Translate

Friday 23 November 2012

13ஆவது திருத்தம் தொடர்பான பின்னணி தெரியாது அரசியல்வாதிகள் கருத்து வெளியிடுகின்றனர்: ரெலோ ஜனா


13ஆவது திருத்தம் தொடர்பான பின்னணி தெரியாது அரசியல்வாதிகள் கருத்து வெளியிடுகின்றனர்ரெலோ ஜனா

Posted by www.telo.org on Thursday, November 22, 2012
http://telo.org/wp-content/uploads/2012/11/Jana-1-298x300.jpg13ஆவது திருத்தம் தொடர்பான பின்னணி தெரியாதுஅதனுடன் விளையாடும்எல்லாவெல மேத்தானந்ததேரர்விமல் வீரவன்சசம்பிக்க ரணவக்க ஆகியோர் அதன் பயனை அனுபவிப்பதுவெகுதொலைவில் இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தமிழீழ விடுதலைஇயக்கத் (ரெலோ)தின் கோ.கருணாகரம் ( ஜனாதெரிவித்துள்ளார்.13ஆவது திருத்தச் சட்டத்தினை அரசியலமைப்பிலிருந்துஅகற்றுவது தொடர்பாக பேசப்பட்டு வரும் விடயங்கள் குறித்தும் முரண்பாடுகள் குறித்தும் வெளியிட்டுள்ளஅறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பெண்களை வைத்தியசாலையில் வைத்து கற்பழித்த இராணுவம்: அதிர்ச்சி ஆதாரம் ! (video in)

பெண்களை வைத்தியசாலையில் வைத்து கற்பழித்த இராணுவம்: அதிர்ச்சி ஆதாரம் ! (video in)
30.7.11

இலங்கை ராணுவத்தின் 58 வது பிரிவில் கடமையாற்றிய உயரதிகாரியான பெனாண்டோ ஏன்பவர் தறோது ஒரு வெளிநட்டில் சரணடைந்துள்ளார் என்று சொல்லப்படுகிற்து. இறுதி நேரத்தில் நடந்த போரில் இரணுவம் செய்த அட்டூளியங்களை அவர் புட்டுப் புட்டு வைக்கிறர். இராணுவத்தின் தேசிய அடையள அட்டையோடு தன்னை நிரூபிக்கும் அவர், சமீபத்தில் சனல் 4 தொலைக்காட்சிக்கு முகம் மறைக்கப்பட்ட நிலையில் நேர்கணல் ஒன்றையும் வழங்கியிருந்தார். காயப்பட்டு வைத்தியசலையில் சிகிச்சைபெற்று வந்த பெண்கள் பலரை இலங்கை இராணுவம் கற்பழித்ததாக அவர் தெரிவித்துள்ளார். தான் சொந்தக் கண்களால் கண்டதாகக் கூறும் இவர் புதுமாத்தளான் பிடிபடும்போது அன்றய தினம் மட்டும் சுமார் 1,500 பொதுமக்கள் இறந்ததாகத் தெரிவித்துள்ளார்.

Tuesday 20 November 2012

பான்கிமூன்-மகிந்த கூட்டறிக்கைக்கு என்ன நடந்தது; மனோ கேள்வி

வீதியில் செல்லும் பெண்களை வழிமறித்து; அசடு வழியும் காக்கியுடை மன்மதன்மார்


பான்கிமூன்-மகிந்த கூட்டறிக்கைக்கு என்ன நடந்தது; மனோ கேள்வி
news
யுத்த முடிவுக்குப் பின்னர் பான்கிமூனுக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்  கூட்டறிக்கையில் 13ஆவது திருத்தத்தை அமுலாக்குவதுதாக கூறப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது 13 ஆவது திருத்தத்தினை இல்லாது செய்ய வேண்டும் என்று கூறிவருகின்றனர். அவ்வாறெனின் பான்கிமூன்-மகிந்த கூட்டறிக்கைக்கு என்ன நடந்தது? என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன்
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கேள்வியெழுப்பியுள்ளார்.

தமிழ்ப் பெண்ணின் போராட்ட வாழ்க்கை! -கனேடிய பத்திரிகை

Posted Image
சன் சீ கப்பலில் வந்த அகதிகளின் தற்போதைய நிலைபற்றி வன்கூவரில் இருந்து வெளிவரும் ரைம்ஸ்கொலெனிஸ்ற் என்ற பத்திரிகை விவரணக் கட்டுரையொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கான உதாரணமாக அக் கப்பலில் வந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் பற்றிய அந்தக் கட்டுரையில்,

தற்போது கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் கனடியத் தமிழர் பேரவையின் (தமிழ்க் காங்கிரஸ்) பராமரிப்பில் உள்ள நிரஞ்சலா என்ற புனைபெயரையுடைய பெண் கடல் வழியே எம்வி சன் சீ என்ற ஒரு பழைய துருப்பிடித்த கப்பல் மூலம் பன்னிரெண்டு வாரங்கள் பயணித்து கனடாவை வந்துச் சேர்ந்திருக்கிறார்கள் அவரும் அவரது கணவரும்.

வெலிக்கடையில் பெயர்களை அழைத்து படுகொலை செய்த சிறப்பு அதிரடிப்படை - சிறை அதிகாரிகள் தகவல்

வெலிக்கடைச் சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற கலவரத்தின் போது கணிசமானளவு கைதிகள், சிறப்பு அதிரடிப்படையினரால், படுகொலை செய்யப்பட்டதாக சிறைச்சாலை அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சிறிலங்கா இராணுவ கொமாண்டோக்களால் கலவரம் அடக்கப்பட்ட பின்னர், சிறிப்பு அதிரடிப்படையினரால் இவர்கள் கொல்லப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.

ஒன்றுபட்டு நின்று சிங்களத்தின் சதிகளை முறியடிப்போம்! – தமிழீழ விடுதலைப் புலிகள் அவசர வேண்டுகோள்-


ltte-flag

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் எமதமைப்புக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட பாரிய அழிவுகளின் பின்னர், இன்று புலம்பெயர் நாடுகளிற் தமிழர்கள் மத்தியிற் பல பிரிவினைகள் உருவாகியுள்ளனளூ எதிரியாற் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளன.
 தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
20-11-2012.
ஒன்றுபட்டு நின்று சிங்களத்தின் சதிகளை முறியடிப்போம்!
எமது அன்புக்குரிய தமிழ்மக்களே, போராளி நண்பர்களே,
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் எமதமைப்புக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட பாரிய அழிவுகளின் பின்னர், இன்று புலம்பெயர் நாடுகளிற் தமிழர்கள் மத்தியிற் பல பிரிவினைகள் உருவாகியுள்ளனளூ எதிரியாற் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளன.

இலங்கை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாணும் வரை தி.மு.க ஓயாது: டி.ஆர்.பாலு


தி.மு.க.பொதுக்கூட்டம் புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க. நாடாளுன்ற குழு தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான டி.ஆர்.பாலு கலந்து கொண்டு பேசுகையில்,

டெசோ மாநாட்டு தீர்மான நகலை நானும், துணை செயலாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஐ.நா.சபையில் கொடுத்துள்ளோம். இத்துடன் இதுகுறித்த வேலை இன்னும் முடியவில்லை. தி.மு.க மட்டும் தான் பொது பிரச்சினை குறித்து ஐ.நா. சபை வரை சென்றுள்ளது. 

ராஜபக்சே பிறந்தநாள்: தேர்வுகள் ரத்தாம்!


கொழும்பு, நவ. 21 - ராஜபக்சேவின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக முல்லைத்தீவு மாவட்ட பள்ளிகளில் மாகாண அளவிலான தேர்வுகளை அதிகாரிகள் ரத்து செய்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது.

இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே தனது 67 வது பிறந்த நாளை கொண்டாடினார். நாடுமுழுவதும் ஒருவாரம் கொண்டாடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடைபெறுவதால், முல்லைத்தீவு மாவட்டப் பள்ளிகளில் நடக்கவிருந்த மாகாண அளவிலான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

சிங்களவர்களும் வீதிகளில் சாகவேண்டிய நிலை வரும் - அஸ்கிரிய மகாநாயக்க தேரர்

சிங்களவர்களும் வீதிகளில் சாகவேண்டிய நிலை வரும் - அஸ்கிரிய மகாநாயக்க தேரர்
news
 "அரசியல்வாதிகளின் செயற்பாட்டால் நாடு அழிவின் விளிம்பை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கின்றது. இந்த நிலை நீடித்தால், சிங்கள பௌத்தர்களும் காடுகளில் வாழவேண்டிய, வீதிகளில் சாகவேண்டிய அபாயநிலை தோன்றக்கூடும்'' என்று எச்சரிக்கிறார் அஸ்கிரிய மகாநாயக்க தேரர் வண. உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரர்.
 
இந்த அபாய நிலையிலிருந்து நாட்டையும், சிங்கள, பௌத்த மக்களையும் பாதுகாக்கப் பௌத்த குருமார்கள் ஒழுக்கமாக நடந்து, பௌத்த மதத்தின் புகழைப் பரப்பவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஆயிரம் பாடசாலைகள் வேலைத்திட்டத்தில் கிழக்கில் தமிழ் பாடசாலைகள் புறக்கணிப்பு

தமிழ் பேசும் மக்களை அதிகமாகக் கொண்டுள்ள கிழக்கு மாகாணத்தில் மஹிந்தோதய ஆயிரம் பாடசாலைகள் வேலைத்திட்டத்தின் கீழ் 3 பாடசாலைகளே அபிவிருத்தி செய்யப்பட்டிருப்பதாகவும் அவை மூன்றும் சிங்கள பாடசாலைகளாகவே அமைந்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. பொன். செல்வராசா இன்று சபையில் குற்றம்சாட்டினார்.

வடக்கில் இளைஞர்கள் குண்டு, செல்களினது துகள்களை சுமந்துக்கொண்டு வாழ்கின்றனர்: த.தே.கூ.

வடக்கில் இளைஞர்கள் புத்தக பைகளை சுமப்பதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் 737 மாணவர்கள் இன்னும் தமது உடல்களில் குண்டுகளினதும், செல்களினதும் துகள்களை சுமந்துக்கொண்டு பரிதாப வாழ்க்கை வாழ்கின்றனர். இதிலிருந்து அவர்களை மீட்க இன்றுவரை எவ்விதமான நடடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என கூட்டமைப்பின் எம்.பி. சிவசக்தி ஆனந்தன் பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

இ மெயிலைக் கண்டுபிடித்த தமிழர்!


ஒரு வீடியோ படமா இ-மெயிலில் அனுப்பி வை. புகைப்படங்களா? உடனே அனுப்பு இ-மெயிலில். எந்தக் கடிதங்கள் ஆனாலும் அனுப்பிய மறு நிமிடம் உங்களுக்குக் கிடைக்க வேண்டுமா? இ-மெயிலில் அனுப்பச் சொல்லுங்கள்.
 மின்சாரம் இல்லாத மனிதனுடைய வாழ்க்கையை எப்படிக் கற்பனை செய்ய முடியாதோ, அதைப் போலவே  இ - மெயில் இல்லாத மனித வாழ்க்கையை இனி நினைத்துப் பார்க்கவும் முடியாது. தனிநபர்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்றமாகட்டும், நிறுவனங்களுக்கிடையிலான  தகவல் பரிமாற்றமாக இருக்கட்டும் இப்போது இ - மெயிலே சரணம் என்ற நிலை உருவாகிவிட்டது.

போராளிகளை விமர்சிக்கும் கைக்கூலி தளங்களிற்கு தமிழ் இளையோரின் கண்டனம்

Norway-logo.jpgஅண்மையில் ஈழதேசம், தமிழ்த்தாய், உயர்வு, சங்கதி24 ஆகிய இணையத்தளங்களில் வெளியிடப்பட்ட உண்மைக்கு புறம்பான செய்தியினை நாம் மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம்.

அச்செய்தியில் கடற்புலிகள் அமைப்பைச் சேர்ந்த கட்டளைத் தளபதிகளில் ஒருவரான புலவர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக  தமிழகத்திற்கு போராளி ஒருவரை அழைத்து சிகிச்சை கொடுக்காது ஏமாற்றியதாக வெளியிடப்பட்டிருந்தது. 

நானும் ஒரு போராளி



வணக்கம் 
 நானும் ஒரு போராளி ,இதனைப் படித்தபின் ஒன்று தெளிவாகிறது ,அதாவது எம்மைவைத்து இன்னும் நீங்களும் ,உங்களைப்போன்ற நபர்களும் 
பணம் சம்பாதிக்கப் புறப்பட்டுவிட்டீர்கள் .இதுவரைகாலமும் இல்லாத இந்த  யோசனை ஏன் மாவீரர் நாள் நெருங்கி வரும்போது உங்கள் மனதில் 
வெளிப்படுகிறது ,இதிலிருந்தே தெரிகிறது மாவீரர் நாள் பணத்தில் உங்களுக்கும் பங்கு உண்டென்பது ,எமது விடுதலை தொடர்பாகாவோ  அல்லது 

Sunday 18 November 2012

13ஆவது திருத்தத்தை மாற்ற தெரிவுக்குழு


13ஆவது திருத்தத்தை மாற்ற தெரிவுக்குழு

மாகாணசபை முறையை இலங்கைக்கு அறிமுகம் செய்த அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை மீண்டுமொருமுறை திருத்தத்துக்குட்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
திவிநெகும சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கான விவாதம் ஆரம்பிக்கப்பட்ட கையோடு அரசாங்கத்தின் இணை கட்சிகள் பல 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக குரல்களை எழுப்பின.

இலங்கைக்கு எதிராகக் கை நீட்டியவர்களுடன் கைகோர்க்க வேண்டிய அவசியமில்லையாம்; விமல்


இலங்கைக்கு எதிராகக் கை நீட்டியவர்களுடன் கைகோர்க்க வேண்டிய அவசியமில்லையாம்; விமல்

37a85148f68423631c5dde7a62f55c4bஜெனீவாவில் எமக்கெதிராகக் கை உயர்த்திய நாடுகளுடன் கைகோர்த்துச் செல்ல வேண்டிய அவசியம் இலங்கைக்கு கிடையாது என அமைச்சர் விமல் வீரவங்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

1,46,676 பேர் தொடர்பில் ஐ.நா சந்தேகம்


1,46,676 பேர் தொடர்பில் ஐ.நா சந்தேகம்

UNOவன்னி மக்கள் தொடர்பில் இறுதிக்கட்ட யுத்தத்தின் பின்னரும் அதற்கு முன்னரும் இலங்கை அரசாங்கத்தினால் பதியப்பட்ட தரவுகளை ஒப்பிட்டு பார்க்குமிடத்து 1 இலட்சத்து 46ஆயிரத்து 676பேர் கணக்கில் அடங்கவில்லை என்று ஐ.நா உள்ளக பரிசீலனைக் குழு, தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் பின்னர் அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கைக்கும் யுத்தத்துக்கு முன்னர் வன்னியில் காணப்பட்டதாகக் கூறப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கைக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படுகின்றன.

பரிந்துரைகளை அமுல்படுத்த ஆலோசனை குழு: மெல்கோரா


பரிந்துரைகளை அமுல்படுத்த ஆலோசனை குழு: மெல்கோரா

7(1530)
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது தமிழர்களைப் பாதுகாப்பதற்கு ஐக்கிய நாடுகள்  தவறியமை தொடர்பான இரகசிய அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்காக சிரேஷ்ட ஆலோசனை குழுவொன்று நியமிக்கப்படும் என்று ஐ.நா அமைப்பின் உயரதிகாரி சுசனா மெல்கோரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பால் தாக்கரேவின் உடல் இன்று மாலை தகனம்


பால் தாக்கரேவின் உடல் இன்று மாலை தகனம்

பால் தாக்கரேவின் உடல் இன்று மாலை தகனம்

November 18, 2012  02:40 pmபால் தாக்கரேவின் இறுதி ஊர்வலம் இன்று காலை தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த சிவாஜி பார்க் பகுதியில் வைக்கப்பட்டு இன்று மாலை தகனம் செய்யப்படுகிறது.

சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை

சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை
news
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் சிறிலங்கா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாக ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிராகச் செயற்படுவதில் ஒத்துழைக்கத் தவறினால், சிறிலங்கா உள்ளிட்ட எட்டு நாடுகளையும் கறுப்புப் பட்டியலில் சேர்த்துக் கொள்ள நேரிடும் என்று ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது. 

தமிழகம் வழங்கிய சைக்கிள்கள் பெரும்பான்மை இன மக்களுக்கு; போரால் பாதிக்கப்பட்ட மக்கள் விசனம்

தமிழகம் வழங்கிய சைக்கிள்கள் பெரும்பான்மை இன மக்களுக்கு; போரால் பாதிக்கப்பட்ட மக்கள் விசனம்
news
தமிழக மக்களால் இடம்பெயர்ந்த மக்களுக்கென வழங்கப்பட்ட சைக்கிள்கள் தற்போது பெரும்பான்மை இன மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்படுகிறது. இறுதிக் கட்டப் போர் இடர்களால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்கென இந்திய அரசின் அனுசரணையுடன் தமிழக மக்களால் சைக்கிள்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

ஆசியாவின் மற்றொரு மியன்மாராக இலங்கை; சபையில் மங்கள விமர்சனம்

ஆசியாவின் மற்றொரு மியன்மாராக இலங்கை; சபையில் மங்கள விமர்சனம்
news
இலங்கை இன்று சர்வதேச சமூகத்திடமிருந்து அந்நியப்படுத்தப்பட்டு வருகின்றது. ஆசியாவில் மற்றும் ஒரு மியன்மாராக உருவாகி வருகின்றது என ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர நேற்று  விமர்சித்தார். நாடாளுமன்றில் வரவு செலவுத்திட்ட உரை மீதான எட்டாவது நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே மங்கள சமவீர மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது:

பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் - மன்மோகன், சோனியா பாதுகாப்பு அதிகரிப்பு!

Posted Image
தில்லியில் தாக்குதல் நடத்த "இந்தியன் முஜாகிதீன்' பயங்கரவாத இயக்கம் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக றோ (ரிசர்ச் அண்டு அனாலிசிஸ் விங்) உளவுப் பிரிவுக்குத் தகவல் கிடைத்துள்ளது. முக்கிய பிரமுகர்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத் தகவல் கிடைத்துள்ளதால் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, அத்வானி உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.   

தமிழினப் படுகொலையில் ஐ.நா. வகித்த பங்கை பெட்ரி அறிக்கை வெளிப்படுத்துகிறது: - நாம் தமிழர் கட்சி

Posted Image
இலங்கையில் தமிழினத்தை அழிக்க சிங்கள இனவெறியன் இராசபக்ச நடத்திய போரில் தமிழர்கள் கொல்லப்படுவதை ஐக்கிய நாடுகள் அமைப்பு தடுத்து நிறுத்தத் தவறிவிட்டது என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் அமைத்த சார் ல்ஸ் பெட்ரி ஆணையம் அளித்த அறிக்கையின் கசிவு சுட்டுக்காட்டியுள்ளது.   
தாக்குதலுக்கு உட்படுத்தாத பகுதிகள் (நோ ஃபயர் ஜோன்) என்ற அறிவித்து, அப்பகுதிக்குள் தமிழர்கள் வந்தால் அவர்கள் பாதுகாப்பாக இருக்கலாம் என்று சிங்கள அரசு அறிவித்ததை நம்பி அங்கு வந்து தஞ்சமடைந்த அப்பாவி மக்கள் மீது கனரக ஆயுதங்களைக் கொண்டும், விமானத்தில் இருந்து குண்டுகளைப் பொழிந்தும் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை சிங்கள படைகள் கொன்று குவித்தபோது, அதைத் தடுத்து நிறுத்த வேண்டிய ஐ.நா. அமைப்பின் அதிகாரிகள், பொறுப்பின்றி செயல்ப்பட்டுள்ளார்கள் என்று சார்ல்ஸ் பெட்ரி அறிக்கை குற்றம் சாற்றியுள்ளது.

சிறிலங்காவுக்கு மஞ்சள்அட்டை காண்பித்து ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் சிறிலங்கா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாக ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சட்டவிரோதமான, முறையற்ற மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிராகச் செயற்படுவதில் ஒத்துழைக்கத் தவறினால், சிறிலங்கா உள்ளிட்ட எட்டு நாடுகளையும் கறுப்புப் பட்டியலில் சேர்த்துக் கொள்ள நேரிடும் என்று ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.

ஆசியாவின் மற்றொரு மியன்மாராக இலங்கை


இலங்கை இன்று சர்வதேச சமூகத்திடமிருந்து அந்நியப்படுத்தப்பட்டு வருகின்றது. ஆசியாவில் மற்றும் ஒரு மியன்மாராக உருவாகி வருகின்றது என ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர நேற்று  விமர்சித்தார். நாடாளுமன்றில் வரவு செலவுத்திட்ட உரை மீதான எட்டாவது நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே மங்கள சமவீர மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது:

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் - CPI


யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் - CPI
 இலங்கை யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.
 
யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடாத்த சர்வதேச பொறிமுறைமையொன்று உருவாக்கப்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா தெரிவித்துள்ளார்.

ஐ.நா உள்ளக அறிக்கைகளினால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படாது – பாலித கொஹணே


ஐ.நா உள்ளக அறிக்கைகளினால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படாது – பாலித கொஹணே
 ஐக்கிய நாடுகள் அமைப்பின் உள்ளக அறிக்கைகளினால் இலங்கைக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது என அந்த அமைப்பிற்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி டொக்டர் பாலித கொஹணே தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை ஐக்கிய நாடுகள் அமைப்பினால் வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான உள்ளக அறிக்கையினால் பாதிப்பு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.