Translate

Saturday 10 March 2012

நம் உறவுகள் செத்துகொண்டிருக்கும் நேரத்தில் ' மழை நின்றாலும் தூவானம் நிற்கவில்லை' என்று பேசிய வாய் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இன்று ஈழத்தமிழர்களுகாக கண்ணீர் விடுவதாக சொல்லுவது கருணாவின் நாடகத்தையும் தாண்டி நமக்கு சொல்லும் செய்தி ஒன்றுதான். முத்துக்குமார் அன்று ஏற்றிய தீயை எவனாலும் அணைத்துவிட முடியாது என்பதைத்தான். எம்முள் எறியும் நெருப்பு சிங்கள பேரினவாதத்தை வென்று தமிழீழத்தை விடுவிக்கும் வரை ஓயாது - முத்துக்குமாரின் தம்பிகள்
http://www.newsalai.com/2012/03/blog-post_3589.html

இராணுவத்தை ஒருபோதும் காட்டிக் கொடுக்க மாட்டோம்: நிமால் சிறிபால டி சில்வா


நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்து, சமாதானத்தை நிலை நாட்டுவதற்குப் பங்களித்த படைவீரர்களை அரசாங்கம் ஒருபோதும் பலி கொடுக்காது என்று அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இன்னும் இரு தினங்களில் ஒரு தமிழனின் வெற்றியை எதிர்பார்க்கிறது சுவிசர்லாந்து "வோ" (Vaud) மாநிலம்


தமிழ் மக்கள் தங்களுக்கு என ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரை பெறுவதென்பது ஒரு மகத்தான விடயம். எமது பிரச்சனையை எங்கும் எடுத்துச் செல்ல, ஒரு பிரதிநிதியில்லையே என ஏங்கும் மக்களுக்கு ஒரு விடிவெள்ளியாக ஒரு தமிழர் வருவது அரசியலில் கூட ஆரோக்கியமான விடயம். இதை பெறக்கூடிய சந்தர்ப்பம் இந்த வோ (Vaud) மாநிலத்திற்கு கிடைத்திருக்கிறது.

தமிழ் அரசியல்வாதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றத் தேவையில்லை: டியூ. குணசேகர



நாட்டில் மும்மொழியறிவு இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வழிகோலும் என அமைச்சர் டியூ. குணசேகர தெரிவித்துள்ளார்.
தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வினை பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் முயற்சி செய்து வருகின்றது. இதனால், தமிழ் அரசியல்வாதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பி.பி.சி இன் காலைச் செய்தியின் போது மேசையில் குட்டித் தூக்கம் போட்ட செய்தி வாசிப்பாளர்!


இன்று வெள்ளிக்கிழமை ஆனபடியால் ஒரு வாரம் வேலை செய்து எல்லோரும் களைத்துப் போயிருப்பார்கள் தானே.
அதேபோல பி.பி.சி இன் செய்தி வாசிப்பாளரான Simon McCoy க்கும் ஒரு முக்கியமான நாள் ஆகும்.
இன்று காலையில் பி.பி.சி இன் செய்திகளைப் பார்ப்பதற்கு தொலைக்காட்சியை ஒன் செய்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்திருப்பார்கள்.
செய்தி வாசிப்பாளர் மேசையின் போது குட்டித் தூக்கம் போட்டுக் கொண்டு இருந்தார்.
பின்னர் ஒருவாறு சுதாகரித்து எழுந்து தனது செய்தி வாசிக்கும் பணியைத் தொடர்ந்தார்.
இவரது இந்தக் காமடியான செயல் இன்றைய தினம் சமூக வலைத் தளங்களிலும் எதிரொலித்தது.

103 பெண்கள் தினத்திற்கு காலடி எடுத்து வைக்கும் இந்த வேளையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறைந்துள்ளனவா???... திருமதி. பி. லோகேஸ்வரி


ஓவ்வொரு நாளும் பெண் குழந்தைகள் முதல் வயோதிபப் பெண்கள் வரை ஏதாவது ஒரு வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

ஏந்த நேரத்தில் என்ன நடக்குமோ? என்ற பயம் எல்லா பெண்கள் மத்தியலும் விடைக்கான முடியாத கேள்வியாக உள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறை எனும் போது பெண்களின் உடல் நலனில், அவர்களின் பாலியல் ஆரோக்கியத்தில் அல்லது மனநலனில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எந்த ஒரு பாலின செயலும் மற்றும் இது போன்ற செயல்களை செய்வேன் என்று அச்சுறுத்துவதனையும் குறிப்பிடுகின்றது............. READ MORE 

சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானம் தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு எதுவும் தெரியாதாம்!


சிறிலங்காவில் நடந்த இனப்படுகொலை குறித்து, ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் குறித்து, காங்கிரஸ் கட்சிக்கு எந்த விபரமும் தெரியவில்லை என்று இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவில் 2009ம் ஆண்டு நடந்த போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இது குறித்து, ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில் கடந்த புதன்கிழமை, சிறிலங்கா அரசுக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தது. ............. READ MORE 

கற்பழிப்பு தேசமாக மாறி வரும் யாழ்ப்பாணம்! (ஒரு வைத்திய அதிகாரியின் வாக்குமூலம்)


யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன என்றும் ஏழு வயதுச் சிறுமிகள் முதல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வருகின்றனர் என்றும் சுகாதார துறை சார்ந்த அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
கடந்த இரண்டு மாதங்களில் 32 சம்பவங்கள் இடம்பெற்று இருக்கின்றன என்று பதிவுகள் கிடைக்கப் பெற்று இருக்கின்றன என்று சுகாதார துறையை சேர்ந்த சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையைச் சேர்ந்த சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எஸ். சிவரூபன்.
இந்த 32 துஷ்பிரயோகங்களில் 09 சம்பவங்கள் மிகவும் பாரதூரமானவை என்று குறிப்பிட்டார்................ READ MORE 

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் : ராமதாஸ்


இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்கும் படி மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்ட பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்............. READ MORE 

போர்க்குற்றவாளி இலங்கைக்கு எதிரான தீர்மானம்: இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் - திருமாவளவன்

சென்னை: இலங்கை அரசின் போர் குற்றத்திற்கு எதிரான ஐ.நா.சபை கொண்டு வர உள்ள தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:.......... READ MORE 

ஜெனிவாவுக்கு படை எடுத்துச் சென்ற அமைச்சர்கள் வெள்ளை வானையும் தம்முடன் எடுத்துச் சென்றிருக்கலாம்


ஜெனிவாவுக்கு படை எடுத்துச் சென்ற அமைச்சர்கள் வெள்ளை வானையும் தம்முடன் எடுத்துச் சென்றிருக்கலாம்
ஜெனீவா மாநாட்டிற்காக இலங்கையிலிருந்து படையெடுத்து செல்ல வேண்டிய தேவையில்லை. இரண்டு மூன்று அமைச்சர்கள் சென்றிருந்தாலே போதுமென்று  தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, படையெடுத்து செல்லும் அமைச்சர்கள் 'வெள்ளை வானையும்' எடுத்து சென்றிருக்கலாம் எனவும் நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் பூர்வாங்க வரவு செலவுத் திட்ட விவாதம் ஒன்றை நடத்துதல் எனும் தனி நபர் பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.. ..... READ MORE 

ராதிகா பாராளுமன்றில் ஆற்றிய சிறப்பு உரை !video in


கனடா பாராளு மன்றில் ராதிகா  ஆற்றிய பெண்கள் தின உரையில்
கூறப்பட்ட இலங்கைக்கு வழங்கிய சாட்டையடி பதிலினை
உலகதமிலா ஒருகனம் உரத்து கேள் .
வாழ்த்துக்கள் ராதிகா .உங்கள் பணிகள் தொடர எமது வாழ்த்துக்கள் !

மகிந்தா அரசின் படுகொலைகள் அதிர்ச்சி படங்கள்

முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய கொடூரங்கள்!


முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய கொடூரங்கள்!
முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய கொடூரங்கள் பல ஏற்கனவே வெளிவந்தன. இப்போது அந்த கொலைவெறியாட்டத்தின் வெளிவராத உண்மைகள் சில வெளிவந்துவிட்டன. கொடிய சிங்கள காமுகர்களின் கொலைவெறியாட்டத்தால் பலிகொள்ளப்பட்ட உறவுகளின் கொடூரங்கள் இவை.

