இலங்கையில் சிறுபான்மையினர் அரசியல் தீர்வு ஒன்றைப் பெற்றுக்கொள்ள மேற்கொண்டு வரும் முயற்சிக்கு இந்தியா உறுதியான ஆதரவை பின்புலத்தை வழங்க வேண்டும் என்று இலங்கைக்குப் பயணம் செய்த இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ் தலைமையிலான நாடாளுமன்றக் குழு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நேற்று வலியுறுத்தியுள்ளது.
|
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Saturday, 5 May 2012
தமிழர் தீர்வுக்கு இந்தியாவின் உறுதியான ஆதரவு அவசியம்; இலங்கை வந்த இந்திய நாடாளுமன்றக்குழு பிரதமர் மன்மோகனிடம் வலியுறுத்தல்
புங்குடுதீவில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு
புங்குடுதீவில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு
யாழ். புங்குடுதீவு 7ஆம் வட்டாரப் பகுதியில் பூவரசு மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவரது சடலம் ஒன்று இன்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புங்குடுதீவு, 7ஆம் வட்டாரத்தை சேர்ந்த வேலாயுதம் சிவபாலன் (வயது 63) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவர்.
சம்பவ இடத்துக்கு நேரில் சென்ற ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி கே.மகேந்திராஜா, சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். இவரது மரணம் தொடர்பாக ஊர்கவற்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறிலங்காவுக்கு கடுப்பை ஏற்படுத்தும் பரிந்துரைகள் � சுஸ்மா குழு கைளித்தது!
�சிறிலங்காவில் தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண வலியுறுத்துவதுடன் நின்று விடாமல், தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பெற்றுக் கொடுக்கவும், வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பை அகற்றி குடியியல் நிர்வாகத்தை ஏற்படுத்தவும் இந்திய அழுத்தம் கொடுக்க வேண்டும்.�
லண்டனில் ஒன்றிணைந்த தமிழ் அமைப்புக்களின் கூட்டு வெளிப்பாடு!"முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் மூன்றாம் ஆண்டு நினைவுப் பேரிணைவு"
பிரித்தானியாவில் ஒன்றிணைந்த தமிழ் அமைப்புக்களின் கூட்டு ஏற்பாட்டில்"முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் மூன்றாம் ஆண்டு நினைவுப் பேரிணைவு" நிகழ்வு எதிர்வரும் மே 18 ஆம் நாள் நடைபெறவுள்ளது.
லண்டன் SKLPC (UK), West End Road, Northolt, Middlesex, UB5 6RE எனும் முகவரியில் அமைந்துள்ள "முருகதாசன் நினைவுத் திடலில்" எதிர்வரும் 18.05.2012 வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணிமுதல் 8:00 மணிவரை நடைபெறவுள்ள இந்த "நினைவுவணக்க பேரிணைவில்" முள்ளிவாய்க்காலில் மரணித்த எம் தாயக உறவுகளையும் நினைந்து அஞ்சலிக்கவும், அவர்கள் நினைவில் சங்கமிக்கவும் ஒன்றுகூடி வருமாறு பிரித்தானியா வாழ் அனைத்துத் தமிழ் மக்களையும் இவ் நிகழ்வு ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பேச்சளவில் மட்டும் இருந்துவிடல் ஆகாது
பேச்சளவில் மட்டும் இருந்துவிடல் ஆகாது
அனலை நிதிஸ் ச. குமாரன்
தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமையில் ஏப்ரல் 30-ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற ரெசோ கூட்டத்தில் கி.வீரமணி, பேராசிரியர் க. அன்பழகன்,சுப. வீரபாண்டியன், கவிஞர் கலி.பூங்குன்றன், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டனர். தனித் தமிழீழம் விரைவில் அமைந்திட ஐ.நா. சபை, தமிழர்கள் வாழும் பகுதிகளில் பொது வாக்கெடுப்பினை விரைவிலே நடத்திட வேண்டுமென்றும் அதற்கு இந்தியா எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழீழத்துப்போராளிகள் இதை இயக்குவதிலும் குறி தவறாது தாக்கியும் சுமப்பதில் வல்லவர்கள்
இந்த ஆயுதத்தை இயக்குவது ஒரு ஆபார விதமான சக்தி வேண்டும்.
