தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படும் அரசியல் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காங்கிரஸ் கட்சி நேற்று நடத்திய போராட்டம் பிசுபிசுத்துப் போனது. ராகுல் மக்கள் சேவகர் பேரவை சார்பில் சென்னை அண்ணாசாலை மின்வாரிய பணியகத்துக்குப் பின்புறம் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.
ராஜிவ்கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு உடனடியாக தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்றும், ராஜிவ் கொலையை கொச்சைப்படுத்தியும், மூவருக்கும் மரணதண்டனை விதித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பை விமர்சித்தும், நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் எவருமே இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை.
இந்த உண்ணாவிரதம் நடந்த இடத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் மட்டுமே சென்றிருந்தார்.
இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் எவரும் பங்கேற்காமல் புறக்கணித்தது, ஏற்பாட்டாளர்களை பெரிதும் ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளது.
No comments:
Post a Comment