ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ டெலி புரம்டர் கருவியை இயக்கக் கூடிய நபர்ஒருவரையும் தமது அமெரிக்க விஜயங்களில் இணைத்துக் கொள்வதாக விக்கிலீக்ஸ் தகவல்வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டுராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த தகவல்களில் இந்த விடயம்குறிப்பிடப்பட்டுள்ளது.
2007ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ம் திகதி இந்த தகவல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான அப்போதைய அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளக்இந்தத் தகவல்களை அனுப்பி வைத்துள்ளார்.
2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அமைப்பின்62ம் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி, ரெலி புரம்டர் எனப்படும் கருவியை இயக்கக் கூடிய ஒருவரையும் தம்முடன் அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
திரையில் தகவல்களைப் பார்த்துக் கொண்டே உரையாற்றக் கூடிய வகையில் வசதி கொண்ட கருவி டெலி புரம்டர் என அழைக்கப்படுகிறது.
தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்கள் இந்த கருவியைப்பயன்படுத்தியே செய்தி வாசிக்கின்றனர்.
சுமுது ரஞ்சித் என்ற டெலி புரம்டர் ஒப்பரேட்டரை ஜனாதிபதி தம்முடன்அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்றதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
நன்றி, கொலம்போ ரெலிகிராப் மற்றும் விக்கிலீக்ஸ்
No comments:
Post a Comment