ஆயிரம் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை கைது செய்யும் நோக்கில் இராணுவப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டு செயற்பட்ட உறுப்பினர்களே இவ்வாறு கைது செய்யப்பட உள்ளனர்.
புனர்வாழ்வு அளிக்கப்படாத, சரணடையாத மற்றும் கைது செய்யப்படாதவர்களே இவ்வாறு கைது செய்யப்பட உள்ளனர்.முன்னாள் புலி உறுப்பினர்கள் பாதாள உலகக் குழுக்களுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.
சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட 48 புலி உறுப்பினர்கள் ஏற்கனவே பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் விரைவில் சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் யாழ் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹதுருசிங்க தெரிவித்துள்ளார்.
போர் நிறைவடைந்த சந்தர்ப்பத்தில் சரணடையாது பொதுமக்களுடன் கலந்த முன்னாள் புலி உறுப்பினர்கள் சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஒப்பந்த அடிப்படையிலான கொலைகள், தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளில் குறித்த புலி உறுப்பினர்கள் செயற்பட்டு வருவதாக சிங்கள ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.
No comments:
Post a Comment