Translate

Saturday, 9 July 2011

Is Sri Lanka guilty of war crimes?


Is Sri Lanka guilty of war crimes?

A Channel 4 documentary shows graphic details of atrocities committed by the Sri Lankan Army on Tamils in 2009...... CLICK TO WATCH VIDEO   

Please watch this  Programme called ‘Centre Stage’ in one of the Indian Television networks Headlines Today TV (India Today Group) which was presented by an award winning journalist and Executive Editor Rahul Kanwal.
You will appreciate how the emotions are being raised in India by the Channel 4 documentary and the rejectfulness of the Sri Lanka Military Spokesperson from Colombo.
Former Foreign Secretary Rt. Hon. David Miliband and the Former Indian Foreign Minister (BJP) Jaswant Singh also feature in the show.

Friday, 8 July 2011

ஆக்கபூர்வ விசாரணைகளை நடத்தாவிடின் சர்வதேசம் தலையீடுகளை மேற்கொள்ளும்: மூன் _

ஆக்கபூர்வ விசாரணைகளை நடத்தாவிடின் சர்வதேசம் தலையீடுகளை மேற்கொள்ளும்: மூன் _

  ஐ.நா.அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமான விசாரணைகளை நடத்தாவிடின், சர்வதேச நாடுகள் தலையீடுகளை மேற்கொள்ளும் என்று ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் சுட்டிக்காட்டியுள்ளார். ............. read more  

தமிழர்களுடன் அரசியல் அதிகாரப் பகிர்வு இல்லை: இலங்கை அரசு

தமிழர்களுடன் அரசியல் அதிகாரப் பகிர்வு இல்லை: இலங்கை அரசு   


கொழும்பு, ஜூலை 7: இலங்கையில் தமிழர்களுடன் எந்தவிதமான அரசியல் அதிகாரப் பகிர்வும் செய்து கொள்ளமாட்டோம் என்று இலங்கை அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இதனால் இலங்கையில் தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே இருக்கும் அவலநிலை தொடரும் என்றே தெரிகிறது.


இலங்கை நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை, மூத்த அமைச்சர் நிமல்ஸ்ரீபால டி சில்வா இது குறித்துப் பேசியது: ''இலங்கையில் பல ஆண்டுகளாக நிலவி வரும் தமிழர் பிரச்னையைத் தீர்க்க, அரசியல் அதிகாரப் பகிர்வு செய்து கொள்ளப்படமாட்டாது. அந்த வாய்ப்பை இலங்கை அரசு என்றுமே அளிக்காது. எனினும் தமிழர் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது குறித்து பல்வேறு கட்சியினருடன் பேசி அவர்களின் கருத்துகளைக் கேட்டு வருகிறோம். பிரச்னைக்கு நல்ல தீர்வு காணப்படும். அரசியல் அதிகாரப் பகிர்வு திட்டத்தை பெரும்பாலான நாடுகள் ஏற்றுக்கொண்டது இல்லை'' ............. read more  





தமிழக முதல்வர் - இலங்கை உயர்ஸ்தானிகர் சந்திப்பு?

  தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசமும் எதிர்வரும் வாரங்களில் சந்திக்கவுள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

உயர்ஸ்தானிகர் கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பிலிருந்து இந்தியா சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நல்லுறவை ஏற்படுத்தும் முகமாக இலங்கை அரசாங்கமே இதனை ஏற்பாடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழக முதலமைச்சர் சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானங்கள் நாட்டுக்கிடையிலான உறவு மேலான்மையில் சிக்கல்களைத் தோற்றுவித்தாலும் மிகுந்த அவதானத்துடனேயே அவர் இந்தத் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளார் என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருந்த நிலையிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்த படம் ஹெட்லைன்ஸ் டுடே டிவியில்

இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்த படம் ஹெட்லைன்ஸ் டுடே டிவியில்
ஹெட்லைன்ஸ் டுடே டிவியில் இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றங்கள் தொடர்பான "இலங்கையின் கொலைக்களம்" என்ற  டாக்குமென்டரிப் படம் ஒளிபரப்பாகவுள்ளது. நேற்று இரவு முதல் பகுதி ஒளிபரப்பானது. இன்று இரவு 11 மணிக்கு இப்படத்தின் அடுத்த பகுதி ஒளிபரப்பாக உள்ளது. ....... read more  

சமஷ்டி ஆட்சி முறைமைக்கு இடமில்லை – அரசாங்கம் :

சமஷ்டி ஆட்சி முறைமைக்கு இடமில்லை – அரசாங்கம் :
இலங்கையில் சமஷ்டி ஆட்சி முறைமைக்கு இடமில்லை என அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றில் தெரிவித்த கருத்துக்கு, அவைத் தலைவர் என்ற ரீதியில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா பதிலளித்துள்ளார்.
 
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டமாக சமஷ்டி ஆட்சிமுறைமையை அரசாங்கம் ஒருபோதும் முன்வைக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.............. read more  

இலங்கை போர்குற்ற ஐநா ஆவணத்திற்கு எதிராக 22நாடுகள் கொந்தளிப்பு -பீரிஸ் முழக்கம் ..!


இலங்கை போர்குற்ற ஐநா ஆவணத்திற்கு எதிராக 22நாடுகள் கொந்தளிப்பு -பீரிஸ் முழக்கம் ..!       


இலங்கை அரசு புரிந்த மனித உரிமை மீறல் தமிழின அழிப்பு படுகொலை ஆவணத்திற்கு எதிராக இருபத்தி இரண்டு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக இலங்கை பாராளுமன்றில் அந்த நாட்டின்  வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார் .
 
உண்மைக்கும் மானிட நேயத்திற்கும் எதிரான ஐநாவின் குற்ற சாட்டுக்களை இலங்கை
எதிர்த்துள்ள நிலையில் தற்போது தமது நிலைக்கு ஏற்ப இருபத்தி இரண்டு நாடுகள்
ஆதராவாக செயல் பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்............... read more  

Thursday, 7 July 2011

கை கால் இழந்து கண்ணீரில் தவிக்கும் பெண் போராளிகள் ..!video பார்த்தல் அழுகை வரும்


கை கால் இழந்து கண்ணீரில் தவிக்கும் பெண் போராளிகள் ..!video பார்த்தல் அழுகை வரும்       

வவுனியா  பம்பை மடு மற்றும் பூசா முகாம்களில் தடுத்து வைக்க 
பட்டு விடுதலை செய்ய பட்டுள்ள முன்னாள் போராளிகளின் சோக கதை இது .


கை கால் இழந்த நிலையில் உறவுகளினால் கைவிடப்பட்டு மிக மனவிரக்தியில்
பார்பார் யாருமற்று வாழும் இந்த தேச புதல்வர்களிற்கு  எம் தேசத்தில் உதவி செய்ய இன்று யாருமில்லை.............. read more  

இலங்கைப் போர்க்குற்ற விவகாரத்தில் நோர்வே அதீத அமைதி காப்பது ஏன்?

இலங்கை தொடர்பாக அதீத அமைதியைக் கடைப் பிடிக்கும் தெரிவினை நோர்வே கொண்டுள்ளது. இவ்வாறு நோர்வேயின் Aftenposten நாளிதழில் வெளிவந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொடர்பாக அதீத அமைதியைக் கடைப் பிடிக்கும் தெரிவினை நோர்வே கொண்டுள்ளது. சனல் 4இன் 'இலங்கையின் கொலைக் களங்கள்' ஆவணப்படம் முதன்முதலில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் காண்பிக்கப்பட்ட போது, நோர்வேஜிய இராஜதந்திரிகள் அங்கு பிரசன்னமாகி இருந்தனர். ஆனால் அதனைத் தொடர்ந்து சிறிலங்கா விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் பிரித்தானிய அரசாங்கங்கள் குரல் எழுப்பின. நோர்வே அசையவேயில்லை............ read more  

தென்சூடான் குடியரசு பூமிப்பந்தில் உருவெடுத்த புத்தம் புதிய நாடு! தமிழரின் வாழ்த்துக்கள்!

எதிர்வரும் யூலை 09 ஆம் நாள் தென் சூடான் குடியரசு என்ற ஒரு புதிய நாடு பிறக்கவுள்ளது. இலடச்சக் கணக்கான தென் சூடானிய மக்கள் அதன் பிறப்பைக் கொண்டாட இருக்கிறார்கள். தென் சூடானின் தலைநகரம் யுபா (Juba) விழாக் கோலம் பூண்டுள்ளது. தென் சூடான் அடக்குமுறைக்கு எதிராகப் பல ஆண்டுகள் போராடி வந்துள்ளது. ஆபிரிக்காவின் எண்ணெய் வளமிக்க நாடான சூடானுக்கு 1956 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தது. 1989 ஆம் ஆண்டு நடந்த இராணுவப் புரட்சியை அடுத்து ஒமர் அல் பக்ஷீர் ஆட்சியைப் பிடித்தார்............. read more 

தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் பிறந்த தினத்தை அரசு விழாவாக கொண்டாட முடிவெடுத் தமிழக அரசுக்கு நன்றி – சீமான்

தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் பிறந்த தினத்தை அரசு விழாவாக கொண்டாட முடிவெடுத் தமிழக அரசுக்கு நன்றி – சீமான்

தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் பிறந்த தினத்தை அரசு விழாவாக கொண்டாட முடிவெடுத் தமிழக அரசுக்கு நன்றி
நாம் தமிழர் கட்சி சார்பில் அதன் தலைவர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது .
தமிழ்நாட்டில் சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் இழிவு நீங்கவும், அவர்கள் சம உரிமை பெற்று கண்ணியமாக வாழவும் தன் வாழ் நாள் முழுவதும் போராடிய சமூகப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாளை தமிழக அரசு விழாவாக நடத்தும் என்று அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.சாதியம் தமிழ் மக்களின் சமூக வாழ்வை சீரழிக்கும் கொடுமையான வழக்கமாக இன்று வரை நீடித்து வருகிறது.

கவிஞர் இரா .இரவி கவிதைகள் ,ஹைக்கூ படித்து மகிழுங்கள்

www.tamilauthors.com இணையத்தில் கவிஞர் இரா .இரவி கவிதைகள் ,ஹைக்கூ படித்து மகிழுங்கள்

ஒளவையே இங்கு கொடியது எது? பண்ணைப் பாலம் படும்பாடு தானே!

ஒளவையே இங்கு கொடியது எது? பண்ணைப் பாலம் படும்பாடு தானே! 


ஒளவைப் பாட்டியைச் சந்தித்த முருகன் ஔவையே கொடியது எது என்று ஒரு கேள்வியைக் கேட்கின்றார்.

அதற்கு ஔவையாரோ கொடியது கேட்கின்... என நீண்டதொரு பாடலைப் பாடி முடிக்கின்றார். பாடலின் இடையே முருகனின் கேள்விகளும் உண்டு. தமிழ் வளர்த்த மூதாட்டி ஔவை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தால், ஔவையே! இலங்கையில் கொடியது எது என்று ஒரு கேள்வியை முன்வைத்தால், ஔவையார் நீண்ட தொரு பாடலைப் பாடி முடிப்பார்.

ஔவையார் பாடி முடிக்கின்ற அந்தப் பாடல் வரிகள் எப்படி இருக்கும். இப்படி ஒரு சிந்தனை...


  •  “கொடிது கொடிது அழகிய இலங்காபுரி சிங்கள பெளத்தத்திடம் சிக்கியது கொடிது. அதனிலும் கொடிது ஈழத்தமிழர் வாழ்வு. 
  • அஃதிலும் கொடிது வன்னி மக்கள் அவலம். அதனிலும் கடும் கொடிது சிறைகளில் வாடும் தமிழ் இளைஞர் துயரம். 
  • இதனிலும் கொடிது... கொடிது பண்ணைப் பாலம் படும்பாடு தானே!” இப்படி அவரின் பாடல் வரிகள் அமைந் திருக்கும்........... read more  

ஒலிம்பிக்கில் சாதனை படைத்து உலகிற்கு உதாரணமான துஷ்யந்தன்

ஒலிம்பிக்கில் சாதனை படைத்து உலகிற்கு உதாரணமான துஷ்யந்தன் 


கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் நகரில் நடந்த விசேட தேவையுடையவர்களுக்கான ஒலிம்பிக் போட்டியில் யாழ்ப்பாணம் சிவபூமி பாடசாலையின் மாணவன் செல்வன் சிவராஜா துஷ்யந்தன் வெள்ளிப்பதக்கம் பெற்றுச் சாதனை படைத்த செய்தி தமிழ்கூறும் நல்லுலகைப் பெருமைப் படுத்தியுள்ளது.

மாற்றுவலுவுடைய மாணவன் துஷ்யந்தன் ஏதென்ஸ் நகரில் கால்பதித்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வெள்ளிப்பதக்கத்தை பெற்றமை யாழ்ப்பாண மண்ணிற்கு மட்டுமன்றி இலங்கைத் தீவுக்கே பெருமை சேர்ப்பதாகும்.

மாணவன் துஷ்யந்தனின் இச்சாதனை சாதாரணமானதன்று............. read more 

இராணுவம் தடையாக இருந்தால் ஜனநாயக வழியில் போராடுவோம்-கூட்டமைப்பு எச்சரிக்கை

ஜனநாயக முறையிலான தேர்தலுக்கு இராணுவத்தினர் தடையாக இருப்பார்களாயின் ஜனநாயக வழியில் போராட தயாராக இருக்கிறோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். 
நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,தற்போது தேர்தல் காலமாகும். இதனால் தென்னிலங்கையில் இருந்து வருகைதந்த அமைச்சர்களில் சிலர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிக்குரிய கட்சி என்கின்றனர்............. read more  

புலம்பெயர்ந்த மக்கள் நடத்திய ஆர்பட்டங்களின் காணொளி மற்றும் புகைப்படங்களை இலங்கை அரசிடம்


எமது தாயாக விடியலுக்க எமது மக்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் உணர்வு புர்வமாக பல போராட்டங்களை முன் எடுத்து அதை உலக நாடுகளிற்கும் தெரியபடுத்தி வந்தமை யாவரும் அறிந்ததே இவர போராட்டங்கள் இனவெறி இலங்கை அரசுக்கு பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியதி . குறிப்பாக  ஜி.ஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை  கடந்த வருடம்   ஓகஸ்ட் மாதம் முதல் இடைநிறுத்துவதென ஐரோப்பிய சங்கம்   முடிவு செய்தது .இலங்கை அரசின் மேல் போர்குற்ற விசாரணைகள் நடத்தவும் இவறன ஆர்பாட்டங்கள் வலுச்சேர்த்தன .
இந்த நிலையில் தற்போது இலங்கை அரசுடன் சில புலம்பெயர்ந்த அமைப்புக்களும் சில தேச விரோத கும்பல்களும்   இலங்கை அரசுடன் சேர்ந்து எமது புலம்பெயர்ந்த மக்கள் நடத்திய ஆர்பட்டங்களின் காணொளி மற்றும் புகைப்படங்களை  இலங்கை அரசிடம் கையளிக்க பட்டுள்ளது . இதில் யார் யார் முன் நின்று நடத்தியவர்கள் என்று அறிந்து அவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்த இலங்கை அரசு முடிவு செய்துள்ளது ................ read more

வன்னி யுத்தத்தில் ஒரு இலட்சம் மக்கள் கொல்லப்பட்டமை உறுதி! – போல் நியூமன்


வன்னியில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தில் ஒரு லட்சம் வரையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளமை ஐ.நா. அறிக்கை மற்றும் சர்வதேச செஞ்சிலுவைக் குழு ஆகியன வெளியிட்ட அறிக்கைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாக இந்திய பேராசிரியர் போல் நியூமன் தெரிவித்துள்ளார்.
ரைம்ஸ் ஒப் இந்தியா என்ற ஊடகத்திற்கு வழங்கிய தகவல் ஒன்றில் இந்தியாவின் பெங்களூர் பல்கலைக்கழகத்தின் அரசறிவியற்துறைப் பேராசிரியர் போல் நியூமன் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்................read more 

இறுதி யுத்தத்தின் போது அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர் -நாடாளுமன்றில் லக்ஷ்மன் கிரியயல்ல!

இறுதி யுத்தத்தின் போது அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர் -நாடாளுமன்றில் லக்ஷ்மன் கிரியயல்ல!

இறுதி யுத்தத்தின் போது அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். ஆனால் அரசு அதை மறுத்து வருகின்றது.  அப்பாவி மக்கள் கொல்லப்பட்டமை உறுதி.ஆனால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை எம்மிடம் இல்லை.இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியயல்ல நேற்றுத் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கில் தற்போது நிலவுகின்ற நிலைவரம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று நாடாளுமன்றில் ஒத்திவைப்புவேளை பிரேரணை ஒன்றைக் கொண்டுவந்தார்.
இந்தப் பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றியபோதே லக்ஷ்மன் கிரியயல்ல எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்............... read more

வடக்கில் மாத்திரம் 5 இலட்சத்து 36,000 விதவைகள்!

யுத்தம் மற்றும் காரணங்களினால் இலங்கையில் 5 இலட்சத்து 3684 பேர் விதவைகளாகியுள்ளனர். இவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் சுயதொழில் வாய்ப்புகள் வழங்கவும் உதவிகள் வழங்கவும் பல்வேறு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு இந்த வருடத்தில் 4 கோடி 50 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
வாய்மூல விடைக்காக சிறுவர் அபிவிருத்தி மகளிர் மேம்பாட்டு அமைச்சரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் சார்பாக பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது, மேல் மாகாணத்தில் ஒரு இலட்சத்து 30,018 விதவைகளும் மத்திய மாகாணத்தில் 65,880 விதவைகளும் ஊவா மாகாணத்தில் 33,531 பேரும் சப்ரகமுவ மாகாணத்தில் 45,989 பேரும் தென் மாகாணத்தில் 58,221 பேரும் வட மேல் மாகாணத்தில் 74,005 பேரும் வட மத்திய மாகாணத்தில் 36,539 விதவைகளும் உள்ளனர்.

பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியாம் பொக்ஸ் இலங்கை

பிரித்தானியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் லியாம் பொக்ஸ் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு எதிர்வரும் சனிக்கிழமை இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியாம் பொக்ஸ் எதிர்வரும் சனிக்கிழமையன்று இலங்கை வருவது இதுவரை உறுதிபடுத்தப்படவில்லை என்றும் எவ்வாறெனினும் அன்றைய தினம் அவரின் விஜயம் இடம்பெறுவதற்கு அதிகளவில் சாத்தியம் உள்ளதாக வெளிவிவகார அமைச்சின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார்............ read more   

'இலங்கையின் கொலைக்களம்' காணொளி குறித்து கருத்து கூற தயாராகும் தமிழக முதல்வர்

ஹெட்லைன் டுடே என்ற தொலைக்காட்சி ஆங்கில மொழி ஒளிபரப்பை மேற்கொண்டு வரும் நிலையில், அந்த தொலைக்காட்சி நிறுவனம் அமெரிக்கா, பிரித்தானிய ஆகிய நாடுகளில் இயங்கும் இலத்திரனியல், அச்சு ஊடகத் தகவல்களை வெகுவாக ஒளிபரப்பி வரும் தொலைக்காட்சி சேவையாகும்.

செனல் 4 நிறுவனம் வெளியிட்ட கொலைக் களம் ஆவணத் திரைப்படம் குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக தமிழக முதலமைச்சர் கருத்து தெரிவிக்கும் பட்சத்தில் அது பாரிய அரசியல் நெருக்கடிகளை ஏற்படுத்தக் கூடும் என்பதால், அதனைத் தடுத்து நிறுத்தும் முயற்சிகளை இந்தியாவிற்கான இலங்கைத் தூதரகம் மேற்கொண்டு வருகிறது.............. read more

இலங்கை தமிழர்களுக்கான இயகத்தில் சேர நெடுமாறன் அழைப்பு

இலங்கை தமிழர்களுக்கான இயகத்தில் சேர

 நெடுமாறன் அழைப்பு

மதுரை: இலங்கை அதிபர் ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாளை (8-ம் தேதி) நடைபெறவுள்ள இயக்கத்தில் தமிழர்கள் அனைவரும் சேர வேண்டும் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி்யுள்ளதாவது,

ஈழத்தில் தமிழர்களை கொத்து கொத்தாக படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சே ஒரு போர்க் குற்றவாளி என ஐ.நா. விசாரணைக் குழு அறிவித்துள்ளது............ read more 

தமிழ் அறிஞர் சிவதம்பி மறைவு‌க்கு கருணாநிதி இரங்கல்

தமிழ் அறிஞர் சிவதம்பி மறைவு‌க்கு கருணாநிதி இரங்கல்
'பேராசிரியர் சிவதம்பியின் மறைவு தமிழஉலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்'' எ‌ன்று ி.ு.க. தலைவர் கருணாநிதி இர‌ங்க‌ல் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்இரங்கல் செய்தியில், பேராசிரியரகார்த்திகேசு சிவதம்பியின் மறைவு செய்திஅதிர்ச்சியை தந்தது. 79 வயதான பேராசிரியரசிவதம்பி கடந்த சில நாட்களாகவே உடலநலிவுற்றிருந்து நேற்றிரவமறைந்திருக்கிறார்.............. read more 

40 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட மாபெரும் தமிழர் கூட்டம் !

உலகத் தமிழர் பேரவை நேற்று முன்தினம் நடாத்திய கொள்கை விளக்க கூட்டத்துக்கு சுமார் 40 பிரித்தானிய பாராளுமனற உறுப்பினர்கள் வந்து கலந்துகொண்டனர். பிரித்தானிய பாராளுமன்றச் செயலாளரும் காமன்வெலத் நாட்டின் பிரித்தானியச் செயலாளருமான அலஸ்டபேட் அவர்கள் உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரபுக்கள், காமன்வெலத் பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனத்தினர், ஊடகவியலாளர்கள் தமிழ் புத்திஜீவிகள் மற்றும் தேசிய செயல்பாட்டாளர்கள் எனப் பலர் இதில் கலந்துகொண்டனர். மாலை 7.00 மணிக்கு பாராளுமன்ற வளாகத்துக்கு முன்பாக இருந்த கட்டடத்தில் இந் நிகழ்வுகள் ஆரம்பமாகின. இக் கூட்டத்துக்கு லீஸ்கொட் எம்.பி தலைமைதாங்கினார். அவரோடு சோபி மக்டொனாவும் கலந்துகொண்டார். முதலில் பேசிய அலஸ்ட பேட் எம்.பி இலங்கையில் தீர்வுத் திட்டம் ஒன்றை ஏன் கொண்டுவரவேண்டும் எனச் சுட்டிக்காட்டி பேசியிருந்தார்............ read more  

பிரதமர் உருதிரகுமாரனின் வரலாற்று சிறப்பு மிக்க உரை !

பிரதமர் உருதிரகுமாரனின் வரலாற்று சிறப்பு மிக்க உரை !

அனைவருக்கும் வணக்கம் !

தமிழீழ விடுதலை போராட்டத்தை நேசிக்கும் ஒவ்வொரு தமிழனும் கேட்டு புரிந்து கொள்ள வேண்டிய ஒரு பேச்சு 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் அவர்களின் உணர்ச்சி மிகுந்த பேச்சு சகல நெஞ்சங்களையும் பெட்னா அரங்கில் மட்டுமல்ல உலகெங்கும் வாழும் தமிழர்களின் உணர்வை தட்டி எழுயுள்ளது

ஈழத் தமிழருக்கு ஆதரவு தெரிவிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இயக்கத்தில் பங்கேற்பீர் – சீமான்.

ஈழத் தமிழருக்கு ஆதரவு தெரிவிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இயக்கத்தில் பங்கேற்பீர் – சீமான்.

ஈழத் தமிழருக்கு ஆதரவு தெரிவிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கை.
ஈழத் தமிழருக்கு ஆதரவு தெரிவிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இயக்கத்தில் பங்கேற்பீர் – சீமான் 
ஈழத் தமிழர்களை இனப் படுகொலை செய்த சிறிலங்க அரசு போர்க் குற்றம் புரிந்துள்ளது, தமிழர்களுக்கு எதிராக மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைப் புரிந்துள்ளது என்று ஐ.நா.பொதுச் செயலர் அமைத்த நிபுணர் குழு அளித்துள்ள அறிக்கையின் அடிப்படையில் சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியும், இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடையை இந்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று கோரி தமிழக சட்டப் பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும் இந்தியா முழுவதும் ஜூலை 8 வெள்ளிக்கிழமையன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்தவுள்ள ஈழத் தமிழர் ஆதரவு இயக்கத்தில் தமிழர்கள் அனைவரும் முழுமையாகப் பங்கேற்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

ஈழத் தமிழ் அகதிகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக தமிழக மறுவாழ்வுத்துறை அமைச்சருடன் ஈ.என்.டி.எல்.எப். உயர்மட்டக்குழு சந்திப்பு!

ஈழத் தமிழ் அகதிகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக தமிழக மறுவாழ்வுத்துறை அமைச்சருடன் ஈ.என்.டி.எல்.எப். உயர்மட்டக்குழு சந்திப்பு!

தமிழகத்தில் வாழும் ஈழத் தமிழ் அகதிகள் சார்பாக இன்று (07-07-2011) வியாழக்கிழமை மதியம் 2:00 மணியளவில் தமிழக மறுவாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு. மொகமட் ஜான் அவர்களை தலைமைச் செயலகத்தில் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.) யின் உயர்மட்டக்குழு ஒன்று சந்தித்தது.

