தமிழகம் வழங்கிய சைக்கிள்கள் பெரும்பான்மை இன மக்களுக்கு; போரால் பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் |
தமிழக மக்களால் இடம்பெயர்ந்த மக்களுக்கென வழங்கப்பட்ட சைக்கிள்கள் தற்போது பெரும்பான்மை இன மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்படுகிறது. இறுதிக் கட்டப் போர் இடர்களால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்கென இந்திய அரசின் அனுசரணையுடன் தமிழக மக்களால் சைக்கிள்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
அவற்றில் ஒரு தொகுதி சைக்கிள்கள் வவுனியாவைச் சேர்ந்த பெரும்பான்மை இன மக்களுக்கு பிரதேச செயலகத்தின் மூலம் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரம் ஒரு தொகுதி சைக்கிள்களும் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு தொகுதி சைக்கிள்களும் என இரண்டு கட்டங்களாக வவுனியா தெற்கு பிரதேச செயலகத்தில் வைத்து பெரும்பான்மை இன மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன என்று கூறப்படுகிறது. "இந்திய தமிழக மக்களால் அன்பளிப்பு செய்யப்பட்டது'' என்ற வாசகம் பொறிக்கப்பட்ட சைக்கிள்களை பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்கு வழங்காமல் பெரும்பான்மை இன மக்களுக்கு வழங்குவது எந்த வகையில் நியாயம்'' என பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். |
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Sunday, 18 November 2012
தமிழகம் வழங்கிய சைக்கிள்கள் பெரும்பான்மை இன மக்களுக்கு; போரால் பாதிக்கப்பட்ட மக்கள் விசனம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment