Translate

Thursday, 19 April 2012

இந்திய பாராளுமன்றின் விருப்பு வெறுப்புக்களை நிறைவேற்ற வேண்டியதில்லை – ஒமல்பே சோபித தேரர்


இந்திய பாராளுமன்றின் விருப்பு வெறுப்புக்களை நிறைவேற்ற வேண்டியதில்லை – ஒமல்பே சோபித தேரர்
 இந்திய பாராளுமன்றின் விருப்பு வெறுப்புக்களை நிறைவேற்ற வேண்டிய அவசியம் கிடையாது என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

ந்திய செய்திகள் முன்னாள் போராளியான மாணவியைக் கொன்றது யாழ்.பல்கலைக்கழகம்? வெளியில் தெரியாதவை!


வெறும் தற்கொலை என்று மட்டுமே அனைத்து ஊடகங்களும், உயிரிழப்புடன் சம்பந்தப்பட்டவர்களும் முடித்து விட்ட யாழ் பல்கலைக்கழக மாணவியின் கொலை தொடர்பாகப் பல திடுக்கிடும் விடயங்கள் கிடைத்துள்ளது. 

முள்ளிவாய்க்காலில் தப்பி வந்த போதும் யாழ் பல்கலைக்கழகத்தின் இரக்கமற்ற மனங்களில் இருந்து தப்பிவிட முடியவில்லை என்ற நிலைதான் அனேக வன்னி மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. 

அதிகாரப் பகிர்வு மலையக தமிழர்கள் வாழும் பிரதேசங்களுக்கும் விஸ்தரிக்கப்படல் வேண்டும்: மனோ _


  நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த இலங்கைக்கு வலியுறுத்த வேண்டிய கடப்பாடு இந்தியாவிற்கு உள்ளது.

அதேபோன்று அதிகாரப் பகிர்வை வடக்கு கிழக்கிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தாமல் மலையக தமிழர்கள் வாழும் பிரதேசங்களுக்கும் விஸ்தரிக்க வேண்டுமென்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் இந்திய சர்வகட்சி பாராளுமன்ற குழுவினரிடம் வலியுறுத்திக் கூறியுள்ளார். 

சீனாவில் 1500 ஆண்டுகள் பழைமையான 3000 புத்தர் சிலைகள் கண்டுபிடிப்பு _


  சீனாவின் தென்கிழக்கு மாகாணத்தின் ஹென்டன் பகுதியில் சுமார் 1500 வருடங்கள் பழைமையானவை என ஊகிக்கப்படும் மூவாயிரம் புத்தர் சிலைகள் அகழ்வாராய்ச்சியின்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அந்நாட்டில் மிகப்பாரியளவு செயற்திட்டமாக இந்த அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

மூன்றாம் தரப்பு இல்லாமல் தமிழர்களுக்குத் தீர்வு சாத்தியமா? - தாயகத்தில் இருந்து இளங்கீரன்


ஈழத்தமிழரின் அரசியல் தீர்வுப் பிரச்சினைக்கு மூன்றாம் தரப்பின் மத்தியஸ்த்தம் தேவையில்லை என அண்மையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் தெரிவித்திருக்கின்றார். இந்த விடயம் ஈழத்திலும் சரி புலத்திலும் சரி எந்தவிதமான அதிரிவலைகளையும் உருவாக்கி விட்டிருக்கவில்லை என்றே எண்ணத் தோன்றுகின்றது.

ஈழத் தமிழர் மீது கொண்ட அக்கறையினாலேயே ஜெனிவாத் தீர்மானத்தை ஆதரித்தது இந்தியா யாழ்ப்பாணத்தில் சுஷ்மா சுவராஜ் தெரிவிப்பு


ஈழத் தமிழர் மீது கொண்ட அக்கறையினாலேயே ஜெனிவாத் தீர்மானத்தை ஆதரித்தது இந்தியா  யாழ்ப்பாணத்தில் சுஷ்மா சுவராஜ் தெரிவிப்பு
news
இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை குறித்தும் அதற்கு அரசியல் தீர்வுகாணப்பட வேண்டும் என்ற அக்கறையினாலுமே ஜெனிவாத் தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்தது என்று தெரிவித்தார் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சுஷ்மா சுவராஜ்.

இலங்கை தமிழர்களின் பிரச்சினை முழு இந்தியாவின் பிரச்சினை!

இலங்கை தமிழர்களின் பிரச்சினை முழு இந்தியாவின் பிரச்சினை! 


