
தோழர்களே விற்றவன் குற்றவாளி.....சரி அப்போ வாங்கியவன் எங்கே??????????? வாங்கியன் எத்துனை பேர் இதவரை கைது செய்யப்பட்டு இருக்கிறான்??? இதுவரை பதில் இல்லை தோழர்களே.........
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
![]() |
வடமாகாணத் தேர்தல் 2013 செப்ரெம்பரிலேயே மேனனிடம் பஸில் திட்டவட்டம் |
![]()
வடக்கு மாகாண சபைத் தேர்தல் அடுத்த வருடம் செப்ரெம்பர் மாதம் நடத்தப்படுமென்று அரசு நேற்று திட்டவட்டமாக இந்தியாவிடம் தெரிவித்திருக்கிறது.
நேற்றுக்காலை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனைச் சந்தித்தபோது, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜ பக்ஷ, அரசின் இந்தத் தீர்மானத்தை அறிவித் திருக்கிறார். |
![]() |
![]() |
உரிமைகளை அடையும் வரை ஓயமாட்டோம்; போராடுவோம் முறிகண்டியில் மாவை சூளுரை |
![]()
எமது உரிமைகளை அரசும், இராணுவமும், பௌத்த குருமாரும் அழித்துவருகின்றனர். இதற்கெதிராக நாங்கள் ஜனநாயக ரீதியிலான பல்வேறு போராட்டங்களை முன்னெடுப்போம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
|
தமிழர் பகுதிகளில் விகாரைகள் அமைப்பது இனவாதச் செயல்தேசிய பிக்குகள் முன்னணி காட்டம் |
![]()
தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் புதிதாக விகாரைகளை நிர்மாணிப்பதானது நாட்டில் இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டும் செயலாகும் எனச்சுட்டிக் காட்டியுள்ள தேசிய பிக்குகள் முன்னணி, யுத்தம் முடி வடைந்துள்ள போதிலும் தமிழர்களின் வாழ்க்கை இன்னும் இருண்ட யுகத்திலேயே இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளது.
|
![]() |
![]()
"எல்லாத் துயரச் சம்பவங்களுக்கும் துணை நின்ற பிரணாப் முகர்ஜி, இந்திய நாட்டின் ஜனாதிபதியாவது தமிழர்களுக்குத் துயரம்,'' என மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில கொள்கை விளக்க செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறினார்.
இராமேஸ்வரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் கூறியவை வருமாறு:
முல்லைப்பெரியாறு அணைக்காகத் தொடர்ந்து வைகோ போராடி வருகின்றமையைப் பொறுக்க முடியாத கேரள அரசு, தற்போது சிறுவாணி, அமராவதி நதிகளின் தண்ணீரைத் தேக்கி வைக்கிறது. இதைக்கண்டித்து கோவையில் மனிதச்சங்கிலிப் போராட்டம் நடத்தப்படும். பிரணாப்பை இந்தியாவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளது ஊழல் திமிங்கிலங்களுக்கு மகிழ்ச்சியான விடயம். |
![]() |