Translate

Sunday 18 November 2012

பால் தாக்கரேவின் உடல் இன்று மாலை தகனம்


பால் தாக்கரேவின் உடல் இன்று மாலை தகனம்

பால் தாக்கரேவின் உடல் இன்று மாலை தகனம்

November 18, 2012  02:40 pmபால் தாக்கரேவின் இறுதி ஊர்வலம் இன்று காலை தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த சிவாஜி பார்க் பகுதியில் வைக்கப்பட்டு இன்று மாலை தகனம் செய்யப்படுகிறது.


இதை முன்னிட்டு மும்பை முழுவதும் 48 ஆயிரம் பொலிசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். கடைகள்வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டதால் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது.

மகாராஷ்டிர மாநில அரசியலில் சக்தி வாய்ந்த தலைவராக விளங்கியவர்சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே (86). வயோதிகம்சுவாச கோளாறு பிரச்னையால் ஓராண்டுக்கு மேலாக தாக்கரே அவதிப்பட்டு வந்தார்.

கடந்த மாதம் மும்பை லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். மீண்டும் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது. பாந்த்ராவில் உள்ள இல்லமான மாதோஸ்ரீயில் பால் தாக்கரேவுக்கு வைத்தியர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

சில நாட்களாக தாக்கரே உடல்நிலை மோசம் அடைந்தது. அரசியல் தலைவர்கள்பாலிவுட் பிரபலங்கள்தாக்கரே இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்தனர். தாக்கரே குணமடைய வேண்டி தொண்டர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில்சிகிச்சை பலனின்றி நேற்று மாலை தாக்கரே மரணமடைந்தார். இதனால் மும்பையில் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டன. அசம்பாவித சம்பவங்களை தடுக்க மும்பை முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டது.

பால் தாக்கரே வீட்டு முன்பு பொலிசார் குவிக்கப்பட்டனர். தொண்டர்கள் அமைதி காக்குமாறு பால் தாக்கரே மகனும் சிவசேனாவின் செயல் தலைவருமான உத்தவ் தாக்கரே கேட்டுக் கொண்டார்.

இந்தநிலையில்இன்று காலை பால் தாக்கரேவின் இறுதி ஊர்வலம்,அவரது வீட்டில் இருந்து புறப்பட்டது. தேசிய கொடியில் சுற்றப்பட்ட தாக்கரே உடல் வீட்டில் இருந்து வெளியே எடுத்து வரப்பட்டு அலங்கார ஊர்தியில் ஏற்றப்பட்டது.

அப்போது உத்தவ் தாக்கரே கதறி அழுதார். பின்னர் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் புடை சூழ ஊர்வலம் தொடங்கியது. ஊர்தியை சுற்றி மூன்று அடுக்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தாக்கரேவின் உடல் முதலில் தாதரில் உள்ள சிவசேனா கட்சி தலைமையகமான சேனா பவனுக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு வி.வி.ஐபிக்கள்முக்கிய தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அங்கிருந்து சிவாஜி பூங்கா மைதானத்துக்கு தாக்கரே உடல் எடுத்து செல்லப்பட்டது. அங்கு போடப்பட்டுள்ள மேடையில் மாலை மணி வரை தலைவர்கள்பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மைதானத்தில் முழு அரசு மரியாதையுடன் மணிக்கு இறுதி சடங்குக்கு பிறகு உடல் தகனம் செய்யப்படும் என சிவசேனா தெரிவித்துள்ளது.

ஊர்வலம் மற்றும் அஞ்சலி செலுத்துவதற்கு இரண்டு  இலட்சத்துக்கும் அதிகமானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டிமும்பையில் 48 ஆயிரம் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். இன்றும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆட்டோடாக்சி ஓடவில்லை. தியேட்டர்களில் அனைத்து காட்சிகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் மும்பையில் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது
.

No comments:

Post a Comment