Translate

Wednesday, 29 August 2012

திருமலையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் : டக்ளஸ் எங்கே?


தடைசெய்யப்பட்டுள்ள பகுதிகளில் மீன் பிடிக்க முடியாமையின் காரணமாக தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்தும் திருகோணமலை மீனவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்காணக்கான மீனவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த எதிர்ப்பு நடவடிக்கையால் திருகோணமலை புல்மோட்டை வீதியூடான வாகன போக்குவரத்திற்கும் தடையேற்பட்டது.
குறிப்பிட்ட சில பகுதிகளில் மீன்பிடித்தலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக மீன்பிடித்தலில் பெரும் பாதிப்பை எதிர்கொள்வதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் மீன்பிடித்துறை அமைச்சிற்கு தகவல் வழங்கப்பட்ட போதும் இதுவரையில் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என அவர்கள் குற்றுஞ்சுமத்துகின்றனர்.
இந்நிலையில் தமது பிரச்சினைகள் தீர்க்கப்படும் என அதிகாரிகள் எழுத்துமூலம் உறுதியளிக்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ் நாட்டின் பல் தேசியப்  பண  முதலைகளுக்கு நாட் கூலிக்கு  வேலை செய்யும்  மீனவர்களைக்  குறிவைக்கும்  இலங்கை அரசும்  அதன்  அடிவருடிகளும்  திருகோணமலை  மீனவர்கள்  குறித்து  மெளனம் சாதிக்கின்றனர்.  தமிழ்நாட்டிற்கு  படகுகளில் சென்று  ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகக் கூறும் டக்ளஸ் தேவானந்தாவிற்கு தனது நாட்டின்  எல்லைக்குள்  பாதிக்கப்படும் மீனசவர்களுக்கு ஆதரவாக  எஜமான்  மகிந்தவிடம்  சிறிய  கோரிக்கை கூட முன்வைக்க மாட்டார்.

No comments:

Post a Comment