எதிர்வரும் இருபத்துமூன்றாம் திகதி, வடக்கில் இடம்பெற இருக்கின்ற உள்ளராட்சித் தேர்தலை, சிறீலங்கா அரசு அதிமுக்கியமாகக் கருதி, அதை வெற்றிகொள்ளும் வெறியுடன் முழுவீச்சில் தனது செயற்பாடுகளில் இறங்கியுள்ளது. இத்தேர்தலில் கணிசமான வெற்றியைச் சம்பாதித்துக்கொள்வதின் ஊடாக பல விடயங்களைச் சாதித்துக்கொள்ளலாம் என, ராஜபக்ச அரசு கருதிச் செயற்படுகின்றது. | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியில் தங்கிநிற்கும் தமிழ்த் தேசியத்தின் பலம். |

அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தமிழகத்திற்கு முதன்முறையாக விஜயம் செய்யவுள்ள நிலையில் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா ஹிலாரிக்கு எதனைக் கூற வேண்டும் என்பது தொடர்பாக ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு சில பரிந்துரைகள் முன்வைத்துள்ளது.