இந்தச் சந்திப்பில் ஈ.என்.டி.எல்.எப். சார்பாக கூடுதல் பொதுச்செயலாளர். உயர்திரு. ஞா.ஞானராஜா அவர்களும், துணைப் பொதுச் செயலாளர். சீ. வசீகரன் அவர்களும், மற்றும் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் மூத்த செயற்குழு உறுப்பினருமான திரு. மங்களராஜா அவர்களும் கலந்துகொண்டனர்.

TAMIL APPG AND GLOBAL TAMIL FORUM PARLIAMENTARY RECEPTION RALLIES SUPPORT FOR TRUTH AND JUSTICE IN SRI LANKA

PRESS STATEMENT and VIDEO
July 6th 2011

TAMIL APPG AND GLOBAL TAMIL FORUM PARLIAMENTARY RECEPTION RALLIES SUPPORT FOR TRUTH AND JUSTICE IN SRI LANKA

A packed reception in the British Parliament on July 5th highlighted the level of support amongst parliamentarians and key decision-makers for truth, accountability and justice in Sri Lanka.

Hosted by Hon. Lee Scott MP and Hon. Siobhain McDonagh MP, Chair and Vice-Chair of the All Party Parliamentary Group for Tamils (APPG – T), and facilitated by the Global Tamil Forum (GTF), the event was attended by over 40 Members of Parliament including Government Ministers, Shadow Ministers, MPs and Lords. A number of representatives from leading NGOs, Embassies and High Commissions in London, as well as British, Tamil, Sinhala and Indian media organisations were also in attendance. Many senior figures from the Tamil community in the UK and around the world were present also.

“அவன நான் சுட்டுத் தள்ளணும்…” – ஒரு தாயின் கோபம்!

அழுகையில்லை, ஆற்றாமையில்லை, பரிதவிப்பில்லை, தழுதழுப்பில்லை. குரலில் எந்தளவுக்கு அழுத்தம் தர முடியுமோ அந்தளவுக்கு அழுத்தமாக இதைக் குறிப்பிட்டுவிட்டு தன் கண்களை மூடிக் கொண்டார் கலைவாணி. தில்சனின் அம்மா என்றால் சட்டென்று புரிந்துவிடும். தினமும் தில்சன் அமர்ந்து டிவி பார்க்கும் இடத்திலிருந்துதான் கலைவாணி இதைச் சொன்னார் என்றதும் அவரது வார்த்தைகளில் இருந்த வலியை உணர முடியும்............ read more  

ஓற்றைத்தோட்டாவுக்குள் ஒளிந்திருந்த வன்மம் - ச.ச.முத்து


சென்னைதீவுத்திடல்.பொருட்காட்சிநேரங்களில் அலைமோதும் மக்கள்கூட்டம். மற்றநேரங்களில் மாடுகள்மேய்ந்துகொண்டிருக்கும் சதுப்புநிலம்.அதற்கு அருகில் சேரியும் வறுமைக்கோட்டுக்கு கீழேவாழும் மக்களும் வசிக்கிறார்கள்............... read more  

கைதிகளைப் பார்க்கச் செல்வோர் மீதும் பாலியல் பலாத்காரம் !

வெலிக்கடை, மகசின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிட செல்லும் உறவினர்கள் சிறைக் காவலர்கள் மற்றும் உயர் அதிகாரிகளினால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. கைதிகளின் பெண் சகோதரர்கள் அல்லது மனைவிமார் பார்வையிட செல்லும் போது இரவுவேளைகளில் அதிகாரிகளினால் கூறப்படுகின்ற வேறு சில இடங்களில் குறிப்பிட்ட சில நாட்கள் தங்க வேண்டும் என்றும் அதன் பின்னர் தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவினர்களை பார்வையிடலாம் என அச்சறுத்தப்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்............. read more    

Wednesday, 6 July 2011

London Lewisham Sivan Temple Oil Bath 11.06.2011


London Lewisham Sivan Temple Oil Bath 11.06.2011




London Lewisham Sivan Temple Oil Bath 11.06.2011

FULL VIDEO : Ealing Thurkkai Amman Kumbabishekam 6.06.2011


FULL VIDEO : Ealing Thurkkai Amman Kumbabishekam 6.06.2011 



FULL  VIDEO : Ealing Thurkkai Amman Temple 

 Kumbabishekam 6.06.2011 

இலங்கை அரசு மீது போர்க் குற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி டில்லியில் பட்டினிப் போராட்டம் உலகத் தமிழ்ப் பேரவை அமைப்புகள் ஏற்பாடு.

இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ மீது போர்க்குற்றம் தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி உலக தமிழ் பேரவை அமைப்புக்களின் ஏற்பாட்டில் எதிர்வரும் 28 ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை டில்லியில் பட்டினிப் போராட்டம் நடைபெறவுள்ளது......................  read more   

13ம் திருத்தச்சட்டத்தை அமுல்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் : இந்தியா

13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டியது இலங்கை அரசாங்கத்தின் கடமையாகும் என இந்தியா அறிவித்துள்ளது.
இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய போதியளவு விளக்கத்துடன் இருப்பதாகவும், உள்விவகாரங்களில் தலையீடு செய்யப் போவதில்லை எனவும் இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் மாலைதீவு ஊடகவியலாளர்களுடன் டெல்லியில் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்......................... read more   

அவசரகாலச் சட்டத்தை நீக்க முடியாது - சிறிலங்கா அரசாங்கம்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிக்கும் தரப்பினர் தொடர்ந்தும் இயங்கி வருவதனால் அவசரகாலச் சட்டத்தை ரத்து செய்ய முடியவில்லை என சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பிரதி அமைச்சர் நிர்மல கொதலாவல சிங்கள ஊடகம் ஒன்றுக்கு  தெரிவிக்கையில்:-
போர் காரணமாகவே அவசரகாலச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் தற்போது நாட்டில் போர் நிறைவடைந்துள்ளதனால் சட்டத்தின் சில சரத்துக்களை மட்டும் நீக்கிவிட முடியும் என தெரிவித்துள்ளார்.................  read more   

பேராசிரியர் கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி காலமானார்!

இலங்கையின் மூத்த பேராசிரியர் கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி நேற்று (புதன்கிழமை) இரவு காலமானார். அண்மைக்காலமாக சுகவீனம் அடைந்திருந்த அவர், இருதயம் செயலிழந்த நிலையில் நேற்று தனது 79 வது வயதில் காலமானர்............  read more   

இதுக்கு மேல வாங்கறதுக்கு மதிப்பெண்கள் இருக்கா!!!..

கொஞ்ச நாளைக்கு முன்னாடி,.. 'F.A.L.T.U' அப்டீன்னு ஒரு இந்திப்படம் வந்துது. இந்தப்படம் நிறைய கேள்விகளை பொதுமக்கள் மனசுல எழுப்பியது.


 படத்தோட கதை என்னன்னா, பரீட்சையில குறைச்சலான சதவீதத்துல தேறின நாலஞ்சு மாணவர்களுக்கு, மேல்படிப்புக்கு எந்தக்காலேஜுலயும் இடம் கிடைக்கலை. அப்பா,அம்மாவோ கரிச்சுக்கொட்டறாங்க. அந்த நண்பர்கள் குழுவில் உள்ள ஒரு பெண்ணுக்கு, அவங்க வீட்ல கல்யாண ஏற்பாடுகள் ஆரம்பிச்சுடறாங்க.


 படிக்கிறதுங்கறது அறிவைப்பெருக்கும் ஒரு இனிய அனுபவமா இருக்கணுமேதவிர, பசங்களை மனப்பாட்டம் பண்ணும் இயந்திரங்களா மாத்தறதா இருக்கக்கூடாது. 'கொடியசைந்ததும் காற்று வந்ததா.. காற்று வந்ததும் கொடியசைந்ததா'ங்கற மாதிரி, இதுவும் அவ்வளவு எளிதா முடிவு செய்யப்பட முடியாமலேயே இருக்கு............... read more   

எங்கள் மொத்த குடும்பமுமே தற்கொலை செய்கிற எண்ணத்தில் மன உளைச்சலில் இருக்கின்றோம்.


(2ம் இணைப்பு) எங்கள் மொத்த குடும்பமுமே தற்கொலை செய்கிற எண்ணத்தில் மன உளைச்சலில் இருக்கின்றோம்.
[ 2011-07-06 07:26:25 | வாசித்தோர் : 1367 ]

நீங்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சில இணையத்தளத்தில் செய்திப்பக்கத்தில் போட்டிருந்த யாழ் யுவதி( கந்தையா தர்ஷனா ) பற்றிய செய்தி சம்பந்தமாக அறிந்திருப்பீர்கள். அந்த யுவதியின் அண்ணன் என்ற வகையில் சில முக்கிய விடயங்களை பகிர்ந்துகிள்ள நினைக்கிறேன்.