Translate

Saturday, 28 January 2012

சிட்னியில் நடைபெற்ற திருமண நிகழ்வு


சிட்னியில் நடைபெற்ற திருமண நிகழ்வு

 வன்னியில் இருந்து பெண் ஒருவரைத் தேடிக் கண்டு பிடித்து சிட்னிக்கு அழைத்து, மணமகளாகக் கைபிடிக்க முனைந்தார் புலம் பெயர்ந்த நாட்டில் பிறந்த இந்த மணமகன்.

அண்மையில் சிட்னியில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றுக்கு சென்றிருந்தேன். மணமகன் சிட்னியில் சிறந்த கலைஞர்களில் ஒருவர். தான் பெற்ற கலை மூலம் உலகமெங்கும் சென்று நிகழ்ச்சி நடாத்தி தாயகத்தில் இருக்கும் உறவுகளுக்கு உதவி செய்து வருபவர். 

வன்னித் தடுப்பு முகாம்களில் அடைபட்டு இருந்த 3 இலட்சம் தமிழர்களின் நிலையினை அவுஸ்திரெலிய மக்களுக்கு அறியச்செய்வதற்காக சிட்னியில் இருந்து கன்பரா வரை உள்ள 300 கிலோமீற்றர் தூரத்தினை தனது நண்பருடன் நடந்து சென்றவர். ............... READ MORE 

விக்கிலீக்ஸ்: இந்துக் கடவுளின் தூக்கத்தை கெடுத்த மஹிந்தர்!


விக்கிலீக்ஸ்: இந்துக் கடவுளின் தூக்கத்தை கெடுத்த மஹிந்தர்!

12 ஆம் திகதி அதிகாலை 3.00 மணி அளவில் பெருமாளை தரிசித்தனர்.

இவ்வாலயத்துக்கு சாதாரண நேரங்களில் மிக மிக அதிக அளவில் பக்தர்கள் வருகின்றமையால் எவருக்கும் இடையூறு ஏற்படாத வகையில் மிக முக்கிய பிரமுகர்களுக்கு இவ்வாறு விசேட ஏற்பாடு செய்து கொடுக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் சென்னைத் துணைத் தூதரகத்தில் இருந்து 2008 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து விக்கிலீக்ஸ் மூலம் இத்தகவல்கள் தமிழ். சி. என். என் இற்கு கிடைத்து உள்ளன.

மாகாண சபைகளுக்கு எல்லை மீறிய அதிகாரங்கள் வழங்குவதை அனுமதிக்க முடியாது:சம்பிக்க ரணவக்க


இந்தியாவும் அமெரிக்காவும் கூறுகின்றது என்பதற்காக 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கும் அப்பால் சென்று அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்வைக்க இயலாது. 


குறிப்பாக மாகாண சபைகளுக்கு எல்லை மீறிய அதிகாரங்கள் வழங்குவதை அனுமதிக்க முடியாது என்று அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்............ READ MORE

திருமதி நாகரத்தினம் முருகேசு காலமானார்

சிறுவர்களின் உடல் பாகங்களை வெளிநாட்டிற்கு அனுப்பும் இலங்கை !


சிறுவர்களின் உடல் பாகங்களை வெளிநாட்டிற்கு அனுப்பும் இலங்கை !
இலங்கையில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பல்வெறுபட்ட துஷ்பிரயோகச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தவண்ணமேயுள்ளன. அந்த வகையில் உடல் பாகங்களை பெற்றுக் கொள்ளும் நோக்கில் சிறுவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும் வர்த்தகம் பற்றிய தகவல்களை சிங்கள பத்திரிகையொன்று வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. உடல் பாகங்களைப் பெற்றுக் கொள்வதற்காக இலங்கைச் சிறுவர் சிறுமியர் பாரியளவில் இவ்வாறு வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிறுவர்களின் உடல் பாகங்களை விற்பனை செய்யும் முக்கிய நாடுகளில் இலங்கை முன்னணி வகிப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.

5 மாணவர்களைச் சுட்டது அதிரடிப்படை: பசிலின் பரபரப்பு வாக்குமூலம் அம்பலம் !


 5 மாணவர்களையும் சுட்டது அதிரடிப்படையினர் தான் என்றும் அது தனக்குத் தெரியும் எனவும் மகிந்தரின் சகோதரர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவரே இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை அமெரிக்க தூதுவர் ரொபேட் ஓ பிளேக்கிடம் கூறியுள்ளார்.


 சுட்டது அதிரடிப்படையினர் என்றும் ஆனால் அவர்கள் இவ்வாறு கொலைசெய்யும்போது வேறு துப்பாக்கிகளைப் பாவிப்பது வழக்கம் எனவும் பசில் மேலும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிரடிப்படை மேற்கொண்ட படுகொலைகளை அமெரிக்காவுக்கு சொல்லிய பசில்!

தமிழ் மாணவர்கள் ஐவரை திருகோணமலையில் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02 ஆம் திகதி விசேட அதிரடிப் படையினர்தான் சுட்டுக் கொன்றனர் என்பதை ஒப்புக் கொண்ட பசில்........ READ MORE

“ஜனவரி 29 ” முத்துக்குமார் ஆவணப்படம்-பிய்த்து எறியப்பட்ட பூமாலை

“ஜனவரி 29 ” முத்துக்குமார் ஆவணப்படம்-பிய்த்து எறியப்பட்ட பூமாலை
Saturday, 28.01.2012, 08:35pm

வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன்.அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த்தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே… ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள்......... READ MORE 

சிறிலங்காவின் அமைச்சர் செந்தில் தொண்டமானுக்கு தமிழகத்தில் கறுப்புக் கொடி

தமிழகத்தின் திருநள்ளாறு கோயிலுக்கு சென்றிருந்த சிறிலங்கா அரசாங்கத்தில் அமைச்சராக உள்ள செந்தில் தொண்டமானுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கறுப்புக்கொடி காட்டியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன........... READ MORE

மட்டக்களப்பில் அத்துமீறி அமைக்கப்படும் விகாரைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேசசெயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தமிழர்களின் காணியில் பிக்குகளுடன் இராணுவத்தினரும் இணைந்து புதிய விகாரை ஒன்றை அமைத்து வருவதாக மட்டக்களப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்............ READ MORE

Pungudutivu celebrates talent in London

Pungudutivu's Got Talent 2011
The Pungudutivu Welfare Association UK held its annual “Pungudutivu’s Got Talent” competition last month, celebrating the success of the community in London.



The prizes were handed out by the Chief Guest, Shadow Minister and Member of Parliament for Harrow West Gareth Thomas. Addressing the crowd Mr Thomas said, 
“It’s more than just a talent show. It’s a coming together of people who have a particular sense of place, particular pride in one particular part of the Tamil area of Sri Lanka............. read more 

இலங்கையே திரும்பிப்பார்த்த யாழ் தமிழனை தவறவிட்ட தமிழ்ப்பத்திரிகைகள்!!

anmaiசா்வதேச தன்னார்வ தொண்டர்கள் தினம் அறிமுகப்படுத்தப்பட்டதன் ஒரு தசாப்த தினம் பூர்த்தியை முன்னிட்டு இலங்கையில் அமைதியாக சேவையாற்றும் தன்னார்வ தொண்டர்களை தேர்ந்தெடுத்து அவா்களைக் கௌரவப்படுத்தும் முகமாக “V Awards ” விருதுவழங்கும் வைபவம் இரத்மலானையிலுள்ள Stain Studioஇல் 21-01-2012 அன்று இடம்பெற்றது. 


மற்றவர்களின் நலனுக்காக பங்காற்றும் தன்னார்வ தொண்டர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களை இவ்விருதுக்காக இணைத்துக்கொண்டார்கள்.மகாராஜா நிறுவனத்தின் ஊடக அனுசரணையுடன் நடைபெற்ற இந்நிகழ்வானது முன்னேற்றத்திற்கான எதிர்கால நடவடிக்கையாக அமைந்துள்ளது.

லண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் ஆட்டோக்காரனால் ஏமாற்றப்பட்டார்!!


லண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் ஆட்டோக்காரனால் ஏமாற்றப்பட்டார்!!