முக்கியமாக பதட்டமற்ற நிலையும் நேர்த்தியும் அதிகம் தேவை. குறிப்பிடும் படியாக இந்த ஆயுதத்தை இயக்கும் போது உதறல் அதிகம் இருக்கின்றது. அதனால் மண்ணில் நிலை நிறுத்தி காப்பரண்களை பயன் படுத்தி இயக்கினால் குறிக்கப்பட்ட இடத்திற்கு ரவை சென்றடையும்.
அதே போன்று சர மாரி வெடி என்று நாம் போற்றும் தொடர் ரவைகளால் தாக்கும் போது இலக்கு அதிகளவு தவறலாம். அத்துடன் வீ்ண் விரையமாகும் என்பதால் அப்படி தாக்குவது அதிகளவு குறைவு..
இலங்கை வெளிவிவகார அமைச்சின் நடவடிக்கைகளை தமரா குணநாயகம் கடுமையாக விமர்சனம்
இலங்கை வெளிவிவகார அமைச்சின் நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவாவிற்கான இலங்கை நிரந்தரப் பிரதிநிதி தமரா குணநாயகம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
தனக்குத்தானே தீ மூட்டிய முன்னாள் மூத்த பெண் போராளி
படையினரின் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி ஒருவர் தனக்குத் தானே தீமூட்டித் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
வடமராட்சி பொலிகண்டி பாலாவி பிரதேசத்தில் வசித்துவந்த 38 வயதுடைய சிவலிங்கம் சுகந்தி என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
விடுதலைப்புலிகளின் முன்னாள் மூத்த பெண் போராளியாக இருந்த இவர் 1999ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கையின் போது கடுமையான காயங்களுக்கு உள்ளாகி, இடுப்பின் கீழ் செயலிழந்த நிலையில் வசித்துவந்தார்.
சித்திரைப் பௌர்ணமி
உலகெங்குமுள்ள இந்துக்கள் சமயம் சார்ந்த எத்தனையோ விதமான பண்டிகைகளைக் கொண்டாடி வருவதுடன், பல்வேறு விதமான விரதங்களையும் அனுஷ்டித்து வருகின்றனர்.
இந்த விரதங்களில் அனேகமானவை நேர்த்திக்கடனுக்காகவே அனுஷ்டிக்கப்பட்டு வரப்படுகின்றது.
ஆனால் இந்த மக்களால் பிதிர்களுக்காக அனுஷ்டிக்கப்படும் விரதங்களுள் ஆடி அமாவாசை விரதமும், சித்திரைப் பௌர்ணமி விரதமும் முக்கியமானதாகும்
சித்திரை மாதச் சித்திரை நட்சத்திரமும், சித்திரைப் பௌர்ணமியும் சேர்ந்துவரும் நாளில் தாயை இழந்தவர்கள் அந்த அன்னையின் ஆத்ம சாந்தி பெறவேண்டி இந்த விரத்த்தினை நோர்ப்பார்.
ஏர் இந்தியாவுக்கு 80 ஆயிரம் டாலர் அபராதம்: அமெரிக்கா விதித்தது
ஏர் இந்தியா நிறுவனத்திற்கு அமெரிக்க போக்குவரத்துத் துறை 80 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதம் விதித்துள்ளது.
வாடிக்கையாளர் சேவையில் மெத்தனம் காட்டியது, விருப்பக் கட்டணங்கள் குறித்து பயணிகளுக்கு தகவல் தெரிவிக்காதது, பயணத்தில் ஏற்படும் தாமதம், பயண ரத்து விவரங்களை தங்கள் இணையதளத்தில் வெளியிடாதது போன்ற குற்றங்களுக்காக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு அமெரிக்க போக்குவத்து துறை, ரூ. 42 லட்சத்து 98 ஆயிரம் ரூபாயை (80 ஆயிரம் அமெரிக்க டாலர்) அபராதமாக விதித்துள்ளது.
இலங்கையின் தேசிய செல்வத்தை பங்கிட மறுக்கும் சிங்கள தேசம்
மாகாணசபைத் தேர்தலில் குதிக்க விரும்புவோர் கட்டாயம் வாசிக்க வேண்டிய இன்றைய காலத்துக்கு தேவையான கட்டுரை-’தராக்கி’ சிவராம் (21.11.2004)
உலகின் வரையறுக்கப்பட்ட வளங்களுக்காக மனிதர்கள் போட்டியிடுகின்றார்கள். இந்தப் போட்டி அரசியல் முரண்பாடுகளுக்கும் பெரும் போர்களுக்கும் காரணமாகிறது. மனித குலத்தின் அனைத்து முரண்பாடுகளும் சண்டைகளும் வரையறுக்கப்பட்ட வளங்களுக்கான இந்த போட்டாபோட்டியிலிருந்தே தோன்றுகின்றன என சிலர் கூறுவர். இலங்கை இனப்பிரச்சினையையும் நாம் இந்த அடிப்படையில் நோக்கலாம்.

மகிந்தாவின் கொடுக்கில் தொங்கும்: முஸ்லீங்களுக்கே இந்த நிலை என்றால் தமிழர்களின் நிலையை…………”
மகிந்தாவின் கொடுக்கில் தொங்கும் முஸ்லீங்களுக்கே இந்தநிலை என்றால் தமிழர்களின் நிலையை கேட்கவே வேண்டியதில்லை.
- அரசாங்கத்துக்கு எல்லா வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய முஸ்லிம்களுக்கே இந்தநிலை என்றால் தமிழர்களின் நிலையை கேட்கவே வேண்டியதில்லை. தமிழர்களுக்கு ஏற்பட்ட அழிவுகள், அநீதிகளையெல்லாம் நேரில் கண்டிருந்தும் கூட, தமிழ்மக்களுக்கு நியாயம் கிடைக்க வலியுறுத்தும் தீர்மானம் ஐ.நாவில் வந்தபோது, அதனைத் தோற்கடிக்க முஸ்லிம்கள் அரசாங்கத்தோடு தான் நின்றார்கள். வடக்கிலும், கிழக்கிலும் தம்மோடு இணைந்து வாழும் தமிழர்களை விட, அரசாங்கத்தின் மீதே அதிக பற்றும் நம்பிக்கையும் கொண்டதற்கு, அவர்களுக்கு மிகப்பெரிய தண்டனையைக் கொடுத்துள்ளது சிங்கள பௌத்த பேரினவாதம் போருடன் இனவாதம், மதவாதம் என்பனவும் முடிந்து விட்டதாக அரசாங்கம் கூறிவந்தது பொய் என்பது இப்போது உறுதியாகியுள்ளது.
Friday, 4 May 2012
லண்டன் மேயர் வேட்பாளர்கள் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள்: இலங்கை அரசாங்கம் புலம்பல்!
லண்டன் மேயர் தேர்தலில் போட்டியிடும் இருவர், தமிழர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக தமிழீழ விடுதலைப்புலிகளுக்கான ஆதரவை கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர் என இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் அரியாலை கிழக்கில் புத்த விகாரை - இளந்தி
அரியாலை கிழக்கில் இராணுவப் பிரசன்னம் குறைக்கப் பட்டாலும் அவர்கள் அமைத்த புத்த விகாரை மாத்திரம் நிலைத்து நிற்கிறது. மண்ணும் கற்களும் வைத்துக் கட்டப்பட்ட இந்தக் கோவிலை யாழ்நகரில் வதியும் பிக்குகள் மேற்ப்பார்வை இடுகின்றனர்.
இந்த இடத்தில் இருந்து வெளியேறிய போது எக்காரணம் கொண்டும் இந்த விகாரையை எவரும் சேதப் படுத்தக் கூடாதென்று பொது மக்களுக்கு இராணுவத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த இடத்தில் இருந்து வெளியேறிய போது எக்காரணம் கொண்டும் இந்த விகாரையை எவரும் சேதப் படுத்தக் கூடாதென்று பொது மக்களுக்கு இராணுவத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜபக்ஷே - ஜம்இயத்துல் உலமா திரைமறைவுப் பேச்சுவார்த்தை ஏன்? Read more about ராஜபக்ஷே - ஜம்இயத்துல் உலமா திரைமறைவுப் பேச்சுவார்த்தை ஏன்? at www.inneram.com
கொழும்பு: கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தம்புள்ளை அல் ஹைரியா முஸ்லிம் பள்ளிவாயிலும் தம்புள்ளை இந்துக் கோவிலும் தீவிர இனவாதப் பௌத்த பிக்குகளின் தலைமையில் சேதமாக்கப்பட்டன.
சம்பவம் இடம் பெற்று இரு தினங்களில், "பௌத்தப் புனித பூமிப் பிரதேசத்தில் பிற சமய வழிபாட்டுத் தலங்கள் இருப்பது சட்ட விரோதமானது" என்ற அடிப்படையில், "உடனடியாக அமுலுக்கு வரும் விதத்தில், பள்ளிவாசல் குறித்த இடத்தில் இருந்து அகற்றப்பட்டு, வேறு இடத்தில் அமைக்கப்பட வேண்டும்" என இலங்கைப் பிரதமர் அறிக்கை விடுத்திருந்தார்.
இலங்கையில் 90,000 விதவைகள் - இங்கிலாந்து அதிர்ச்சி தகவல்
இலங்கையில் 90,000 விதவைகள் - இங்கிலாந்து அதிர்ச்சி தகவல்
போரின் போது கணவன்மாரை இழந்த 90 ஆயிரம் வரையான பெண்கள்இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்வதாக இங்கிலாந்துவெளியுறவு மற்றும் பொதுநலவாயப் பணியகத்தால் வெளியிடப்பட்ட இறுதிஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெனீவாவில் ஏற்படக்கூடிய அடுத்த சவாலைச் சமாளிப்பது எப்படி ?
ஜெனீவாவில் ஏற்படக்கூடிய அடுத்த சவாலைச் சமாளிப்பது எப்படி ?
கலாநிதி ஜெகான் பெரேரா
இவ் வருடம் (2012) மார்ச் மாதம் இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட சிறப்பு தீர்மானத்தை அடுத்து இவ் வருடம் அக்டோபர் மாதத்தில் காலத்திற்குக் காலம் செய்யப்படும் சர்வதேச பருவப் பரிசீலனையையும் இலங்கை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இப் பொறிமுறை ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான நிலைவரம் எவ்வாறு உள்ளது என்பதனை பரிசீலிப்பதற்காக நடைபெறுவதொன்றாகும்.
இறுதிக்கட்ட யுத்தத்தில் காணாமல்போன 600 சிறுவர்கள் பற்றிய தகவல் இன்னமும் இல்லை கவலை தெரிவிக்கிறது பிரிட்டன்
இறுதிக்கட்ட யுத்தத்தில் காணாமல்போன 600 சிறுவர்கள் பற்றிய தகவல் இன்னமும் இல்லை கவலை தெரிவிக்கிறது பிரிட்டன்
சிறுவர்கள் உரிமைகள் தொடர்பான ஐ.நா. சாசனத்தை அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் கணிசமான நடவடிக்கைகளை எடுத்திருப்பதற்கு மத்தியிலும் சிறுவர்களை பாலியல் ரீதியாகப் பயன்படுத்தும் பிரச்சினை தொடர்ந்தும் இருந்து வருவதாக பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சு தனது பிந்திய மனித உரிமைகள் தொடர்பான அறிக்கையில் கவலை தெரிவித்திருக்கிறது.
தெரிவுக்குழுவில் பங்கேற்க கூட்டமைப்புக்கு அழுத்தம்; தீர்வை வழங்காமல் இருப்பதற்கான கடைசி வாய்ப்பையும் அடைக்குமாறு இந்தியாவும் அமெரிக்காவும் கோரிக்கை
தெரிவுக்குழுவில் பங்கேற்க கூட்டமைப்புக்கு அழுத்தம்; தீர்வை வழங்காமல் இருப்பதற்கான கடைசி வாய்ப்பையும் அடைக்குமாறு இந்தியாவும் அமெரிக்காவும் கோரிக்கை |
இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வை எட்டுவதற்கென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு மீது சர்வதேச ரீதியில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக நம்பகரமாகத் தெரியவருகிறது.
|
கூட்டமைப்பை தெரிவுக்குழுவுக்கு அழைப்பதை விடுத்து பேச்சு நடத்துமாறு அரசை வலியுறுத்துங்கள்; ரவூப்புக்கு சுமந்திரன் சுட்டிக்காட்டு
கூட்டமைப்பை தெரிவுக்குழுவுக்கு அழைப்பதை விடுத்து பேச்சு நடத்துமாறு அரசை வலியுறுத்துங்கள்; ரவூப்புக்கு சுமந்திரன் சுட்டிக்காட்டு |
தெரிவுக்குழுவுக்கு வருமாறு கூட்டமைப்பை வலியுறுத்துவதைவிட இருதரப்புப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு முதலில் அரசாங்கத்தை முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்த வேண்டும். என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
|
புலிக்கொடியை வைத்து அரசியல் செய்கிறது இந்த அரசாங்கம்: மனோ கணேசன் _
மகிந்தருக்க இளம் நடிகையை அழைத்துவந்தேன்! 50 ஆயிரம் ரூபா செலவில் கோதாவிடம் வாக்குமூலம் .
கோதாபய ராஜபக்ஷவின் உத்தரவிற்கமைய மேர்வின் சில்வாவின் நெருங்கிய சகாவான அமல் ரொட்ரிகோ என்ற நபர் கடத்திச் செல்லப்பட்டு பெறப்பட்ட வாக்குமூலத்தைப் பார்த்து மகிந்த ராஜபக்ஷ ஆத்திரமடைந்துள்ளார்.
இந்த ஒளிப்பதிவு வாக்குமூலம் மகிந்த ராஜபக்ஷவை அவமானப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரியொருவர் எமது தெரிவித்தார்................. read more
இந்த ஒளிப்பதிவு வாக்குமூலம் மகிந்த ராஜபக்ஷவை அவமானப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரியொருவர் எமது தெரிவித்தார்................. read more
ராஜபக்சேவின் உருவபொம்மை எரிப்பு திருமாவளவன் உள்பட 150 பேர் கைது! (படங்கள் )
இலங்கை தம்புள்ளை நகரில் அமைந்துள்ள 80 ஆண்டு பழமை வாய்ந்த ஹைரியா மசூதியை சிங்கள இனவெறியர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.
இலங்கைக்கு எதிரான ஐ.நா.வின் தீர்மானம் சர்வதேச அளவில் ராஜபக்சே அரசுக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த மசூதி இடிப்பு சம்பவம் ராஜபக்சேவின் இனவெறி முகத்தை தோலுரித்துக் காட்டியுள்ளது............ read more

பிரித்தானியாவில் போட்டியிடும் 2 மேயர்களையும் தாக்கும் இலங்கை அரசு !
Sri Lanka today accused two key candidates for the mayoralty of London of showing support to pro-LTTE organisations in the UK to garner Tamil vote for elections.
Ken Livingstone the former mayor and the labour party candidate at today�s election has promised the historic Trafalgar Square, or some other prestigious London venue, for the celebration of Tamil Day on May 18 which is the anniversary of the defeat of the LTTE�s armed separatist campaign in 2009, a government website statement said.
லண்டன் மேயர் தேர்தலில் பலர் போட்டியிடுகின்றனர். அது வேறு கதை. ஆனல் முதன்மை வேட்பாளர்களாக 2 வர் உள்ளனர். இவர்களில் ஒருவரே பெரும்பாலும் லண்டன் மேயர் தேர்தலில் வெற்றிபெறுவார்கள் என்று கருத்துக்கணிப்புகள் சொல்லுகின்றன. லேபர் கட்சியில் இருந்து கென் லிவிங்ஸ்டனும், கான்சர்வேட்டிவ் கட்சியில் இருந்து பொறிஸ் ஜோன்சனும் போட்டியிடுகின்றனர். இத் தேர்தல் நேற்றைய தினம் நடந்து முடிந்துள்ளது. வெற்றிபெற்றது யார் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. பெரும்பாலும் லேபர் கட்சியைச் சேர்ந்த கென் லிவிங்ஸ்டன் அவர்களே வெற்றிபெறுவார் என சில ஆங்கில ஊடகங்கள் கருத்துக்கணிப்பு மூலம் தெரிவித்துள்ளனர். இதற்கும் இலங்கைக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா ? வாருங்கள் விடையத்துக்குப் போகலாம் !

பப்பாளிப் பழத்தின் மருத்துவ பயன்கள்
பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும்.
தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.
இன்றைய 21 ஆம் நூற்றாண்டில்கூட இந்தியாவில் தேவதாசி முறை நின்று நிலைபெற்று வருகின்றது. குறிப்பாக தென்னிந்தியாவின் பல பாகங்களிலும் தொடர்கின்றது.
கர்நாடக மாநிலம் இதற்கு நல்ல உதாரணம். கடவுளின் பெயரால் இடம்பெறுகின்றது இப்பாலியல் தொழில். ஜெல்லம்மா என்கிற பெண் தெய்வத்தின் பெயரால் விபச்சாரம் இடம்பெறுகின்றது.
சமயத்தின் பெயரால் பாலியல் அடிமைகளை வைத்திருக்கின்ற பழைய முறைமை ஆறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப் பகுதியில் ஆரம்பம் ஆகி இருக்க வேண்டும்.
உலகின் தலைசிறந்த 10 பேரில் மதுரை இளைஞர் : 1.20 கோடி பேருக்கு உணவு தந்ததற்கு கவுரவம்
ஏழை எளிய மக்களை தேடிசென்று உணவு கொடுப்பதென்பது அரிய மகத்தான பணி .. கோவில் உண்டியலில் பணத்தை கொட்டுபவர்கள இவரின் கைகளின் குடுங்கள் உங்களுக்கு கடவுள் குடுப்பதை விட இது பெரிய புண்ணியம் ..
ஆதரவற்ற, மனநலம் பாதித்தவர்களுக்கு 2002 முதல் இதுவரை தினமும் மூன்று வேளை உணவு அளித்து வரும் மதுரை டோக் நகரைச் சேர்ந்த நாராயணன் கிருஷ்ணனை(29), உலகின் தலைசிறந்த 10 “ரியல் ஹீரோக்களில்’ ஒருவராக சி.என்.என்., வெப்சைட் தேர்வு செய்துள்ளது.
Thursday, 3 May 2012
மனிதர்களைப் படிப்போம் முதலில்!
'வீழ்வதில் கூட வெற்றிதான் - அருவி' இந்தக் கவிதைகளை எல்லாம் வெறும் கவிதைகளாகவும், மாணவர்களை வெறும் மதிப்பெண் வாங்கும் எந்திரங்களாகவும் வளர்ப்பதின் விளைவுதான் மணிகண்டன்களும் , தைரியலெட்சுமிகளூம் அண்ணா பல்கலைக்கழகம் , IIT சென்றாலும் தேர்வில் தோல்வியை எதிர்கொள்ளத் துணிவின்றி வாழ்கையிலும தோற்றுப்போகிறார்கள்... கடைசியில் , அப்துல் ரகுமான் சொன்னதைப்போல புத்தகங்களே குழந்தைகளைக் கிழித்துவிடுகின்றன.
Wednesday, 2 May 2012
இந்து ஆலயங்களை அரசியல் களமாக பாவிக்க தர்மஹர்த்தா சபை இடமளிக்கக்கூடாது என பா. உ. சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
ஆலயம் என்பது ஆன்மா வகிக்கும் இடம் இது அனைத்து இந்துக்களுக்கும் உரியது. இங்கு அரசியல் பேதம் உயர்வு, தாழ்வு, படித்தவன், படியாதவன், ஏழை பணக்காரன் என்ற பேதமில்லை எல்லோரும் இறைவனின் பிள்ளைகள் என்ற வகையில் சகலரும் சமமாகவே உள்ளனர். ஆலய தர்மஹர்த்தா சபையும் சமமாகவே பயன்படுத்த வேண்டும்.
புலிக் கொடி எப்படி வந்தது? ITN செய்திக்கு ஐக்கிய தேசியக் கட்சி பதிலடி!
புலிக் கொடி எப்படி வந்தது? ITN செய்திக்கு ஐக்கிய தேசியக் கட்சி பதிலடி!
அரசாங்க நிறுவனம் ஒன்றின் தலைவரே புலிகளின் கொடிகளைக் காட்சிப் படுத்தி, பயங்கரவாதத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்
ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து யாழ்ப்பாணத்தில் நடத்திய பொது மேதினக் கூட்டத்தில் புலிக் கொடியுடன் சிலர் நடமாடிய சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதுகுறித்து சுயாதீன தொலைக்காட்சி வெளியிட்ட செய்திக்கு பதிலளிக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.
சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத் தலைவர் ரொஸ்மன்ட் சேனாரத்னவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவின் கையெழுத்துடன் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தில்,

Subscribe to:
Posts (Atom)