Translate

Friday, 4 May 2012


இன்றைய 21 ஆம் நூற்றாண்டில்கூட இந்தியாவில் தேவதாசி முறை நின்று நிலைபெற்று வருகின்றது. குறிப்பாக தென்னிந்தியாவின் பல பாகங்களிலும் தொடர்கின்றது.
கர்நாடக மாநிலம் இதற்கு நல்ல உதாரணம். கடவுளின் பெயரால் இடம்பெறுகின்றது இப்பாலியல் தொழில். ஜெல்லம்மா என்கிற பெண் தெய்வத்தின் பெயரால் விபச்சாரம் இடம்பெறுகின்றது.
சமயத்தின் பெயரால் பாலியல் அடிமைகளை வைத்திருக்கின்ற பழைய முறைமை ஆறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப் பகுதியில் ஆரம்பம் ஆகி இருக்க வேண்டும்.

ஆயினும் சுமார் இரு தசாப்த காலத்துக்கு முன் சட்டவிரோதம் ஆனது என பிரகடனப்படுத்தப்பட்டு விட்டது. இருப்பினும் கர்நாடகத்தில் மாத்திரம் வருடாந்தம் 23000 பெண்கள் தேவதாசிகளாக உடலை விற்கின்றனர். கடவுளின் அடிமைகள் என்றும் தேவதாசிகள் அழைக்கப்படுகின்றனர்.
தேவதாசி முறையின் தோற்றம், வளர்ச்சி, மாற்றம் ஆகியவற்றை காட்டக் கூடிய வீடியோ பெட்டகம் ஒன்றை உங்களின் வாசிப்புக்கு தருகின்றோம்.

No comments:

Post a Comment