வாடகைக்கு அமர்த்திய முச்சக்கரவண்டி ஓட்டுனர் இலத்திரனியல் பொருட்களுடன் தலைமறைவாகிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் திருக்கோவில் மகாகும்பாபிஷக பெருஞ்சாந்தி விழா

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் திருக்கோவில் மகாகும்பாபிஷக பெருஞ்சாந்தி விழா


http://www.sivantv.com/tv/


நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் திருக்கோவில் அதி சுந்தர நவதள நவகல மகா இராஐகோபுர சகித புனராவர்த்தன அஷ்டபந்தன உத்தமோத்தமத்ரத்யத்திரும்சத்(33) குண்ட மகாயாக பிரதிஷ்டா மகாகும்பாபிஷக  பெருஞ்சாந்தி விழா…

Friday, 27 January 2012

மயான - அமைதி தேடி போன படித்த முட்டாள் அப்துல் கலாம்

மயான - அமைதி தேடி போன படித்த முட்டாள் அப்துல் கலாம் 


படத்துக்கு நன்றி - முத்தமிழ் வேந்தன்

தமிழ்க் கைதிகளின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் _


  கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது என்று தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன தமிழ்க்கைதிகளின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டுமென்று வேண்டுகோள்விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வு அதிக அக்கறை காட்டுகிறது இந்தியா; நேற்றுமுன்தினம் ஹிலாரியைச் சந்தித்த நிருபமா அவரிடம் நேரில் தெரிவிப்பு

news
இலங்கையில் நிலைத்து நிற்கக் கூடிய காத்திரமான அரசியல்  தீர்வு ஒன்றை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு இந்தியா முழுமையான அதீத அக்கறை காட்டி வருகிறது. அதே சமயம் அமைதித் தீர்வு தொடர்பாக இலங்கையின் வாக்குறுதிகள் இந்தியாவுக்குத் திருப்தி அளிக்கின்றன. 

களுத்துறை சிறையில் தமிழ்க் கைதிகள் அவல நிலையில்!

கொழும்பு மெகசின் சிறைச்சாலையிலிருந்து களுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் அங்கு இட நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். அதேவேளை, போதியளவு தண்ணீர் வசதி செய்து கொடுக்கப்படவில்லை என்றும் உறங்குவதற்கு ஏற்ற வசதிகள் இல்லையென்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

சிங்கக் குட்டிகள், அம்பாந்தோட்டைப் பூனைகள்,– இவையே கோத்தாபயவின் கொலைக்குழுக்கள்



நீதிக்குப் புறம்பான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் ‘சிங்கக் குட்டிகள்‘ என்று அழைக்கப்படும் குழுவைப் பயன்படுத்துவதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வொசிங்டனுக்கு அனுப்பியுள்ள தகவல் பரிமாற்றக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழர் விடயத்தில் இந்தியாவின் நடிப்பு


இலங்கை சீன உறவுப் பாலத்தைத் துண்டிப்பதற்குப் 13 பிளஸைப் பகடைக்காயாகப் பயன்படுத்தி தீவிரமாக செயற்படும் இந்தியா, தமிழர் விடயத்தில் கரிசனை கொள்வதுபோல் நடிக்கின்றது என்று பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத் துள்ளது சோஷலிசக் கட்சி.ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான இந்த அரசிடம் இனப்பிரச்சினைக்கு உண்மையானதொரு தீர்வுத் திட்டம் இல்லை. காலத்தை இழுத்தடிப்பதே அதன் நோக்கம். அமைச்சர் பஸிலின் கூற்றும் இதனையே பிரதிபலிக்கின்றது என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

சீமானும், அமீரும் நீதிமன்றத்திற்கு நேரில் வந்தனர்


கடந்த 2008 ஆம் ஆண்டு ஈழத்தில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அதைக் கண்டித்து தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கம் மூலம் இராமேஸ்வரத்தில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.அதில் பேசிய இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோரின் பேச்சுகள் இந்திய இறையாண்மைக்கு எதிராக இருந்தது என வழக்குத் தொடுக்கப்பட்டு அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

சிங்கள மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்துத் தமிழ்மொழிக்குத் துரோகம் இழைத்து விட்டோம். அமைச்சர் டலஸ் அழகபெரும

சிங்கள மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்துத் தமிழ்மொழிக்குத் துரோகம் இழைத்து விட்டோம். அமைச்சர் டலஸ் அழகபெரும 


 சிங்கள மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்துத் தமிழ்மொழிக்குத் துரோகம் இழைத்து விட்டோம். 

 இவ்வரலாற்றுத் தவறை நிகழ்காலத்திலும் செய்யக்கூடாது என்று அமைச்சர் டலஸ் அழகபெரும கூறினார். இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

தண்ணீரின் மேல் நடந்த மனிதன்! லண்டனில் பெரும் சாதனை!!

தண்ணீரின் மேல் நடந்த மனிதன்! லண்டனில் பெரும் சாதனை!!

லண்டன் தேம்ஸ் நதியின் நீரில் நடந்து சாதனை படைத்துள்ளார் ஒருவர். கடலில் பல மயில் தூரம் நீந்திச் சாதனை படைத்தவர்களுக்கு மத்தியில் இவர் நீரில் நடந்து சாதனை படைத்துள்ளார்.

இவ்வாறு நீரில் நடந்து செல்லும் இவரைக் காண மக்கள் கூட்டம் அப் பகுதியில் அலை மோதுகின்றது.

இயற்கைக்கு எதிர்மாறாக நடந்து செல்லும் இம் மனிதன் உண்மையிலேயே ஒரு சாதனையாளன்தான். இருந்தும் இவர் பிரபல்யமான மஜிக் வித்தைகள் செய்வதில் சாணக்கியம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கு கிழக்கு அரசியல்வாதிகளுக்கே காணி காவல்துறை அதிகாரங்கள் தேவைப்படுகின்றது:மக்கள் கேட்கவில்லை என்கிறார் பசில் ராஜபக்ஷ.

Posted Imageவடக்கு கிழக்கு மக்கள் காணி, காவல்துறை அதிகாரங்களை தருமாறு எப்போதும் கோரவில்லை என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகள் மட்டுமே காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை கோருவதாக அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

LLRC பரிந்துரைகள் அமுல்படுத்தப்படுமா என்பது சந்தேகமே - ஸ்ரீரங்காவும் கூறுகிறார்


ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு பின்னர் ஆளும் கட்சியில் இணைந்து கொண்டவர்
LLRC பரிந்துரைகள் அமுல்படுத்தப்படுமா சந்தேகமே - ஸ்ரீரங்காவும் கூறுகிறார் ..

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை பரிந்துரைகள் அமுல்படுத்தப்படுமா என்பதில் சந்தேகம் நிலவுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா தெரிவித்துள்ளார்.
 
ஜே. ஸ்ரீரங்கா ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு பின்னர் ஆளும் கட்சியில் இணைந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது............... read more 

கனேடிய வெளிவிவகாரத்துறை அமைச்சர், நா.த.அரசாங்க பிரதிநிதிகள் சந்திப்பு.

லண்டனுக்கு வருகை தந்திருந்த கனேடிய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜோன் பெயிர்ட் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர்.
முடிக்குரிய பொதுநலவாய சங்கத்தின் ஏற்பாட்டில் 23-01-2012 அன்று இடம்பெற்ற மனித உரிமைகள் தொடர்பிலான கருத்தரங்கொன்றியே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. குறித்த இந்த மாநாட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது........... read more 

மூன்று கோரிக்கைகளுடன் லண்டனில் இருந்து ஜெனீவாவை நோக்கிய நடைப்பயணம் தொடங்குகின்றது

மூன்று கோரிக்கைகளுடன் லண்டனில் இருந்து ஜெனீவாவை நோக்கிய நடைப்பயணம் தொடங்குகின்றது



லண்டனில் இருந்து ஜெனீவா நோக்கிய நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம் சனிக்கிழமை (28-01-2012) தொடங்குகின்றது.
சனவரி 28ம்நாள் தொடங்கும் இந்த நடைப்பயணம் பெப்ரவரி 27ம் நாள் ஜெனீவா ஐ.நா மனித உரிமை சபையின் இடம்பெறவுள்ள நீதிக்காய் ஒன்றுபடுவோம் மக்கள் எழுச்சி நிகழ்வில் நிறைவடையும்......... read more 

கருணாவுக்கு கள்ளப் பாஸ்போட் வழங்கியது இலங்கை: பிளேக் அதிரடித் தகவல் !