இலங்கை தமிழர்களின் பிரச்சினைகள் தமிழகத்தின் பிரச்சினை மாத்திரம் இன்றி,முழு இந்தியாவினுடையதுமான பிரச்சினை என இந்திய எதிர்கட்சியான பாரதீய ஜனதா கட்சி அறிவித்துள்ளது. பாரதீய ஜனாதா கட்சியின் தேசிய பொது செயலாளர் பி.முரளிதர ராவ் தெரிவித்துள்ளார். 

யாழில் இராணுவம் முற்றாக வாபஸ் பெறப்பட வேண்டும்!


சுஷ்மா சுவராஜ் தலைமையில் இலங்கை வந்துள்ள இந்திய எம்.பி.க்கள் குழு  இலங்கை அரசும் அதிகாரிகளும்இராணுவமும் முன்கூட்டி ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே  அழைத்துச் செல்லப்படுகிறது. இலங்கை மந்திரிகள்பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த பின்பு யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பகுதிகளுக்கு எம்.பி.க்கள் குழுவினர் அழைத்துச் செல்லப்பட்டனர்.  யாழ்ப்பாணத்தில் மனித உரிமை அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் உள்ளூர் எம்.பி.க்கள்அரசியல் பிரதிநிதிகள் இந்திய எம்.பி.க்கள் குழுவை சந்தித்தனர். 

தேசத்தின் தாயை நினைவில் ஏந்துவோம்.


A3_AananthaPuram900tnrf220412ukஓப்பற்ற தியாகி அன்னை பூபதி, இனஇருப்பிற்காக நீதிகேட்டுப் போராடி தன் உயிரை அர்ப்பணித்து இருபத்தி நான்கு ஆண்டுகள் கரைந்து மறைந்து போயின என்றாலும், அப்பழுக்கில்லாத அந்த வீரத்தாயின் நினைவுகள் எப்போதும் ஈரமாகவும் உயிர்த்துடிப்புடனுமேயே எம் உள்ளங்களில் தங்கியிருக்கின்றன.இனத்தை அழிவின் மேகங்கள் சூழ்ந்து, அச்சமூட்டிக்கொண்டிருந்த பொழுதுகளில், தமிழீழத் தாயின் எழுச்சியின் வடிவமாக, தியாகத்தின் திருவுருவாக, தன் உயிரை முன்னிறுத்தி நீதி கேட்டுப் போராடிய வீரத்தாய் அவர்.

தமிழீழத்தின் வீரத்தாய் அன்னை பூபதி


சித்திரை 19 ம் நாள், அன்னை பூபதி நினைவு நாள். இந்நாளில் அன்னை பூபதி அவர்களுக்கு எமது வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்வோம்.
தமிழீழ விடுதலைப் போராட்டம் பல பரிணாமங்களைப்பெற்றுள்ளது,போர்க்கருவிகளைப்பயன்படுத்தும் நிலையில் விடுதலைப் போராட்டம் மாற்றமடைந்தவேளையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ் மக்களின் விடுதலையையும், பாதுகாப்பையும் தமது தோளில்சுமந்து களத்தில் பயணித்தது. இந்த இலக்குத்தவறாத பயணத்தில் இரண்டாம் கட்ட ஈழப்போர் என்ற நிலையில் இந்தியப் படையினருடான விடுதலைப் போர் அமைந்தது.

யாழ். உண்மை நிலையை அறிய இந்திய குழு அரசாங்க அதிபரை சந்திக்காமல் தடுத்த இலங்கை அரசின் யுக்தி


யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்றக் குழு வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை சந்தித்து உரையாடியுள்ளது. அதேநேரம், மாவட்டத்தின் நிர்வாகத்தை மேற்கொள்ளும் உயரதிகாரியான, மாவட்டச் செயலரை (அரசாங்க அதிபர்) அக்குழு சந்திக்காது எனத் தெரியவருகிறது................  read more 

அழுத்தங்களுக்கு அடி பணிந்து கொள்கைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது – லக்ஸ்மன் யாபா அபேவர்தன


அழுத்தங்களுக்கு அடி பணிந்து கொள்கைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது – லக்ஸ்மன் யாபா அபேவர்தன

அழுத்தங்களுக்கு அடி பணிந்து கொள்கைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என பதில் ஊடக அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 19ம் அமர்வுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மற்றும் ஏனைய அழுத்தங்களினால் அரசாங்கம் கொள்கைகளை மாற்றிக் கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்...............  read more 

சுவிஸ் - ஒஸ்றேலியா - ஒஸ்றேலியா: நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொதுக்கூட்டங்கள்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வௌ;வேறு பொதுக்கூட்டங்கள் சுவிஸ், ஒஸ்றேலியா , ஒஸ்றேலியா ஆகிய நாடுகளில் இடம்பெறவுள்ளதாக தகவற்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஐ.நா மனித உரிமைச் சபைத் தீர்மானம், தமிழர் போராட்டத்தின் நகர்வுகள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் மக்களின் கேள்விகளுக்கான விளக்கங்கள் உட்டப பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக, இப்பொதுக்கூட்டங்கள் இடம்பெறுகின்றதென தெரிவிக்கப்பட்டுள்ளது....................  read more 

சிறிலங்காவின் நிகழ்ச்சி நிரலுக்குள் பயணத்தை மட்டுப்படுத்த வேண்டாம்!


பா.ஜ.க. தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் தமது பயணத்தை ஆரம்பித்துள்ள இந்திய நாடாளுமன்றக் குழுவினர் சிறிலங்கா அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் தங்கள் பயணத்தை மட்டுப்படுத்தாமல் இந்தக் குழுவில் பங்குபற்ற மறுத்த கட்சிகள் தெரிவித்த நியாயமான காரணங்களை புரிந்துகொண்டு, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை நேரடியாக சந்திப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன் அங்கு இடம்பெற்ற கொடிய இனவழிப்பு போரின் சுவடுகளை நேரில் பார்வையிட்டு உண்மை நிலையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல், வெளிவிவகாரத்துறை அமைச்சர் தணிகாசலம் தயாபரன் அவர்கள் கோரியுள்ளார்............... read more

காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் பகிரப்பட வேண்டுமென கூட்டமைப்பு மீண்டும் கோரிக்கை


காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் பகிரப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
மாகாணசபைகளுக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் பகிரப்பட வேண்டுமென கோரியுள்ளது................... read more 

லண்டனில் திடீரெனப் பெய்த பனிக்கட்டி மழையால் ஸ்தம்பிதம் !

லண்டனில் சில பாகங்களில் இன்று மதியம் சுமார் 1.00 மணியளவில், பெனிக்கட்டி மழை பொழிந்து கடுமையாகத் தாக்கியுள்ளது. திடீரெனப் பெய்த இம்மழையால் நெடுஞ்சாலைகள், மற்றும் சாதாரன வீதிகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. பலர் வாகனங்களை ஓடமுடியாது திண்றி, அவற்றை வீதி ஓரங்களில் நிறுத்திவிட்டனர். குறிப்பாக M25 நெடுஞ்சாலையின் சில பகுதிகள் பாரிய வாகன நெரிசலுக்கு உள்ளாகியுள்ளது. மேலும் சில இடங்களில் பெரிய அளவான பனிக்கட்டி மழை பொழிந்ததால் வாகனங்கள் மற்றும் வீட்டுக் கூரைகள் சேதமானதாகவும் அறியப்படுகிறது.............  read more 

ராஜபக்ஷ் விரித்த வலையில்... தினமணி ஆசிரியர் தலையகம்

இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு திங்கட்கிழமை இலங்கை சென்று சேர்ந்தவுடன், மாற்றியமைக்கப்பட்ட பயணத் திட்டத்தை வெளியிடுகிறது, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம். புதிய பயணத் திட்டத்தின்படி, 21-ஆம் திகதி இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ்வுடன் சிற்றுண்டி உண்பதாக இருந்த திட்டம் மாற்றப்பட்டு, 20-ஆம் திகதி மாலை அவரைச் சந்தித்து உரையாடுவதாக மாற்றப்பட்டுள்ளது.........read more

'இந்திய நாடாளுமன்ற குழு திருப்தியடைந்துள்ளது' - இலங்கை அரசாங்க பேச்சாளர்

திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் பங்கேற்காவிட்டாலும், இலங்கை வந்துள்ள இந்திய நாடாளுமன்றக் குழு மிகவும் சிறப்பாகச் செயற்பட்டுள்ளதாக இலங்கை அமைச்சரவைப் பேச்சாளரான, அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்............ read more 

Wednesday, 18 April 2012

சிறிலங்காவுக்கு இந்தியா புகட்டிய அரசியல் பாடம் ! ஜே.எஸ்.திசநாயகம்


இந்தியாவினை பிராந்திய வல்லரசு என்பதனை சிறிலங்கா பெரிது படுத்தாத நிலையிலேயே, சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச் சபை தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க நேர்ந்ததென ஊடகவியலாளர் ஜே.எஸ்.திசநாயக்கம் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் இருந்து வெளியேறி தற்போது அமெரிக்காவில் தங்கியுள்ள ஜே.எஸ்.திசநாயக்கம் அவர்கள் Global Post  பத்திரிகைக்கு எழுதியுள்ள கட்டுரையில் இக்கருத்தினை முன்வைத்துள்ளார்............... read more

அரசியல் தீர்வை விரைவில் எட்ட இந்தியாவின் அழுத்தம் முக்கியம்; சுஷ்மா குழுவிடம் கூட்டமைப்பு எடுத்துரைப்பு

news
 மீளக்குடியமர்ந்த தமிழ் மக்களுக்கு இந்தியா உதவிகளை வழங்குகிறது. ஆனால் அதைவிட முக்கியமான அரசியல் தீர்வு ஒன்றை விரைவில் காண இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுப்பதே அவசரமும் அவசியமுமான தேவையாகும்.
 
 
இவ்வாறு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம் எடுத்துரைத்துள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. பாரதிய ஜனதாக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான குழு நேற்று மாலை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசியது........... read more

இந்தியக் குழுவின் கேள்விகளால் நிலைதடுமாறிய இலங்கை அரசு; நாடாளுமன்றில் நேற்று நடந்த சந்திப்பில் கூட்டமைப்பு, ஐ.தே.க. இணைந்து தாக்குதல்

news
 கொழும்பு வந்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, இலங்கைத் தமிழர் பிரச்சினைத் தீர்வு, நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை நடைமுறைப்படுத்தல் விவகாரம் தொடர்பில் இலங்கைத் தரப்பிடம் சரமாரியாகக் கேள்விக்கணைகளைத் தொடுத்ததால், உரிய முறையில் பதிலளிக்க முடியாமல் திக்குமுக்காடி வாயடைத்து  சங்கடத்துக்குள்ளாகியது இலங்கைத் தரப்பு.............. read more 

இந்தியக்குழு அழுத்தம் தரவில்லை, 13வது திருத்தம் குறித்தும் பேசவில்லை

சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்றக் குழுவினர், தேசியப் பிரச்சினைக்கான அரசியல்தீர்வு மற்றும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சு நடத்தியுள்ளது.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கும், சுஸ்மா சுவராஜ் தலைமையிலான இந்தியக் குழுவுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற இந்தச் சந்திப்பின்போது ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது தொடர்பாக எந்தக் கருத்தும் முன்வைக்கப்படவில்லை.............. read more

தமிழர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: இலங்கை அரசிடம் எம்.பி.க்கள் குழு வலியுறுத்தல்

கொழும்பு, ஏப். 17: ஈழத் தமிழர் பிரச்னைக்கு விரைவில் தீர்வுகாண வேண்டுமென்று இந்திய எம்.பி.க்கள் குழு, இலங்கை அரசிடம் வலியுறுத்தியுள்ளது.
 தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள அரசியல்சாசன சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் எம்.பி.க்கள் குழு இலங்கையிடம் கூறியுள்ளது............... read more 

அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை : இந்திய எம்.பி.க்கள் குழுவிடம் இலங்கைத் தமிழ் மக்கள் புகார்

வவுனியா: இலங்கையில் வவுனியாவுக்கு அருகில் உள்ள முகாம்களில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்று அங்கு பார்வையிடச் சென்ற இந்திய எம்.பி.க்களிடம் இலங்கைத் தமிழ் மக்கள் சரமாரியாக புகார் தெரிவித்துள்ளனர்.தகரக் கூரைகள் பலமான காற்று வீசும் போது பறந்து விடுவதாகவும்,இதனை சரி செய்ய எந்த நடவடிக்கையும் என்றும் சராமாரியாக குற்றம் சாட்டியுள்ளனர்.............. read more 

தன்னிகரற்ற தமிழ்மகன்!