பெண்களை பெண்களாக எண்ணாத கொடிய சிங்கள வெறியரின் கொடூரதாண்டவத்தை இங்கே பார்க்கலாம்................ read more 

மனித உரிமைகள் மற்றும் ஊடக சுதந்திரம் தொடர்பிலும் பேசுபவர் மீது நாட்டில் புலி முத்திரை பதிக்கப்படுகின்றது. கரு ஜயசூரிய

நாட்டில் தேசப்பற்றாளர்கள் என்ற பெயருடன் நாட்டு மக்களை ஏமாற்றும் நடைமுறைகள் உருவாகியுள்ளதாகவும், இதன் காரணமாக எவ் விதத்திலாவது நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கு இடமளிக்க போவதில்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

குருநாகலில் நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத்தெரிவித்துள்ளார்............ read more 

அமெரிக்காவின் தீர்மானம் தோற்காது, அது இலங்கைக்கு எதிரானதும் அல்ல! எம்.ஏ.சுமந்திரன்

அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட எந்தப் பிரேரணையும் தோற்றதாக சரித்திரமில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை குறித்து கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,................ read more 

பெண்கள் மீது நடத்தப்பட்ட வன்கொடுமைகளே தேசியத் தலைவரின் போராட்ட உணர்வை ஆழமாகத் தூண்டியது


விடுதலைப் புலிகள் இணையத்தில் இணைக்கப்பட்டுள்ள அறிக்கையின் இணைப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
08/03/ 2012.
அன்பார்ந்த தமிழ் பேசும் மக்களே!
இன்று உலகப் பெண்கள் நாள். உலகப்பரப்பெங்கும் பெண்களுக்கு எதிராக காலாதி காலமாக நடைபெற்றுவந்த அடக்கு முறைகளையும் அநீதிகளையும் இடித்துரைத்து பெண்களையும் சம அதிகாரத்துடன் நடத்துவதற்காக பாடுபட்ட காலத்தில் உருவானதே இந்த உலகப் பெண்கள் நாள். பல நாடுகளில் பெண்கள் ஒப்பீட்டளவில் சமவுரிமையுடன் வாழ்ந்தாலுங்கூட இன்றும் பெருமளவான இடங்களில் மிகவும் கொடுமையான வாழ்வினையே எதிர்நோக்குகின்றனர். குறிப்பாக இலங்கைத்தீவில் சிறீலங்கா ஆக்கிரமிப்புப் படைகளின் நடுவே எமது தமிழீழப் பெண்கள் படும் கொடுமைகளும் வேதனைகளும் வார்த்தைகளால் விபரிக்க முடியாதளவுக்கு உள்ளன. எமது தமிழினம் விடுதலையை அமைதிவழியில் வேண்டிநின்ற 1950 காலப்பகுதிகளிலேயே அடக்குமுறையாளர்கள் தொடங்கிய தமிழினவழிப்பு நடவடிக்கைகள் எமது தமிழ்ப் பெண்கள் மீதுதான் ஏவப்பட்டன............... read more 

Friday 9 March 2012

ஈழ இனப் படுகொலை இந்த நூற்றாண்டின் மிகப் பெரும் அவலம் – கவிஞர் சேரன்!


‘நீரற்றது கடல் நிலமற்றது தமிழ் பேரற்றது உறவு’ என்று மிகச் சிக்கனமான வரிகளில் ஈழத்தில் நடந்த பேரழிவை எடுத்துச் சொல்லும் கவிஞர் சேரன் யாழ்ப்பாணம் அளவெட்டியைச் சேர்ந்தவர். ஈழத்தில் நடந்த பல அதிகாரம் சார்ந்த அதிர்வுகளுக்கு எதிர்வினையான எழுத்துச் சாட்சியங்களாக இருக்கின்றன இவருடைய கவிதைகள். தற்போது கனடாவில் உள்ள விண்சர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றும் சேரன் அண்மையில் சென்னைக்கு வந்திருந்த போது எடுக்கப்பட்ட நேர்காணல் இது. நேர்காண்டவர் – மணா............... read more 

ஜெனீவா மனித உரிமைகளுக்கான அனைத்துலக திரைப்படவிழாவில் அம்பலமாகிய சிறிலங்காவின் போர்குற்றங்கள்!

http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-chane4%20(7).jpgஜெனீவா இடம்பெற்றுவரும் 10வது மனித உரிமைகளுக்கான அனைத்துலக திரைப்படவிழாவில், தமிழினத்தின் மீதான சிறிலங்காவின் போர்குற்றங்கள் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது............. read more 

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட வேண்டுமென வழக்கு தொடர்ந்த சட்டத்தரனி விக்டர் அவர்களின் உரை.

tamileelam newsநெதர்லாந்து நீதிமன்றில், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மேல் சுமத்தப்பட்ட  குற்றச்சாட்டுக்களுக்கெதிராக வாதாடி வெற்றியைப்பெற்றுத்தந்த வழக்குரைஞர் அவர்களின் ஐ.நா.முன்றலில் கடந்த 05.03.2012 அன்று நடைபெற்ற மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தின் போது கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியிருந்தார்............. read more 

தமிழ்ப் பிரதிநிதிகள் ஐரோப்பிய சபையின் பாராளுமன்ற கூட்டத்தில் அங்கம் வகிக்கும் யேர்மன் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பு

http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-mendiz%20(1).jpgஅனைத்துலக சுஜாதீன விசாரணையை வலியுறுத்தி யேர்மனியில் முன்னெடுக்கப்படும் அரசியல் தொடர் சந்திப்புக்களில் புதன்கிழமை தமிழ்ப் பிரதிநிதிகள் ஐரோப்பிய சபையின் பாராளுமன்ற கூட்டத்தில்( Parliamentary Assembly of the Council of Europe ) அங்கம் வகிக்கும் யேர்மன் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பல சந்திப்புகளை மேற்கொண்டனர்.............. read more 

அரசியல்வாதிகளுக்கு முள்ளிவாய்க்கால் நிகழ்வு சிறு சம்பவம், பிள்ளையை பலிகொடுத்த தாய்க்கு அது சாபம்.


ina alipu
எந்த வெளியார் தலையீடுமில்லாமல் ஸ்ரீலங்கா அரசினால் சுயமாக தயாரிக்கப்பட்டு வெளிவந்த Lessons Learnt and Reconciliation Commission  ('எல்எல்ஆர்சி')    கற்றுக்கொண்ட பாடங்கள்,
மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை  (மஹிந்த சிந்தனை,) தொடர்பிலான வேலைத்திட்டத்தை இலங்கையில் விரைவுபடுத்தவேண்டும் என்று நெருக்கடி கொடுக்கும் விவாதத்துக்கான பிரேரணையை, 07-03-2012 அன்று ஜெனீவாவின் ஐ.நா மனித உரிமைச் சபையில்,  உலகவல்லரசு அமெரிக்கா, உத்தியோகபூர்வமாக தனது பங்கிற்கு சமர்பித்திருக்கிறது. ............... read more 

புலிகள் ஆதரவாளர்களை வெல்ல முடியவில்லை: ஒப்புக்கொள்ளும் இலங்கை !

தாம் மனித உரிமை ஆர்வலர்கள், என்று சொல்லிக்கொண்டு புலிகள் இயக்க ஆதரவாளர்களும் அனுதாபிகளும் உலகப் பரப்பு முழுவதும் செயல்பட்டு வருவதாக விக்ரமசூரிய தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் பேச்சாளரான விக்ரமசூரிய தொடர்ந்து குறிப்பிடுகையில், பல தமிழர்கள் தம்மை அரசியல்வாதிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் என்று தெரிவித்து, பல மேற்குலக அரசியல்வாதிகளைச் சந்தித்து அவர்களைத் தம்பக்கம் இழுத்துவருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இல்லாத பொல்லாத கதைகளை இவர்கள் அரசியல்வாதிகளுக்கும் , எம்.பிக்களுக்கும் சொல்லி அவர்கள் மனத்தை மாற்றி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இந் நடவடிக்கையானது படுவேகமாக நடைபெறுகிறது என்று அவர் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.............. read more 

டப்ளின் தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும்: இடதுசாரிகள் !

பிரித்தானிய தமிழர் பேரவை(BTF), சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்(IATAJ), இடதுசாரிகள் மற்றும் சோசலிஸ்டுகள் பங்கேற்ற கருத்தரங்கு ஒன்று புதன்கிழமை(07.03.2012) நடைபெற்றது. தமிழர்களின் சுயநிர்ணய உரிமை, தொடர்பாக இக் கருத்தரங்கில் ஆராயப்பட்டது. இதன்போது பிரித்தானியாவில் உள்ள தொழிற்சங்கங்களோடு கூட்டுவைத்தல், பிற போராட்ட அமைப்புகளை ஒன்றுசேர்த்து தமிழர்களுடன் இனைத்துப் போராடுவது, டப்ளின் நீதிமன்றில் முன்மொழியப்பட்ட பிரேரணைகள் என்பன தொடர்பாக ஆரயப்பட்டது. இக் கூட்டத்துக்கு சேசலிஸவாதி பிரட் லிப்லட் தலைமை வகித்தார். டென்மார்க்கில் வசித்துவரும் இடதுசாரியும், தமிழ் நேஷன் என்னும் புத்தகத்தை எழுதியவருமான ரொன் ரிடினர் அவர்களும் இதில் கலந்துகொண்டார். இவர்களோடு இலங்கை நவசமாஜ கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்க விடையமாகும்............ read more 

Thursday 8 March 2012

அமெரிக்காவில் தான் பெண்கள் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். இலங்கையில்?

மலையகம் இன்று மாலுமி இல்லாத கப்பல் போன்று இருக்கின்றது. அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் எண்ணிலடங்காத அளவிற்கு உருவாகிக்கொண்டிருக்கின்றன. ஆனால் இவற்றுக்கிடையில் பிரிவுகளும் பிரச்சினைகளும் யார் பெரியவர் என்ற ஆணவமும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றன. தமக்கு வாக்களித்த மக்களை நட்டாற்றில் விட்டு தாம் சந்தர்ப்பவாத அரசியலுக்கும் பணத்திற்கும் விலை போய்க்கொண்டிருக்கின்றனர். எனவே திராணிபிரக்ஞை உள்ள தலைமைத்துவத்தை உருவாக்கவதற்கும் மலையக பெண்களின் வாக்கு பெண்களுக்கே என்ற தூரநோக்கோடு செயற்பட ஒவ்வொரு பெண்ணும் சிந்திக்க வேண்டும்........... read more

ஐ.நாவில் கொண்டுவரப்படுவது போர் குற்றத்தை பூசிமெழுகும் பிரேரணை- ஐ.நா. நிபுணர்குழு!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் அமெரிக்காவினால் முன்மொழியப்பட்டிருக்கும் பிரேரணை சர்வதேச போர்க்குற்ற விசாரணையை தடுத்து நிறுத்தி போர்க்குற்றத்தை பூசி மெழுகும் செயல் என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு தெரிவித்துள்ளது......... read more 

அமெரிக்கா ஐ.நா.வில் கொண்டுவருவது இலங்கையை காப்பாற்றும் பிரேரணை- இரா.துரைரத்தினம்!


அமெரிக்கா கொண்டுவரப்போவது இலங்கைக்கு எதிரான பிரேரணை அல்ல என்பதே உண்மை.
அண்மைக்காலமாக ஊடகங்களில் முக்கியமாக தமிழ் ஊடகங்களில் பேசப்படும் பொருள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பிரேரணையை கொண்டுவரப்போகிறது, சிறிலங்கா பெரும் நெருக்கடியை சந்திக்க போகிறது என்பதுதான்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்கா அல்லது அமெரிக்காவின் நேசநாடு ஒன்று முன்வைக்க இருக்கும் பிரேரணை இலங்கைக்கு எதிரானதா? சார்பானதா? என்பதை விளங்கிக்கொள்ளாத பரிதாப நிலையில் தமிழ் ஊடகங்கள் இருக்கின்றனவா? அல்லது சிறிலங்காவின் பிரசாரத்திற்கு சாதகமாக செயற்படுகின்றவா என்பது தெரியவில்லை.

சிறிலங்காவிற்கு `எதிரான´ தீர்மான வரைபை அமெரிக்கா முன்மொழிந்தது, தமிழீழ கோரிக்கைக்கும்! அனைத்துலக விசாரனைக்கும், ஆப்பு!


இறுதிப் போரின்போது நடைபெற்ற மீறல்களை  விசாரித்து அறிவதற்காக சிறிலங்கா அரசாங்கத்தினால்உருவாக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கோரும் பிரேரணைக்கான வரைபை அமெரிக்கா நேற்று மனித உரிமைச் சபைக்கு சமர்ப்பித்துள்ளது. சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளை தவிர்க்கும் நோக்குடன் மகிந்த அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்தரைகளை அமுல்ப்படுத்தக் கோருவதானது, சிறிலங்கா அரசாங்கத்தின் இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு கிடைத்த வெற்றியென அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

மீண்டும் ஜநாவால் ஏமாற்றப்படப்போகும் தமிழர்கள்.


மீண்டும் ஜநாவால் ஏமாற்றப்படப்போகும் தமிழர்கள்.

அமெரிக்கா தலைமையில சிறிலங்கா அரசு மீது ஜநா மனிதவுரிமைக் கூட்டத்தில் கடுமையான தீர்மானம் கொண்டுவரப்போவதான ஒரு செய்தி பரப்பப்பட்டுவருகின்றது. சிறிலங்கா அரசும் அதேபோன்று தனது பிரச்சாரத்தை சிறலங்காவில் பரப்பிவருகின்றது. சிறிலங்கா அரசிற்கெதிராக விலைவாசி ஏற்றத்தை எதிர்து நடைபெற்றுவரும் சிங்களவர்களின் போராட்டங்களை முறியடிக்கவும் சிறிலங்கா அரசு இந்த யுத்தியையே பயன்படுத்துகின்றது.

ஆண்களின் மனங்கள் மாறும்வரை அடிமைத்தனம் என்றும் மாறிவிடாது


ஆண்களின் மனங்கள் மாறும்வரை அடிமைத்தனம் என்றும் மாறிவிடாது
essayசமுதாயத்தில் ஒவ்வொருவரின் மனதிலும் பெண் என்பவள் வெறும் காமத்துக்கான வடிகால் அல்ல. அவளும் நம்மைப் போன்றே உணர்ச்சிகளும் உருவமும் கொண்ட ஒரு உயிரே என்ற பார்வை உண்டாக வேண்டும்.
 அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை பெண்கள் அடிமைகளாகவும், போகப் பொருளாகவும், ஆண்களுக்குக் கட்டுப்பட்டவர்களாகவும் மட்டுமே சமுதாயத்தால் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இரண்டு ஆண்டுகளில் செய்யாதவன் ஓர் ஆண்டின் என்ன செய்வான் ?



பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஒரு வருட அவகாசம் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐ.நாவில் சமர்ப்பித்தது அமெரிக்கா; பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஒரு வருட அவகாசம்
news
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் வரைவை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடரில் நேற்றுப் புதன்கிழமை சமர்ப்பித்தது அமெரிக்கா.  நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசுக்கு ஒரு வருட கால அவகாசத்தை வழங்கியுள்ள இந்தத் தீர்மான வரைவு, அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத்தில் அது தொடர்பான நவநீதம்பிள்ளையின் அறிக்கையை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மயானத்தை புனரமைக்க சரா எம்.பி. நிதியுதவி



newsநீண்டகாலமாக அடிப்படை வசதிகள் இன்றியும் புனரமைக்கப்படாமலும் இருந்த பொன்னாலை பெரியவர் மயானத்தை புனரமைப்பதற்கான நிதியுதவியை நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் வழங்கவுள்ளார்.

குற்றம் செய்வதை விட குற்றம் செய்தவனோடு இணைந்திருப்பது......


Channal 4 தொடைக்காட்சி வெளியிட்ட போர்குற்ற ஆதாரங்கள் பொய் எனவும் ஜநா நிபுணர் குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கை பக்கசார்பானது எனவும் குற்றம் சாட்டிய சிறீலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையைநடைமுறைப்படுத்துமாறே அமெரிக்காவின் தீர்மானம் வலியுறுத்துகின்றது.

நல்லிணக்க ஆணைக்குழு இலங்கையால் அமைக்கப்பட்ட கண்துடைப்பு. அதனையே நிறைவேற்றாமல் காலம் கடத்துகிறது சிங்கள அரசு. 

அந்தப் பரிந்துரையை ஒரு வருடத்திற்குள் நிறைவேற்ற வேண்டுமாம். என்ன தீர்மானம் இது ? 

மக்கள் விரோத கொள்கைகளுக்கு விழுந்த அடியே காங்கிரஸின் தேர்தல் தோல்வி: நாம் தமிழர் கட்சி‏

பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்கள் என்று கூறி, பெரும்  நிறுவனங்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் உதவிடும் மக்கள் விரோத  கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வந்த காங்கிரஸ் கட்சியை ஏழை, எளிய, நடுத்தர  மக்கள் முற்றிலுமாக நிராகரித்துவிட்டதையே 5 மாநிலங்களுக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட அவமானகரமான தோல்விக்குக் காரணமாகும்.......... read more 

இசை பிரியாவின் படுகொலை புதிய அதிர்ச்சி 10 படங்கள்

வாய்க்காலில் அரங்கேறிய கொடூரங்கள் பல ஏற்கனவே வெளிவந்தன. இப்போது அந்த கொலைவெறியாட்டத்தின் வெளிவராத உண்மைகள் சில வெளிவந்துவிட்டன. கொடிய சிங்கள காமுகர்களின் கொலைவெறியாட்டத்தால் பலிகொள்ளப்பட்ட உறவுகளின் கொடூரங்கள் இவை.பெண்களை பெண்களாக எண்ணாத கொடிய சிங்கள வெறியரின் கொடூரதாண்டவத்தை இங்கே பார்க்கலாம். ........... read more 

(2ம் இணைப்பு)முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய கொடூரங்களின் வெளிவராத பதிவுகள். (புகைப்படங்கள்) (மனவலிமை குன்றியவர்கள். இருதய நோயாளிகள் பார்க்காதீர்கள்.)


முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய கொடூரங்களின் வெளிவராத பதிவுகள். (25 புகைப்படங்கள்)

 (மனவலிமை குன்றியவர்கள். இருதய நோயாளிகள் பார்க்காதீர்கள்.)

முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய கொடூரங்கள் பல ஏற்கனவே வெளிவந்தன. இப்போது அந்த கொலைவெறியாட்டத்தின் வெளிவராத உண்மைகள் சில வெளிவந்துவிட்டன. கொடிய சிங்கள காமுகர்களின் கொலைவெறியாட்டத்தால் பலிகொள்ளப்பட்ட உறவுகளின் கொடூரங்கள் இவை.பெண்களை பெண்களாக எண்ணாத கொடிய சிங்கள வெறியரின் கொடூரதாண்டவத்தை இங்கே பார்க்கலாம். தாயக விடுதலைக்கு தங்களை கொடையாக்கிய எங்கள் பெண்புலிகளின் வரலாறு உலகறிந்த விடயம். ஆனால் முள்ளிவாய்க்கால் அந்த பெண்போராளிகளுக்கு தந்த வலி பெரிய கொடூரம். ........... read more 

உலகப் பெண்கள் நாள் – 2012


அனைத்துலக பெண்கள் நாளை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள், தலைமைச் செயலகத்தால் வெளிட்டுள்ள அறிக்கையின்முழு வடிவம்
தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/01/12
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
08/03/ 2012.
அன்பார்ந்த தமிழ் பேசும் மக்களே!............ read more 

ஈழத்தமிழர் தாயகத்தில் தொடர்கதையாகும் பெண்களின் அவலம் போக்கிட உலகப்பெண்கள் நாளில் அணிதிரள்வோம்.


ஈழத்தமிழர் தாயகத்தில் தொடர்கதையாகும் பெண்களின் அவலம் போக்கிட உலகப்பெண்கள் நாளில் அணிதிரள்வோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ;கள், சிறுவர், முதியோர் விவகார அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 8 – அனைத்துலகப் பெண்கள் நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள் அறிக்கையின் முழுவிபரம் :