பிரிவினைவாத போர் இடம்பெற்ற இலங்கையின் வட பகுதியை பெருமளவில் தமிழர்கள் வாழும் பிரதேசமாக கருத முடியாது என பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.
பீபீசி செய்திச் சேவைக்கு வழங்கியுள்ள விசேட பேட்டியிலேயே பாதுகாப்புச் செயலாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற பொது மக்கள் உயிரிழப்பு மிகவும் குறைந்தளவானதே என பாதுகாப்புச் செயலாளர் பீபீசி செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.
"யுத்தத்தின் போதும் யுத்தத்தின் பின்னரும் நாட்டின் பல பாகங்களில் தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் தொழில் புரிகின்றனர். கொழும்பில், தெற்கில் தமிழர்கள் பணிபுரிகின்றனர். முஸ்லிம்கள், சிங்களவர்கள் வடக்கில் பணிபுரிய முடியும்". என பாதுகாப்புச் செயலாளர் பீபீசி செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.
வடக்கு தமிழர்களை அதிகமாகக் கொண்ட பகுதி என கூறமுடியுமா என பீபீசி ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பாதுகாப்புச் செயலாளர்,
"ஏன் அப்படி கருத வேண்டும்? நான் ஹம்பாந்தோட்டையில் இருந்து வந்தவன். நான் சிறுவயதில் அங்கு ஒரு தமிழ் குடும்பத்தை பார்த்ததில்லை. ஆனால் இன்று அங்கு பல தமிழ் குடும்பங்கள் வாழ்கின்றன. அப்படியானால் ஏன் அந்த நிகழ்வு வடக்கில் இடம்பெறக்கூடாது? நீங்கள் ஒரு இலங்கை பிரஜையாக இருந்தால் நாட்டின் வேண்டிய இடத்திற்குச் செல்ல, சொத்துக்களை கொள்வனவு செய்ய சுதந்திரம் இருக்க வேண்டும். இலங்கையர் நாட்டின் எந்த பகுதியிலும் வாழலாம் என்ற சுதந்திரத்தைப் பற்றியே நான் பேசுகின்றேன்". என பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்று வரும் கடத்தல்கள் குறித்தி பீபீசி ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பாதுகாப்புச் செயலாளர்,
"அங்கே இருக்கின்ற சில பாதாள உலகக் குழுவினர் இந்த குற்றச்செயல்களை புரிகின்றனர். போதைப் பொருள் விநியோகத்தர்கள் பல குற்றங்களை செய்கின்றனர். இவர்கள் தப்பிச் செல்கின்றனர். இவர்களுக்கு இந்தியாவிற்குச் செல்வது மிகவும் இலகு. எனவே தவறான குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டாம்". என்று பதிலளித்தார்.
எனினும் "இவைகள் தவறான குற்றச்சாட்டுக்கள் அல்ல. நான் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து தகவல் பெற்றுள்ளேன்" என பீபீசி ஊடகவியலாளர் கூறினார்.
அப்போது "கோவப்பட வேண்டாம். வழமையாக நான்தான் கோவப்பட வேண்டும். ஆகவே நீங்கள் கோவப்பட வேண்டாம். நான்தான் பாதுகாப்புச் செயலாளர் நான் இதுகுறித்து விசாரணை நடத்தியுள்ளேன். நீங்கள் அவர்களிடம் இருந்து தகவல் பெற வேண்டாம். என்னிடம் தகவல் கேளுங்கள். அவைகள் பொய். நாட்டுக்கு வெளியில் மறைந்திருக்கும் புலி ஆதரவாளர்கள் இலங்கையின் நற்பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்" என பாதுகாப்புச் செயலாளர் பதிலளித்தார்.
இறுதிக் கட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் கொள்ளப்பட்டதாக ஐநா பிரதானி, மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்துகின்றமை குறித்து பீபீசி ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்.
"நாங்கள் அதுகுறித்து உத்தியோகபூர்வமாக செயற்பட்டுள்ளோம். வடக்கில் பொது மக்கள் பாதிப்பு குறித்து அனேக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன". என பாதுகாப்புச் செயலாளர் பதிலளித்தார்.
இலங்கை அதற்கு என்ன செய்திருக்கிறது என பீபீசி ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த பாதுகாப்புச் செயலாளர், "நாங்கள் நிறைய செய்திருக்கிறோம். புள்ளிவிபரத் திணைக்களம் இந்த பகுதிகளில் கணக்கெடுப்பு செய்துள்ளனர். இதில் நூறு வீத தமிழ் அலுவலகர்கள் ஈடுபட்டனர்". என்றார்.
அதில் 8 அல்லது 9 ஆயிரம் சிவிலியன்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென பீபீசி ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்.
"தவறான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். சிவிலியன்கள் அல்ல. இலங்கை இராணுவத்திற்கும் சிவிலியன்களுக்கும் இடையில் யுத்தம் இடம்பெற்றது என நீங்கள் நினைக்கிறீர்களா? அது இராணுவத்திற்கு நிகராக ஆயுதம் தாங்கிய குழுவுடன்தான் மோதல் இடம்பெற்றது. இறந்தவர்கள் சிவிலியன்கள் என்றால் ஆயுதம் ஏந்தியவர்கள் எங்கே..?" என பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ் பீபீசி ஊடகவியலாளரிடம் இறுதியில் கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments:
Post a Comment