சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை |
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் சிறிலங்கா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாக ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிராகச் செயற்படுவதில் ஒத்துழைக்கத் தவறினால், சிறிலங்கா உள்ளிட்ட எட்டு நாடுகளையும் கறுப்புப் பட்டியலில் சேர்த்துக் கொள்ள நேரிடும் என்று ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.
பனாமா, பெலிஸ், கம்போடியா, பிஜி, கினியா, டோகோ, சிறிலங்கா, வனாட்டு ஆகிய நாடுகளுக்கே
ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன்பிடி ஆணையாளர் மரியா டமனாகி எச்சரித்துள்ளார்.
இந்த நாடுகளது ஒத்துழைப்பின் மூலம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை ஒரு மஞ்சள் அட்டையே என்றும், அதற்கடுத்த கட்டமாகவே கறுப்புப்பட்டியலில் உள்ளடக்குவது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த எச்சரிக்கையை சிறிலங்கா உதாசீனம் செய்தால், சிறிலங்காவின் கடலுணவு ஏற்றுமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதிக்கும் நிலை ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
|
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Sunday, 18 November 2012
சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment