
மெக்சிகோ, அவுஸ்திரேலியா, சுவிஸ்சர்லாந்து போன்ற நாடுகளில் இருந்து இதயத்தில் ரத்தம் என்ற இருவட்டுக்கு பின்னூட்டல்கள் வந்துள்ளது என மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
காங்கிரஸை காலி செய்வேன் : சீமான் ஆவேசம்!![]() இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் தேர்தல் வரப்போகிறது. பாதி இந்தியாவை உனக்கு எந்த ஒரு சீட்டும் கிடைக்காமல் அன்னா ஹசாரே காலி பண்ணிவிடுவார். தென் இந்தியா காங்கிரஸ் கட்சியை நான் காலி சென்று விடுவேன். கேரளாவில் போய் என் நண்பர்கள் மூலம் என்னுடைய மொழியை பெயர்க்க வைத்து உன் வண்டவாளங்களை எடுத்துச் சொல்வேன். ஆந்திரா சென்று என் அண்ணி நடிகை ரோஜா மூலம் தகவலை மொழிபெயர்த்து அங்கே உனக்கு ஒரு சீட் கூட கிடைக்காமல் செய்துவிடுவேன். நாங்கள் இருக்கும் வரை நீ ஆட்சிக்கு வர முடியாது என்றார் சீமான்............... read more |
அதிகரித்துவரும் இலங்கை மீதான சர்வதேச அழுத்தம் |
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ மற்றைய நாடுகளின் பாரிய உதவியுடன், பங்களிப்புடன் இலங்கை வென்றுள்ளது. ஆனால் 2009ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து பல்வேறுபட்ட முறைகளில் இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்கள் தினமும் அதிகரித்த வண்ணமாகவுள்ளது. இவற்றை இலங்கையினால் சமாளிக்க முடியுமா?........... read more |
கொழும்பில் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு ஆதரவளிக்கவேண்டியது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தார்மீக பொறுப்பு: விக்கிரமபாகு கருணாரட்ன! |
வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டபோது தெற்கிலிருந்து அவர்களுக்கு ஆதரவாக நாம் குரல் கொடுத்தோம். எனவே, எமக்கு ஆதரவளிக்கவேண்டியது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தார்மீக பொறுப்பு மட்டுமல்ல, மனிதநேயமும் கூட. இவ்வாறு தெஹிவளை � கல்கிஸை மாநகரசபைக்கு ஜனநாயக மக்கள் முன்னணியின் கீழ் மேயர் வேட்பாளராகப் போட்டியிடும் நவசமசமாஜக்கட்சியின் பொதுச்செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்............ read more |
அவசரகாலச்சட்டம் பின்கதவால் நடைமுறைப்படுத்தப்படுகிறது: எம்.ஏ.சுமந்திரன் |
அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டபோதிலும் அச்சட்டத்தின் கீழ் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தை அரசாங்கம் நியமித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தினார். அவசரகாலச்சட்டம் பின்கதவால் மீளவும் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர் விமர்சித்தார்.............. read more |
தமிழர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகள் மந்தகதியில் நடக்கிறது! இந்தியாவே எமக்கு உதவ வேண்டும் : சீனித்தம்பி யோகேஸ்வரன். |
இலங்கையில் போருக்கு பின் மீள் குடியேறும் தமிழர்களுக்கு புனர்வாழ் நடவடிக்கைகள் மந்தகதியில் இடம்பெறுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் இந்தக்குற்றச்சாட்டை கோயம்புத்தூரில் வைத்து சுமத்தியுள்ளார். எனவே இந்தியா மீள்குடியேறும் மக்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்................. read more |