Translate

Sunday, 30 December 2012

போருக்குப் பிந்திய சிறிலங்காவில் ஊடக சுதந்திரம் -ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆய்வறிக்கை


பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைக்கான றொய்ட்டர்ஸ் நிலையத்தில், மிக அண்மையில் சிறிலங்கா தொடர்பான ஆய்வறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  ’போருக்குப்பிந்திய சிறிலங்காவில் ஊடக சுதந்திரம் மற்றும் நல்லிணக்க முயற்சிகளில் அதன் தாக்கங்கள்’ என்ற தலைப்பில் இந்த ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பல பத்தாண்டுகளாகத் சிறிலங்காவில் தொடர்ந்த போர் 2009இல் முடிவுக்கு வந்த போதிலும், ஊடகவியலாளர்கள் அங்கு தொடர்ந்து இம்சைகளை எதிர்கொண்டு வருவதாக இந்த ஆய்வறிக்கையில், கூறப்பட்டுள்ளது.
பிபிசி தமிழ்சேவை தயாரிப்பாளர் சுவாமிநாதன் எழுதியுள்ள 41 பக்கங்களைக் கொண்ட இந்த ஆய்வறிக்கையில், 2005 நவம்பரில் சிறிலங்காவின் அரசுத்தலைவர் பதவிக்கு மகிந்த ராஜபக்ச வரமுன்னர், 2004 ஏப்ரலில் அவர் சிறிலங்காவின் தலைமை அமைச்சராக தேசிய சக்தியாக மாற்றம் கண்டது முதல், ஊடகவியலாளர்கள் இம்சைக்குள்ளாக்கப்பட்ட சம்பவங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment