Translate

Friday, 28 December 2012

மன்னாரில் சிங்கள குடியேற்ற விரிவாக்கம்; கோத்தபாய நேரில் ஆராய்வு!


ts_Mannar_20121226_08p12மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட எல்லையோரக்கிராமமான முள்ளிக்குளம் சிங்கள மயப்படுத்திவரும் நிலையில் அதன் உச்சமாக பாதுகாப்புச்செயலாளர் கோத்தபாய நேரடியாகச் சென்று சிங்கள மயமாக்கும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கடற்படையினருடன் விசேட கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்
மன்னார் மாவட்ட அபிவிருத்தியை ஆராய்தல் என்ற போர்வையில் நேற்று முன்தினம் முள்ளிக்குளம் சென்ற கோத்தபாயவை  வடமேற்கு பிராந்திய கடற்படைக் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ரோஹன பெரேரா உட்பட அதிகாரிகள் வரவேற்று அழைத்துச்சென்றனர்

ts_Mannar_20121226_08p12.jpgபுதிய குடியேற்றங்கள் குறித்து கோத்தா ஆலோசனை
அப்பிரதேசத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நீண்ட நேரம் கடற்படை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட கோத்தபாய அங்கு ஏற்கனவே குடியேற்றப்பட்டுள்ள சிங்கள கடற்படைகுடும்பங்களுக்கு தேவையான அடிப்படைவசதிகள் மற்றும் உட்கட்டுமான வசதிகள் குறித்து ஆராய்துள்ளார்.
கடந்தகால யுத்தத்தின் போது 07-09-2007 அன்று குறித்த முள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 400 குடும்பங்கள் உட்பட முசலியில் உள்ள அனைத்து கிராம மக்களும் இடம் பெயர்ந்து சென்றனர்.
யுத்தம் முடிவடைந்த நிலையில் 2009ஆம், 2010ஆம் ஆண்டுகளில் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் உள்ள அனைத்து மக்களும் மீள் குடியேற்றப்பட்டனர். ஆனால் முள்ளிக்குளம் கிராம மக்கள் மீள் குடியேற்றப்படவில்லை.
Mulli.jpgமுள்ளிக்குளம் காட்டுக்குள் தமிழ் மக்கள்……
இந்த நிலையில் குறித்த மக்கள் மன்னார், பேசாலை, தலைமன்னார், தாழ்வுபாடுகீரி, மடுக்கரை, நானாட்டான், சிலாபத்துறை ஆகிய இடங்களில் உறவினர்களுடைய வீடுகளிலும், வாடகை வீடுகளிலும் கடந்த 5 வருடங்களாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர்  மக்கள் மீள்குடியேறச்சென்ற போது குறித்த கிராமத்தினுள் மக்களுடைய வீடுகள் பல திருத்தப்பட்ட நிலையில் சிங்கள மக்கள் குடும்பம் குடும்பமாக வாழ்ந்து வருகின்ற விடயம் தெரிய வந்தது
கடற்படையினர் தமது குடும்பங்களை அழைத்து வந்து தமிழ் மக்களின் வாழ்விடங்களை ஆக்கிரமித்து தமது குடும்பங்களை குடியேற்றியிருந்தனர்.
சுமார் நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கு வாழ்ந்து வருகின்றன. எவரும் உள்ளே சென்று பார்க்க முடியாத அளவிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முள்ளிக்குளம் கிராமத்தில் உள்ள வயற்காணியில் தற்போது கடற்படையினர் சிறு போக நெற் பயிர்ச் செய்கையை மேற்கொண்டு வருவதோடு மரக்கறித் தோட்டம் ஒன்றையும் செய்து வருகின்றனர்.
முள்ளிக்குளம் பகுதியில் உள்ள கடற்கரையில் கடல் உணவுகளைப் பிடித்து தென் பகுதிக்கு ஏற்றுமதி செய்கின்றனர். எமது சொந்த மண்ணில் எம்மை மீள் குடியேற விடாது அதனை அதியுயர் பாதுகாப்பு வலயமாக்கி கடற்படையினரின் குடும்பங்களை குடியமர்த்தி  தமிழ் மக்களை கடற்படை வெளியேற்றி காட்டுப்பகுதிக்குள் குடியேற அனுமதித்திருந்தது
Mullikulum-Map-1.jpg

இந்நிலையிலேயே கோத்தபாய களத்தில் இறங்கி சிங்கள குடியேற்றவிரிவாக்கம் குறித்து ஆராய்துள்ளார். வவுனியா ,வன்னிபெருநிலம் ,மன்னார் என வடக்கில் சிங்கள குடியேற்றங்கள் துரித கதியில் தமிழர் நிலங்களை விழுங்கிவருகிறது.

No comments:

Post a Comment