Translate

Monday, 28 May 2012

தமிழரசுக் கட்சியின் மாநாட்டை குழப்ப மேற்கொண்ட பிள்ளையானின் செயற்பாடு அனைத்தும் தோல்வி


இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய இம்மாநாட்டை குழப்ப வேண்டும் என்ற பிள்ளையானின் செயற்பாடு அனைத்தும் தோல்வி கண்டது. தமது எண்ணம் நிறைவேறவில்லை என்ற வேதனையுடன் தமது சகாக்கள் மீது கோபத்துடன் இருக்கின்றார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு 2012.05.25ம் திகதி தொடக்கம் 2012.05.27ம் திகதி இன்று வரை மட்டக்களப்பு அமெரிக்கமிஷன் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் 27.05.2012 இன்று மிகவும் சிறப்பான முறையில் 3000க்கு மேற்பட்ட மக்கள் முன்னிலையில் மாநாடு மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அடாவடித் தனம் தோல்வி கண்டது. இம்மாநாட்டை குழப்பும் முகமாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தனது
அடிவருடிகளைக் கொண்டு பல துண்டுப் பிரசுரங்களை கடந்த இரு வாரமாக மாவட்டம் முழுவதும் வெளியிட்டார்.
எதிர்ப்பு தெரிவிப்போம்”, “மானமுள்ள மட்டக்களப்பு மக்கள் என்ற தலைப்புகள் உட்பட 10க்கு மேற்பட்ட தலைப்புக்களில் மாவட்டம் முழுவதும் உள்ள தமது பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் அடிவருடிகளை பயன்படுத்தி துண்டுப் பிரசுரங்களை இலட்சக் கணக்கில் அச்சிட்டு மாவட்டம் முழுவதும் வினியோகித்தனர்.
தில் பிரசுரம் எழுதுதல், அச்சிடல் பணிகளில் செங்கலடி செல்லம் தியேட்டர் முதலாளியும், பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்த முக்கிய பிரதிநிதியுமான மோகன் என்பவர் செயற்பட்டார்.
யாழ்ப்பாண மக்களை அதாவது வடபகுதி மக்களை இழிவுபடுத்தி இ;ப்பிரசுரம் பிள்ளையானாலும் அவர்களது கூலிப் படையாலும் வெளியிடப்பட்டது.
அதுமட்டுமின்றி கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், பிள்ளையானின் இணைப்புச் செயலாளருமான பூ.பிரசாந்தன் என்பவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அமைப்பாளருமான பிரதீப் மாஸ்டர் உட்பட்ட குழுவினர் மாவட்டத்தின் பல பாகங்களிலும் மட்டக்களப்பு நகரிலும் தமிழரசுக் கட்சியை தூற்றியும், அதன் தலைமையை கண்டித்தும், வடபகுதி மக்களை இழிவுபடுத்தியும் பிரசுரங்களை ஒட்டியதுடன் இலங்கை தமிழரசுக் கட்சியின் அனைத்து பிரசுரங்கள் மற்றும் பதாதைகளை பிடுங்கி எறிவதிலும், கிளிப்பதிலும் கவனம் செலுத்தினார்கள்.
அதுமட்டுமின்றி பொலித்தீன் மூலம் கறுப்பு கொடிகளை, நகரிலும் மாவட்டங்களிலும் தொங்கவிட்டனர். ஆனாலும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா,
சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன் ஆகியோர் மிகவும் சாதூரியமாக செயற்பட்டு மகாநாட்டை மிகவும் சிறப்பாக நடாத்த ஏற்பாடு செய்தனர்.
இதனை பொறுக்க முடியாத பிள்ளையான் தனது கையாள்களை பயன்படுத்தி மகாநாடு நடாத்த இருந்த மட்டக்களப்பு தேவநாயகம் மண்டப திரை பகுதியை (மேடை) இரு நாட்களுக்கு முன்
எரித்தனர்.
ஆனால் இதிலும் உடனடி நடவடிக்கையை மேற்கொண்ட மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டக்களப்பு ஊறணி அமெரிக்கமிஷன் மண்டபத்தை ஒழுங்கு செய்தனர்.
அதனை பொறுக்க முடியாத தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் குழுவினர் பிள்ளையானின் ஆலோசனையில் மாநாட்டை குழப்ப தீர்மானித்தனர். 2012.05.27ம் திகதி அன்று பெருந்திரளான மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட மக்கள் காலை 9.00 மணிக்கு மாநாட்டு மண்டபத்திலும் அதற்கு வெளியிலும் அமைக்கப்பட்ட கொட்டகைகளிலும் குழுமியிருந்தனர்.
இவ்வேளை ஒவ்வொரு நாளும் பிள்ளையான் மாநாட்டு மண்டப வழியாக வாகனத்தில் மெதுவாக கண்ணாடியை திறந்து பார்த்துக் கொண்டு செல்லும் நடவடிக்கை தொடர்ந்தது.
2012.05.27ம் திகதி அன்று மக்கள் திரளை கண்ட பிள்ளையான் (வாகனம் மூலம் வருகை தந்து பார்வையிட்டதுடன்) பெரும் கொதிப்புக்கு உள்ளாகி தனது அடிமைகளை அழைத்து
மதுபானம் கொடுத்து மாநாட்டு மண்டபத்தில் சென்று குழப்புமாறும் வாகனங்களை உடைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதிநிதிகளும் பிள்ளையானின் அடிமைகளும் மாநாட்டு மண்டபத்துள்ளும் வெளியிலும் நுழைந்து இருந்தனர். இவர்கள் பிள்ளையானின் ஏற்பாட்டில் இராணுவம், பொலிஸ், புலனாய்வுத்துறை ஆகியோரின் உதவியுடன் அங்கு செயற்பட தொடங்கினர். கிட்டத்தட்ட எட்டுப்பேர் நுழைந்தனர்.
இவர்களில் பிள்ளையானின் உறவினரும், வாழைச்சேனை பேத்தாழை கிராமத்தை சேர்ந்த செல்வநாயகம் ஈவெரா என்பவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் உரையாற்றும் போது அவர் வடக்கு கிழக்கு இணைந்த தமிழ் கோட்பாட்டை வெளிப்படுத்திய போது கிழக்கு மாகாணம் தனித்துவம் கோரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி என்பதால் இவரது கதையை அவமதித்து மண்டபத்துள் சொற் பிரயோகம் பாவிக்க முற்பட்ட போது மட்டக்களப்பு மாவட்ட பொதுமக்கள் அவரை தாக்க முற்பட்டனர்.
ஆனாலும் சிலர் தாக்கினர். உடனடியாக புறடியில் பிடித்து எல்லைக்குள் அப்பால் ஈவெரா என்பவர் தள்ளப்பட்டார். ஈவெராவுக்கு மட்டக்களப்பு அம்பாறை மக்கள் அடியும் கொடுத்தனர். இதன் பின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் குழுவினர் வீதியில் நின்றிருந்த வடபகுதி மக்கள் வருகை தந்த பஸ் வண்டிக்கு கல் வீசினர். இதன் பின்னணியில் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் செயற்பட்டார்.
அத்தோடு பிரசாந்தன் மாகாணசபை உறுப்பினர் மகாநாடு நடைபெறும் மண்டபத்தின் அருகில் உள்ள பிரதான வீதியால் தமது வாகனத்துக்கு பின் ஆட்டோவில் சவப்பெட்டி (வெற்றுப்பெட்டி) கட்டிக் கொண்டு பல தடவை போக்குவரத்து மேற்கொண்டார்.
இவ்வேளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பாக வருகை தந்த பிள்ளையானின் அடிமைகள் ஒரு சிலர் மாநாட்டை பார்வையிட்டு தமது வருகை தந்திருந்த நண்பர்கள், உறவினர்களுடன் மாநாட்டை பாராட்டி கூறியுள்ளனர். பிள்ளையான் பொலநறுவை, திருகோணமலை, அம்பாறைகளில் இருந்து 16 பஸ் வண்டிகளில் சிங்கள மக்களை இறக்கி நடாத்திய தமது மாநாட்டை விட இங்கு மக்கள் பெரும் எழுச்சியுடன் சம்பந்தர் ஐயாவை வரவேற்று கொண்டு வந்து நடாத்தும் இம் மகாநாடு அமைந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.
இவ்வேளை ஒரு சில அடிமைகள் தம்மை இதனை குழப்புமாறு பிள்ளையான் அனுப்பியதையும் தெரிவித்துள்ளனர். பிள்ளையானிடம் இருந்து எப்படி வெளியேறுவது என்று யோசித்துக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளனர்.
ஏனெனில் பிள்ளையானிடம் இரந்து விலகினால் தமது உண்மைகள் எல்லாம் வெளியில் சென்று விடும் என்பதால் தங்களை சுட்டுவிடுவார் எனக் கவலைப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வுக்கு வருகை தந்த பிள்ளையானின் பிரதேச சபை உறுப்பினர் பிள்ளையான் போகச் சொன்னததால் வந்ததாக கூறியதுடன் பிள்ளையானால் தமக்கு கஷ்ரமாக உள்ளதாகவும் ஒருவரிடம் கவலைப்பட்டுள்ளார்.
பாவம் பிள்ளையானுடன் இணைந்தவர்கள் இவ்வேளை செ.ஈவெரா என்பவர் தாக்கப்பட்டு வெளியேற்றப்பட்டதும் பயந்த பிள்ளையானின் அடிமைகள் மெதுவாக நழுவி வெளியேறினர்.
இம்மாநாட்டுக்கு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், மலையகம் உட்பட பல பகுதிகளில் இந்து தமிழ் மக்கள் பெரும்பான்மையாகவும், முஸ்லிம்கள் சிலரும் சமூகமளித்தனர்.
மாநாட்டில் கலந்து கொண்டோர் இக்கட்சி தமது சொத்து என்ற வகையில் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
இம்மாநாட்டை குழப்ப வேண்டும் என்ற பிள்ளையானில் செயற்பாடு அனைத்தும் தோல்வி கண்டது. மாநாட்டு குழுவே எதிர்பார்க்காத வகையில் மக்கள் பெரும் திரளாக கலந்து சிறப்பித்தனர்.
மாநாடு பிற்பகல் 3.30 மணி வரை நடைபெற்றது. பாவம் பிள்ளையான் இம்மாநாட்டை குழப்ப பல இலட்சம் ரூபாய் செலவு செய்தும் தமது எண்ணம் நிறைவேறவில்லை என்ற
வேதனையுடன் தமது சகாக்கள் மீது கோபத்துடன் இருக்கின்றார். என தகவல் கிடைத்துள்ளது.

No comments:

Post a Comment