இலங்கை கம்பன் கழகத்தின் 17 -ம் ஆண்டு விழா கொழும்பு ராமகிறுஷ்ண மடத்தில் நடைபெற்றது. கம்பன் கழகத் தலைவர் ஈஸ்வரன் தலைமையில் நடந்த விழாவில் தஞ்சை பல்கலை முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜனுக்கு தன்னிகரற்ற தமிழ்மகன் விருது மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழி வழங்கப்பட்டது. பொற்கிழியை இலங்கை கம்பன் கழகத்துக்கே திருப்பிக் கொடுத்த அவ்வை நடராஜன் அதனை தமிழர் நலனுக்காகப் செலவிடலாம் என்றார். புதுவை கம்பன் கழகத் தலைவர் முருகேசன், மலேசிய அமைச்சர் டத்தோ சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்திய அழுத்தம் தேவை:த தே கூ


மீடியா பிளேயர்
இலங்கைக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்து உரையாடியுள்ளனர்.
நீடித்திருக்கக் கூடிய அரசியல் தீர்வு, வடக்கு கிழக்கில் இராணுவப் பிரசன்னம், நில அபகரிப்பு உட்பட பல விஷயங்கள் பேசப்பட்டதாக சந்திப்பில் கலந்து கொண்ட செல்வம் அடைக்கலநாதன் தமிழோசையிடம் தெரிவித்தார்......................... read more 

மேற்கு நாடுகளின் தூதுவர்கள் கொழும்பு மீது கடும் அதிருப்தி


மேற்குலக நாடுகள் தொடர்பாக இலங்கை அரசு அண்மைக்காலமாக வெளியிட்டு வரும் குற்றச் சாட்டுகள், விமர்சனங்களால் கொழும்பில் உள்ள மேற்குலக நாடுகளின் தூதுவர்கள் இலங்கை அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது................. read more 

மகிந்தவை காக்க வந்துள்ள இந்திய உளவுப்பிரிவுதான் இவர்கள்


மகிந்த அரசைப் பாதுகாக்கவே இந்திய நாடாளுமன்றக்குழு இலங்கை வந்துள்ளது.
ஜெனீவாத் தீர்மானத்தில் எதிராக வாக்களித்தமையினால் கோபமுற்றுள்ள மகிந்த அரசாங்கத்தை ஆற்றுப்படுத்தவும் பாதுகாக்கவும்தான் இந்திய நாடாளுமன்றக்குழு இலங்கை வந்துள்ளது என நவசமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண குற்றஞ்சாட்டியுள்ளார்............... read more 

தமிழருக்கு தலை குனிவு தரும் இந்தியக் குழுவின் பரிதாபமான நிலை


  • சிறீலங்காவிற்கு சென்றுள்ள இந்திய தூதுக்குழு ஓர் உளவுப்பிரிவு என்று சிங்களத் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். 
  • இந்தக் குழுவின் வரவால் எந்தப் பயனும் கிடையாது என்று பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க தெரிவித்துள்ளது.
இந்தக் குழு இலங்கையில் இறங்கியபோது இந்திய தமிழர்களின் ஐந்து வீடுகளை எரித்து தரைமட்டமாக்கி, குற்றத்திற்காக தமிழரையே கைது செய்து சிறையில் போட்டு, அழிவும் தமிழருக்கே – தண்டனையும் தமிழருக்கே நீ செய்வதை செய்துபார் என்று சிங்களம் சவால் விட்டுள்ளது............... read more 

இந்திய குழுவை ஏமாற்ற முல்லைத்தீவு மருத்துவமனையை அவசரமாக சீரமைக்கும் இலங்கை

கொழும்பு: இந்திய எம்.பி.க்கள் குழுவை ஏமாற்ற முல்லைத் தீவில் உள்ள மருத்துவமனையை அந்நாட்டு ராணுவம் அவசர, அவசரமாக சீரமைத்து வருகிறது.

இலங்கையில் உள்ள தமிழர்களின் மறுவாழ்விற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான இந்திய எம்.பி.க்கள் குழு இலங்கை சென்றுள்ளது..................... read more 

இந்தியக் குழுவின் கேள்விகளால் நிலைதடுமாறிய இலங்கை அரசு

கொழும்பு வந்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, இலங்கைத் தமிழர் பிரச்சினைத் தீர்வு, நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை நடைமுறைப்படுத்தல் விவகாரம் தொடர்பில் இலங்கைத் தரப்பிடம் சரமாரியாகக் கேள்விக்கணைகளைத் தொடுத்ததால், உரிய முறையில் பதிலளிக்க முடியாமல் திக்குமுக்காடி வாயடைத்து  சங்கடத்துக்குள்ளாகியது இலங்கைத் தரப்பு............... read more 