கருணாவுக்கு கள்ளப் பாஸ்போட் வழங்கியது இலங்கை: பிளேக் அதிரடித் தகவல் !
புலிகள் அமைப்பில் இருந்து கருணா பிரிந்து பின்னர் அவர் பிரித்தானியா வந்து பொலிசாரிடம் சிக்கிக்கொண்ட விடையம் யாவரும் அறிந்ததே. பிரித்தானியச் சிறையில் அவர் இருக்கும்போது தமிழர் ஒருவரால் கருணா தாக்கப்பட்டார் என்பது ஒரு புறம் இருக்க அவர் பிரித்தானியாவுக்கு எவ்வாறு வந்தார் என்ற சுவாரசியமான செய்திகளும் வெளியாகியுள்ளது. .............  read more

கிழக்கு பல்கலைக்கழகம் சிங்கள மயமாகிறது- வானத்தை பார்த்திருக்கும் தமிழ் அரசியல்வாதிகள்!


கிழக்கு பல்கலைக்கழகம் முழுமையாக சிங்களமயப்படுத்தப்பட்டு வருகிறது. சிங்கள மாணவர்களின் தொகை அதிகரிப்பு உட்பட கல்விசார், கல்விஅணிசாரா ஆளணி வழங்கள் வரை சகல பிரிவுகளிலும் அதிகரித்து வந்த சிங்கள ஆதிக்கம் தற்போது சிங்களவர் ஒருவரை உபவேந்தராக நியமிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

கிழக்கு பல்கலைக்கழகத்தை நிர்வகிக்கும் அதிகாரியாக சிங்களப் பேராசிரியர் நியமனம்

கிழக்கு பல்கலைக் கழகத்தின் உபவேந்தரின் கடமைகளையாற்றுவதற்கு தகுதிவாய்ந்த அதிகாரியாக பேராசிரியர் நிமால் ரஞ்சித் அத்தநாயக்க சிறிலங்காவின் உயர்கல்வி அமைச்சரால் நியமிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளதுஇந்தநியமனம் பற்றி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் தற்போதைய பதில் உபவேந்தருக்கு நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது............ read more 

மொழிப்போர் ஈகிகள் நாள்-25-01-2012: மொழிப்போர் ஈகி சிவகங்கை இராசேந்திரனுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் வீரவணக்கம் – நிழற்படங்கள் இணைப்பு!!!!

27-01-1964 அன்று தமிழகத்தை ஆண்ட அன்றைய காங்கிரசு கட்சி ஆட்சியில் சிதம்பரம் நகரில் இந்தி திணிப்பை எதிர்த்து துப்பாக்கிக் குண்டுக்கு பலியான பெருந்தமிழர் சிவகங்கை இராசேந்திரனுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் பரங்கிப்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் செந்தமிழன் சீமான் தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அதை தொடர்ந்து இன்று மாலை சிதம்பரம் அனந்தீஸ்வரர் கோயில் தெருவில் நாம் தமிழர் மாணவர் பாசறை தொடக்கவிழாவும் மொழிப்போர் ஈகிகள் நினைவு நாள் கூட்டமும் நடைபெறுகிறது............. read more 

யாழில் படைமுகாமில் இருந்து யுவதியின் எலும்புக்கூடு!

யாழில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன யுவதிஒருவரின் உடலம் படையினர் இருந்த முகாமின் வளாகத்தில் மீட்கப்பட்டுள்ளது.யாழ் தென்மராட்சி மறவன் புலவு,தனங்கிளப்பு பகுதியில் கடந்த ஆண்டுஇறுதிப்பகுதியில் காணமால் போன யுவதிஒருவரின் எலும்பு கூடு படையினர் இருந்த முகாமில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

“நாங்களும் போரில் அனைத்தையும் தொலைத்தவர்கள் தான்” – முரசுமோட்டையில் திருடர்கள்!

