

தமிழர் நாடுகடத்தல் குறித்து பிரிட்டன் கருத்து


பிரிட்டனில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் இலங்கை தமிழர்கள் அங்கு சித்திரவதை மற்றும் பாலியல் வல்லுறவுக்கான ஆபத்துக்களை எதிர்நோக்குவதாக இரு மனித உரிமை அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ளதை பிரிட்டன் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

தமிழ்நாட்டிலிருந்து பல லட்சம் கையெழுத்துப் படிவங்கள் கையெழுத்தாகி.. ஐ.நா மன்றத்திற்கு அனுப்பப் பட்டுள்ளது.


5.2.2012 அன்று ஐ.நா. மனித உரிமை செயலாளர் நவநீதம் பிள்ளையிடம் ஐந்து அம்ச கோரிக்கைகள் அடங்கியவிண்ணப்பங்கள்.கொடுக்கப்பட இருக்கின்றன.
தமிழ்நாட்டிலிருந்து பல லட்சம் கையெழுத்துப் படிவங்கள் கையெழுத்தாகி.. ஐ.நா மன்றத்திற்கு அனுப்பப் பட்டுள்ளது.......... read more 

எமக்கான விடுதலை எம் பலம் வாய்ந்த கைகளில் தான் இருக்கின்றது; அனைத்துலக மக்களவை அழைப்பு!


பொங்கி அழவேண்டிய காலம் அல்ல,  இன்று பொங்கி எழவேண்டிய இடமே ஐ நா சபை முன்றலில் !!!  
எமக்கான விடுதலை எம் பலம் வாய்ந்த கைகளில் தான் இருக்கின்றது … 
அனைத்துலக மக்களவை அழைப்பு!

புலம் பெயர் தமிழ் மக்கள் ஆகிய நாம்   முள்ளிவாய்க்காலில்   நடைபெற்ற தமிழின படுகொலைகளின் கவலைகளை மறக்கவில்லை. மறக்கவும் மாட்டோம். எமது  கடும் கோபம் அணையாத நெருப்பாகவே இருந்து வருகிறது............. read more 

Wednesday 29 February 2012

'வல்வெட்டித்துறை மக்கள் தமிழ்தேசியகூட்டமைப்பில் மிகுந்த கோபத்தில் உள்ளனர்' -வல்வை நகரசபைதலைவர்

http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/z-sammanthaa%20(2).jpgஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்துகொள்ளாது என்ற சம்பந்தரின் அறிவிப்புக்கு தனது எதிர்ப்பையும் வருத்ததையும் வல்வெட்டித்துறை நகரசபைதலைவர் திரு.ந.அனந்தராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார். 

புகையிரதத்தில் பயணித்த பெண்ணை கற்பழித்த இராணுவ அதிகாரி !


கடந்த தினம் கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து திருமலை நோக்கி பயணித்த பயணிகள் புகையிரதத்தில்
பயணம் செய்த பெண் ஒருவரை இரவு ஒன்பது முப்பது மணியளவில் அதே புகையிரதத்தில் பயணித்த இராணுவ கேப்ரல்
தர அதிகாரி பாலியல் வல்லுறவுக்கு உடபடுத்தி உள்ளார் .

புலிகள் பெயரில் இலங்கையில் தாக்குதல் நடத்த அரசு திட்டம் !


விடுதலை புலிகளின் பெயரில் இலங்கையின் மிக முக்கிய இராணுவ தளம் மற்றும் மக்கள் கூடும் இடங்கள் மீது குண்டு தாக்குதல்களை
நடத்த இலங்கை  அரசு இரகசிய திட்டமிடல் ஒன்றை மேற்கொண்டு வருகின்றது .

மீண்டும் U.N. முருகதாசன் திடலில் அணிதிரள வேண்டுகோள்!

விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை.இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு உண்டு.ஒரு தேசிய இனமுமே பகிர்ந்து கொள்ளவேண்டும். இந்தத் தேசியச் சுமையை சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள ஏழைகள் மட்டும் தாங்கிக்கொள்ள அனுமதிப்பது நாம் எமது தேசத்திற்குப் புரியும் துரோகம் என்றே சொல்லவேண்டும். 

யாருடைய அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வது?


 -இதயச்சந்திரன்

- கேட்டுப் பெற்றால் , அதை மீண்டும் பறித்துக் கொள்வார்கள்.
முதலில் நாம் ஒரு விடயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
 
சிங்களம் சொல்வது, அதிகாரப் பரவலாக்கமே தவிர அதிகாரப் பகிர்வல்ல.
 
13 வது திருத்தச் சட்டமும், அதன் குழந்தையான [சம்பந்தரின் மொழியில்] மாகாண சபையும், சிங்கள இறைமையின் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளவில்லை.

வடபுல அரச அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை போராடுமாறு அரசாங்கம் பலாத்காரம்


போராட்டம் வெற்றி அளிக்கவில்லை
வடபுல அரச அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை போராடுமாறு அரசாங்கம் பலாத்காரம்
 வடபுலத்தை சேர்ந்த அரச அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை கொண்டு ஜெனிவாவினில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள பிரேரணையை கண்டித்தும் ஜனாதிபதிக்கு  ஆதரவும் ஆசியும் வேண்டியும் இன்று நடத்தப்படவிருந்த போராட்டங்கள் வெற்றி அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அரச அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்து விட்டமையே போராட்டங்கள் வெற்றி அளிக்காமைக்கான காரணம் எனப்படுகின்றது.

துஷ்பிரயோகம் செய்த சிப்பாய் - நடவடிக்கை எடுக்காத பொலிஸார்: அதிகாரிகள் விசனம் தெரிவிப்பு


துஷ்பிரயோகம் செய்த சிப்பாய் - நடவடிக்கை எடுக்காத பொலிஸார்: அதிகாரிகள் விசனம் தெரிவிப்பு
news
கிளிநொச்சியில் மாணவி மீது பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட படைச் சிப்பாய் மீது பொலிஸார் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று துறைசார் அதிகாரிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு வின்சன்ட் கல்லூரி மாணவிகளின் அதிரடி நடவடிக்கை _


  மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையிலிருந்து கடந்த 23ஆம் திகதி அகற்றப்பட்ட சரஸ்வதியின் உருவச்சிலை மீண்டும் நேற்று முன்தினம் பாடசாலை மாணவிகளால் வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையில் கடந்த 23 ஆம் திகதியன்று சரஸ்வதியின் உருவச்சிலை வைக்கப்பட்டு அச்சிலை அன்று காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படவிருந்தது. 

பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டோரில் அதிகமானோர் தமிழர்கள்


  பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு இன்று நாடுகடத்தப்பட்ட 52 பேரில் 28 தமிழர்களும், 10 முஸ்லிம்களும், 14 சிங்களவர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களில் 44 பேர் ஆண்கள் என்பதுடன், 8 பேர் பெண்கள் ஆவர். 

2009 மே 17ல் வன்னிப் போர்முனையில் நிகழ்ந்தவை என்ன? - கொல்லப்பட்ட ஊடகவியலாளர் மேரி கொல்வினின் சாட்சியம்


mariecolvinசிறிலங்கா படைகளின் போர்க்குற்றங்களுக்கு சாட்சியாக இருந்தவரும், போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைய முன்வந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களுக்கும் அனைத்துலக சமூகத்துக்கும் இடையில் தொடர்பாளராக செயற்பட்டவருமான லண்டன் சண்டேரைம்ஸ் ஊடகவியலாளர் மேரி கொல்வின் May 25, 2009ல் எழுதிய கட்டுரை அதன் கால முக்கியத்துவம் கருதி மீள்பிரசுரமாகின்றது.

சிறிலங்கா ஆயுதப்போராட்டத்தின் பின்னணி குறித்து தமிழ்நாட்டில் தகவல் திரட்டுகிறது அமெரிக்கா


america

சிறிலங்காவில் இடம்பெற்ற ஆயுதப் போராட்டம் மற்றும் அதன் பின்னணி குறித்து இந்தியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தமிழ்நாட்டில் நடத்தி வரும் ஆய்வு தொடர்பாக சிறிலங்கா அரசு கடும் விசனத்திற்கு உள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறிலங்காவில் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னணி, அதன் வரலாறு, தமிழகத்திலுள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு இதிலுள்ள பிணைப்பு, இந்தியாவிலிருந்து அதற்கு கிடைத்த ஆதரவு என்பன குறித்து இந்தியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் விரிவான ஆய்வொன்றை செய்து வருகிறது.

இலங்கைக்கு இந்தியா ஆதரவு - பழ. நெடுமாறன் கடும் கண்டனம்


இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
ஐ.நா. மனித உரிமை குழுக்கூட்டத்தில் போரின் போது இலங்கை இராணுவம் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது தொடர்பாக, அமெரிக்கா கொண்டுவர இருக்கும் தீர்மானத்தை எதிர்த்தும், இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் எனவும், இதை வெளிப்படையாக இந்தியா தங்களிடம் தெரிவித்து விட்டதாகவும் இந்தியாவின் ஆதரவு என்பது நூற்றுக்கு நூறு சதவீதம் உறுதியானது எனவும் இலங்கையின் மனித உரிமைக்கான சிறப்புத் தூதர் மகிந்த சமரசிங்கே தெரிவித்திருக்கிறார்.

சிறீலங்காவிற்கு எதிராக செயற்படுங்கள் ஜெயா மன்மோகன்சிங்கிற்கு கடிதம்


சிறீலங்காவிற்கு எதிராக ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என தமிழகமுதல்வர் ஜெயலலிதா இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வலியுறுத்தியுள்ளார்.

சுமந்திரன் கூறுவது அத்தனையும் பொய்! - ஈழநாடு


இன்னும் ஒரு வரலாற்றுத் துரோகம் பகிரங்கமாக அரங்கேற்றப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால்வரை விடுதலைப் புலிகளும், தமிழ் மக்களும் தமிழீழ விடுதலைக்காகச் சிந்திய இரத்தமும், செலுத்திய உயிர்க் கொடைகளும் விலை கூறி விற்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் தமிழர்கள் ஊண் உறக்கமின்றி, வீதிகளில் தவம் இயற்றி, ஓலமிட்டு, ஒப்பாரி வைத்துப் பேசாத நாடுகளையெல்லாம் தமிழீழ மக்களுக்காய்ப் பேச வைத்த பெருமுயற்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்கதவுப் பிரதிநிதியான சுமந்திரனின் ஏற்பாட்டில் சம்பந்தன் அவர்களால் நிர்மூலமாக்கப்பட்டுள்ளது.

ஜெனிவா கூட்டம் தொடர்பாக ஆராய்வதற்கு கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவசர அழைப்பு!


ஜெனிவா கூட்டம் தொடர்பாக ஆராய்வதற்கு கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவசர அழைப்பு!
நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஜெனிவா மனிதவுரிமைக் கூட்டம் சம்பந்தமாக கலந்தாலோசிப்பதற்கான அவசர கூட்டம் ஒன்றிற்கு எதிர்வரும் 2ஆம் திகதி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கை யுத்தம் தொடர்பில் சுயாதீனமானதும் முழுமையானதுமான விசாரணைகள் நடத்தப்படவில்லை: ரொபேர்ட் ஓ பிளக்


ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றும் திட்டம் இன்னமும் கைவிடப்படவில்லை என தென் மற்றும் மத்திய ஆசிய பிராந்திய வலயத்திற்கான அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளக் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் இருந்துசென்ற பெண் சடலமாக மீட்பு !

பிரித்தானியாவில் இருந்துசென்ற பெண் சடலமாக மீட்பு !
பிரித்தானியாவிலிருந்து இலங்கைகு வந்து கொழும்பு, கொள்ளுப்பிட்டியிலுள்ள ரேனுகா ஹோட்டலில், தங்கிருந்த தமிழ்ப் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 48 வயதுடைய கனகசபை சுதர்ஷினி கஹீலா என்ற பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஹோட்டலின் முதலாம் மாடி அறையொன்றில் இந்தப் பெண் பிறிதொரு நபருடன் தங்கி வந்துள்ளார்.

ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவா? இல்லையா? இந்தியா அவசரப்பட்டு முடிவெடுக்காது!- உயர்ஸ்தானிகர்

ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவா? இல்லையா? இந்தியா அவசரப்பட்டு முடிவெடுக்காது!- உயர்ஸ்தானிகர்


ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிரான பிரேரணையின் போது ஆதரவளிப்பதா? இல்லையா? என்பது குறித்து இந்தியா தற்போதைக்கு முடிவெடுக்காது என்று இந்திய உயர்ஸ்தானிகர் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவை தமக்கு ஆதரவாக செயற்பட வைக்க இலங்கை கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டு வருகிறது.

தர்மம் வெல்லும், அதர்மம் அழிதே தீரும்.


தர்மம் வெல்லும், அதர்மம் அழிதே தீரும்.

Wed,Feb 29, 2012. By Admin
முப்பது வருட அகிம்சை வழி போராட்டம் முடிந்தது, முப்பதுவருட ஆயுதபோராட்டம் மௌனவித்து ஈழத்தமிழனின் போராட்டம், மொத்தம் அறுவது வருடத்தை முடித்துவிட்டது, மீண்டும் ஒரு தர்மயுத்தம்  27.02.2012ல் ஆரம்பமாகியுள்ளது.

 இது புலம் பெயர் தமிழரின் புதிய போராட்டமாக மாறியுள்ளது, உலக நாடுகளையும், மனித உரிமை பேரவை, பிரச்சனைகளுக்கு தீர்வு தோடும் உலக தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்போடு ஒட்டு மொத்த தமிழ் இனத்தின் நிதிகேட்கும் போராட்டம்  வெடிக்கபோகும் இறுதி யுத்தமிதுவாகும்............. READ MORE