Translate

Thursday 21 June 2012

புலிகளுக்கு எதிரான போரில் இலங்கைக்கு ''எல்லா வகையிலும்'' உதவிகளைச் செய்த இந்தியாவை மிதிக்கிறதுஇலங்கை


புலிகளுக்கு எதிரான போரில் இலங்கைக்கு ''எல்லா வகையிலும்'' உதவிகளைச் செய்த இந்தியாவை மிதிக்கிறதுஇலங்கை

விளக்கம் கேட்கவே மேனன் இலங்கை செல்கிறார்:-
புலிகளுக்கு எதிரான போரில் இலங்கைக்கு ''எல்லா வகையிலும்'' உதவிகளைச் செய்த இந்தியாவை மிதிக்கிறதுஇலங்கை
புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசுக்கு ''எல்லா வகையிலும்'' உதவிகளைச் செய்த இந்தியாவை காலில் போட்டு மிதிக்கிறது இலங்கை:- 
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசுக்கு ''எல்லா வகையிலும்'' உதவிகளைச் செய்திருந்தாலும் சமீபகாலமாக இந்திய அரசையே அலட்சியப்படுத்துகிறது இலங்கை அரசு. இந்தியாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை ரத்து செய்யவும், கொடுத்த வாக்குறுதிகளைக் காலில் போட்டு மிதிக்கவும் தயாராகிவருகிறது. அத்துடன் சீனாவுடன் கொஞ்சிக் குலாவத் தொடங்கிவிட்டது.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த இந்திய அரசு, இலங்கையின் போக்கில் இத்தனை மாறுதல்கள் ஏன் என்று நேரிலேயே விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனனை இதற்காகவே இம் மாதம் 29-ம் திகதி (வெள்ளிக்கிழமை) கொழும்புக்கு அனுப்பிவைக்கிறது. அவர் சனிக்கிழமையும் அங்கு தங்கி இலங்கைத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவார்.
இந்திய ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மிகப்பெரிய பெட்ரோலியப் பண்டங்கள் சேமிப்புக்கான தொட்டிகளையும் எண்ணெய் விநியோக கட்டமைப்பையும் இலங்கையின் கிழக்கில் திருகோணமலை துறைமுகம் அருகில் உருவாக்கியிருக்கிறது. அந்த நிறுவனம் ''இலங்கை இந்திய எண்ணெய் கார்ப்பரேஷன்'' (எல்.ஐ.ஓ.சி.) என்ற பெயரிலேயே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 2002-ம் ஆண்டு இதற்காக இருதரப்பு ஒப்பந்தமும் செய்துகொள்ளப்பட்டது. அப்போது இலங்கையில் 'ஐக்கிய தேசியக் கட்சி' (யு.என்.பி.) ஆட்சியில் இருந்தது. இப்போது 'இலங்கை சுதந்திரக் கட்சி' (எஸ்.எல்.எஃப்.பி.) ஆட்சி செய்கிறது.
பெட்ரோலிய சேமிப்பு தொட்டிகள் உள்ள நிலம் இலங்கை பெட்ரோலியத்துறைக்குச் சொந்தமானது அல்ல, திருகோணமலை மாவட்ட முகமைக்குச் சொந்தமானது என்பதால் எண்ணெய் கொள்கலன்களையே அரசுடைமையாக்குவது குறித்து சட்ட நிபுணர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர் என ''சிலோன் டுடே'' என்ற பத்திரிகை ஜூன் 9-ல் செய்தி வெளியிட்டது. அந்தச் செய்திக்கு ஆதாரமாக அரசின் உயர்நிலை வட்டாரங்களை அதுமேற்கோள் காட்டியிருந்தது. அது சாதாரணமான செய்தியல்ல, இந்திய அரசை ஆழம் பார்க்கக் கசியவிடப்பட்ட செய்தி என்று புரிகிறது.