தீர்வை புறந்தள்ளிவிட்டு அபிவிருத்திக்கு முன்னுரிமை அளிப்பதில் பயன் எதுவுமில்லை

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை புறந்தள்ளிவிட்டு, வெறுமனே அபிவிருத்திக்கு மாத்திரம் முன்னுரிமை அளிப்பதால் எந்தவித பயனும் ஏற்படப் போவதில்லை. எனவே, சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வைக் காண முன்வர வேண்டும் என்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய எம்.பி.க்கள் குழுவுக்கு தலைமை தாங்கும் இந்திய எதிர்க் கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்................. read more 

மேற்கு நாடுகளின் தூதுவர்கள் கொழும்பு மீது கடும் அதிருப்தி

மேற்குலக நாடுகள் தொடர்பாக இலங்கை அரசு அண்மைக்காலமாக வெளியிட்டு வரும் குற்றச் சாட்டுகள், விமர்சனங்களால் கொழும்பில் உள்ள மேற்குலக நாடுகளின் தூதுவர்கள் இலங்கை அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.............. read more 

அதிகாரம் அற்ற அதிகாரப் பரவலாக்கம் தந்து என்ன பயன்?


இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் உள்ள தமிழ் மக்கள் எவ்விதமான அச்சுறுத்தலுமின்றி, நீடித்திருக்கக் கூடிய ஓர் அரசியல் தீர்வின் மூலம் கண்ணியமாக வாழ
இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது................. read more

தங்கையைக் காப்பாற்ற 70 அடி கிணற்றில் குதித்த 13 வயது அண்ணன் !

சிலாபத்தில் கிணற்றில் விழுந்த தனது தங்கையைக் காப்பாற்ற 13 வயது நிரம்பிய அண்ணன் தானும் குதித்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த 3 தினங்களுக்கு முன்னர் சிலாபத்தில் உள்ள வீடு ஒன்றில் 4 வயது நிரம்பிய சிறுமி ஒருவர் கிணற்றுக்கு அருகில் நின்று குழித்துள்ளார். அவ்வேளை, அவர் தவறுதலாக கிணற்றுக்குள் விழ்ந்துவிட்டார். அருகில் நின்று விளையாடிக்கொண்டு நின்ற 13 வயது நிரம்பிய அண்ணன், கூக்குரல் இட்டு அயலவர்களைக் கூப்பிட முனைந்துள்ளான். ஆனால் எவரும் வரவில்லை. வீட்டில் அப்பா அம்மா யாரும் இருக்கவும் இல்லை. தனது இடுப்பில் கயிறைக் கட்டிக்கொண்டு, அதன் முடிவை எடுத்து ஒரு மரத்தில் கட்டிவிட்டு 70 அடி ஆழமான கிணற்றில் குதித்துள்ளான் 13 வயதேயான அச்சிறுவன்.................. read more

கருணாவை லண்டனுக்கு கள்ளப் பாஸ்போட்டில் அனுப்பியது கோத்தபாயதான் !

2007ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 18ம் தேதி அதிகாலை 1.45 மணிக்கு கருணா கொழும்பு விமானநிலையம் சென்றடைந்தார். பின்னர் அதிகாலை 2.05 க்கு அவர் யூஎல்.505 என்ற ஏர்-லங்கா விமானத்தில் லண்டன் நோக்கிப் பயணித்துள்ளார். லண்டன் வந்த அவர் மிக எழிதாக ஏர்போட்டில் இருந்து வெளியே சென்று, கென்சிங்டன் என்னும்(லண்டன் புறநகர்ப்பகுதி) இடத்தில் உள்ள தொடர்மாடி வீடு ஒன்றில் வசித்துவந்தார். அங்கே அவரது மனைவியும் வரவழைக்கப்பட்டார். (கருணாவின் மனைவி தற்போது அயர்லாந்தில் வசித்து வருவதாகச் சொல்லப்படுகிறது). இவ்வாறு சுமார் 6 வாரங்கள் கருணா லண்டனில் வசித்துவந்தவேளை, இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில், பிரித்தானியப் பொலிசார் இவரைக் கைதுசெய்தனர். அவர் வீட்டில் இருந்த பாஸ்போட்டையும் கைப்பற்றினர்............. read more 

Tuesday, 17 April 2012

சிறிலங்காவின் நிகழ்ச்சி நிரலுக்குள் பயணத்தை மட்டுப்படுத்த வேண்டாம் !


The call of time is to send thoughts of peace and power to the world.

சிறிலங்காவின் நிகழ்ச்சி நிரலுக்குள் பயணத்தை மட்டுப்படுத்த வேண்டாம் !
சிறிலங்கா சென்றுள்ள இந்தியக்குழுவுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை 

உலகின் தலைசிறந்த 10 பேரில் மதுரை இளைஞர் : 1.20 கோடி பேருக்கு உணவு தந்ததற்கு கவுரவம்:

ஏழை எளிய மக்களை தேடிசென்று உணவு கொடுப்பதென்பது அரிய மகத்தான பணி .. கோவில் உண்டியலில் பணத்தை கொட்டுபவர்கள இவரின் கைகளின் குடுங்கள் உங்களுக்கு கடவுள் குடுப்பதை விட இது பெரிய புண்ணியம் ..வளரட்டும் இவரின் சேவை.. வாழ்த்துக்கள் ...!!!
ஆதரவற்ற, மனநலம் பாதித்தவர்களுக்கு 2002 முதல் இதுவரை தினமும் மூன்று வேளை உணவு அளித்து வரும் மதுரை டோக் நகரைச் சேர்ந்த நாராயணன் கிருஷ்ணனை(29), உலகின் தலைசிறந்த 10 “ரியல் ஹீரோக்களில்’ ஒருவராக சி.என்.என்., வெப்சைட் தேர்வு செய்துள்ளது.

கிரியெல்லவுக்கு கோட்டாபய சவால்

தனது மகன் கடத்தப்பட்டமை குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யச் சென்றபோது, கடத்தலில் ஈடுபட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் கண்டதாக கூறும் பெண்ணின் பெயரை தருமாறு ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவுக்கு பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார்.

கோட்டாபயவுக்கு எதிராக சிறப்புரிமை மீறல் விவகாரத்தை எழுப்புவேன்: கிரியெல்ல


கிரியெல்லவுக்கு கோட்டாபய சவால்!


தான் தெரிவித்த கருத்துக்கு அரச சேவையாளரான பாதுகாப்புச் செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ சவால் விடுத்தமைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை மீறல் விவகாரத்தை எழுப்பவுள்ளதாக ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறியுள்ளார்.

Monday, 16 April 2012

யாழ்ப்பாணதில் அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்

தமிழ் மக்களின் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் கலாசாரத்தையும் பேணிக்கடைப்பிடிக்கும் கேந்திர ஸ்தானமாக யாழ்ப்பாணக் குடாநாடு விளங்குகின்றதென்ற பெருமைக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்திலான அதிர்ச்சியான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இளம் சிறார்களை போற்றிப் பராமரிக்கும் சமூகத்ற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் அருவருப்பானதும் திகிலானதும் வெட்கித் தலைகுனிய வைப்பதுமான . என்றுமில்லாத வகையில் சிறுவர் துஷ்பிரயோகம் மோசமாக அதிகரித்து வருகின்றது

டெல்லியில் ஜெயலலிதா ! கோபத்தில் சிறிலங்கா !!



இந்திய தலைநகர் டெல்லியில் இடம்பெற்று வரும் இந்திய மாநில முதலமைச்சர்களின் உள்நாட்டு பாதுகாப்பு மாநாட்டில், தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பங்கெடுத்து வருவது ஒருபுறமிருக்க, மறுபுறம் சிறிலங்காவுக்கு செல்லும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் இருந்து மேலும் இரண்டு கட்சிகள் விலகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. 

இலங்கைத் தமிழர் மீது திமுகவுக்கு அக்கறையில்லை: நாராயணசாமி


சென்னை, ஏப்.16: திமுகவுக்கு இலங்கைத் தமிழர்கள் மீது அக்கறையில்லை என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்து உள்ளார்.

பேரினவாதிகளின் நீலிக் கண்ணீர்; தமிழ் மக்கள் அறிவர்


ஆட்சிக்கு வரும் எந்தவொரு சிங்கள அரசியல்வாதியும் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நல்லிணக்க சமிக்ஞைகளை வெளிப்படுத்துவதில்லை. அவர்கள் இதய சுத்தியுடன் இனப்பிரச்சினையைத் தீர்க்க ஆட்சியில் இருக்கும் போது முயல்வதே இல்லை. எனினும் அதன் பின்னர் பதவி போனதும் சுடலை ஞானம் பெற்றவர்கள் போல தமிழர் பிரச்சினை தொடர்பாக அக்கறை கொள்வது போல கருத்துக்களை வெளிப்படுத்துவார்கள்.

சிங்கள இனவெறியர் தமிழக முதல்வருக்கு எதிராக போர்க்கொடி


சிங்கள இனவெறியர் தமிழக முதல்வருக்கு எதிராக போர்க்கொடி


இலங்கை விவகாரத்தைக்களமாகப் பயன்படுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசியல் ஆட்டம் ஆடுகின்றார் எனக் குற்றஞ்சாட்டியுள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் இலங்கைப் பயணம் பயனுள்ளதாக அமையவேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை இந்திய உறவைப் புதுப்பிக்கும் முனைப்புடனேயே இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கொழும்பு வருகின்றது. மாறாகத் தமிழர்கள் மீதுள்ள பாசம் காரணமாக அல்ல என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

பிள்ளையான் மற்றும் கருணா ஆகியோர் ஓரம் கட்டப்பட்டு விடுவார்கள்.


இலங்கை சீனாவுடன் நெருக்கமாகி விடும் என்ற பயம் காரணத்தினால் தான் இந்தியக்குழு ஆதரவு தேடி இலங்கை வருகின்றது என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

பீதியில் உறைந்த காலி மாவட்ட தமிழ் மக்கள்! பாதுகாப்பு வழங்குமாறு திவித்துர தோட்ட மக்கள்

பிபிசி தமிழ்
தென்னிலங்கையில் காலி மாவட்டம், திவித்துர என்ற தோட்டத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழ் தொழிலாளர் குடும்பங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் அதிகாரிகள் இன்னும் உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று பிரதேச மக்கள் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தனர்.

திவித்துர தோட்ட மக்கள் அச்சத்தில்
காலி திவித்துர தோட்டத்தின்மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் பிரதேச மக்கள் மற்றும் காவல்துறை கூறும் கருத்துக்கள்

இந்திய எம்.பிக்கள் குழுவின் புதிய பயணத் திட்டம் இதுதான்!

கொழும்பு: இந்திய எம்.பிக்கள் குழுவின் இலங்கை பயணம் தொடர்பான புதிய நிகழ்ச்சி நிரலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று இரவு வெளியிட்டது. அதன்படி முள்வேலி முகாம் என்று அழைக்கப்படும் மாணிக் பார்ம் முகாமுக்கும் இந்தியக் குழு போவதாக கூறப்பட்டுள்ளது.

இலங்கைக்கு செல்லும் இந்தியக் குழுவால் பயனில்லை: டி.ராஜா

டெல்லி: இலங்கை செல்லும் இந்திய எம்.பிக்கள் குழுவால் பயன் ஏதும் இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலைமை குறித்து ஆராய சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான இந்திய எம்.பி.க்கள் குழு இலங்கை சென்றுள்ளது. இக்குழு வரும் 21-ந் தேதி வரை அங்கு பயணம் மேற்கொள்கிறது.

ஆட்கடத்தல்களால் வந்த வினை – அடுத்த ஜெனிவா கூட்டத்தொடரும் சிறிலங்காவுக்குத் தலையிடி

வரும் ஜுன் மாதம் நடக்கவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடரிலும், மனிதஉரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு சிறிலங்கா பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சிறிலங்காவின் மூத்த அரச அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

அரசை பாதுகாக்கும் “உளவுப்பிரிவே' இந்தியப் பாராளுமன்றக் குழு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை பாதுகாப்பதற்கான “உளவுப்பிவினரே' இலங்கை வரும் இந்தியப் பாராளுமன்றக் குழு என குற்றம் சாட்டும் நவசமசமாஜக் கட்சி தமிழ் மக்களை மேலும், மேலும் எவ்வாறு அடக்கி ஆள முடியும் என்பதனையே இலங்கை அரசாங்கம் இந்தியக் குழுவும் ஆராயுமென்றும் தெரிவித்தது.

வடபகுதி மக்கள் தொடர்பில் இந்தியக்குழு ஆராயக்கூடாது


வடபகுதி மக்கள் தொடர்பில் இந்தியக்குழு ஆராயக்கூடாது
news
 இலங்கை வரும் இந்திய சர்வகட்சிகளின் நாடாளு மன்றத் தூதுக்குழுவினர் வடக்கு மக்களின் விடயங்களையோ நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பாகவோ ஆராயக் கூடாது என்று அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

துறவி இராச்சியமாகும் இலங்கை


துறவி இராச்சியமாகும் இலங்கை
essayமஹிந்த ராஜபக்ஷ பழிவாங்கும் குணமும், சர்வதிகாரப் போக்கும், கொண்ட காடைத்தனமான செயல்களில் ஈடுபடுகின்ற ஒருவராக மாற்றம் பெற்று விளங்குகின்றார்.