Translate

Friday, 31 August 2012

இனிமேல் இடியப்பத்தை சாப்பிடவே மாட்டீர்கள் !


100 இடியப்பம் சொதி- சம்பல் ! புதைந்திருக்கும் ஆபத்தை அறிவீர்களா ?
 
தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசங்களில் எல்லாம் கடைகளில் பிட்டு, இடியப்பம் விற்பனை செய்யப்படுகிறது. இதுவே பின்னர் போட்டியாக மாறி 50 இடியப்பம் சொதி சம்பல், என்றும் பின்னர் 100 இடியப்பம் சொதி சம்பல் இவ்வளவு பணம் என, விலை குறிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

யார் முட்டாள்?!


யார் முட்டாள்?!
 
அமெரிக்க பாடசாலை ஒன்றில் எட்டரைவயது சிறுவனை "இவன் அடிமுட்டாள். பாடசாலையில் இருந்தால் மற்றமாணவர்களையும் கெடுத்து விடுவான். இனி இவனுக்கு பாடசாலையில் அனுமதி இல்லை." என்று ஒர் கடிதம் எழுதி அந்த சிறுவனின் சட்டைப்பையில் வைத்து ஆசிரியர்களால் விரட்டப்பட்டது. தாயார் கவலை கொண்டாலும் தைரியமாக வீட்டில் வைத்து பாடங்களை கற்று கொடுத்தார். தாய்யின் கல்வியிலே வளர்ந்த சிறுவன்.., பின்னாளில் ஆராட்சிக
ளில் ஈடுபட்டார். 

ஈழத்தின் ஆதி குடிகள் தமிழர்கள் தான் என்பதற்கான ஆதாரம்..!

ஈழத்தின் ஆதி குடிகள் தமிழர்கள் தான் என்பதற்கான ஆதாரம்..!

1956-ல் "விஜயனின் வருகை'' என்ற தலைப்புடன் சிறப்பு தபால் தலை ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டது. குவேனி ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பது போலவும், கப்பலில் வந்த விஜயன் அவளிடம் அடைக்கலம் கோருவது போலவும் இந்த தபால் தலை அமைந்திருந்தது

குறைந்த பட்சம் வடக்கில் மாகாணசபையாவது ஏற்படுத்தப்பட்டதா?

இலங்கையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுமுகமாக கைச்சாத்திடப்பட்ட இந்தோ - லங்கா ஒப்பந்தத்திற்கு இன்றுடன் (1987 ஜுலை 29) 25 வருடங்கள் நிறைவு பெறுகிறது. 
இந்த ஒப்பந்தம் எதனை சாதித்தது. 
குறைந்த பட்சம் வடக்கில் மாகாணசபையாவது ஏற்படுத்தப்பட்டதா? 

ஜுன் 1, 1981 இல் திட்டமிட்டு தீக்கிரையாக்கப்பபட்ட அறிவுச்சுரங்கமான யாழ் பொது நூலகம். இப் பொது நூலகம் புனரமைக்கப்பட்டுவிட்டது. ஆனால் இளம் தலைமுறையினருக்கு படிப்பினையூட்டும் ஒரு சுவடு.

ஜுன் 1, 1981 இல் திட்டமிட்டு தீக்கிரையாக்கப்பபட்ட 
அறிவுச்சுரங்கமான யாழ் பொது நூலகம். இப் பொது நூலகம் புனரமைக்கப்பட்டுவிட்டது. ஆனால் இளம் தலைமுறையினருக்கு படிப்பினையூட்டும் ஒரு சுவடு.

மட்டக்களப்பு கல்லடி பாலம் 1928 இல் வெள்ளையர்களால் திறந்து வைக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட படம்


மட்டக்களப்பு கல்லடி பாலம் 1928 இல் வெள்ளையர்களால் திறந்து வைக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட படம்

Thursday, 30 August 2012

தோழர் செங்கொடி முதலாமாண்டு நினைவு வணக்க நாள் (28.08.2011)


தோழர் செங்கொடி முதலாமாண்டு நினைவு வணக்க நாள் (28.08.2011)

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை அளிக்கப்பட்ட தோழர்கள் சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் உயிர்காக்க தன்னுயிரை ஈகம் செய்த “வீரத்தமிழிச்சி” செங்கொடியின் 1ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் சாவு ஒறுப்பை நிறைவேற்ற இந்திய அரசு முயன்றவேளை அம்மூவரையும் காப்பாற்றும் நோக்குடன் 28.08.2011 அன்று காஞ்சிபுரம் தாலுகா பணிமனையின் முன்பு தன்னுடலில் தீமூட்டி வீரத்தமிழிச்சி செங்கொடி ஈகைச்சாவடைந்தார்.
தன்இன உறவுகள் மூவரின் உயிர்காக்க தன்னுயிரை ஆகுதியாக்கிய இந்த வீரத்தமிழிச்சியை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

சிங்களப் படையினருக்கு இராணுவப் பயிற்சி அமைச்சர் பல்லம் ராஜுவைக் கண்டித்து செப்டம்பர் 4ஆம் நாள் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் தொல்.திருமாவளவன் அறிவிப்பு


சிங்களப் படையினருக்கு இராணுவப் பயிற்சி அமைச்சர் பல்லம் ராஜுவைக் கண்டித்து செப்டம்பர் 4ஆம் நாள் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் தொல்.திருமாவளவன் அறிவிப்பு

சிங்களப் படையினருக்கு இந்திய அரசு தமிழகத்திலோ அல்லது இந்தியாவின் பிற பகுதிகளிலோ பயிற்சி அளிக்கக் கூடாது என்று தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் கட்சி சாராத அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இந்திய அரசு தமிழக மக்களின் உணர்வுகளை ஒரு பொருட்டாக மதிக்காமல் சிங்களப் படையினருக்கு இராணுவப் பயிற்சி அளித்து வருகிறது.

தமிழ்த் தேசிய விடுதலைக்கான போராட்டத்தில் கிழக்கின் தேர்தல்!- வடுக்களும் வரலாறுகளும்


 
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அச்சமின்றி தேர்தல்களத்தில் நிமிர்ந்து நிற்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களை  ஆதரித்து வாக்களித்து கிழக்கு மாகாணசபையை தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலை முழங்கும் சபையாக மாற்றியமைப்போம். 
ஆங்கிலேயர் ஆட்சியில்1833 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் 1947 ம் ஆண்டு தேர்தலின் போது ஏழு தொகுதிகள் அமைக்கப்பட்டிருந்தன. இவ்வேழு தொகுதிகளும் தமிழ்ப்பேசும் இனங்களான தமிழர், முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதாக ஏற்படுத்தப்பட்டிருந்தன.

பிரபாகரன் ஆயுத இரைச்சல்களும் மரணக் கூச்சல்களும் நிறைந்த போர்ச் சூழலில் பகையை எதிர்த்துப் படையை நடத்தும் ஒரு மாவீரன் - திருமாவளவன்


 
தமிழ்நாட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் விகடன் மேடைக்காக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார்.
''நீங்கள் கற்பனை செய்துவைத்திருந்த தலைவர் பிரபாகரனை, நேரடிச் சந்திப்பின்போது உணர்ந்தீர்களா?''
''மேதகு பிரபாகரன் அவர்கள் ஒரு மாபெரும் மக்கள் தலைவர் என்றாலும், இன விடுதலைக்கான படைத் தலைவர் என்பதால் அவ்வளவு எளிதாகச் சந்திக்க இயலாது என்றுநினைத்திருந்தேன். ஆனால், கனவா நனவா என்று வியக்கும் வகையில், மிடுக்கான அந்த ராணுவ உடையோடு அவரே வாசலில் நின்று எங்களை வரவேற்றதைக் கண்டு அதிர்ந்தும் வியந்தும் போனேன்.

'சூரியன் மேற்கே உதித்தாலும் இனி திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை’


தருமபுரி: கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் இனி திமுக, அதிமுகவுடன்   கூட்டணி சேர மாட்டோம் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ்   தெரிவித்துள்ளார். 

ஹிஸ்புல்லாவை போல கொள்கையில்லாது பதவிக்காக கட்சி தாவுபவன் நான் அல்ல- அரியம்


ஹிஸ்புல்லாவை போல கொள்கையில்லாது சலுகைக்காகவும் அமைச்சு பதவிக்காகவும் கட்சி விட்டு கட்சி தாவுபவன் நான் அல்ல. நான் தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் கட்சிவிட்டு கட்சி தாவாத கொள்கைவாதி’ என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறியுள்ளார்.

காணாமல்போனோர் தொடர்பான உண்மைகள் புதைந்துவிட்டன – சுரேஸ் பிரேமசந்திரன்


இலங்கையில் காணாமல் போனவர்களை கண்டறிவதற்கு ஜக்கிய நாடுகள் சபை, இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் கொடுக்கவில்லை. இதனால் காணாமல் போனோர் தொடர்பான உண்மைகள் புதைந்து விட்டன’ என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன்   தெரிவித்தார்.

உறவுகளை தொலைத்த மக்கள் அனுட்டிக்கும் காணாமல் போனோர் தினம் இன்று


அனைத்துலக காணாமற்போனோர் நாள் இன்று உலகெங்கும் அனுசரிக்கப்படுகிறது.  உலகின் பல நாடுகளிலும் காவல்துறை யினராலும் பாதுகாப்புப் படையினராலும், ஆயுதக்குழு க்களாலும் கைது செய்யப்பட்டு கடத்தப்பட்டு காணாமற்போவோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்நாளை ஐக்கிய நாடுகள் சபை பிரகடனம் செய்துள்ளது.

பிரபாகரனை மட்டுன்றி அரியநேத்திரன் போன்ற புலி தமிழர்களையும் அழிக்க வேண்டும்- ஹிஸ்புல்லா


பிரபாகரன் அழிந்து விட்டான். புலித்தமிழர்கள் அழிந்து விட்டார்கள் என நாம் நினைப்பது தவறு. தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் போன்ற பயங்கரமான புலித்தமிழர்களை முற்றாக அழிக்க வேண்டும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா காத்தான்குடியில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும் போது தெரிவித்தார்.

காணாமல்போனோர் நிகழ்வில் நாம் கலந்துகொள்ள மாட்டோம்


சர்வதேச காணாமல்போனோர்  தினத்தை ஒட்டி நாளை வவுனியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளில் நாம் கலந்துகொள்ள போவதில்லை என மக்கள் கண்காணிப்பு குழு அறிவித்துள்ளது. இது தொடர்பில் மக்கள் கண்காணிப்பு குழுவின் இணைத்தலைவர் சிறிதுங்க ஜெயசூரிய விடுத்துள்ள செய்தி  குறிப்பில் தெரிவிக்கப்படுள்ளதாவது,

கிழக்கில் சூடுபிடிக்கும் தேர்தல் பிரசாரம்! அரசின் நாடகம் தலைகீழாக மாறும் நிலை!

கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாத காரணத்தினால் தான் தமிழ் பிரதேசங்களில் தேர்தல் மோசடிகளைச் செய்து, அமைச்சர் அதாவுல்லாவினால் களமிறக்கிய மூன்று வேட்பாளர்களும் வெற்றிபெற முடிந்தது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அரசாங்கத்துக்கு வாக்களித்து பாவங்களையும் சாபங்களையும் நாட்டு மக்கள் பெறக்கூடாது


மஹிந்த சிந்தனை ௭ன்ற நரகததிலிருந்து நாட்டை பாதுகாக்க எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் பொது மக்கள், ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். அரசாங்கத்திற்கு வாக்களித்து  பாலியல் வல்லுறவு, கொலை, கொள்ளை மற்றும்  ஊழல் மோசடிகள் போன்ற குற்றச்செயல்களின்  பாவங்களையும்  சாபங்களையும் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளக் கூடாது என்று எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க  தெரிவித்தார்.

மஹிந்தவின் வீரத்தனமும் சிங்கள மக்களும்

essayவீர புருஷர்கள் இரு ஓரங்களும் கூரான வாளொன்றை ஒத்தவர்கள், புத்திசாலித்தனம் வாய்த்த இனத்தவர்கள். இத்தகைய வீரபுருஷர்கள் விடயத்தில் அவதானத்துடனேயே செயற்படுவர்.
 தமிழில் : வியெஸ்ரி

மூலம்: ராவய

 இத்தகைய வீர புருஷர்களூடாகத் தமது தேவையை நிறைவு செய்து கொண்ட பின்னர் அவர்களுக்கு கௌரவமாக ஓய்வு வழங்கிவிடுவர். வீர புருஷரொருவருக்கு காலக்கட்டுப்பாடின்றித் தொடர்ந்து செயற்பட இடமளிக்கும் இனங்கள் தமது நிகழ் காலத்தைப் போன்றே, எதிர்காலத்தையும் ஆபத்துக்கு உள்ளாக்கிக் கொள்கின்றன. 

80சதவீதமான தமிழ் மக்கள் வாக்களித்தால் கிழக்கு மாகாண ஆட்சியைக் கைப்பற்றலாம்:சம்பந்தன்

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதனால் அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. குறைந்தது 75 அல்லது 80 சதவீதமான தமிழ் மக்கள் வாக்களித்தால் மட்டு. மாவட்டத்தில் 8 ஆசனங்களைக் கூட்டமைப்பு கைப்பற்றும்.
அம்பாறையில் 3 ஆசனங்களையும் திருமலையில் 5 ஆசனங்களையும் கைப்பற்றி கூட்டமைப்பு ஆட்சியமைக்கும் சந்தர்ப்பமும் உண்டு ௭ன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருமலை மாவட்ட ௭ம்.பி.யுமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். 

மூளையில் இரத்தக் கசிவோடும் மயங்கிக் கிடக்கும் நிலையிலும் கட்டிலோடு சங்கிலியால் கட்டப்பட்டுள்ள சதீஸ்!


இலங்கையில் உள்ள மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல்க் கைதி சுந்தரம் சதீஸ் வழக்கு ஒன்றிற்காக காலி நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டு வழக்குத் தவணையின் பின் திடீர் என காலி கராப்பிடிய வைத்தியசாலையில் சுயநினைவற்ற நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை யாவரும் அறிந்ததே.

அரசியல் தீர்வு காணும் வரை அரசாங்கம் மீதான போர் குற்றச்சாட்டுக்கள் தொடரும்


இனப்பிரச்சினைக்கு நிரந்தரமானதும் நியாயமானதும் நிலைத்து நிற்கக்கூடியதுமான அரசியல் தீர்வு ஒன்றை காணும் வரை இலங்கை அரசாங்கம் மீதான போர்க்குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை மீறல் குற்றசாட்டுக்களை சர்வதேச சமூகம் தொடர்ந்தும் வலிறுத்திக்கொண்டே இருக்கும் ௭ன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

ராணுவத்திற்கு பயிற்சி அளிக்கக் கூடாது தொடர்வண்டி மறியல்- கொடும்பாவி எரிப்பு (படங்கள்)

Posted Imageஇலங்கைக்கு இந்தியா தொடர்ந்து ராணுவப் பயிற்சி கொடுக்கும் என்று திமிராக பேசிய பாதிகாப்பு இணை அமைச்சரை பள்ளம் ராஜுவை கண்டித்தும்,Posted Image இலங்கை ராணுவத்திற்கு இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும் இன்று காலை 9 மணி அளவில் நாம் தமிழர் கட்சியினர் சுமார் 150 பேர் பெரம்பூரில் தொடர்வண்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் . இரண்டு மணிநேரம் தொடர்வண்டிகளை நகர விடாமல் செய்தனர் நாம் தமிழர்கள் . பின்பு காவல் துறையினர் அவர்களை கைது செய்து பெரவள்ளூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

http://thaaitamil.com/?p=30469

“முடிந்தால் என்னைத் தண்டித்துப் பாருங்கள்” – நரேந்திர மோடி சவால்!

குஜராத்தில் முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலை – 2002 தொடர்பாக சிஎன்என் – ஐபின் தொலைக்காட்சியின் “டெவில்ஸ் அட்வகேட்” நிகழ்ச்சியில் கரண் தப்பார், “கலவரம் தொடர்பாக நீங்கள் மன்னிப்பு கேட்பீர்களா?” என்று கேட்ட போது நரேந்திர மோடி வெளிநடப்பு செய்ததைஅறிவோம். அது பாசிஸ்டுகளுக்கே உரிய அடக்க முடியாத கோபம்.ஆனால் அந்த கோபத்தை பாசிஸ்டுகளின் தலைவன் அமெரிக்காவிடம் காட்ட முடியுமா? மனித உரிமை என்.ஜி.வோக்களைத் திருப்பதிப்படுத்தும் வண்ணம் அமெரிக்கா அவருக்கு விசா கொடுக்க மறுத்து வருகிறது. இருப்பினும் அதையெல்லாம் மோடி ஒரு மானக்கேடாக எடுத்துக் கொள்ளவில்லை. ராஜபக்சேவும் அப்படித்தான் இத்தகைய எதிர்ப்புகளை சட்டை செய்வதில்லை.

வடகிழக்கில் இராணுவம் முற்றாக அகற்றப்பட்டு, சிவில் நிர்வாகம் மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்: கனடா


Posted Imageஇலங்கையில், தமிழ் மக்கள் வாழும் பகுதிகளிலிருந்து இராணுவம் அகற்றப்பட வேண்டுமென்பதிலும், சிவில் நிர்வாகம் முழுமையாக வடகிழக்குப் பகுதிகளில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதிலும், கனடிய அரசு மிகத் தெளிவாக இருப்பதாக கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ் அலெக்ஸ்சாண்டர் தெரிவித்தார்.

அவசரமாக இந்ததியா விரைகிறார் மஹிந்த மன்மோகன் சோனியாவுடன் செப்.20 இல் முக்கிய பேச்சு


அவசரமாக இந்ததியா விரைகிறார் மஹிந்த - மன்மோகன் சோனியாவுடன் செப்.20 இல் முக்கிய பேச்சு
 
அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை மரியாதை நிமித்தம் மாத்திரமே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ஷ சந்திப்பார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமானதும், முக்கியத்துவம் வாய்ந்ததுமான விஜயமொன்றை மேற்கொண்டு செப்ரெம்பர் 20ஆம் திகதி இந்தியாவுக்குச் செல்லவுள்ளார்.

Wednesday, 29 August 2012

இந்தியா, சீனா, சிறிலங்கா இடையே ‘சிண்டுமுடிந்த‘ தமிழன் லண்டனுக்குத் தப்பிஓட்டம்

Posted Imageஇந்தியா, சீனா, சிறிலங்கா இடையே ‘சிண்டுமுடிந்த‘ தமிழன் லண்டனுக்குத் தப்பிஓட்டம்

இந்தியாவுக்கும், சீனாவுக்கும், சிறிலங்காவுக்கும் இடையில் விரிசல் தீவிரமடையக் காரணமான கொழும்பு டுப்ளிகேசன் வீதி காணி விவகாரம் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கின் காது வரைக்கும் சென்றுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த முத்தரப்பு சிக்கலுக்குக் காரணமான கொழும்பு டுப்ளிகேசன் வீதியில் உள்ள நிலத்தின் சொந்தக்காரர் வாமதேவன் என்ற தமிழராவார். 

கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் த.தே.கூட்டமைப்புக்கே ஆதரவு: - வடக்கு கிழக்கு மாகாண அரசாங்க உத்தியோகர்த்தர் சங்கம் அறிவிப்

Posted Imageகிழக்கு மாகாண சபைத்தேர்தலில் த.தே.கூட்டமைப்புக்கே ஆதரவு: - வடக்கு கிழக்கு மாகாண அரசாங்க உத்தியோகர்த்தர் சங்கம் அறிவிப்பு

கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரிப்பதாக வடக்கு கிழக்கு மாகாண அரசாங்க உத்தியோகர்த்தர் சங்கம் அறிவித்துள்ளது. நேற்றுமுன்தினம் திருகோணமலை நகர மண்டபத்தில் நடைபெற்ற சங்கத்தின் கிழக்கு பிராந்திய மாநாட்டில் இவ் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியில் இனிதே நிறைவேறிய டெசோ


அனலை நிதிஸ் ச. குமாரன்
தி.மு.க. நடத்திய டெசோ மாநாட்டின் நோக்கம் ஈழத் தமிழர்களைப் பாதுகாப்பதற்கு அல்ல எனவும், கலைஞர் தனது கட்சியின் எதிர்காலத்தை நிர்மாணிக்கத் தேவைப்பட்ட ஆயுதமே டெசோ என்கிற மாநாடு எனவும் போன்ற குற்றச்சாட்டுக்கள் பரவலாகப் பல தமிழக அரசியல்வாதிகளினால் முன்வைக்கப்பட்டுள்ளன. ஈழப் போர் உக்கிரம் அடைந்து பல்லாயிரம் மக்கள் கொலை செய்யப்பட்ட காலப்பகுதியில் தமிழகத்தை ஆட்சி செய்தது கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு. அனைத்தும் முடிந்த பின்னர் இப்படிப்பட்ட மாநாடுகள் எந்த வகையில் ஈழத் தமிழரைக் காவந்து பண்ணும் என்பதனைக் கலைஞர் இன்றுவரை விளக்கவில்லை.

அகதிகள் விடுதலை கோரிப் போராட்டம் : ஈழத்தாயின் பொலீஸ் ஒடுக்கியது

பூந்தமல்லி அருகே கரையான்சாவடியில் உள்ள இலங்கை அகதிகள் சிறப்பு முகாமையும், செங்கல்பட்டு சிறப்பு அகதிகள் முகாமையும் இழுத்து மூடக்கோரி திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருமலையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் : டக்ளஸ் எங்கே?


தடைசெய்யப்பட்டுள்ள பகுதிகளில் மீன் பிடிக்க முடியாமையின் காரணமாக தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்தும் திருகோணமலை மீனவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்காணக்கான மீனவர்கள் கலந்து கொண்டனர்.

பிள்ளையான் கல்வி அறிவு அற்றவர் : ‘அறிஞர்’ கருணா


கிழக்கு மாகாணத்தின் தற்போதைய முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் கல்வியறிவு அற்றவர் என பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா  தெரிவித்துள்ளார்.

தமிழரின் குடிப்பரம்பலை குறைக்கவே சீனா முயற்சி! குற்றஞ்சாட்டுகிறது கூட்டமைப்பு


தமிழரின் குடிப்பரம்பலை குறைக்கவே சீனா முயற்சி! குற்றஞ்சாட்டுகிறது கூட்டமைப்பு
வடக்கு, கிழக்கில் இராணுவக் குடியிருப்புக்களை நிறுவுவதற்கு நூறு மில்லியன் அமெரிக்க டொலரை சீனா உதவியாக வழங்கவுள்ளது என வெளிவரும் செய்திகள் தமிழ் மக்களுக்கு வேதனை அளிக்கும் நடவடிக்கை.

மேலும், சீன அரசு திபெத்தில் சீனர்களைக் குடியமர்த்தி எவ்வாறு திபெத்தியர்களைச் சிறு பான்மையாக்குகின்றதோ அவ் வாறே இலங்கையிலும் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களைச் சிறுபான்மையாக்க முயற்சிக்கின்றது.

இலங்கை அரசின் இனவெறியை இந்தியா ஒருபோதும் ஊக்குவிக்கக்கூடாது; விஜயகாந்த்


 
உலக அரங்கில் இலங்கை அரசின் இனவெறி போக்கு தமிழர் நெஞ்சங்களில் எரியும் ஈட்டியென பாய்ந்துள்ளது. இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகள் சிங்கள அரசின் இராணுவப் பகுதியாக மாற்றப்பட்டு வருகின்றன.


இந்த போக்கை தடுத்து நிறுத்த இந்திய அரசு அக்கறை காட்டாது தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார் தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த்.

நாடாளுமன்ற தெரிவுக்குழு வெறும் இறப்பர் முத்திரையாக உள்ளது - பசில் ராஜபக்ஷ

இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண சிறந்த செயற்பாடு நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்படுவது எனவும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் கிடைக்கும் பரிந்துரைகள் நாட்டில் உள்ள அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புலிகளின் தலைவரின் பெயரும் GCE O/L வினாப் பத்திரத்தில் பிழையான விதத்தில் பரபரப்பு (படம் இணைப்பு)

யாரை திருப்திபடுத்த இவ்வாறான வினாக்கள் வினாத்தாளில் இடம்பெற்றன…? அரசையா? அல்லது மாணவர்களையா?

யாழ்ப்பாணம் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்கு அண்மையில் நடத்திய பொது சாதாரண பரீ்ட்சையில் ஒரு வில்லங்கமான கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

அது என்னவென்றால் “பயங்கரவாதம் குறித்த சொல்லுடன் தொடர்பில்லாத நபர் யார்?” என்பதாகும்...........  READ MORE

தமிழக மீனவர்களை தாக்குவது எப்படி- இரு நாட்டு கடற்படை அதிகாரிகள் ஆராய்வு


தமிழக மீனவர்களை தாக்குவது எப்படி- இரு நாட்டு கடற்படை அதிகாரிகள் ஆராய்வு

இலங்கை இந்திய கடற்பிராந்தியத்தில் நிலவும் பிரச்சினைகள் பற்றி ஆராய்வதற்காக இலங்கை இந்திய கடற்படை உயரதிகாரிகளின் நான்கு நாள் கலந்துரையாடல் நேற்று முன்தினம் புதுடில்லியில் ஆரம்பமாகியுள்ளது. 30ஆம் திகதிவரை இக்கலந்துரையாடல் நடைபெற உள்ளது.

அரச விசுவாசம் காட்டி அடாவடித்தனம் புரியப்போய் வகையாக மட்டிக்கொண்ட (அ)நீதவான் கணேசராசா


‘உதயன்’ நாளிதழின் ஆசிரியருக்கு எதிராக யாழ். நீதிவான் மாணிக்கவாசகர் கணேசராசா நீதிமன்ற நடவடிக்கைகள், நீதிமன்ற விசாரணைகள் எவற்றையும் முன்னெடுப்பதற்கும் ஆசிரியரைக் கைதுசெய்வதற்கான பிடியாணை உத்தரவு எதனையும் பிறப்பிப்பதற்கும் விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவைக் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி வரை நீடித்துள்ளது.

சீனா பக்கம் சாய்கின்ற இலங்கை இந்தியாவுக்கு எப்படி நட்பு நாடாகும்?

சீனா பக்கம் சாய்கின்ற இலங்கை இந்தியாவுக்கு எப்படி நட்பு நாடாகும்?

கலைஞர் கருணாநிதி கேள்வி? இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் சீனாவின் தலையீடு அபிவிருத்தி என்ற போர்வையில் மூடி மறைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது இலங்கை அரசு இந்திய அரசுடனான உறவுகளை புறந்தள்ளி பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கான ஒப்பந்தங் களை சீனாவுடன் மேற்கொண்டு வருகின்றது. இத்தகைய நிலையில் இலங்கை எப்படி இந்தியாவிற்கு நட்பு நாடாக இருக்க முடியும்? என தி.மு.க.தலைவர் மு.கருணாநிதி இந்திய மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழர்களை அவமதிக்கும் வகையிலேயே இந்திய அரசாங்கத்தின் செயற்பாடுகள்!

தமிழர்களை அவமதிக்கும் வகையிலேயே இந்திய அரசாங்கத்தின் செயற்பாடுகள்!

இராணுவப் பயிற்சி குறித்து சீமான் காட்டம்

இலங்கை இராணுவத்தினருக்கு இந்திய அரசு பயிற்சியளிக்கக் கூடாது என்று தமிழக முதல்வரும் அரசியல் கட்சித் தலைவர் களும் தெரிவித்த கடுமையான எதிர்ப்பை உதாசீனப்படுத்தும் வகையில் இலங்கை இராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி யளிப்பது தொடரும் என்று பாதுகாப்புத் துணை அமைச்சர் பள்ளம் ராஜு கூறியிருப் பது ஒட்டுமொத்த தமிழ் இனத்தையே அவ மதிப்பதாகும் என நாம் தமிழர் கட்சியின் தலை வர் சீமான் காட்டமாகத் தெரிவித்துள்ளார். இலங்கையின் பூர்வீக குடிகளான தமிழர்களுக்கு அரசியல் சம உரிமை அளிக்கா மல் அவர்களை இரண்டாம் தர குடி மக்க ளாகவே நடத்தி வருகிறது இலங்கை இனவாத அரசு. தங்களு டைய அரசியல் தன் உரிமைக்காக போராடிய தமிழர்களை பூண்டோடு அழித்தொழிக்க திட்டமிட்ட ஒரு இனப் படுகொலைப் போரைத் தொடுத்தது சிங்கள பெளத்த இனவாத அரசு.

அரசியலுக்காக மதத்தை ஏலமிடும் மஹிந்த அரசு ஐ.தே.கட்சி சீற்றம்

 தேர்தலுக்கான தொனிப்பொருளொன்று தமக்கு இல்லாததால், சமயத்தை ஏலமிட்டு, இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட புத்தரின் புனித எலும்பை வைத்து அரசு தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது என ஐக்கிய தேசியக் கட்சி நேற்று குற்றஞ் சாட்டியது.

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரனை நடத்த வேண்டும்; கனேடிய உயர்ஸ்தானிகர் புருஸ் லெவி கோரிக்கை

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரனை நடத்த வேண்டும்; கனேடிய உயர்ஸ்தானிகர் புருஸ் லெவி கோரிக்கை
news
இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசாரனை நடத்த வேண்டும் என இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் புருஸ் லெவி கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைக்கு வரும் ஐ.நா குழு நியமிப்பு ஹன்னி மெகாலி தலைமை

news
 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி இலங்கை வரவுள்ள தமது குழுவின் உறுப்பினர்களை ஆணையாளர் நவிப்பிள்ளை (நவநீதம்பிள்ளை) நேற்று நியமித்திருக்கிறார்.

பொம்மை ஆட்சியை முடிவுக்குக்கொண்டு வருவதே நோக்கம்: ஹக்கீம்


சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் சம்பந்தமாக ௭ழுந்துள்ள சவால்கள் சர்வதேச ரீதியாகக் கூர்மையாகப் பார்க்கப்படுகின்றன. பிராந்திய வல்லரசுகளும் இந்த விவகாரத்தை மிக அவதானத்துடன் நோக்குகின்றன
என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் பின்னர் மு.கா.வின் ஆதரவைக் கோரப்போவதில்லை: அரசாங்கம்


கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் அங்கு ஆட்சியமைப்பதற்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஒருபோதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவைப் பெறப்போவதில்லை. ௭ம்மால் கிழக்கு மாகாண சபையில் தனித்து ஆட்சியமைக்க முடியும். அந்த அதிகாரத்தை மக்கள் ௭ங்களுக்கு வழங்குவார்கள் ௭ன்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் விசேட ஆலோசகருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்

பிரான்சில் நடைபெற்ற செஞ்சோலை குழந்தைகளின் 6 வது ஆண்டு நினைவு நிகழ்வும், தோழர் செங்கொடியின் 1ம் ஆண்டு ஈக வணக்க நிகழ்வும.;

தமிழர் தாயகத்தில்14.08.2006 அன்று சிங்கள கொலைவெறி அரசின் பறக்கும் இயந்திரக்கழுகள் அதிகாலை ஏவிய கோழைத்தனமான குண்டுவீச்சினால்  61 பள்ளி மாணவிகள் துண்டு துண்டாகி சிதறிப்போயினர். அன்பான அரவணைப்பும், ஆறுதலான உறவுகளும் என்று பெற்றவர்கள் யார் என்று தெரியாவிட்டாலும் பெருமிதத்தோடு தேசியத்தலைவரின் அரவணைப்பில் தமிழீழத்தின் எதிர்கால சிற்பிகள் கோழைத்தனமாக கொல்லப்பட்டு 6 வருடங்களாகி விட்டது. என்று மனதையும், நினைவையும்,விட்டு மாறாத குழந்தைகளின் நினைவு நிகழ்வையும், ராசீவு காந்தி  கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தூக்குத்தண்டனை கைதிகளின் விடுதலைக்காக தண்டனையை இரத்துச்செய்ய கோரி தீக்குளித்த தமிழின உணர்வாளர் தோழர் செங்கொடியின் 1ம் ஆண்டு நினைவாக பிரான்சு மனிதவுரிமைகள் சதுக்கத்தில் ஈகவணக்க நிகழ்வு நடைபெற்றன.

கியூ பிரிவு பொலிஸாரை நம்பாதீர்கள்! செந்தூரனை காப்பாற்றுங்கள்: முதல்வருக்கு வைகோ கோரிக்கை


கியூ பிரிவு பொலிஸாரின் பேச்சை நம்ப வேண்டாம்! உண்ணாவிரதி செந்தூரனின் நிலை மோசமாகிக் கொண்டே போகிறது. அவரது உயிரைக் காப்பாற்ற மனிதாபிமான நடவடிக்கை எடுங்கள்  என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

ஏழு ஈழத் தமிழர்களை அரசு விடுதலை செய்துள்ளது.நிரந்தர தீர்வு எட்டும் வரை செந்தூரனின் போராட்டம் தொடரும் என செந்தூரன் அறிவித்துள்ளார் .


செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்கள் அனைவரையும் அரசு விடுதலை செய்யவேண்டும் என செந்தூரன் கடந்த 23 நாட்களாக உண்ணா நிலையில் இருந்து வருகிறார். செந்தூரனுக்கு ஆதரவாக பல போராட்டங்கள் வெளியே வெடித்த வண்ணம் உள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் சிவில் அதிகாரிகள் - வடக்கு, கிழக்கில் மட்டும் உயரதிகாரிகளாக படையதிகாரிகள் அமர்த்தப்பட்டிருப்பது ஏன்? - கேள்வி எழுப்பினார் ஹக்கீம்!

Posted Imageநாட்டின் ஏனைய பகுதிகளில் ஆளுநர்களாகவும், அரசாங்க அதிபர்களாகவும் சிவில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் வடக்கு, கிழக்கில் படை உயரதிகாரிகள் அவ்வாறான பதவிகளில் அமர்த்தப்பட்டிருப்பது ஏன்? என நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் கேள்வி எழுப்பியுள்ளார்.

வடபகுதியின் கரைஓரபகுதியினை கையகப்படுத்தும் நோக்கில் சிங்களகுடியேற்றங்கள்!

தமிழ் மக்களின் இருப்பினை இல்லாமல் செய்வதற்கே வடமாகானத்தில் உள்ள தமிழர்களுடைய நிலங்கள்அபகரிக்கப்படுகின்றது. தமிழ் தரப்புகள் ஒன்றினைந்து சிறிலங்கா அரசாங்கத்தினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் வளசுறண்டல்களுக்கும், நில அபகரிப்பிற்கும் எதிராக போராட வேண்டும இல்லைஎன்றால் இன்னும் குறுகிய காலத்திற்குள் தமிழர்களுடைய இருப்பு அழிக்கப்பட்டுவிடும் என்று தமிழ் தேசியமக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எச்சரித்துள்ளார்.தமிழ் மக்கள் அழியும் போது அவர்களுக்காக குரல் கொடும்கும் சகத்திகளும் மௌனித்துப் போய்விடும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மற்றுமொரு தமிழ் அரசியல் கைதியும் கோமா நிலையில்!


விசாரணைக்கு என காலிக்கு அழைத்து செல்லப்பட்ட தமிழ் அரசியல் கைதி ஒருவர் அங்கு சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு மெகசின் சிறைச்சாலையிலிருந்து வழக்கு விசாரணைக்காக காலி நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட சுந்தரம் சதீஷ்குமார் எனும் தமிழ் அரசியல் கைதி, வழக்கு முடிந்த நிலையில் காலி கராபிட்டிய மருத்துவமனையில் கோமா நிலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இராணுவக் குடியிருப்பு ௭ன்ற போர்வையில் வடக்கு, கிழக்கில் சிங்களக் குடியேற்றம்: சுரேஷ்

இராணுவக் குடியிருப்பு ௭ன்ற போர்வையில் வடக்கு, கிழக்கில் சிங்களக் குடியேற்றம்: சுரேஷ்
ஓமந்தை, வடக்கு– கிழக்கில் இராணுவக் குடியிருப்புக்களை நிறுவுவதற்கு நூறு மில்லியன் அமெரிக்க டொலரினை சீனா உதவியாக வழங்கவுள்ளதாக வெளிவரும் செய்திகள் தமிழ் மக்களுக்கு வேதனையளிக்கும் செயற்பாடாகும் ௭ன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் உத்தியோகபூர்வ பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் ௭ம். பி. தெரிவித்துள்ளார். 

இலங்கையில் அரசுக்கெதிராகப் பரவலடையும் ஆர்பாட்டங்களுக்கு காரணம் மேற்குலகமே

இலங்கையில் அரசுக்கெதிராகப் பரவலடையும் ஆர்பாட்டங்களுக்கு காரணம் மேற்குலகமே புலம்புகிறது வெளிவிவகார அமைச்சு    

அரசுக்கு எதிராக உள்நாட்டில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப் பட்டுவரும் ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் பலம்பொருந்திய இரு மேற்குலக நாடுகளும், சில சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் இயங்கிவருகின்றன என்று அரச புலனாய்வுப் பிரிவுக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது என அறியமுடிகின்றது.

சிறப்பு முகாம்கள் மூடப்படும் வரை தொடர் உண்ணாவிரதப் போராட்டம்: ம.தி.மு.க.


சிறப்பு முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்கள் அனைவரையும் விடுவித்து திறந்தவெளி முகாம்களுக்கு அனுப்பவேண்டும் என வலியுறுத்தி சென்னையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஏற்கனவே உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. 

கொடூர தாக்குதலினால் நினைவற்ற நிலையை எட்டியிருக்கும் தமிழ் அரசியல் சிறைக்கைதி!

வவுனியா சிறைச்சாலையில் ஈழ தமிழ் சிறைக்கைதிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் மரணத்திற்கு இட்டுச்சென்ற அவலங்களையும் தொடர்ந்து இரு வாரங்களுக்கு முன்பு காலி சிறைச்சாலையில் தமிழ் கைதிகள் கடுமையான தாக்குதல்களுக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளனர். தாக்குதலின் காரணமாக தமிழ் அரசியல் சிறைக்கைதி ஒருவர் நினைவற்ற நிலையில் வீழ்ந்திருக்கும் அதிர்ச்சி தகவல் பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

புலனாய்வுப் பிரிவினர் ஏற்றிய புலிக்கொடி பற்றி புலனாய்வுப் பிரிவே விசாரணையாம்


புலனாய்வுப் பிரிவினர் ஏற்றிய புலிக்கொடி பற்றி புலனாய்வுப் பிரிவே விசாரணையாம்:-
புலிக்கொடியும் பரபரப்பும்
யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வசந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் தேர் ஊர்வலத்தில், மாட்டு வண்டி ஒன்றில் ஈழ கொடி பறக்கவிடப்பட்டமை தொடர்பாக பாதுகாப்பு தரப்பினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வண்டியில் இருந்து கொடியை பாதுகாப்பு தரப்பினர் அப்புறப்படுத்தியிருந்தனர். வடக்கில் மீண்டும் நெருக்கடியை ஏற்படுத்த புலிகளின் ஆதரவாளர்கள் செய்த வேலையாக இது இருக்கலாம் என பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். 

கணனியை ஊடுருவுவது(hack) போல் மூளையையும் ஊடுருவலாம்.


கணனிகளை ஊடுருவி(hack) அதில் உள்ள தகவல்கள் கடவுச்சொற்கள் திருடுவது போல் (passwords) உங்கள் மூளையையும் ஊடுருவி அதில் உள்ள தகவல்களைத் திருடும் முறையை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதற்கு $300 பெறுமதியான காது ஒலிவாங்கி (ear phone) போன்ற ஒரு கருவி போதுமானதாகும். நாம் அர்த்தமுள்ள ஒன்றைப் பார்க்கும் போது எமது மூளையில் இருந்து வெளிவரும் P300 சமிக்ஞைகளில் இருந்து தகவல்களைப் பெற முடியும்.