Posted Image

கிளிநொச்சி, முரசு மோட்டை, சேத்துக்கண்டி முருகன் கோவிலுக்கு முன்பாகவுள்ள இந்துக்குருக்கள் வீடு ஒன்றில் “பிஸ்ரலுடன்’ புகுந்த முகமூடிக் கொள்ளையர்கள் தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு 09 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது:

வாக்குறுதிகள் மூலம் சர்வதேசத்தை திருப்திப்படுத்துகிறது இலங்கை அரசு!- லக்ஷ்மன் கிரியல்ல


சர்வதேச சமூகத்தை திருப்திபடுத்தும் நோக்கில் அரசாங்கம் கருத்துக்களை வெளியிட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
13ஆம் திருத்தச் சட்டத்திற்கு அப்பாலான தீர்வு வழங்கப்படும் என அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதியளித்துள்ளது.............. read more 

தங்களைத் தாமே நம்பும் நிலையே தமிழர்களுக்கு இன்று


ஆலயங்களில் வசதி படைத்தோர் கடவுளை வணங்குவதற்காகச் செல்கின்றனர். இவர்கள் அங்கே கடவுளை முட்டாள் என நினைத்துக் கொண்டே தமது வேண்டுகோள்களை முன் வைப்பார்கள் , கடவுளும் தன்னை ஒரு முட்டாளாகக் காட்டிக் கொண்டே இவர்களின் கோரிக்கைகளை செவிமடுப்பார்.

உறுதிமொழி வழங்கினாலும் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தக் கூடாது

அரசியல் தீர்வுக்கு 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்தக் கூடாது. இந்தியாவுக்கோ ஏனைய சர்வதேச நாடுகளுக்கோ உறுதிமொழி வழங்கியிருப்பினும் அது தொடர்பில் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் அரசியலில் இது சகஜம் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாஸ அமரசேகர தெரிவித்தார்............ read more

அரசியலமைப்பு, மக்கள்அபிலாசைகள் இனப்பிரச்சினைத் தீர்வு : S.மோகனராஜன்


.              
அரசியலமைப்பு சீர்திருத்தமும்,
•             மக்கள்அபிலாசைகளின் பிரதிபலிப்பும்,
•             இனப்பிரச்சினைத்தீர்வும்.
இலங்கையில் தொடர்ந்து நிலவிவரும் இனப்பிரச்சினைக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் தீர்வுகள் தேடப்பட்டன. எனினும் இத்தீர்வு முயற்சிகள் இருவழி பாதையிலான போக்கினாலும், அதிகார மேலாதிக்க சக்திகளின் சுயநலத்தாலும்தோல்வியிலேயே முடிந்தன என்பதை நாம் கண்டுள்ளோம். ஒன்றில் பேச்சுவார்த்தை ரீதியிலான போராட்டம்ஃ (அகிம்சா வழி போராட்டம்); இரண்டு ஆயுதப்போராட்டம் என இலங்கையில் வடக்கு கிழக்கு தமிழ் தேசிய வாதிகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் மக்கள் அபிலாசைகளை முழுக்க முழுக்க பிரதிபலிக்காமையாலும் மேலே குறிப்பிட்ட ஏனைய சிறுபான்மை இனங்களை புறக்கணிக்கின்ற- அதிதீவிர தமிழ் தேசியவாதம், பௌத்த சிங்கள பேரின வாதம் என்பவற்றாலே இனப்பிரச்சினை முடிவுறாமல் பாதுகாக்கப்படுகிறது............. read more

ஈ.பி.டி.பி யின் படுகொலை செய்யும் உக்தி

எவரையேனும் ஈ.பி.டி.பியினர் படுகொலை செய்ய தீர்மானித்து விட்டால் முதலில் இராணுவத்துக்கு அறிவித்தல் கொடுப்பார்கள். 


பொதுவாக யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு வீதியிலும் சிப்பாய்களின் நடமாட்டம் இருக்கின்றது.
அத்துடன் வீதிகளின் ஓரங்களில் முகாம்கள் காணப்படுகின்றன.

ரோந்துக் கடமையில் ஈடுபட்டிருக்கின்ற சிப்பாய்கள் படுகொலை இடம்பெற இருக்கின்ற பகுதியிலும், அண்டிய இடங்களிலும் இருந்து ஒரே நேரத்தில் 05 முதல் 10 நிமிடங்களுக்கு இடைவேளை எடுத்துக் கொள்வார்கள்.

இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வு அதிக அக்கறை காட்டுகிறது இந்தியா; ஹிலாரியைச் சந்தித்த நிருபமா அவரிடம் நேரில் தெரிவிப்பு


இலங்கையில் நிலைத்து நிற்கக் கூடிய காத்திரமான அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு இந்தியா முழுமையான அதீத அக்கறை காட்டி வருகிறது. அதே சமயம் அமைதித் தீர்வு தொடர்பாக இலங்கையின் வாக்குறுதிகள் இந்தியாவுக்குத் திருப்தி அளிக்கின்றன.

த. தே. கூட்டமைப்பு அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் கடப்பாட்டிலிருந்து விலகக் கூடாது – இந்து நாளேடு


தமிழ் மக்களின் பிரதான பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தமிழ் மக்களிற்கான தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் கடப்பாட்டிலிருந்து விலகிப் போகக் கூடாது அல்லது சமூகத்தின் மத்தியில் காணப்படும் தீவிரவாதப் போக்குக் கொண்ட சக்திகளால் ஊறுவிளைவிக்கும் போதும் கூட தமது நிலைப்பாட்டில் உறுதியாக நிற்க வேண்டும்.

கனடியப் பிரதமருக்கு கனடியத் தமிழர்கள் சார்பில் உளமார்ந்த நன்றிகள் - கனடியத் தமிழ்க் காங்கிரஸ்


இலங்கை விவகாரத்தில் மற்றயை நாடுகள் அனைத்திற்கும் முன்மாதிரியாக நடந்த கனடியப் பிரதமருக்கும், வெளிவிவகார அமைச்சருக்கும் கனடியத் தமிழர்கள் சார்பிலான நன்றியறிதலை இந்த வார ஆரம்பத்தில் இடம்பெற்ற பொங்கல்விழாவில் வைத்துத் கனடியத் தமிழ்க் காங்கிரஸின் தலைவர் உமாசுதன் தெரிவித்தார்............. read more 

பிரபாகரனைக் காப்பாற்ற தீவிர முயற்சி எடுத்த கஜேந்திரகுமார்!

பிரபாகரனைக் காப்பாற்ற தீவிர முயற்சி எடுத்த கஜேந்திரகுமார்!

வன்னிப் போரின் இறுதி நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரை காப்பாற்றுகின்றமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பகீரத முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்றார்.

Thursday, 26 January 2012

ராஜபக்ஸ - துணை ஆயுதக் குழுக்கள் தொடர்பை வெளிப்படுத்திய ரங்கா!


கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு மின்னல் ஊடகவியலாளர் ஜே. ஸ்ரீரங்கா துணை ஆயுதக் குழுக்கள் குறித்து வழங்கி இருக்கின்ற தகவல்கள் மிகவும் சுவாரஷியமானவை.

கொழும்பில் உள்ள தூதரகத்தில் இருந்து 2007 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து இத்தகவல்கள் விக்கிலீக்ஸ் மூலம் தமிழ் சி. என். என் இற்கு கிடைக்கப் பெற்று உள்ளன............ read more 

லண்டனிலிருந்து ஜெனீவா வரைக்கும் நீதிக்கும் அமைதிக்குமான நடைப்பயணம் (சனிக்கிழமை 28-01-2012 இலிருந்து திங்கட்கிழமை 27-02-2012 வரைக்கும்)


லண்டனிலிருந்து ஜெனீவா வரைக்கும் நீதிக்கும் அமைதிக்குமான நடைப்பயணம் (சனிக்கிழமை 28-01-2012 இலிருந்து திங்கட்கிழமை 27-02-2012 வரைக்கும்)  

தமிழீழத்தில் மூன்று வருடங்களுக்கு முன்னர் போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றை விசாரித்து இந்தப் பாரிய சர்வதேச குற்றங்களைப் புரிந்தவர்களையும்இ இவற்றிற்குப் பொறுப்பானவர்களையும் நீதியின் முன் கொண்டுவந்து நிறுத்தி அவர்களைத் தண்டிப்பதற்காகஇ சுயாதீனமான சர்வதேச விசாரணை ஒன்று அவசியம்--.............. read more