எண்ணெய் கொள்கலன்களைக் கைமாற்றிக்கொடுத்தற்கான ஒப்பந்தம்தான் கையெழுத்தாகியிருக்கிறதே தவிர அந்த இடத்தை இந்திய எண்ணெய் நிறுவனத்துக்குக் குத்தகைக்குத் தந்ததற்கான ஒப்பந்தம் 10 ஆண்டுகளாகியும் இன்னமும் கையெழுத்தாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பலமுறை நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பியும் இலங்கை அரசு அதிகாரிகள் அதைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. இந்த எண்ணெய் சேமிப்புத் தொட்டிகளை நவீனப்படுத்தவும் வலுப்படுத்தவும் இதுவரை சுமார் 66 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது. மேலும் 93.5 கோடி ரூபாய் செலவிட உத்தேசித்திருக்கிறது.
இந்த நிலையில், இலங்கையின் எந்தவொரு வளர்ச்சித் திட்டமாக இருந்தாலும் அது சீனாவுக்கே தரப்படுகிறது. சாம்பூர் என்ற இடத்தில் இந்தியா நிறுவிவரும் மின்னுற்பத்தி நிலையம் போன்றவற்றைச் சீர்குலைக்கும் வகையிலேயே அரசின் நடவடிக்கைகள் அமைந்து வருகின்றன. இந்த திட்டம் குறித்து 2006 முதலே பேசி வருகின்றனர். ஆனால் இன்னமும் இதை அமல்படுத்த வழி ஏற்படவில்லை.
இந்த திட்டம் தொடர்பாக ஏற்கெனவே பேசி முடிக்கப்பட்ட அம்சங்கள் தொடர்பாக்ககூட இலங்கையின் தலைமை அரசு வழக்குரைஞர் ஏதாவது சந்தேகங்களைக் கிளப்பிக்கொண்டே இருக்கிறார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அளித்த அறிக்கைகளை அமல் செய்வது தொடர்பான தகவல்களைக்கூட அமெரிக்க அரசுக்குத்தான் தெரிவிக்கிறது இலங்கை அரசு. இந்தியாவுக்கு அது குறித்து எதையும் தெரிவிப்பதில்லை.
இலங்கையின் வடக்கில் தமிழர் வசிப்பிடங்களில் அளவுக்கு அதிகமாக இராணுவ வீரர்களைத் தங்கவைத்து சிவிலியன்களை அச்சுறுத்தக்கூடாது, அவர்களை வெளியேற்ற வேண்டும் என்ற ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயத்திலும் இலங்கை அரசு வேண்டுமென்றே மெத்தனம் காட்டுகிறது.
அத்துடன் அது குறித்து இந்திய அரசுக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதைப் போல நடந்துகொள்கிறது. இராணுவத்தினரின் எண்ணிக்கையும் குறையவில்லை, சிவிலியன் நிர்வாகத்தில் இராணுவத்தினரின் ஆதிக்கமும் குறையவில்லை.
தமிழர்களுடைய வீடுகளையும் நிலங்களையும் இராணுவம் தன் வசம் எடுத்துக் கொள்வது வேகமாகவும் அதிக அளவிலும் நடக்கிறது. இது பற்றி எரியும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இந்திய அரசு இனியும் இதை கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது என்கிற நிலைமை ஏற்பட்டுவருகிறது.
இலங்கையின் கிழக்கில் மாகாணசபையின் பதவிக்காலம் இன்னும் ஓராண்டு இருக்கிறது என்றாலும் அதையும் கலைத்துவிட வேண்டும் என்று மாநில முதலமைச்சர் எஸ். சந்திரகாந்தன் நிர்பந்திக்கப்பட்டார். இதையும் இந்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளது.
இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் வசிக்கும் தமிழர்களின் துயர நிலை குறித்து நேரில் அறிய இந்தியத் தூதர் சமீபத்தில் விரிவாக சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
அவர் அளித்த அறிக்கைகள் இலங்கையில் என்ன நடக்கிறது என்பதை இந்திய அரசு புரிந்துகொள்ள உதவி வருகிறது. எனவே சிவசங்கர மேனனின் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. 
(தினமணி 21-06)

No comments:

Post a Comment