Translate

Tuesday, 2 October 2012

காணி விடயங்களில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கள் ;மஹிந்த அரசுக்கு நெருக்கடி.

கொழும்பு-2, கொம்பனி வீதியில் மக்கள் குடியிருப்புப் பிரதேசத்திலுள்ள ஏழு ஏக்கர் காணியை இந்திய டாட்டா நிறுவனத்துக்கு வழங்குவதற்கு சிறிலங்கா அரசு மேற்கொண்டிருந்த தீர்மானத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

குறித்த காணிகளில் அங்கு வாழும் மக்கள் வீடுகளை அமைத்துள்ளனர் என்றும் அவற்றுக்கான உறுதிப்பத்திரங்களை அவர்கள் வைத்துள்ளனர் என்றும் நீதிமன்றத்தில் வாதம் புரிந்த பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் தோன்றிய சட்டத்தரணி சுஜீவ சேனசிங்க, அரசாங்கம் இந்தக் காணிகளைச் சுவீகரித்து இந்திய நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதன் மூலம் அதில் வாழந்து வரும் ஆயிரக்கணக்கான மக்கள் நிர்க்கதி நிலைக்குத் தள்ளப்படுவர் எனவும் தெரிவித்தார்.
இதனையடுத்து குறித்த காணிகளைச் சுவீகரிப்பதற்கு இடைக்காலத் தடை விதித்த உச்ச நீதிமன்றம் விசாரணையை இம்மாதம் 25 ஆம் திகதி வரை ஒத்தி வைத்தது.
இதேவேளை, அண்மைக்காலமாக இலங்கை நீதிமன்றங்களினால் வழங்கப்படும் தீர்ப்புகளும் உத்தரவுகளும் சிறிலங்கா அரசினைத் தடுமாறச் செய்து வருவது குறப்பிடத்தக்கது.
http://thaaitamil.com/?p=34061 

No comments:

Post a Comment