வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.
இலங்கை நேரப்படி இன்று மாலை 6.00 மணிக்கு அமைச்சரின் பேச்சு இடம்பெறவுள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெறும் இந்த கூட்டத்தில் இலங்கை பிரதிநிதிகள் குழுவின் தலைவராக அமைச்சர் சென்றுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 67வது பொதுச் சபைக் கூட்டம் கடந்த 25 ஆம் திகதி ஆரம்பமாகியதுடன் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்த கூட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் 193 நாடுகளின் தலைவர்கள், வெளிவிவகார அமைச்சர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். இலங்கையின் தற்போதைய நிலைமை, எதிர்கால செயற்திட்டங்கள் குறித்து வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், உலக தலைவர்களுக்கு தெளிவுப்படுத்த உள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. முக்கியமாக இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி, போர் காரணமாக இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, புனரமைப்பு, அந்த மாகாணங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக அமைச்சர் வெளிநாடுகளின் தலைவர்களுக்கு விளக்கவுள்ளார்.இலங்கை நேரப்படி இன்று மாலை 6.00 மணிக்கு அமைச்சரின் பேச்சு இடம்பெறவுள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெறும் இந்த கூட்டத்தில் இலங்கை பிரதிநிதிகள் குழுவின் தலைவராக அமைச்சர் சென்றுள்ளார்.
No comments:
Post a Comment