Translate

Wednesday, 29 February 2012

துஷ்பிரயோகம் செய்த சிப்பாய் - நடவடிக்கை எடுக்காத பொலிஸார்: அதிகாரிகள் விசனம் தெரிவிப்பு


துஷ்பிரயோகம் செய்த சிப்பாய் - நடவடிக்கை எடுக்காத பொலிஸார்: அதிகாரிகள் விசனம் தெரிவிப்பு
news
கிளிநொச்சியில் மாணவி மீது பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட படைச் சிப்பாய் மீது பொலிஸார் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று துறைசார் அதிகாரிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது:
கிளிநொச்சி நகரில் கடைமையாற்றும் சிப்பாய் ஒருவர் 16 வயதான மாணவி ஒருவரை காதலிப்பதாக கூறி அவரை மதவாச்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார். தமது மகளைக் காணாத பெற்றோர்  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

எனினும் அடுத்த நாள் காலை மதவாச்சியில் குறித்த மாணவியை கைவிட்டு தலைமறைவாகிவிட்டார் சிப்பாய். பின்னர் பொலிஸார் குறித்த மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
எனினும் மாணவியை துஸ்பிரயோகத்திற்கு ஆளாக்கிய படைவீரர் மீது எந்த நடவடிக்கையையும் பொலிஸார் எடுக்கவில்லை. 16 வயதுக்குட்பட்ட பெண்களை அவர்களது சம்மதத்துடன் திருமணம் செய்தாலும் கூட அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது வழமை. எனினும் இந்தச் சிப்பாய் மீது பொலிஸார் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருப்பது குறித்து துறைசார் அதிகாரிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த சிப்பாய் இந்த மாணவி தவிர்ந்த மேலும்  மூன்று மாணவிகளை காதலித்து வந்தார் என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment