Translate

Sunday, 18 November 2012

பரிந்துரைகளை அமுல்படுத்த ஆலோசனை குழு: மெல்கோரா


பரிந்துரைகளை அமுல்படுத்த ஆலோசனை குழு: மெல்கோரா

7(1530)
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது தமிழர்களைப் பாதுகாப்பதற்கு ஐக்கிய நாடுகள்  தவறியமை தொடர்பான இரகசிய அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்காக சிரேஷ்ட ஆலோசனை குழுவொன்று நியமிக்கப்படும் என்று ஐ.நா அமைப்பின் உயரதிகாரி சுசனா மெல்கோரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மீளாய்வு அறிக்கையின் சில பகுதிகளில் ஐ.நா. அமைப்பின் பணியாளர்கள் சில இரகசிய ஆவணங்களைப் பாதுகாக்கப்பட்டுள்ளனர்;. சில தகவல்கள் உள்ளகத் தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும் அவற்றை பகிரங்கப்படுத்த வேண்டிய அவசியமுமில்லை உள்ளக அறிக்கைகளின் சகல விடயங்களையும் பகிரங்கப்படுத்துவது பொருத்தமான தீர்மானமாக அமையாது .
பக்கச்சார்பற்ற வகையிலும், ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையிலும் இந்த அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டும் என்பதில் ஐக்கிய நாடுகள் அமைப்பு கூடுதல் சிரத்தை எடுத்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment